நட்பு தொடரும்
காயப்பட்ட நெஞ்சை
கனிவான அன்பால்
ஆற்றிட என்னிடம்
வந்த உன்னை
காதல் சொல்லி
காயப்படுத்தி விட்டேனா?
அன்பிற்கு அர்த்தம்
நட்புக்குள் காதல் என்று
தூய நட்பில் நான்
துவேசம் செய்துவிட்டேன்
நாம் காதலித்தால்
அது நிலையற்ற அன்பு
நாம் நட்பு கொண்டால்
இது நிலையான அன்பு
கலங்கிய என்னை
உன் வார்தைகளால்
புரியவைத்தாய்
நான் தெளிந்துவிட்டேன்
என் தடுமாற்றத்தில்
ஏற்பட்ட தப்பிற்கு
என்னை மன்னித்து விடு
என் நட்பு தொடரும்
Bookmarks