Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 41

Thread: மதில்மேல் பூனை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1

    மதில்மேல் பூனை

    தேடினான் தேவதையை
    ராமனாய்மாறி சீதையை
    கண்ணனாய்மாறி ராதையை
    தேவதையோ தென்படவில்லை!
    காத்திருந்தான் கண்ணகிக்கு!
    பொறுமைக்கோ பொறாமை
    மலர்தூவி மாதவியை அனுப்ப
    மான்குட்டியாய் மருண்டோடினான்!
    மதில்மேல் பூனையாய்
    தனிமையில் தவிக்கிறான்!
    கண்ணகிக்கு காத்திருப்பதா?
    மாதவியுடன் மகிழ்வதாவென்று?
    Last edited by சுகந்தப்ரீதன்; 01-11-2007 at 12:45 PM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் தளபதி's Avatar
    Join Date
    17 Jul 2007
    Location
    Saudi Arabia
    Posts
    360
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    1
    Uploads
    0
    சிறகு முளைக்கும் வரை
    பறக்கக் காத்திருப்பது
    தவறில்லையே!!!

    நல்ல கவிதை!! சுகம் தா!! சுகந்தா!!
    அளவில்லா அன்புடன்,

    தளபதி.

    எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது.
    எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது.
    எது நடக்குமோ அதுவும் நல்லதாகவே நடக்கும்
    .

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    சட்டு புட்டுன்னு கண்ணகிக்கு ஒரு முடிவை சொல்லிடுங்க ப்ரீதன்.இல்லன்னா உங்க கதி அதோகதிதான்.வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by தளபதி View Post
    சிறகு முளைக்கும் வரை
    பறக்கக் காத்திருப்பது
    தவறில்லையே!!!

    நல்ல கவிதை!! சுகம் தா!! சுகந்தா!!
    நன்றி தளபதி...!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    சட்டு புட்டுன்னு கண்ணகிக்கு ஒரு முடிவை சொல்லிடுங்க ப்ரீதன்.இல்லன்னா உங்க கதி அதோகதிதான்.வாழ்த்துக்கள்.
    உங்கள் அறிவுறைக்கு நண்றி நண்பரே..!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    வாழ்க்கை நம் மீது வீசும் குழப்பப்புதிர்கள் பல..

    இதயம் சொல்வதைக் கொஞ்சம் அடக்கி
    மூளை சொல்வதைக் கேட்டால் -

    இன்றைய தென்றல் விரட்டப்படும்..
    நாளைய புயல் தடுக்கப்படும்!

    கட்டற்ற உற்சாகம் தற்காலிகமாய்..
    காலமெல்லாம் நிம்மதி நிரந்தரமாய்..

    எது உங்கள் விருப்பம்?

    வாழ்த்துகள் - சுகந்தன்..
    Last edited by இளசு; 11-09-2007 at 06:23 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by இளசு View Post
    வாழ்க்கை நம் மீது வீசும் குழப்பப்புதிர்கள் பல..

    இன்றைய தென்றல் விரட்டப்படும்..
    நாளைய புயல் தடுக்கப்படும்!

    எது உங்கள் விருப்பம்?

    வாழ்த்துகள் - சுகந்தன்..
    பூவையும் நேசி புயலையும் நேசின்னு சொன்னா அடிச்சிருவிங்க....போலிருக்கு....எனக்காக எழுதுனதாவே எல்லோரும் சொல்லுரிங்க....இளமையில் எல்லோருக்கும் ஏற்படும் தடுமாற்றத்தை கொஞ்சம் கற்பனை கலந்து சொன்னேன்....மற்றபடி நான் ரொம்ப நல்லபையங்க....கண்ணகிக்கு காத்துகிட்டிருக்கேன்....பிள்ளையாரைப்போல பிரம்மசாரியாய்.....!
    Last edited by சுகந்தப்ரீதன்; 12-09-2007 at 03:16 AM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    குழுப்பங்கள் குழுத்திடும் இளமையில்
    குறியாய் இரு உன் எதிர்கால வாழ்க்கைக்கு

    அருமை கவிதை நன்பா
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    மதில் மேல் பூனையாகப் பலர்
    துணையை தேடுவதில் மட்டும் அல்ல
    துணையாக கூடுவதிலும்...

    ஊரை அழிக்கும் கண்ணகிகளை விட
    யாழ் மீட்டும் மாதவிகள்
    பாராட்டுக்குரியவர்கள்
    பேணப்பட வேண்டியவர்கள்.
    அக்காலம் பேசவில்லை நான்
    இக்காலம் மட்டும் பேசுகின்றேன்.

    பூவையோ புயலையோ
    இதய சுத்தியுடன்
    நேசித்தால் போதும்
    அடிகள் கிடைக்காது
    சுகந்தா பாராட்டுக்கள்.
    Last edited by அமரன்; 11-09-2007 at 11:07 AM.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by மனோஜ் View Post
    குழுப்பங்கள் குழுத்திடும் இளமையில்
    குறியாய் இரு உன் எதிர்கால வாழ்க்கைக்கு

    அருமை கவிதை நன்பா
    எதிர்கால வாழ்க்கைக்கு எதுல குறியாயிருக்கனும்னு சொல்லியிருந்தா குழப்பமில்லாம இருந்திருக்கும்.....மறுபடியும் குழப்பிட்டீங்க மனோஜ்...!

    வாழ்த்துக்கள்...!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    ஊரை அழிக்கும் கண்ணகிகளை விட
    யாழ் மீட்டும் மாதவிகள்
    பாராட்டுக்குரியவர்கள்
    பேணப்பட வேண்டியவர்கள்.
    அக்காலம் பேசவில்லை நான்
    இக்காலம் மட்டும் பேசுகின்றேன்.

    .
    எக்காலத்திலும் இதுபொருந்தும் அமரரே...ஆமா என்கிட்ட சொல்லாம எங்க போனிங்க...நீங்க இல்லாம பின்னுட்டமெல்லாம் குறைங்சிடுச்சி தெரியுமா...அதான் நீங்க வந்தபிறகு கவிதையை பதிச்சேன்....முத்ல் பின்னுட்டம் உங்களுதா இருக்கும்னு நினைச்சேன்...லேட்டா வந்தாலும் எனக்கு நெருக்கமாகவே வந்துட்டீங்க....உங்க கவிதையில் மேற்கொண்ட வரிகள் மிகஅருமை நண்பரே....!எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்...!
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-09-2007 at 01:50 PM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    மாதவிகள்
    மணமாகாமல் தவிப்பர்
    மாதவர்கள்
    என்ன செய்வர்?

    கோவலன் தாலிகட்டி
    காவலன் ஆகியிருந்தால்
    இப்படி ஒரு கவிதை
    இன்று வந்திருக்குமா?

    தவறு மாதவி மேலா
    கோவலன் மேலா
    மாதவிக்கு கண்ணகி மேலா

    கொண்டவன் தடம் மறந்தபோது
    கண்ணகியும் அமைதி காத்தாள்..
    வந்தவன் உழைக்க மறந்த போது
    மாதவியும் அமைதி காத்தாள்..

    விட்டுச் சென்றபொழுது
    இருவரும் மௌனிகள்..

    காசிழந்த போது மாதவி விரட்டவில்லையே!
    கண்ணகியும் விரட்ட வில்லையே!
    காற்சிலம்பு விற்கத் தர
    கண்ணகிக்கு கிடைத்த வாய்ப்பு
    மாதவிக்கு கிடைக்கவில்லை
    ஏனெனில்
    கால்(சிலேடை) சிலம்பும்
    அவளுக்கும் மிஞ்சவில்லை..

    ஆணாதிக்க கதையினிலே
    உமக்கு
    அடிபடக் கிடைத்தது மாதவியா?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •