தும்பை தூரிகையால்
தீட்டிய ஓவியத்தை
ஆழப் புதைத்தேன்
கெடாமல் இருக்க.!?
பாறை பிளக்கும்
பாரை வீரியத்துடன்
வண்ண சிதிலங்கள்
தோண்டி எடுக்க..
இடுக்குகள் எங்கும்
ஆக்கிரமித்த மதுவங்கள்
கூர்போதை வீச்சுடன்
பால்வாழ்வைப் பாழாக்க
விழிபிதுங்க மூச்சிரைக்கும்
குழுமத்தில் ஒருவனாக
இதமற்ற பாதைகளில்
பதநீர் தேடிக்கொண்டு...
என்றுதான் முடியுமோ
இந்நெடிய ஊர்வலம்?
Bookmarks