Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 21

Thread: கலைவேந்தன் கவிதைகள்!

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
  Join Date
  03 Jun 2007
  Location
  புதுதில்லி
  Age
  57
  Posts
  2,017
  Post Thanks / Like
  iCash Credits
  18,472
  Downloads
  10
  Uploads
  0

  கலைவேந்தன் கவிதைகள்!

  அன்பர்களே!
  இக்கவிச் சபையில் இந்தச் சிறுவனும் பங்கேற்க ஆசைகொண்டு என் கிறுக்கல்களை இங்கே தரவிரும்புகிறேன்!
  முதலில் ஒரு பக்திப்பாடலுடன் தொடங்குகிறேன்!

  மகிஷாசுர மர்த்தினியின் அயிகிரி னந்தினி கேட்டிருப்பிங்க தானே?
  அந்த மெட்டில் நான் எழுதிய பாடல் ஒன்று!


  அன்னையே வணங்குகிறேன்!


  அழகிய மலரினில் அமர்ந்திட்ட தேவியே
  அடியவன் வேண்டுதல் கேட்டிடு நீ!
  தழலினில் விழுந்திட்ட புழுவினைப் போலிங்கு
  தவித்திடும் இவன் குரல் கேட்டிடு நீ!
  நிழலினைப் போலிங்கு தொடர்ந்திடும் விதியெனை
  நிம்மதி குலைப்பதைப் பார்த்திடு நீ!
  இழந்திட்ட நிம்மதி திரும்பவும் பெற்றிட
  இன்முகம் கொண்டிங்கு காத்திடு நீ!-----------------------------(1)  கொடுமைகள் புரிந்திட்ட அசுரரைக் கொன்றன்று
  கொற்றனைக் காத்திட்ட தேவியும் நீ!
  அடுத்தடுத் தெனையிங்கு ஆட்டிடும் ஊழ்தனை
  அற்றொழித் துடனென்னைக் காத்திடு நீ!
  விடுதலை யொன்றின்றித் துடித்திடும் அடியவன்
  வீழ்ந்துந்தன் பாதங்கள் பணிந்திடுவேன்!
  குடுகுடு வென்றுடன் சடுதியில் காத்திட
  குமரனின் தாயுன்னை வேண்டுகிறேன்!-----------------------(2)  ஐங்கரன் தாயுனை அனுதினம் போற்றியே
  அடிதொழு துளமுடன் வணங்கிடுவேன்!
  பைங்கனி சுவையொத்த உன்பெய ரோங்கிட
  பாமரன் நானுனைப் போற்றிடுவேன்!
  பைங்கிளி தோளினில் பாங்குடன் அமர்ந்திட
  பார்ப்பவ ருளம்குளிர் விப்பவளே!
  பைங்குழல் மகுடத்தைத் தாங்கிட ஜோதியாய்
  பாரினில் வந்தெனைக் காத்திடுவாய்!----------------------------(3)
  Last edited by கலைவேந்தன்; 09-09-2007 at 08:59 AM.

 2. #2
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
  Join Date
  27 Feb 2007
  Location
  Coimbatore
  Posts
  3,823
  Post Thanks / Like
  iCash Credits
  95,451
  Downloads
  10
  Uploads
  0
  கவிதை அருமையாக இருந்தது கவியே
  எனக்கும் கூட பக்தி வர வைத்து விட்டது
  எங்கே நீண்ட நாளாக உங்களை கானவில்லை

  நீங்கள் அடிகடி மன்றம் வரவேண்டும் என்று
  அன்னையை நானும் வேண்டி கொள்கிறேன்
  லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
  என் படைப்புகள்
  என் கவிதைகள்

 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  118,744
  Downloads
  4
  Uploads
  0
  வாழ்த்துகள் நண்பரே

  ஓர் அன்பான வேண்டுகோள்:

  தலைப்பை கலைவேந்தன் கவிதைகள் என மாற்றுங்கள்..

  அவையடக்கம் நன்றே..

  ஆனாலும் பொருளடக்கத்துக்குத் தக்க பெயர் வைப்பது முக்கியம்..
  உங்கள் படைப்புகள் தரமானவை..

  உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் அல்லவா நண்பரே!
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

 4. #4
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  80,871
  Downloads
  97
  Uploads
  2
  கலைவேந்தன் மன்றம் நோக்கிய உங்கள் மீள் வருகை அசத்தலாக அமையட்டும்.........!

  அண்ணா கூறிய படி கலைவேந்தன் கவிதைகள் என்று மாற்றலாமே......

  அத்துடன் இந்த பகுதி கவிஞர்களுக்கான அறிமுகப் பகுதி இங்கே நீங்கள் உங்களை ஒரு கவிஞராக அறிமுகம் செய்து விட்டு, இந்த மன்றிலே வெவ்வேறு பகுதிகளிலே பதித்த உங்கள் கவிதைகளின் தொடுப்பை(லிங்) கொடுத்து வைக்கலாம். அப்போது உங்களது எல்லாக் கவிதைகளையும் வாசிக்க விரும்புவோருக்கு இலகுவாக அமையும். உதாரணத்திற்கு இந்த பகுதியிலுள்ள ஆதவாவின் நவரசக் கவிஞன் ஆதவா என்ற திரியைப் பாருங்கள்.

  மாறாக தொடர்சியாக உங்கள் கவிதைகளை தனித் தனித் தலைப்புக்களில் பதியாமல் ஒரே திரியில் பதிக்க விரும்பின் அதற்கும் நம் மன்றிலே இடமுண்டு, அதனை தொடர் கவிதைகள் பகுதியிலே ஒரு தனித் திரி தொடங்கி அங்கே தொடர்ந்து உங்கள் அழகுக் கவிதைகளைப் பதிக்கலாம்.

 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
  Join Date
  03 Jun 2007
  Location
  புதுதில்லி
  Age
  57
  Posts
  2,017
  Post Thanks / Like
  iCash Credits
  18,472
  Downloads
  10
  Uploads
  0
  ஆலோசனைக்கு நன்றி இளசு மற்றும் ஓவியன் அவர்களே!
  கடை பிடிக்கிறேன்!

 6. #6
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
  Join Date
  21 Apr 2007
  Age
  40
  Posts
  9,836
  Post Thanks / Like
  iCash Credits
  65,825
  Downloads
  100
  Uploads
  0
  உயர் வீச்சுக்கொண்ட கவி வரிகளில்,
  மென்மேலும் உயர்வுற்று,
  என்றென்றும் வாழும் மகாகவி போல,
  என்றும் புகழ்பெற வாழ்த்துகின்றேன்.

  "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
  தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

 7. #7
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
  Join Date
  16 Jan 2007
  Location
  திருச்சி
  Posts
  4,192
  Post Thanks / Like
  iCash Credits
  8,746
  Downloads
  14
  Uploads
  0
  என்றும் மன்றத்தில் தங்களின் கவிவரிகள் நிலைந்து நிரைந்து
  மென்மோலும் சிறக்க என் வாழ்த்துக்கள் அண்ணா
  உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
  இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

 8. #8
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  12 Oct 2007
  Location
  Vellakovil
  Posts
  1,207
  Post Thanks / Like
  iCash Credits
  15,355
  Downloads
  138
  Uploads
  0
  இன்முகம் கொண்டிங்கு காத்திடு நீ


  அன்னை வரம் கொடுத்து விட்டார். அதனால் தான் தமிழ் மன்றத்தினுள் நுழைந்து விட்டீர்கள்

 9. #9
  இளையவர் பண்பட்டவர் thangasi's Avatar
  Join Date
  15 Dec 2007
  Location
  அரபு வளைகுடா
  Posts
  51
  Post Thanks / Like
  iCash Credits
  5,073
  Downloads
  0
  Uploads
  0
  அருமையான, வளமையான கவிதை 'கலைவேந்தன்' அவர்களே...

  'ஐங்கரன் அன்னையே' என அன்னையைப் போற்றுவது புதுமையாக உள்ளது.

  இழந்திட்ட நிம்மதி திரும்பவும் பெற்றிட
  இன்முகம் கொண்டிங்கு காத்திடு நீ!-----------------------------


  'பெற்றிட' என்பதைவிட 'தந்திட' என்பது பொறுத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

 10. #10
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
  Join Date
  03 Jun 2007
  Location
  புதுதில்லி
  Age
  57
  Posts
  2,017
  Post Thanks / Like
  iCash Credits
  18,472
  Downloads
  10
  Uploads
  0
  Quote Originally Posted by அக்னி View Post
  உயர் வீச்சுக்கொண்ட கவி வரிகளில்,
  மென்மேலும் உயர்வுற்று,
  என்றென்றும் வாழும் மகாகவி போல,
  என்றும் புகழ்பெற வாழ்த்துகின்றேன்.
  தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே!

 11. #11
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
  Join Date
  03 Jun 2007
  Location
  புதுதில்லி
  Age
  57
  Posts
  2,017
  Post Thanks / Like
  iCash Credits
  18,472
  Downloads
  10
  Uploads
  0
  Quote Originally Posted by மனோஜ் View Post
  என்றும் மன்றத்தில் தங்களின் கவிவரிகள் நிலைந்து நிரைந்து
  மென்மோலும் சிறக்க என் வாழ்த்துக்கள் அண்ணா

  Quote Originally Posted by ஆர்.ஈஸ்வரன் View Post
  இன்முகம் கொண்டிங்கு காத்திடு நீ


  அன்னை வரம் கொடுத்து விட்டார். அதனால் தான் தமிழ் மன்றத்தினுள் நுழைந்து விட்டீர்கள்
  நன்றி நண்பர்களே!

 12. #12
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
  Join Date
  03 Jun 2007
  Location
  புதுதில்லி
  Age
  57
  Posts
  2,017
  Post Thanks / Like
  iCash Credits
  18,472
  Downloads
  10
  Uploads
  0
  Quote Originally Posted by thangasi View Post
  அருமையான, வளமையான கவிதை 'கலைவேந்தன்' அவர்களே...

  'ஐங்கரன் அன்னையே' என அன்னையைப் போற்றுவது புதுமையாக உள்ளது.

  இழந்திட்ட நிம்மதி திரும்பவும் பெற்றிட
  இன்முகம் கொண்டிங்கு காத்திடு நீ!-----------------------------


  'பெற்றிட' என்பதைவிட 'தந்திட' என்பது பொறுத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
  தங்கள் ஆலோசனைக்கு நன்றி நண்பரே!

  நிம்மதி கவிஞனுக்குதானே வேண்டும்! பெற்றிட என்பதுதானே சரி?

  பராசக்தி இவ்வுலகுக்கெல்லாம் தாய் அல்லவா?

  மீண்டும் நன்றி நண்பரே!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •