Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: என் பயணத்தில்....!

                  
   
   
 1. #1
  இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
  Join Date
  05 Jun 2007
  Location
  சென்னை
  Posts
  688
  Post Thanks / Like
  iCash Credits
  19,257
  Downloads
  15
  Uploads
  0

  என் பயணத்தில்....!

  தனியொரு சாலையில் தனியனாய்
  நான் நடக்கையில்....

  இடையினிலே வந்தாய்....
  ணைந்திட்டே உடன் நடந்தாய்....

  பாதை அது தூரம்.... தாங்காது
  பாவை நிந்தன் பாரம் என்றேன்

  கரம் பற்றி கொள்வேன்.....!
  உன் வடம் பற்றி வருவேன்....

  தூரம் என்பது பாதைக்குதான்
  துணையாய் நீ இருக்க
  தூவானம் அருகில்தான் என்றுரைத்தாள்....!

  என் பாதையில் சாரல்களும் உண்டு.....
  சரளைகளும் உண்டு...! சலங்கைகால்கள்
  சந்திக்குமா...

  முட்களும் உண்டு... பூக்களும் உண்டு...!
  பூந்தளிர் மேனி புண்படுமா....
  போய் விடுவாளோ என ஏக்கத்துடனே
  வினவினேன்.....

  கால்கள் களைத்தால் எனை அள்ளிக்கொள்ள
  மாட்டாயா....
  கண்கள் களைத்தால் உன்மடியில் துயில் உறங்க
  கூற மாட்டாயா...!

  நிறைந்த அவள்தம் காதல் முகம்
  நிறைத்தன என் காதல் மனம்...!
  Last edited by ஓவியன்; 30-08-2007 at 06:12 AM. Reason: பிழைகள் களையப்பட்டன

 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  57,367
  Downloads
  4
  Uploads
  0
  காதலே ஒரு வசீகரம்..
  வசீகரன் கவிதை வரிகளில் கூடுதலாய்!!!!

  வாழ்த்துகள்!
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  80,871
  Downloads
  97
  Uploads
  2
  காதல் பயணத்தில் சரளைகளூடும் முற்களிடையும் பூக்களைத் தேடும் வசீகரனின் கவிதைகள் கதலைப் போலவே அழகு........!

  இரசித்தேன்.........!
  பாராட்டுக்கள் வசீ....!

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 4. #4
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  173,626
  Downloads
  39
  Uploads
  0
  இணைந்து வரும் துணைக்கு இன்னல் வருமே என காதலனின் பரிதவிப்பும்,துன்பத்தில் தாங்க நீயிருக்கிறாயே என்ற காதலியின் நம்பிக்கையும்,இந்த காதலை வளப்படுத்துகிறது. வசீகரனின் வரிகள் ஆனந்தம்.வாழ்த்துக்கள்.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 5. #5
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
  Join Date
  10 Aug 2007
  Location
  பூக்கள் நடுவில்
  Posts
  6,617
  Post Thanks / Like
  iCash Credits
  64,157
  Downloads
  89
  Uploads
  1
  மனம் வருடும் காதல் கவி.

  காதலின் பலமே இருவரின் அன்பு தான்.. வாழ்வின் எந்தத்தடை வந்தாலும் உயிரானவர் துணையிருந்தால் பாலையும் சோலையாகும்.
  உண்மை தான்.. காதலில் மட்டுமே அது சாத்தியம்.

  நன்றாக வடித்திருந்தீர் வசீ.
  வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்....!!
  -- பூமகள்.

  "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
  உளக்கண் தாண்டும் வேலை..!!"


  பூமகள் படைப்புகள்


 6. #6
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  02 Jul 2007
  Posts
  308
  Post Thanks / Like
  iCash Credits
  18,249
  Downloads
  192
  Uploads
  0
  இணையை
  துணையை
  நினைத்தால் இன்பம் தான்

 7. #7
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
  Join Date
  16 Jan 2007
  Location
  திருச்சி
  Posts
  4,192
  Post Thanks / Like
  iCash Credits
  8,746
  Downloads
  14
  Uploads
  0
  காதல் மனதில் வந்தால் பயணம் இனிமைதான் அருமைகவிதை வசீகரரே
  உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
  இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

 8. #8
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
  Join Date
  01 Apr 2003
  Location
  London / Sri Lanka
  Posts
  5,891
  Post Thanks / Like
  iCash Credits
  8,547
  Downloads
  11
  Uploads
  0
  வசீகரிக்கிறது உங்கள் வார்த்தைகள்
  தமிழை வளர்க்க,
  தமிழரோடு தமிழில் பேசுங்கள்

 9. #9
  இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
  Join Date
  31 Jul 2007
  Location
  நெதர்லாந்து
  Posts
  888
  Post Thanks / Like
  iCash Credits
  5,102
  Downloads
  0
  Uploads
  0
  ஓவியனுக்கு நன்றி நல்ல முயற்சி நன்றிகள் பல
  வசீகரா உன் கவி நயம் வசீகரம் வாழ்த்துக்கள்

 10. #10
  இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
  Join Date
  05 Jun 2007
  Location
  சென்னை
  Posts
  688
  Post Thanks / Like
  iCash Credits
  19,257
  Downloads
  15
  Uploads
  0

  காதலே ஒரு வசீகரம்

  காதலே ஒரு வசீகரம்..
  வசீகரன் கவிதை வரிகளில் கூடுதலாய்!!!!

  வாழ்த்துகள்....!

  ந*ன்றி நன்ப*ரே...!

 11. #11
  இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
  Join Date
  05 Jun 2007
  Location
  சென்னை
  Posts
  688
  Post Thanks / Like
  iCash Credits
  19,257
  Downloads
  15
  Uploads
  0
  Quote Originally Posted by இளசு View Post
  காதலே ஒரு வசீகரம்..
  வசீகரன் கவிதை வரிகளில் கூடுதலாய்!!!!

  வாழ்த்துகள்!
  எனை வாழ்த்திய கவிதை காதலர்கலே மனம் நெகிழ்ந்து நன்றி நவில்கின்ரேன்

  வசீகரன்

 12. #12
  இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
  Join Date
  05 Jun 2007
  Location
  சென்னை
  Posts
  688
  Post Thanks / Like
  iCash Credits
  19,257
  Downloads
  15
  Uploads
  0

  நன்றி...!

  நெஞ்சார்ந்த நன்றிகளை சொல்கிரேன் அனைவர்க்கும்.....! நன்பர்கலே

  வசீகரன்,

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •