Results 1 to 12 of 12

Thread: பாட்டி சொன்ன உண்மைக்கதை

                  
   
   
 1. #1
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,827
  Post Thanks / Like
  iCash Credits
  27,773
  Downloads
  183
  Uploads
  12

  பாட்டி சொன்ன உண்மைக்கதை

  என் அம்மாவின் அம்மா பார்வதிப் பாட்டியை எல்லாரும் செத்துப் பொழச்சவங்கன்னு சொல்வாங்க..

  அப்ப நான் 4 வது படிச்சிகிட்டிருந்தேன்.. ஒருதடவை பாட்டிகிட்டயே கேட்டேன். என்ன பாட்டி நீங்க செத்துப் பொழச்சவங்களாமே அப்படின்னு... பாட்டியும் கதையச் சொல்ல ஆரம்பிச்சாங்க.


  அப்போ உங்க அப்பாஅம்மாவுக்கு கல்யாணம் கூட ஆகலை. நாங்க ஒரு பொட்டிக் கடை வச்சிருந்தோம். தாத்தா எப்பவும் கடையிலதான் இருப்பாரு. நான் காலையில இட்லி சுட்டு கூடையில வச்சுகிட்டு ஊரெல்லாம் போய் வித்திட்டு வருவேன். சாயங்காலம் ஆனா வடை, பஜ்ஜி, முறுக்குன்னு சுட்டு கூடையில வச்சுகிட்டு ஊர் முச்சூடும் போய் வித்துட்டு வருவேன்..

  அன்னிக்கும் அப்புடித்தான், வித்து முடிச்சுட்டு கொஞ்சம் வடை, பஜ்ஜியோட வீட்டுக்கு வந்துகிட்டு இருந்தன, சுடுகாட்டைத் தாண்டும் போது பார்வதி வடை குடுன்னு யாரோ கேக்கறா மாதிரி இருந்திச்சு, சுத்து முத்தி பார்த்தா ஒருத்தரையும் காணோம்.. நான் சரின்னு வேகமா நடக்க, பார்வதி வடை குடு பார்வதி வடை குடுன்னு கேட்டுகிட்டு பின்னாலேயே வந்தது.. நானு ஓடி வந்து வீட்டுல புகுந்து கிட்டேன்.

  அடுத்த நாள்ல இருந்து எனக்கு பயங்கரக் காய்ச்சல். யாரோ என் நெஞ்சு மேல ஏறி உட்கார்ந்த மாதிரி பாரம். நான் படுத்திருந்த கட்டிலைச் சுத்தி குட்டிக் குட்டியா கருப்பா எதெதோ ஓடுது, எனக்கு பயமா இருந்தது. முனகறேன்.. பேசவும் முடியலை.. தொண்டையை அடைக்குது..

  அந்தக் கருப்புச் சாத்தன்கள் கட்டிலைக் குலுக்குது. எனக்கு உடம்பு தூக்கித் தூக்கிப் போடுது. வாசல்ல கருப்பு தட்டற மாதிரி பெருசா கருப்பா தடிமனா யாரோ வந்து என் கையைப் புடிச்சி இழுக்கறாங்க.. அப்படியே ஒடம்பிலிருந்து என்னை உருவிகிட்டுப் போயிட்டாங்க.. எங்கப் பாத்தாலும் இருட்டு.. ஒரே இருட்டு.. என்னைச் சுத்தி சுத்தி இழுத்துகிட்டுப் போறாங்க.. எனக்கு அழுகையா வருது..

  ரொம்ப நேரத்துக்குப் பின்னால ஒரு பெரிய கூடத்தில என்னை விட்டுட்டாங்க.. எனக்கு ஒண்ணுமே புரியலை.. அங்க யார் யாரோ இருக்காங்க.. எல்லாம் ஒவ்வொரு தினுசா..

  ஒரு பெரிய ராஜா வந்தாரு.. அவரு கூட ரொம்பப் பெருசா தலைப்பாகை கட்டிகிட்டு ஒருத்தர் வந்தாரு..

  தலைப்பாகை கட்டுனவரு ஒரு பெரிய புத்தகத்தைப் புரட்டி புரட்டிப் பாத்தாரு.. அப்புறம்.. அடப்பாவிகளா.. இந்த பிஞ்சை ஏண்டா கொண்டுவந்தீங்க.. அடுத்த தெருவில இருக்கற முத்தலைக் கொண்டுவராமண்ணு கேட்க.. அந்தக் கறுப்பு பிசாசுங்க என் கையைப் புடிச்சு தர தரன்னு இழுத்துகிட்டு பறந்துச்சுங்க..

  எனக்குத் தலையைச் சுத்துது ஒண்ணுமே புரியலை.. கடைசியா எங்க வீட்டு வாசலுக்கு வந்த பின்னாடிதான் எனக்கு எல்லாமே அடையாளம். தெரியுது.. எல்லாரும் அழுதுக்கிட்டு இருக்காங்க.. வீடு நெறையக் கூட்டம் என்னை உள்ளெ இழுத்துகிட்டுப் போனதுங்க அந்தச் சாத்தானுங்க..

  நடுக் கூடத்தில நான் செத்துக் கிடக்கறேன்.. தலை மாட்டில விளக்கைப் பொருத்திகிட்டிருந்தாங்க.. நான் ஓன்னு கத்தினேன்.. யாருக்கும் கேட்கலை போல இருக்கு யாரும் திரும்பலை.. தாத்தாகிட்ட யாரோ தேங்காய் கொடுத்து உடைக்கச் சொன்னாங்க..

  அந்தப் பிச்சாசுங்க சீக்கிரம் சீக்கிரம் ஒடம்புக்குள்ள போ.. கட்டை விரலைக் கட்டிட்டா போக முடியாதுன்னு என்னைத் தள்ளிச்சுங்க..
  நான் விசுக்குன்னு என் ஒடம்பு மேல விழ கால் கட்டை விரல் ஆடுச்சு..

  பக்கத்து வீட்டு பால்காரம்மா கால் கட்டை விரல் ஆடுறதைப் பாத்துருச்சு. உடனே கட்டை விரல் ஆடுதுன்னு கத்திச்சாம்.. என்னோட மூச்சு திரும்ப வர எல்லோருக்கும் ஒரே சந்தோஷம்.. சும்மாவா பின்ன, செத்து 10 நிமிஷம் கழிச்சுப் பொழச்சிருக்கனே!..

  அன்னிக்கு சாயங்காலம் பக்கத்துத் தெருவில பார்வதின்னு ஒரு கெழவி செத்துப்போனா!

  பாட்டியைப் பார்க்க எனக்கு அப்ப பயமாத்தான் இருந்தது. இந்த விஷயம் நடந்த பின்னால பாட்டி கண்ணுக்கு காத்து கருப்பு நடமாட்டம் தெரிய ஆரம்பிச்சிருச்சாம். அதெல்லாம் இவங்களைக் கண்டால் ஒடி ஒளிய ஆரம்பிக்குமாம்..
  Last edited by தாமரை; 24-07-2008 at 04:19 AM.
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.


  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 2. #2
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
  Join Date
  21 Apr 2007
  Age
  41
  Posts
  9,836
  Post Thanks / Like
  iCash Credits
  65,965
  Downloads
  100
  Uploads
  0
  அண்ணா...
  4000 பதிவாக திடுக் திடுக் பதிவொன்று...
  இப்பிடி பயமுறுத்திவிட்டீர்களே...
  பாட்டி சொன்ன கதையா..? நிஜமா..?

  (தனிய இருக்கறவங்க ஜாக்கிரதை...)

  "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
  தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,827
  Post Thanks / Like
  iCash Credits
  27,773
  Downloads
  183
  Uploads
  12
  இது உண்மைச் சம்பவம். இது நடந்தபின் நாங்கள் குமாரபாளையம் என்ற ஊரில் இருந்த பொழுது கருப்பு உருவங்களை என் பாட்டி பார்த்திருக்கிறார். அந்த வீட்டில் எனது சகோதரி ஒருவரும் சகோதரர் இருவரும் இறக்க அந்த ஊரை விட்டே சேலம் அருகில் உள்ள வேம்படிதாளம் என்ற ஊருக்கு மாறி வந்தார்களாம்.
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.


  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 4. #4
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
  Join Date
  27 Feb 2007
  Location
  Coimbatore
  Posts
  3,823
  Post Thanks / Like
  iCash Credits
  95,451
  Downloads
  10
  Uploads
  0
  உங்க பாட்டிக்கு பயத்தில் மயக்கமடைந்து அதன் பின் கனவாக சாத்தான் வந்திருக்கும்.
  அந்த காலமானதால் அதை வீட்டார் நம்பி இருப்பார்கள்.
  குமாரபாளையம் கேள்வி பட்ட மாதிரி இருக்கே. பவானி ஆத்துக்கு பக்கத்துலயா இருக்கு
  லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
  என் படைப்புகள்
  என் கவிதைகள்

 5. #5
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
  Join Date
  01 Apr 2003
  Location
  Singapore
  Posts
  12,060
  Post Thanks / Like
  iCash Credits
  67,201
  Downloads
  18
  Uploads
  2
  நல்ல கதை. உங்கள் பாட்டி உங்களை நன்றாகவே ஏமாற்றியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கனவில் வந்த்தை நிஜமாக நடந்த்தாக அவரும் நம்பி அனைவரையும் நம்ப வைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

 6. #6
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  36,087
  Downloads
  15
  Uploads
  4
  வாவ் அருமையான அனுபவ கதை.... வித்தியாசமாக இருக்கிறது...

  இது போன்ற கதைகளை நானும் சிலர் கூற கேட்டிருக்கிறேன்.
  Last edited by அறிஞர்; 06-09-2007 at 04:34 PM.

 7. #7
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  02 Jul 2007
  Posts
  308
  Post Thanks / Like
  iCash Credits
  18,249
  Downloads
  192
  Uploads
  0
  பயமா இருக்குங்க*

 8. #8
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  118,744
  Downloads
  4
  Uploads
  0
  பாராசயின்ஸ் எனச் சொல்லப்படும் அறிவியலுக்கு அப்பாலான கதை..

  அறிவால் நுகர விரும்பவில்லை!
  அப்படியே நம்பினால் ஒரு திகிலான சுகமிருக்கு..
  அதை இழக்க மனசில்லை!

  கண்டவரே விண்ட கதைக்குப் பாராட்டுகள்!


  முத்தல் பார்வதியும் முன்னர் வடை விற்றவரா???!!!!

  உங்களுடைய புதையல் வேட்டை அனுபவங்களின் ஆணிவேர் கொஞ்சம்
  தெரியுது தாமரை!
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

 9. #9
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
  Join Date
  16 Jan 2007
  Location
  திருச்சி
  Posts
  4,192
  Post Thanks / Like
  iCash Credits
  8,746
  Downloads
  14
  Uploads
  0
  தாமரை அண்ணா பாட்டி கதை சூப்பரு 4000 பதிவுக்கு வாழ்த்துக்கள்
  உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
  இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

 10. #10
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,827
  Post Thanks / Like
  iCash Credits
  27,773
  Downloads
  183
  Uploads
  12
  Quote Originally Posted by lolluvathiyar View Post
  உங்க பாட்டிக்கு பயத்தில் மயக்கமடைந்து அதன் பின் கனவாக சாத்தான் வந்திருக்கும்.
  அந்த காலமானதால் அதை வீட்டார் நம்பி இருப்பார்கள்.
  குமாரபாளையம் கேள்வி பட்ட மாதிரி இருக்கே. பவானி ஆத்துக்கு பக்கத்துலயா இருக்கு
  பாட்டிதான் மயக்கமானார். அப்போ சுத்தி உட்கார்ந்து அழுத அத்தனை பேருமா ஏமாந்தார்கள்????

  அவர் சொன்னதில் எந்த அளவு உண்மை என ஆராய வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். இது ஒரு சம்பவம். மூச்சு நின்று 5 − 10 நிமிடம் கழித்து மறுபடி மூச்சு வந்திருக்கிறது என்ற அளவில், மனதிற்கும், உயிருக்கும் ஒரு மிகப் பெரிய பிணைப்பு இருக்கிறது என்ற ஒரு சின்ன படிப்பினை மட்டும் எடுத்துக் கொண்டேன்.


  பவானி − குமாரபாளையம் இரட்டை நகரங்கள். காவிரி ஆற்றின் இரு கரையில் உள்ளவை.
  Last edited by தாமரை; 07-09-2007 at 04:09 AM.
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.


  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 11. #11
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
  Join Date
  15 Jun 2006
  Location
  கோயமுத்தூர்
  Posts
  1,500
  Post Thanks / Like
  iCash Credits
  15,434
  Downloads
  114
  Uploads
  0
  பயமால்ல இருக்கு...
  :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

  => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

  http://thangavelmanickadevar.blogspot.com/

 12. #12
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  80,871
  Downloads
  97
  Uploads
  2
  அண்ணா உங்களது நாலாயிரமாவது பதிப்பு இப்படி பயமுறுத்துதே.........?

  இதே போன்ற பல கதைகளை நான் முன்னர் கேள்விப்பட்டிருக்கின்றேன், ஆனால் உண்மை பொய் அறிந்ததில்லை......
  அதற்கு வாய்ப்பும் கிட்டியதில்லை.......
  அறிவியல், விஞ்ஞானம் எல்லாவற்றையும் தாண்டி ஒரு சக்தி உண்டென்பதை நான் நம்பிக்கை உடையவன்..........
  அப்படியே உங்கள் அனுபவப் பகிர்வையும்...........

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •