Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: தமிழ் மன்ற வழிகாட்டி.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    தமிழ் மன்ற வழிகாட்டி.

    உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
    1. தமிழில் எழுதத்துடிக்கும் ஆர்வலர்களுக்கும்
    2. தமிழ்த்தட்டச்சை ஊக்கப்படுத்தவும்
    3. தகவல்களையும், கருத்துக்களையும் பகிர்வதற்கும் (திணிப்பதற்கு அல்ல)
    4. பல்வேறுபுலங்களில் வாழும் உறவுகளை இணைப்பதற்கும்
    களம் அமைத்துக்கொடுக்கும் நோக்கில் மன்ற நிறுவனர் அவர்களால் உருவாக்கப்பட்ட இத்தளத்தை சிறந்த நோக்கில் பேணிப்பாதுகாக்க அனைவரும் இணைந்து செயல்படுவோம். எமது அந்நற்செயல்பாட்டுக்கு உதவியாக, வழிகாட்டியாக இவ்விழை.

    பழைய உறவுகளின் சந்தேகங்களின் அடிப்படையிலும் எதிர்கால சந்தேகங்கள் என்னும் எதிர்வுகூறலின் அடிப்படையிலும் அமையபெற்ற தொகுப்புகள் இவை. உறுப்பினர்களின் தேடல் தெளிவை இலகுவாக்க திரி பூட்டப்பட்டுள்ளது. கருத்துக்கள் ஆலோசனைகளை தனிமடலில் நிர்வாகக்குழுவுக்கு தெரியப்படுத்துவோம்.

    அடுத்த பகுதிக்குப்போக முன்னர் மன்றவிதிகளைப் படித்து தெளிவாகப் புரிந்துகொள்ளுவோம்.
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11843

    -நிர்வாககுழு

    இழையின் பொருளடக்கம்
    1. தமிழ்மன்றம்-உட்கட்டமைப்பு
    2. தனிமடல் - விளக்கம்
    3. Buddy / Ignore lists விளக்கம்
    4. பண்பட்டவர் - விளக்கம்
    5. உங்கள் திரிகள்
    6. உங்கள் பின்னூட்டங்கள்.
    7. உங்கள் பதிவுகள்
    8. எடிட்டர்கள்
    9. சுட்டிகள் இணைத்தல்
    10. படங்கள்
    11. ஆடியோ, வீடியோ பதிவுகள்
    12. பயனர் தகவல்கள்
    13. பட்டங்கள்


    .
    Last edited by admin; 16-03-2008 at 05:42 AM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    தமிழ்மன்றம் - உட்கட்டமைப்பு

    1)முல்லை மன்றம்

    மிகவும் முக்கிய மன்றமான இது நிர்வாக அறிவிப்புகள், மன்றம் தொடர்பான உங்கள் ஆலோசனைகள், சந்தேகங்கள், எங்கள் அறிமுகம் என்பவற்றைக்கொண்டது.

    2) மல்லிமன்றம்.

    இங்கே எங்கள் சொந்த நகைச்சுவைகள்,கதைகள்,சுவையான சம்பவங்கள்,புதிர்களுடன் உலகநடப்புகளையும் (செய்திகள் பகுதி) பதியலாம். பகுதியில் நாங்கள் படித்த பிறர் படைப்பாளிகளை பகிர்ந்துகொள்ளலாம்.

    3)செவ்வந்தி மன்றம்

    கவிதை எழுத நினைப்போர் பாடம் படிக்கலாம். நாங்கள் சொந்தமாகப் புனைந்த கவிதைகளை பதியலாம். சில கவிதைகளின்பின் கவிஞராக எங்களை அறிமுகம் செய்யலாம். மாதாந்தக் கவிதைப்போட்டிகளில் பங்கெடுக்கலாம்.

    4)ரோஜா மன்றம்.

    கணினி தொடர்பான சந்தேகங்களை தீர்த்த்துக்கொள்வதுடன் கணினி தொடர்பான தகவல் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். தமிழும் இணையமும் தொடர்பான எங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

    5) சாமந்தி மன்றம்

    மருத்துவம், வணிகம், பொருளாதாரம், விளையாட்டு, கல்வி, அறிவியல், ஆன்மீகம், அரசியல், என பல்சுவை பரிவர்த்தனை மன்றம்.

    6) தாமரை மன்றம்

    பயனுள்ள தகவல்கள் கட்டுரைகள் தொடர்பான பகிர்வுகளும் விவாதங்களும் அலசல்களும் நிகழ்த்துவதோடு அழகு, சமையல்கலைக் குறிப்புகளை பகிர்ந்துகொள்ளலாம். சிறுவர் தொடர்பான பட்டைப்புக்களமாக இருப்பதோடு மன்ற உறவுகள் வாழ்த்து அரங்கமாகவும் திகழ்கிறது.

    7) கதம்ப மன்றம்

    சினிமா, சின்னத்திரை,வானொலி தகவல் பெட்டகமாகவும் ஒலி,ஒளி(புகைப்படம்,அசைபடம்) கருவூலமாகவும் இம்மன்றம் சிறப்புப்பெறுகிறது.

    8) குறிஞ்சி மன்றம்.

    பெயருக்கேற்றாற் போல எங்களுக்காக எங்களாலும் மன்றத்தால் எங்களுக்காகவும் நடத்தப்படும் கவிதைப்போட்டிகள் தவிர்ந்த இதர போட்டிகளையும் அனைத்துப் போட்டிகளுக்கான ஓட்டெடுப்புகளையும் உள்ளடக்கியது. மன்றப்புத்தகக் களஞ்சியமும், மனிதவள, வேலைவாய்ப்பு தகவல்களும் இப்பகுதியிலேயே உள்ளது. பணப்பட்டவர்களுக்கான படைப்புகளின் பள்ளியான இம்மன்றத்தில் நுழைய பண்பட்டவர் சிறப்பு அனுமதி பெற்றவர்களால் மட்டுமே முடியும்.


    .
    Last edited by admin; 16-03-2008 at 05:43 AM.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    தனிமடல் - விளக்கம்

    தனிமடல் என்றால் என்ன?

    இது உங்கள் E-MAIL போன்றது. இது மன்ற நண்பர்களிடையே மட்டுமே பயன்படுத்த முடியும்..இதன் மூலம் நீங்களும் மன்ற நண்பர்களும் தனிப்பட்ட கருத்துப் பரிமாற்றங்களைச் செய்யலாம். நிர்வாகத்தினருக்கும் உங்களுக்கும் இடையிலான தனிப்பட்ட கருத்துப் பறிமாற்றமும் இதனூடாக நடைபெறும்.
    எனவே ஒவ்வொரு தடவை வரும்போதும் தனிடலை பார்வையிடுங்கள்

    தனிமடலை எப்படி பயன்படுத்துவது?

    Welcome, ************
    You last visited: Today at 12:12 AM
    Private Messages: Unread 0, Total 88.
    நீங்கள் மன்றத்தின் உள்ளே நுழைந்ததும் வலதுபக்க மூலையில் மேலே உள்ளவாறு இருக்கும். அதில் Private Messages என்பதை கிளிக் செய்து உங்களுக்கு வந்த மடல்களை பார்வையிடலாம். அத்துடன் Send New Message கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு, நிர்வாக உறுப்பினருக்கு தனிப்பட்ட செய்திகளை அனுப்பலாம்.

    தனிமடல் வருவதை, எப்படி தன்னிச்சையாக அறிவது?

    User CP > Edit options சென்று,
    Show New Private Message Notification Pop-up
    என்பதைத் தெரிவு செய்தபின்
    Save changes கொடுத்தால்,
    உங்களுக்குத் தனிமடல் வரும்போது, தன்னிச்சையாகவே Pop-up வந்து தனிமடல் வந்துள்ளதாகக் காட்டும்...

    ஒரே நேரத்தில் பல நண்பர்களுக்கு மடல் அனுப்புவது எப்படி?

    உங்கள் Buddy list நண்பர்களை இல் சேர்த்துக்கொள்ளுங்கள்.
    Quick Links கிளிக் செய்து Open buddy list என்பதை தெரிவுசெய்து தோன்றும் Pop-up இல் தேவையான நண்பர்களை தெரிவுசெய்து PM users என்பதை கிளிக் செய்து வழக்கமான முறையில் தனிமடலை அனுப்புங்கள்

    .
    Last edited by admin; 16-03-2008 at 05:44 AM.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    Buddy / Ignore lists விளக்கம்.

    Buddy / Ignore lists என்றால் என்ன?

    இது மன்றத்தில் உங்களுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் (தவிர்க்க விரும்புபவர்கள்) லிஸ்ட்.
    buddy என்றால் நண்பர் பட்டியல்.
    Ignore வேண்டாதவர் பட்டியல்!!

    இங்கு, நாம் ஒருவரை அனுமதிக்கும்போது, அனுமதிக்கப்படுபவருக்கு என்ன நிகழும்?

    உங்கள் Buddy லிஸ்டில் உள்ளவர்கள் மன்றத்தில் உலாவினால், அவர்கள் பெயர் அருகில் '+' குறி தோன்றும்.
    Ignore லிஸ்டில் உள்ளவர்கள் உலாவினால் '-' குறி தோன்றும்.

    இதன் பயன்பாடு என்ன?
    • buddy பட்டியலிலே தேவையானவர்களை சேர்த்து விட்டு தனிமடல் (PM) தெரிவுகளிலே (option) Receive Private Messages only from Buddies and Moderators என்பதை தெரிந்தெடுத்தால் உங்களுக்கு வேண்டாதவர்களிடம் இருந்து தனிமடல் எல்லாம் வராது!
    • Buddy பட்டியலிலே உள்ள உங்கள் நண்பர்கள் அனைவருக்கும், ஒரு சேர தனிமடல் அனுப்பலாம்.
    • அனைவரையிம் ஒரே லிஸ்டில் மன்றத்தில் உள்ளனரா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம்


    .
    Last edited by admin; 16-03-2008 at 05:44 AM.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    பண்பட்டவர்.

    பண்பட்டவர் என்றால் என்ன?

    பதிவிறக்கங்கள் செய்வதை சரியான படி கண்காணிக்காவிடில் அது மன்றத்தை வெகுவாக பாதிக்கலாம். "பேண்ட்விட்த்" வெகுவாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், மின் புத்தகங்கள் போன்ற முக்கிய பகுதிகளுக்கு செல்ல "பண்பட்டவர்" தகுதி உருவாக்கப்பட்டது.

    பண்பட்டவர் தகுதியின் பயன்கள் என்ன?
    • மின் புத்தகங்களை பதிவிறக்கலாம்.
    • படங்களை நேரடியாக மன்றத்தில் பதிவேற்றலாம்.
    • சில முக்கியமான, பண்பட்ட பதிப்புகளின் பயனை அடையலாம்.
    பண்பட்டவர் தகுதியை எப்படி பெறுவது?

    உங்கள் பதிவுகளைக் கண்காணித்து நிர்வாகத்தினர் தாமாக வழங்குவார்கள். பல பதிவுகளை கடந்தும் உங்களுக்கு பண்பட்டவர் தகுதி கிடைக்காது விட்டால் பண்பட்ட உறுப்பினர் அனுமதி விண்ணப்பம் திரிக்கு சென்று விண்ணப்பம் செய்து பெற்றுகொள்ளலாம். நம் மன்றத்தில் பதிவு செய்து விட்டு உடனே இந்த தகுதியை கேட்பவர்களுக்கு கிடைக்காது. ஒரு சில நல்ல தமிழ் பதிப்புகள் தந்த பின்னரே புதிய உறுப்பினர்களுக்கு இந்த தகுதி வழங்கப் படும்.

    பண்பட்டவர் தகுதி கிடைத்ததா என்பதை உங்கள் பெயரின் கீழே பார்த்து (கீழ்கண்டவாறு தோன்றும்)அறிந்துகொள்ளலாம்.
    அமரன்
    பொறுப்பாளர்
    பண்பட்டவர்


    .
    Last edited by admin; 16-03-2008 at 05:45 AM.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    உங்கள் திரிகள்.

    புதிய திரிகளை ஆரம்பிப்பது எப்படி?

    உங்கள் திரி ஆரம்பிக்கப்படவேண்டிய மன்றப்பிரிவைத் தெரிவு செய்யுங்கள்.(உ+ம்- காதல் கவிதை எனில் செவ்வந்தி மன்றத்தில் உள்ள புதிய கவிதைகளின் காதல் கவிதைகள் பகுதி) என்பதை கிளிக் செய்து புதிய திரியை தொடங்கலாம்.


    திரிகள் தொடங்கும்போது கவனிக்கவேண்டியவை யாவை?
    • நீங்கள் பதிக்க நினைக்கும் தகவலின் உள்ளீடுகொண்ட வேறு திரிகள் இல்லை
    • சரியான இடத்தில் தொடங்குகின்றீர்கள் .
    • மன்றவிதிகளுக்கு அமைவானதா
    என்பவற்றை உறுதிசெய்துகொள்ளுங்கள்

    ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட உங்கள் திரியை காணாதுவிட்டால் புதிதாக தொடங்காதீர்கள். மன்றத்தில் நன்றாகத் தேடிப்பார்த்தும் அத்திரி அகப்படவில்லை என்றால் பொறுப்பாளர்களை தொடர்புகொள்ளுங்கள்.

    தமிழில் எப்படிப் பதிவது என்பதை அறிய கீழே உள்ள லிங்குகளை கிளிக்குங்கள்.
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8627
    http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=2

    .
    Last edited by அன்புரசிகன்; 30-04-2012 at 02:57 AM.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    உங்கள் பின்னூட்டங்கள்,

    திரிகளில் பின்னூட்டமிடுவது எப்படி?

    நீங்கள் பின்னூட்டமிட விரும்பும் திரியில் கீழே இருக்கும் Quick Reply என்னும் எடிட்டரின் உதவியுடன் அல்லது பதிவின் கீழ் உள்ள Reply ஐ அழுத்தி அத்திரிபற்றிய உங்கள் கருத்துப் பின்னூட்டங்களை பதியலாம்.

    மற்றவர் போட்ட பதிவினை மேற்கோள் செய்து உங்களது பின்னூட்டத்தை எப்படி பதிப்பது?
    • மேற்கோள் காட்டவேண்டிய பதிவின் கீழே Reply With Quote இப்படி ஒரு படம் இருக்கும். அதை சொடுக்கினால் அவரது பதிவு மேற்கோள் காட்டப்பட்டிருக்கும்!! அதன் கீழ் உங்கள் பதிவை பதியலாம்.

    • மேலும் உதாரணத்துக்கு originally posted by ABC போன்று தோன்ற வைக்க சில எடிட் எல்லாம் செய்ய வேண்டும்!!! உங்களுக்கு vb யில் நல்ல பரிச்சயம் இருந்தால் இந்த முறையையும் பாவிக்கலாம்
    மற்றவர் போட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை மேற்கோள் செய்து உங்களது பின்னூட்டத்தை எப்படி பதிப்பது (Multi - Quote) ?
    • அதற்கு பதிவுகளின் வலது பக்க கீழ்ப்பகுதியில் காணப்படும் என்ற குறியீட்டைப் பாவிக்க வேண்டும். நீங்கள் மேற்கோள் காட்ட வேண்டிய பதிவுகளை உங்களது கணினியின் மவுசால் அந்த அடையாளத்தில் கிளிக் செய்து தெரிவு செய்ய வேண்டும்.
    • நீங்கள் தெரிவு செய்த பதிவுகளில் அந்த அடையாளம் இப்படி மாறிக் காணப்படும்.
    • இப்போது நீங்கள் மேற் கோள் காட்ட வேண்டிய பல பதிவுகளைத் தெரிவு செய்து விட்டீர்கள். இனி மேற்கோள் காட்டி அவற்றுக்கு உங்கள் பதில்களைப் பதிக்க வேண்டிய வேலையே மீதியாக உள்ளது. அதற்கு நீங்கள் தெரிவு செய்த ஏதாவது ஒரு பதிவின் இந்தReply With Quote அடையாளத்தைக் கிளிக் செய்தால் போதும், நீங்கள் மேற்கோள் காட்ட வேண்டிய பதிவுகள் எல்லாம் ஒன்றன் பின்னால் ஒன்றாக வந்து உங்களது தட்டச்சு செய்யும் பகுதியில் நிற்கும்.
    • இப்போது நீங்கள் உங்களது பதில்களை அந்த ஒவ்வொரு மேற்கோள் காட்டிய பதிவுகளுக்கும் கொடுத்துவிட்டு Save Changes என்பதன் மூலம் சேமித்தால் போதும்..
    ஒரு திரியில் உங்கள் பின்னூட்டம் உள்ளதா என்பதை எப்படி அறிந்துகொள்வது?

    இந்த அடையாளத்தின் அர்த்தம் நீங்கள் அந்ததிரியில் பதிவிட்டுள்ளீர்கள் என்பது!!அதன் மேல் மவுஸை கொண்டுசென்றால் அந்ததிரியில் நீங்கள் எத்தனை பதிவிட்டுள்ளீர்கள் அதில்கடைசி பதிவு எப்போது இடப்பட்டது போன்ற தகவல்களைசொல்லும்!!!
    Last edited by அன்புரசிகன்; 30-04-2012 at 04:22 AM.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    உங்கள் பதிவுகள்

    ஒரு படைப்பு அல்லது ஒரு பதிவினைப் பதித்த பின்னர் அதிலுள்ள தவறுகளைத் திருத்த அல்லது வேறு விடயங்களை அதனுடன் சேர்க்க முடியுமா?

    தாராளமாகச் செய்யலாம், இங்கே நீங்கள் உங்கள் பதிவினைப் பதித்த பின்னர் உங்களது பதிவினது வலது பக்க அடியில் Edit Post எனக் குறியிடப்பட்ட ஒரு அடையாளம் தென்படும் அதனை நீங்கள் கிளிக் செய்தால் உங்களுக்கு திருத்துவதற்கு ஏற்ற வகையில் உங்களது பதிவு மாறிக் காணப்படும். அங்கே உங்களுக்கு வேண்டிய திருத்தங்களைச் செய்த பின்னர் மீள நீங்கள் Save Changes என்பதனைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பதிவில் திருத்திய விடயங்களைச் சேமிக்க முடியும்

    உங்கள் பதிவுகளைத் தேடுவது எப்படி?
    ஒருவரது பெயரில் கிளிக்கி, View Public Profile ஐ,
    அல்லது, Quick links இல் My Profile ஐ,
    தேர்வு செய்வதன் மூலம்,
    ஒருவரின் தனிப்பட்ட public profile ஐ பார்வையிடலாம்.
    அங்கு,
    Find all posts by ***** என்பதைக் கிளிக்குவதன் மூலம் ஒருவரின் இறுதி 500 பதிவுகளையும்,
    Find all threads started by ***** என்பதைக் கிளிக்குவதன் மூலம் ஒருவர் ஆரம்பித்த திரிகளையும்,
    கண்டு கொள்ளலாம்.


    .
    Last edited by அன்புரசிகன்; 30-04-2012 at 03:32 AM.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    எடிட்டர்கள்

    நமது மன்றத்தில் இரண்டு விதமான எடிட்டர்களை அனுமதித்துள்ளோம்.
    1. பேசிக் எடிட்டர்
    2. ஸ்டாண்டர்ட் எடிட்டர்
    3. WYSIWYG எடிட்டர்
    எமக்குத் தேவையான editor mode ஐ தெரிவு செய்வது எப்படி?

    UserCP --> Edit Options --> Miscellaneous Options -->
    இங்கே சென்றால், மூன்று options இருக்கும். அதில் எமது வசதிக்கேற்றதைத் தெரிவுசெய்யலாம்

    பேசிக் எடிட்டரின் அனுகூலங்கள் யாவை?
    1. தமிழில் (இகலப்பை இல்லாமல் phonetic முறையில் டைப் செய்ய)
    2. ஆங்கிலத்தில் டைப் செய்ய
    3. பாமினி பயன்படுத்துபவர் தமிழில் உள்ளீடு செய்ய.
    STANDARD editor, WYSIWYG editor இரண்டிற்குள்ள வேறுபாடு என்ன?

    STANDARD இல் நீங்கள் கொடுக்கும் அழகு படுத்தும் கட்டளைகள் தெரியும்.
    உதாரணம்;
    bold = [ b ] text [ / b ] ,
    blue color = [ color=blue ] text [ / color ],

    WYSIWYG இல் அவை ஒன்றுமே தெரியாது. இலகுவானது

    எடிட்டர்கள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்லுங்கள்.
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12178

    .
    Last edited by admin; 16-03-2008 at 05:47 AM.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    சுட்டிகள் இணைத்தல்

    சுட்டிகள் இணைப்பது எப்படி?
    • முதலில் இணைக்கவேண்டிய திரிக்குச் செல்லுங்கள்.
    • அங்கே அட்றெஸில் காணப்படும் சுட்டியை காப்பி செய்துகொள்ளுங்கள்.
    • இப்போது சுட்டி இணைக்கவேண்டிய பதிவுக்குப் போய் எடிட்டை கிளிக் செய்யுங்கள்
    • நீங்கள் இணைப்புக்கொடுக்கவேண்டிய பதிவினை (தலைப்பை)தட்டச்சிக்கொள்ளுங்கள்.
    • அத்தலைப்பினை ஹைலைட் செய்துகொள்ளுங்கள்.
    • மேலே உள்ள மெனுவில் ஐக் கிளிக்செய்யுங்கள்.
    • அப்போது திறக்கும் பெட்டியில் நீங்கள் காப்பிசெய்த சுட்டியை பேஸ்ட் செய்யுங்கள்.
    • ஓ.கே பட்டனை கிளிக் செய்யுங்கள்
    • உங்கள் சுட்டி இணைக்கப்படிருக்கும்
    குறிப்பிட்ட ஒரு பதிவின் சுட்டியை இணைப்பது எப்படி?

    நீங்கள் சுட்டி கொடுக்கவேண்டிய பதிவின் வலப்பக்க மேல் மூலையில் பதிவின் இலக்கம் இருக்கும். அதை சொடுக்கி சுட்டி இணைப்பது போல் இணைக்கலாம்.
    உதாரணமாக நீங்கள் 10 ஆவது பதிவின் சுட்டியை இணைக்க விரும்பினால் பதிவின் வலப்பக்க மேல் மூலையில் #10 என்று இருக்கும். அதை சொடுக்கி சுட்டி இணைப்பது போல் இணைக்கலாம்.

    .
    Last edited by அன்புரசிகன்; 30-04-2012 at 04:06 AM.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    படங்கள்.

    படங்களை பதிவுகளில் இணைப்பது எப்படி?
    எடிட்டரில் உள்ள என்னும் ஐகானை கிளிக்க் செய்து குறிப்பிட்ட படம் சுட்டியை கொடுப்பதன் மூலம் படங்களி பதிவுகளில் இணைக்கலாம்.

    படங்களின் சுட்டிகளை எப்படிப் பெறுவது?

    1)மன்றத்தில் படங்களைப் பதிவேற்றி சுட்டிகளைப் பெறலாம்
    2)வேறு தளங்களில் படங்களைப் பதிவேற்றி சுட்டிகளைப் பெறலாம்.

    மன்றத்தில் படங்களைப் பதிவேற்றுவது எப்படி?

    மன்றத்தின் போட்டோகேலரிக்கு போய் Upload ஐக் கிளிக்செய்து படங்களைப் பதிவேற்றலாம். (படங்களைப் பதிவேற்றுவதற்கு நீங்கள் பண்பட்டவர் அனுமதி பெற்றிருத்தல் அவசியம்.) நீங்கள் ஏற்றிய படத்தின் மேல் கிளிக்குவதன் மூலம் தோன்றும் சாளரத்தில் அப்படத்தின் சுட்டியை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

    *மன்றத்தில் படங்களை பதிவேற்றும்போது விதிமுறைகளை கருத்தில் கொள்ளுங்கள்
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6470

    .
    Last edited by அன்புரசிகன்; 30-04-2012 at 04:09 AM.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    ஒலி, வீடியோ பதிவுகள்

    ஒலி வடிவ ஆக்கங்களை பதிவுடன் இணைக்கும் வழிகள்?

    மெகா அப்லோட் போன்ற தளங்களில் அந்தக் கோப்பை பதிவேற்றம் செய்து அந்த தொடர்பு லிங்கை ( சுட்டியை) இங்கு பதியலாம். பதிகையில் "HTTP://" இல்லாமல் பதிக்க வேண்டும்.

    இந்த தளத்திற்கு சென்று, பைலை அப்லொடு செய்து லிங்க் கொடுப்பதும் பயன் தரும்.
    Last edited by அமரன்; 02-12-2008 at 05:02 PM.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •