Results 1 to 11 of 11

Thread: நானும் மழையும்.....!

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0

    நானும் மழையும்.....!

    மழை உனக்கு பிடிக்கும் என்பதால்
    உடன் நானும் நனைவேன்....

    உடல் நானைக்கும் திவலைகள்
    என் உள் மனதினையும் நனைக்காமல்
    போவதில்லை... சிறகு விரிக்கிறது

    ஒதுங்கி நிற்கையில்
    என் தலை ஆட்டி உன் முகத்தில் நீர் சிதற்றி
    நீ சிலிர்ப்பதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை...!

    என்னை குனிய செய்து
    கேசம் பற்றி இழுத்து
    தலை துவட்டுகையில் உன் மார்பில் சாய்ந்து
    உன் இதய வேகத்தை
    உணராமல் இருக்க முடியவில்லை...!

    மழை பொழிந்தால் நனைவது
    என் நகரம் மட்டுமல்ல
    நானும் தான்...!



    தென்றல் வரும் பாதையில் காத்திருந்தேன்...
    வசீகரன்
    Last edited by அமரன்; 16-09-2007 at 09:07 AM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by vaseegaran View Post
    மழை பொழிந்தால் நானைவது
    என் நகரம் மட்டுமல்ல
    நானும் தான்...!

    தென்றல் வரும் பாதையில் காத்திருந்தேன்...
    வசீகரன்
    வாழ்த்துக்கள் வசிகரா..!எந்தபாதையில் தென்றல் வரும் எந்த பாதையில் புயல் வரும் இங்கே யாருக்கு தெரியும்..தெரிந்துகொண்டு காத்திருக்கும் நீங்கள் கொஞ்சம் சொல்லுங்களேன் வசிகரா..!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    உடல் நானைக்கும் திவலைகள்
    என் உள் மனதினையும் நனைக்காமல்
    போவதில்லை... சிறகு விரிக்கிறது
    அரவமற்ற
    பேருந்தின் தரிப்பிடத்தில் துணை ஒதுங்க
    பேருந்தின் பாதைவெள்ளத்தை உதைத்து
    கைகள் விரித்து தலை சிலுப்பி
    வட்டமிட்டு நீர்வட்டம் பரப்பி
    பன்னீர் தெளிப்பதைப் பார்க்கும்போது
    சிறுவயது நியாபகங்கள் நிழலாடும்.

    செல்ல அச்சச்சோவுடன் மெல்ல இழுத்து
    துப்பட்டாவால்/கைக்குட்டையால் தலைதுவட்டும்போது
    முந்தானை தெரியும் அதில்
    அன்னை முகம் சிரிக்கும்....
    காதல் நெஞ்சு அன்னையின் ஆகும்
    அதன் கனம் மிகவும் அதிகமாகும்

    மழையில் நனையும் சில்லிடும் உணர்வை
    விஞ்சிய உணர்வு இது.

    அன்னையுடன் புரியும் குறும்புகள்
    அன்னியர் காதலில் வீழ்ந்ததும்
    மீண்டும் தூசுதட்டப்பட்டுகிறது போலும்..

    பாராட்டுக்கள் வசீகரன் தொடருங்கள்..வளம் பெறுங்கள்.
    Last edited by அமரன்; 16-09-2007 at 09:48 AM.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by vaseegaran View Post
    உடல் நானைக்கும் திவலைகள்
    என் உள் மனதினையும் நனைக்காமல்
    போவதில்லை... சிறகு விரிக்கிறது

    ஒதுங்கி நிற்கையில்
    என் தலை ஆட்டி உன் முகத்தில் நீர் சிதற்றி
    நீ சிலிர்ப்பதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை...!

    அழகான கவிதை.. இந்த வரிகளை நான் மிகவும் ரசித்தேன்.
    வாழ்த்துக்கள்...வசீகரன்..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    12 Aug 2007
    Posts
    175
    Post Thanks / Like
    iCash Credits
    12,380
    Downloads
    0
    Uploads
    0
    வசீகரனின் வரிகளின் வசீகரம் மழையின் வசீகரத்தை மிஞ்சி விட்டது.
    அமரனின் பின்னூட்டல் கவிதையும் சிறப்பாக இருக்கிறது

  6. #6
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    வாழ்த்துக்கள் வசிகரா..!எந்தபாதையில் தென்றல் வரும் எந்த பாதையில் புயல் வரும் இங்கே யாருக்கு தெரியும்..தெரிந்துகொண்டு காத்திருக்கும் நீங்கள் கொஞ்சம் சொல்லுங்களேன் வசிகரா..!
    இதுதானே வேண்டாங்கிறது... யாருக்குத்தான் தெரியும்
    தென்றல் வரும் பாதையும்...
    புயல் வரும் பாதையும்... காதல் கவி புனையும் போதெல்லாம்
    மனசு அப்படிதான் இருக்கிறது...!அதைத்தான் கூறினேன்...
    கொஞ்ச நாட்களாக நம்ம சென்னையும் அப்படித்தான் இருக்கிறது...!
    வந்து பாரும்...! நன்றி நண்பா உங்களது பின்னூட்டத்திர்க்கு.....

    வசீகரன்....

  7. #7
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    அன்னையுடன் புரியும் குறும்புகள்
    அன்னியர் காதலில் வீழ்ந்ததும்
    மீண்டும் தூசுதட்டப்பட்டுகிறது போலும்..

    பாராட்டுக்கள் வசீகரன் தொடருங்கள்..வளம் பெறுங்கள்
    நன்றி ஐய்யா...! உங்கள் உங்கள் பின்னூட்ட அழகை ரசிப்பதற்கே
    கவிதைகளை வடிக்க வேண்டும் அமரரே....!


    வசீகரன்
    Last edited by அமரன்; 17-09-2007 at 07:00 AM. Reason: மேற்கோள் தணிக்கை

  8. #8
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    அழகான கவிதை.. இந்த வரிகளை நான் மிகவும் ரசித்தேன்.
    வாழ்த்துக்கள்...வசீகரன்..!!
    நன்றி மலர்மகளே....! மிக்க நன்றி...

    வசீகரன்

  9. #9
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    Quote Originally Posted by kampan View Post
    வசீகரனின் வரிகளின் வசீகரம் மழையின் வசீகரத்தை மிஞ்சி விட்டது.
    அமரனின் பின்னூட்டல் கவிதையும் சிறப்பாக இருக்கிறது
    நன்றிகள் நண்பரே.... தங்கள் படைப்புகளையும்
    ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

    வசீகரன்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    வசிகரன்...
    மழை .. என்றவுடனே நான் மயில் போல என் மனசிறகினை விரிக்க ஆரம்பித்து விடுவேன்... சில நினைவு துளிகளை மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு
    மழை என் நண்பன்... தோள் பிடித்து நடக்க
    மழை என் காதலி ... ஸ்பரிசத்தில் லயிக்க..
    மழை கவிதை என் மூச்சு, ரத்தத்தில் கலந்திட..

    வாழ்த்துகள் நண்பா...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  11. #11
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    வசிகரன்...
    மழை .. என்றவுடனே நான் மயில் போல என் மனசிறகினை விரிக்க ஆரம்பித்து விடுவேன்... சில நினைவு துளிகளை மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு
    மழை என் நண்பன்... தோள் பிடித்து நடக்க
    மழை என் காதலி ... ஸ்பரிசத்தில் லயிக்க..
    மழை கவிதை என் மூச்சு, ரத்தத்தில் கலந்திட..

    வாழ்த்துகள் நண்பா...
    மிக்க நன்றிகள் பொறுப்பாளர் அவர்களே....! பாராட்டுகளுக்கு...!

    கடந்து போன.... பசுமையான நினைவுகள் தங்களை மீண்டும்
    தீண்டியனவோ....! !தங்களின் நினைவுதுளிகள். .... மனதினில் நிழலாதினவோ...
    ஆகமகிழ்ந்தேன்.... அன்பரே....
    தங்களின் நினைவுதுளிகளை வாசிக்க வில்லை... நேரமின்மை....!

    வசீகரன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •