Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 35

Thread: இலக்கணம் - றகர ரகரச் சொற்கள்

                  
   
   
 1. #13
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  173,626
  Downloads
  39
  Uploads
  0
  மிக அற்புதமான,மற்றும் அவசியமான திரி.பயனடைவோர் பலரென்பதில் சந்தேகமில்லை.பாரதி அய்யாவுக்கு சிரம்தாழ்ந்த நன்றிகள்.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 2. #14
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  17,030
  Downloads
  62
  Uploads
  3
  கருத்துகளுக்கும் ஒட்டியதற்கும் மிக்க நன்றி அக்னி.

  கருத்துகளுக்கு நன்றி இலக்கியன், சிவா.ஜி

  Quote Originally Posted by சிவா.ஜி View Post
  பயனடைவோர் பலரென்பதில் சந்தேகமில்லை.பாரதி அய்யாவுக்கு சிரம்தாழ்ந்த நன்றிகள்.
  அன்பு சிவா, நான் உங்களை விட வயதில் இளையவன். ஆதலால் அய்யாவெல்லாம் வேண்டாமே. நன்றி.

 3. #15
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  17,030
  Downloads
  62
  Uploads
  3
  தரி = அணி,தங்கு,பொறு
  தறி = வெட்டு, கம்பம், முளை

  தரிப்பு = கடுக்கன்
  தறிப்பு = வெட்டுதல்

  தரு = மரம், தருகிற
  தறு = கட்டு, முடி

  திரம் = உறுதி, ஒரு தொழிற்பெயர் விகுதி
  திறம் = வலிமை, பக்கம், கூறுபாடு, வகை

  திரை = மேலிழு, திறன் அலை போல் மேடுபள்ளமாகு, தோற்சுருக்கு, அலை
  திறை = கப்பம்

  துர = செலுத்து
  துற = பற்றுவிடு, நீக்கு

  துரு = அழுக்கு
  துறு = நெருங்கு

  துரை = பிரபு, வெள்ளைக்காரன்
  துறை = நீர்நிலையில் இறங்குமிடம், துவைக்கும் இடம், கப்பல் நிலையம், பிரிவு

  தெரி = தோன்று, அறி, (தெரிவு செய்தல்)
  தெறி = இறைத்து விழு, தகர்ந்து விழு, விரலாற் சுண்டு

  தெரு = வீதி
  தெறு = அழி

  தேரல் = ஆராய்தல்
  தேறல் = தெளிதல், தேன், பரீட்சையில் தேறுதல்

  நரை = மயிர் வெளு, வெண்மயிர், வெள்ளை
  நறை = தேன்

  நிரை = வரிசையாய் வை, வரிசை, மந்தை, ஒரு செய்யுள் அசை வகை
  நிறை = நிரம்பு, நிரப்பு, கனம், நிறுத்தல், நிறைவு, மனவடக்கம்

  நெரி = உடை, நொறுங்கு, நெருக்கு, நசுக்கு, விரல் சுடக்கு
  நெறி = வழி, அண்டை, மதம், புருவத்தை வளை, மயிர்ச்சுருள்

 4. #16
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  17,030
  Downloads
  62
  Uploads
  3
  பர = விரி,பரவு,மற்ற
  பற = பற(த்தல்)

  பரவை = கடல், செவி வழக்கு, சுந்தரமூர்த்தியின் முதல் மனைவியின் பெயர்
  பறவை = பட்சி

  பரம்பு = பரவு, அடி (பரம்படித்தல் - உழுத நிலத்தைச் சமப்படுத்துதல்)
  பறம்பு = பாரியின் மலை

  பரி = இரங்கு, வருந்து, விரும்பு, அன்புகூர், ஓடு, ஒரு முன்னெட்டு, குதிரை
  பறி = பிடுங்கு, அபகரி, தோண்டு, வலை, தோண்டல், பொன்

  பரை = பார்வதி
  பறை = சொல், மேளம், ஒரு குலம்

  பாரை = கம்பி
  பாறை = பெருங்கல், கல்நிலம்

  பிர = ஒரு வடமொழி உபசர்க்கம்
  பிற = தோன்று, உண்டாகு, மற்ற

  பிரை = புளித்த மோர்
  பிறை = குறைச்சந்திரன், சந்திரன்கலை

  புரம் = ஊர், நகர், காப்பு
  புறம் = பக்கம், முதுகு, பின்பு, வெளி, புறப்பொருள்

  புரவு = காப்பு, ஆட்சி
  புறவு = முல்லை நிலம், புறம்போக்கு, புறா

  பெரு = பெரிய
  பெறு = அடை, பிள்ளைபெறு, விலைபெறு, மதிப்புப்பெறு

 5. #17
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  118,744
  Downloads
  4
  Uploads
  0
  அன்பு பாரதி

  இந்த அரிய பணிக்காக
  உன் கரங்களுக்கு என் அன்பு முத்தங்கள்..

  சில சொற்களை சட்டென பழக்கமான செய்யுள்களிலே ( இன்னா செய்தாரை ஒறுத்தல்), அல்லது வழக்கமான செயல்களிலே ( காய் அரிந்து..) சட்டென பொருத்தி மனதில் இருத்திவைக்க முடிகிறது..

  புழக்கமும் பழக்கமுமில்லாத சொற்கள் - இன்னும் ஒட்டாமல்
  உருண்டோடிவிடும் ஆபத்து உணர்கிறேன்..

  நினைவாற்றல் ஒரு மைதானம்..

  புதிய அறிதல் அதில் விடப்பட்ட பலூன்..

  காலம் என்பது காற்று..

  நேற்று கற்றவை -
  இன்று பார்த்தால் பாதி..
  நாளை கால்வாசி
  பிறகு - சில சதம் மட்டுமே..


  நாற்பது முறை கற்றால் மனனம் ஆகலாம் -
  ஆனாலும் புரிதல் உத்தரவாதம் இல்லை!

  விழுங்கி சீரணிக்காமல் வாந்தியாய் ஒப்பிக்கப்படும் !

  புதிய பலூன்களை ஏற்கனவே நாம் நன்கறிந்த தகவல் என்னும்
  முளைக்குச்சிகளுடன் கட்டிப்போட்டுவதே
  கற்றவை நினைவில் நிற்க நிலைக்க நல்வழி..

  ஒவ்வொரு சொல்லுக்கும் அதைச் செய்துபார்க்கப் போகிறேன்..

  சில சொற்கள் பரிச்சயம் இல்லை..பொருள் விளங்கவில்லை -
  எடுத்துக்காட்டாய் ஆரை = சக்கர உறுப்பு எனப் பொருள் தந்தும் விளங்கவில்லை!
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

 6. #18
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  13 Aug 2007
  Location
  அரபிக்கடலோரம்... !
  Posts
  1,611
  Post Thanks / Like
  iCash Credits
  5,030
  Downloads
  94
  Uploads
  83
  Quote Originally Posted by இளசு View Post
  சில சொற்கள் பரிச்சயம் இல்லை..பொருள் விளங்கவில்லை -
  எடுத்துக்காட்டாய் ஆரை = சக்கர உறுப்பு எனப் பொருள் தந்தும் விளங்கவில்லை!
  சக்கரத்தின் நடுவே செல்லும் கம்பிகள்.
  தேசிய கொடி வரையும் போது நடுவில் நீல நிறத்தில், அஷோக சக்கரத்தில் வரைவோமே.. 24 கோடுகள்.. அவை... 24 ஆரைகள்.
  ஆங்கிலத்தில்... SPOKES  .
  Last edited by சாம்பவி; 24-09-2007 at 10:08 PM.
  ..
  இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
  என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
  .

 7. #19
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  118,744
  Downloads
  4
  Uploads
  0
  நல்ல விளக்கம். இதிலிருந்துதான் ஆரம் என்ற சொல் வந்திருக்கவேண்டும்.

  நன்றி ''காளியாத்தா'' அவர்களே!

  ( நட்போடு அழைக்க இந்தப்பெயர் வசதியாக இல்லையே நண்பரே!
  கூடுதலாய் கூழு, பாலு ஊத்துடான்னு பயமுறுத்தல் வேறு...)
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

 8. #20
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  11 Oct 2004
  Location
  தமிழ்மன்றம்
  Posts
  4,511
  Post Thanks / Like
  iCash Credits
  79,771
  Downloads
  104
  Uploads
  1
  வாசித்தேன்....
  ஒரே நாளில் அனைத்தையும் மூளையில் ஏற்றும் அளவுக்கு உரவு இல்லை

  நன்றி பாரதி....

  எனக்கு மிகவும் பயனளிக்கும் பகுதி...
  பென்ஸ்

  என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

 9. #21
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  17,030
  Downloads
  62
  Uploads
  3
  அன்புள்ள அண்ணா..
  உங்கள் அருமையான கருத்துகளுக்கு மிக்க நன்றி.
  பொதுவாக பிழை என்று அறிந்தும் செய்பவர்கள் குறைவே.
  அறியாமல் செய்யும் பிழைகளை குறைப்பதற்கான ஒரு சிறிய முயற்சிதான் இது. இதில் வரும் பெரும்பாலான சொற்கள் நானும் அறியாதவை!!
  ஆனாலும் இப்படிப்பட்ட பழம் வார்த்தைகளை ஒரு சிலரேனும் கையாளுவார்கள் எனில் அதுவே பிறரைக் கற்க வைக்கத்தூண்டும்.
  காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

  சரியான விளக்கத்தைக் கொடுத்த காளியாத்தாவிற்கு நன்றி.

  கருத்துகளுக்கு மிக்க நன்றி பென்ஸ்.
  ஒரே நாளில் கற்றுக்கொள்வதற்கு வலிமை தேவையில்லை. கொஞ்சம் விடாமுயற்சி மட்டுமே போதுமானது.பிழையின்றி எழுதுவதற்கு துணை போவதுதான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். அண்ணன் சொன்னது போல், சொற்களை வாக்கியங்களில் அமைத்து பழகுவதுதான் மறக்காமல் இருக்க உதவியாக இருக்கும். நண்பர்களுக்கு இந்தத்திரி உதவினால் அதுவே அனைவருக்கும் பேருவகை அளிக்கும்.

 10. #22
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  17,030
  Downloads
  62
  Uploads
  3
  பொரி = தானியம் வறு, பொரிபோலெழும்பு, தீ, வறுத்த தானியம்
  பொறி = தீட்டு, எழுது, செதுக்கு, தீத்துகள், எழுத்து, புலனுறுப்பு, இயந்திரம், பிடிகருவி

  பொரு = ஒப்பாகு, பொருத்து, போர் செய்
  பொறு = சும, சகி, காத்திரு

  பொருக்கு = சோற்று வடு
  பொறுக்கு = ஒவ்வொன்றாயெடு, தெரிந்தெடு

  பொருப்பு = மாலை
  பொறுப்பு = உத்தரவாதம்

  மர = கடினமாகு, உணர்ச்சியறு, மரத்தாலான
  மற = நினைவறு, மறக்குல, வீர

  மரம் = விருட்சம்
  மறம் = வீரம், பாவம், ஒரு குலம்

  மரல் = ஒரு பூண்டு
  மறல் = வீரம், பாவம், சினம்

  மரி = இற
  மறி = தடு, மடக்கு, திரும்பு, ஒரு வகை ஆடு, சில விலங்குகளின் பெண்பால்

  மரு = பொருத்து, வாசனை, ஒரு பூண்டு, மணமகனுக்குப் பெண் விருந்து வீட்டில் செய்யும் முதல் விருந்து
  மறு = மறு(த்தல்),குற்றம், களங்கம், மற்ற

  மருகு = மருக்கொழுந்து
  மறுகு = மயக்கு, வீதி

  மரை = ஒரு வகை மான், விளக்குக்காய், திருகுச்சுரை, தாமரை
  மறை = ஒளி, ஒளிவு, இரகசியம், வேதம், மறுத்தல்

  மாரன் = மன்மதன்
  மாறன் = பாண்டியன், பகைவன்

  முருகு = வாசனை, இளமை, அழகு, முருகன், ஒரு காதணி
  முறுகு = திருகு, பதங்கடந்து வேகு

  முருக்கு = ஒரு மரம்
  முறுக்கு = திருகு, அதட்டு, அச்சுறுத்து, ஆரவாரி, திருக்கு, ஒரு பலகாரம்

  வரம் = வரம்
  வறம் = வறட்சி

  வரை = வரை(தல்), நீக்கு, பொருந்து, வரி, கணு, மூங்கில்,மலை, அளவு
  வறை = பொறித்த காய்கறி

  விரகு = தந்திரம்
  விறகு = எரிக்குங்கட்டை

  விரல் = விரல்
  விறல் = வெற்றி, வல்லமை, மெய்ப்பாடு, சமத்துவம்

  விரை = விதை,வேகமாகு
  விறை = கடினமாகு, நீள், இறந்துடம்பு நீள், குளிரால் நடுங்கு

  வெரு = அச்சம்
  வெறு = பகை, நிரம்பு, ஒன்றுமில்லாத, தனியான

 11. #23
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
  Join Date
  06 May 2007
  Location
  Tirupur
  Posts
  3,001
  Post Thanks / Like
  iCash Credits
  31,242
  Downloads
  12
  Uploads
  1
  பயனுள்ள பதிவை தந்தமைக்கு நன்றி பாரதி அண்ணா..

  தொடருங்கள் உங்கள் படைப்புகளை...
  " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
  தற்கொலை செய்து கொள். !
  தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
  இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

 12. #24
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  17,030
  Downloads
  62
  Uploads
  3
  கருத்துக்கு நன்று சூரியன்.

  -----------------------------------------------------------------

  சில சொற்கள் ரகற றகர வேறுபாடின்றி எழுதப்படும். அவையாவன:

  காரல், காறல்
  சுரண்டு, சுறண்டு
  சுரீர், சுறீர்
  சுருக்கென்று, சுறுக்கென்று
  கருத்து, கறுத்து
  சுருசுருப்பு, சுறுசுறுப்பு
  தருவாய், தறுவாய்
  புரந்தர, புறந்தர
  முரி, முறி


  தவிர, தவற என்னுஞ் சொற்களை ஒன்றோடொன்று மயக்கக்கூடாது.
  தவிர = தவிர்+அ(except)
  தவற = தவறு+அ(to fail)

  சில சொற்களில் வருபவை ரகரமா, றகரமா என்னும் ஐயப்பாட்டை, அச்சொற்களின் மூலத்தையேனும் பகுதியையேனும் அறிந்து அகற்றிக்கொள்ள வேண்டும்.
  எடுத்துக்காட்டு:
  உருக்கு என்பது உருகு என்னுந் தன்வினையின் பிறவினை.
  பொறாமை என்பது பொறு என்னும் வினையடியாய்ப் பிறந்த எதிர்மறைத் தொழிற்பெயர்.

  - முற்றும் -

  நன்றி : ஞா. தேவநேயப்பாவணர்

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •