Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5
Results 49 to 54 of 54

Thread: இலக்கியமா?இலக்கணமா?

                  
   
   
  1. #49
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    இலக்கணமா?இலக்கியமா?என்பதின் நாம் கவனிக்க வேண்டிய
    விஷயம் பிழைகள்.
    எழுத்துப் பிழை மட்டுமின்றி பொருட்பிழையும் நாம் நம்மையறியாமல்
    இட்டுச் செல்வதுண்டு.
    சந்திப்பிழைப் பிழை,சாரியைப் பிழை இல்லாமல் எழுத முயற்சிக்க வேண்டும்.
    மரபுசார் விஷயங்களில் கவனமாக சொற்களை பயன் படுத்த வேண்டும்.
    தலைவியை,காதலியை,மனவியை வர்ணிக்கும் சொற்களைப் பிறர்க்கு பயன் படுத்த இயலாது.

    தேன் மயங்கு மொழியினள்,தசரதனை வணங்கி வரவேற்றாள்.
    தேன் மயங்கு மொழியினள்,லட்சுமணனை வாழ்த்தி வரவேற்றாள்.
    தேன் மயங்கு மொழியினள்,முனிவரை தண்டனிட்டு வரவேற்றாள்,
    அல்லது சிரந்தாழ்த்தி,கரம் குவித்து வணங்கி வரவேற்றாள்.
    தேன் மயங்கு மொழியினள்,தோழியரை நகைப்புடன் வரவேற்றாள்.
    தேன் மயங்கு மொழியினள்,ராமனைக் கொஞ்சி வரவேற்றாள்.

    இதனை மாற்றி பயன் படுத்தினால் நகைப்புக்கு உரியதாகிவிடும்.
    (நான் 40 வருடங்களாக சிலேட்,குச்சி,காகிதம்,பென்சில்,பேனா என்றே எழுதிப் பழகியதால் தட்டச்சில் எழுத்துப் பிழைகள் மலிந்து விடுகிறது.
    வார்த்தைகளில் எழுத்துகளையும் விட்டு விடுகிறேன்.எனவே பிழையைப்
    பற்றி கூறும் இவர்கள் பதிவில் பிழைகள் இருக்கின்றதே எனக்கருது வோருக்காக இந்த தன்னிலை விளக்கம்.)
    மன்ற தமிழ் ஆர்வலர்கள் தங்கள் பதிவின் கீழ் சிறு சிறு குறிப்புகளை இடலாம்.
    ஒற்று மிகா இடங்கள்:
    நமக்கு பெரும் பிரச்னை எந்த இடத்தில் ஒற்று வரும் எந்த இடத்தில் வராது என்பது தான்.
    அது,இது,அவை,இவை என்னும் சுட்டுகளுக்கு பின்னும்,
    எது,ஏது,யாது,யாவை,யா என்னும் வினாக்களுக்கு பின்னும் வலி மிகாது.
    Last edited by jpl; 19-09-2007 at 02:34 AM.

  2. #50
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    புதுக்கவிதையின் சிறப்பை பற்றி சிறப்பாக சொல்லியிருக்கின்றீர்கள்...

    ஆடிக்கு பின்னே ஆவணி
    என் தாடிக்கு பின்னே தாவணி...

    இதில் சொல்லபடாதது ஒன்றுமேயில்லை...

    சொற்சிக்கனம் மிக அழகாக உள்ளது. கருத்து நிறைவாக உள்ளது.

    புதுக்கவிதையில், நிறைய கற்பனை... அர்த்தம் பொதிந்த வார்த்தைகளில் அவசியம்... கவிதை எழுத விரும்பும் அனைவருமே இத்திரியினை அவசியம் படிக்கவேண்டும்..

    எழுத்துக்களில் பிழை வருகிறது.. பிழையைப்பற்றி சொல்வதற்கு ஓர் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்....

    எனக்கு ஒரு கதை தோன்றியது..

    ஒரு பெரியவர் ஒருவனிடம் அவன் குறைகளை சொல்லிக்கொண்டிருந்தாராம்.. நீ இதை இதையெல்லாம் திருத்திக்கொள்ளவேண்டுமென்று....

    இன்னொரு நாள் அந்த முனிவர் எதோ தவறு செய்திட, எதேச்சையாக அந்த மனிதர் அதை பார்த்துவிட்டு அந்த பெரியவரை நோக்கி கேட்டானாம்...

    முதலில் உங்களை திருத்திக்கொள்ளாமல் எனக்கு நீங்கள் எப்படி அறிவுரை கூறுகிறீர்களே என்று...

    அதற்கு அந்த பெரியவர் கேட்டாராம்.. உன் வீட்டிலே துடைப்பம் இருக்கிறதா??...

    இருக்கிறது என்றானாம்..

    அது அழுக்காக இருக்குமா?, சுத்தமாக இருக்குமா? என்று கேட்டாராம்..

    அழுக்காகத்தான் இருக்கும் என்றானாம்..

    வீட்டை சுத்தம் செய்ய அந்த துடைப்பத்தைத்தானே பயன்படுத்துகிறாய்?...

    ஆம் என்றானாம்....

    துடைப்பம் அழுக்குதான்.. ஆனால் அதைக்கொண்டுதான் வீட்டை சுத்தம் செய்கிறோம்.. என்னிடமிருக்கும் குறைகளை நோக்காதே. என்னால் நீ சுத்தமாகிறாயா, தெளிவாகிறாயா என்று பார் அவ்வளவுதான் என்றாராம்...

    அவ்வளவுதான்...

    தொடருங்கள் லதா அவர்களே!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  3. #51
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நன்றி லதா..

    நன்றி ஷீ..

    பிழைகள் - இதுபற்றி பாரதியின் முயற்சிப்போமே திரி உள்ளது.

    நான் சந்திப்பிழைகள் மலிய எழுதுவது எனக்கே தெரிகிறது..

    ஓலையில் எழுத ஆணி.. அடிக்கடி புது எழுத்து எழுத ஓலையில் புள்ளிகளாய் துளைகள் பெருகும் என - கூட்டெழுத்துகள்..
    உளியால் செதுக்கவும், செப்பேடுகளில் பொறிக்கவும் அந்த வகை எழுத்துகள்..

    பின் விரலால் மணலில்/நெல்லில் எழுத
    பலப்பத்தால் சிலேட்டுப்பலகையில் எழுத ( எச்சில்/தண்ணீர்/ கோவைக்காயால் அழித்தழித்து எழுத)
    பென்சில், பேனா - காகிதத்தில் எழுத..

    பிறகு தட்டச்ச, அச்சுக்கோர்க்க வசதியாய் - பெரியார் முதல் பலர் எழுத்துவகையைச் சீர்திருத்த

    இன்று இணையத்தில் நாமே தட்டச்ச -

    (இணையத்தமிழில் வேகம் காரணமாய் சந்திப்பிழைகள் ''பொறுக்கப்படும்''
    என மொழி ஆர்வலர்கள் எண்ணுகிறார்கள் - நம் வசதிக்காக தொடர்ந்து
    தளர்த்த/மாற்றப்பட்டு வரும் தமிழ் மொழி விதிகள்..)

    எத்தனை வடிவம் கண்டு -
    இன்னும் நமக்கு இயைந்து
    நம்மை வளர்க்கும்..
    நம் தமிழ்!

    மனதை இன்னும் குவித்து
    பிழைகள் குறைப்பதே
    நாம் நம் மொழிக்குச் செய்யும்
    முதல் நன்றி..
    முதல் மரியாதை!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #52
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    மனதை இன்னும் குவித்து
    பிழைகள் குறைப்பதே
    நாம் நம் மொழிக்குச் செய்யும்
    முதல் நன்றி..
    முதல் மரியாதை!
    உண்மைதான்.....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  5. #53
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நன்றி ஷீ..

    (பவர் சோப் விளம்பர பாணியில் சொன்னால்)

    நமக்காக மாறிவரும் தமிழ்
    தமிழை (ஏ)மாற்றாமல் நாம்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #54
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    நன்றி இளசு,ஷீநிசி.

Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •