Results 1 to 8 of 8

Thread: தேன் கிண்ணம்

                  
   
   
 1. #1
  இளம் புயல் பண்பட்டவர் sadagopan's Avatar
  Join Date
  11 Aug 2007
  Location
  Tirunelveli
  Posts
  160
  Post Thanks / Like
  iCash Credits
  15,917
  Downloads
  15
  Uploads
  0

  தேன் கிண்ணம்

  அது உழைப்பாளிகள் தினம். காலை ஐந்து மணிக்கு எழுந்து விட்டு, தன் துணிகளைத் துவைத்து நீராடி விட்டு, அன்றைய வீட்டுச் சமையலை முடித்து விட்டு, கோயில் சென்று வணங்கி விட்டு, ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு, கல்யாண மண்டப்பதிற்க்குப் போனாள் கோமதியம்மாள்.
  "ஏம்ம்மா ... இப்படித் தூங்கினேன்னா யாரும்மா அப்பளம் போடறது? வாங்குற சம்பளதுக்குக் கொஞ்சமாவது உழைங்கம்மா!"

  "இல்ல .. கொஞ்சம் தல சுத்தற மாதிரி இருக்கு"

  "உங்கள மாதிரி ஆளுங்க இருந்தா என்ன மாதிரி சமையல் கான்டிராக்டர்களுக்குத் தான் தல சுத்தும். போய் வேலையப் பாரும்மா"

  தன் அறுபது வயது உடம்பைச் சுமந்து கொண்டு மெல்ல எழுந்தாள். எல்லாம் மங்கலாகத் தெரிந்தது. கண்ணாடி போட்டு கொண்டாள். இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை. இரண்டு மீட்டரில் உள்ளவையெல்லாம் தெளிவாகத் தெரிந்தது. ஒரு குழந்தையை இது வரை தாங்காத வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள். பக்கத்தில் குவிக்கபட்டதிலிருந்து ஒரு வடையைச் சாபிட்டாள். அப்பளங்களைப் பொரிக்க ஆரம்பித்தாள்.

  "இரவு ஒன்பது மணி இருபத்தி நான்கு நிமிடங்கள். நேயர் விருப்பம். இந்த நிகழ்ச்சியையை வழங்குபவர்கள் குமார் பனியன், ஜட்டிகள்..."

  காலை ஐந்து மணிக்கு எழுந்த தளர்ச்சி அவளிடம் தெரிந்தது. எப்படியோ இரவு பத்து மணிக்குள் வேலையையை முடித்து விட்டு வீட்டிற்குப் போய்த் தேன் கிண்ணம் கேட்க வேண்டும். அப்பளம் பொரிப்பதில் 'கின்னஸ்' சாதனை முடித்து விட்டு, அன்றைய கூலியை வாங்கி விட்டு, இரண்டு முறுக்கைத் தன் சேலையில் சுருட்டிக் கொண்டு அவள் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். சென்ற வாரத்தின் தேண் கிண்னத்தின் பாடல்களை பாடிக் கொண்டு போனாள்.

  ஒத்தையடிப் பாதையைக் கடந்தவுடன் அவள் வீடு வந்தது. ஆங்காங்கே சில ஓசைகள், பொதுவாக அமைதியாக இருந்தது.வீடு. அந்தக் காலத்து சிற்றரசரின் வீடு போல இருந்தது. கிழே ஒரு பெரிய ஹால், பக்கத்தில் இரண்டு அறைகள், மேலே மூன்று அறைகள், ஒரு பால்கனி. ஒரு பெரிய ஜமீன்தாரரின் வீடு அது. ஐம்பது வருஷம் முன்பு கைமாறிக் கைமாறி இப்பொழுது ஒரு சமையல் கான்டிராக்டரின் கைகளில் இருந்தது

  கோமதியம்மாளையும் சேர்த்து மொத்தம் பன்னிரெண்டு பேர். கோமதியம்மாளைத் தவிர மற்றவரெல்லாம் அநாதைகள். கோமதியம்மாளுக்கு ஒரு பெரிய குடும்பமே இருக்கிறது. எல்லா விழாக்களுக்கும் விசேஷங்களுக்கும் கோமதியம்மாளை அழைப்பார்கள். மூன்று நாட்கள் தங்கச் சொல்லுவர்கள். சொகுசு மெத்தை கிடைக்கும். எல்லோரும் அன்பாக இவள் நலத்தை விசாரிப்பார்கள். புறப்படும் பொழுது ஒரு புடவையும், இரண்டாயிரம் பணமும் கொடுத்து அனுப்புவார்கள். மற்ற சமயல்காரர்கள் ஐந்தாயிரம் வாங்குவார்கள்.

  மலர்ந்தும் மலராத பாடல் ஒலித்து கொண்டிருந்தது. மறைந்த தன் அண்ணனைப் பற்றிய ஞாயாபகம் வந்தது. ஒரு சில கண்ணீர்த் துளிகள் வந்த பிறகு அதை மறந்து பாட்டை ரசித்துக் கொண்டே கேட்டை நோக்கி நடந்தாள்.

  "ஏய்.. கிழவி ... ராத்திரி சிக்கிரம் வரக் கூடாதா? அடுத்த தடவ பத்து மணிக்குள்ள வராட்டி கதவத் தொறக்க மாட்டேன்."

  கோமதியம்மாள் அவன் வாயில் ஒரு முறுக்கையும், கையில் ஒரு முறுக்கையும் திணித்தாள். அடுத்த தடவ ஜிலேபி கொண்டு வரேன்."

  கோமதியம்மாளின் அறை மேல் மாடியில் உள்ளது. இவளை விட முதியவர்களுக்குக் கிழே அறைகள் ஒதுக்கப் பட்டன. 'தேன் கிண்ணம்' எங்கோ ஒலித்துக் கொண்டிருக்க, அதைக் கேட்டுக் கொண்டே மாடிப்படிகளில் நடந்தாள். அவளது அறையில் வலது பக்கம் ஒரு முருகன் படம். இடது பக்கமே கிடையாது. நடுவில் ஒரு சுமாரான பாய் இருந்தது. ஒரு அழுக்கான பெட்டியும், முன்று பாத்திரங்களும், ஒரு கிலோ அரிசியும், கந்த சஷ்டி கவசமும், இரண்டு சேலைகளும் இருந்தன. இந்த அறையிலும் அவளுக்கு நிம்மதி தருவது புதன் கிழமை தோறும் ஒலிபரப்பாகும் 'தேன் கிண்ணம்'.

  அடுத்த பாடல் 'மயக்கமா ..கலக்கமா'.. பாடலைப் பாடியவர் பி.பி. ஸ்ரீனிவாஸ், படம்...
  "ஹா.. பர்ஸ்ட் கிளாஸ் பாட்டு ".

  திடீரென்று பாடல் நின்று போனது.

  'பட்டு.. ஏண்டி பாட்ட நிறுத்திட்ட.. நல்ல பாட்டு ச்சே... ரேடியோவ ஆன் பண்ணு.' தினம் தினம் தேக்கி வைத்த கோமதியம்மாளின் கோபம் அதற்குத் துளி கூட சம்பந்தம் இல்லாத பட்டு மீது விழுந்தது.

  'கோமதி.. நான் தூங்கணும்.... ஒவ்வொரு புதனும் நான் பதினொரு மணிக்குத் தூங்க முடியாது. உனக்கு வேணும்னா உன் அக்கா பையன் கிட்டக் கேட்டு ஒரு ரேடியோ வாங்கிக்க வேண்டியதானே. இல்லாட்டி.. அவன் வீட்டுல் போய் இருக்க வேண்டியதானே?'

  அந்தப் பட்டணதில்ல யாரு இருப்பா? நம்ம கிராமம் போல வருமா?' நெஞ்சில் பல விதமான ஏமாற்றங்களில் இதையும் சேர்த்துக் கொண்டாள். உறங்க ஆரம்பித்தாள்.

  ஏனோ ஸ்ரீலேகாவிற்குத் தூக்கம் வரவில்லை. சென்ற புதன் கிழமை கோமதியம்மாள் வந்திருந்தாள். இரண்டு நாட்கள் தங்கி இருந்தாள். வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் செய்தாள். அவ்வளவு செய்தும் ஒரு முனகலோ, கனகலோ வரவில்லை. தன் வாழ்நாளில் தாயாக இருக்காவிட்டாலும் ஒரு தாயின் பொறுமை அவளிடம் இருந்ததை இன்னும் முன்று மாதத்தில் தாயாகப் போகின்ற ஸ்ரீலேகா கவனித்தாள். ஆறாயிரம் கொடுத்தாள். அன்றிலிருந்து தூக்கம் இரண்டு மணி நேரம் தள்ளிப் போனது.

  "சிவா.. நம்ம கோமதி சித்தி ஏன் நம்ம கூடத் தங்கக் கூடாது? பாவம், அவங்களுக்கு யாரும் கிடையாது. எவ்வளவு நாளைக்குத் தான் இரண்டாயிரத்திற்கு வேலை பார்ப்பாங்க?".. ஸ்ரீலேகா சிவாவின் கன்னத்தை மெதுவாக வருடினாள். "என்ன சொல்றீங்க?"

  சிவாவிற்க்கு ஏனோ இது பிடிக்கவில்லை. குழந்தை பிறந்த பிறகு ஸ்ரீலேகா தன் இருபதினாயிரம் வேலையை விட வேண்டும்.. அப்புறம் குழந்தையின் செலவு வேறு. இந்த நிலைமையில் கோமதி சித்தி இங்க வந்தால் அவளுக்கும் சேர்த்து அழணும். ஸ்ரீலேகாவிடம் சொல்லிப் பார்த்தான். அரை மணி நேரம் விவாதம் நடந்தது. படுக்கையறையில், அதுவும் ஒரு கர்பிணிப் பெண்ணிடம் யார் தான் ஜெயிக்க முடியும்? கடைசியில் "நீ சொல்லி எத வேணாம்னு இருக்கேன்" என்று ஸ்ரீலேகாவின் கன்னத்தைக் கிள்ளி விட்டுத் தூங்கப் போனான்.

  சந்திரனும் சூரியனும் ஒன்று சேர்ந்து காட்சி அளித்தார்கள். அது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. கோமதியம்மாவிற்கு நிம்மதி தரும் சிலவற்றில் இதுவும் ஒன்று. இது மட்டும் தானோ? சூரியன் எழுவதைப் பார்த்தவுடன் சுருங்கிய அவள் கன்னத்தில் போட்டு கொண்டாள். அப்பா.. சாமி... இன்னிக்கி நல்லாப் போகணும்டா'..

  கிழே வாட்ச்மான் உறங்கிக் கொண்டு இருந்தான். இந்த மாளிகையில் திருடனுக்கும் வேலை இல்லை. வாட்ச்மானுக்கும் வேலை இல்லை. கோமதியம்மாளும், அவளை அவமானப் படுத்திய பட்டு மாமியும் மட்டும் மொட்டை மாடியில் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தனர். பட்டு மாமியின் ரேடியோ சுப்ரபாதம் பாடிக் கொண்டிருந்தது.

  தூங்கிக் கொண்டிருந்த வாட்ச்மானைத் தொலைபேசி எழுப்பியது. தமிழில் சுமாரான கெட்ட வார்த்தைகளால் திட்டி கொண்டு போனை எடுத்தான்.

  'யார் வேணும் உனக்கு? சிக்கிரம் சொல்லு"

  "ஏய் கோமதிக் கிழவி... உனக்கு போன். அடுத்த தடவ ஒன்பது மணிக்கு மேல பண்ணச் சொல்லு"

  "கோமதி.. என்ன மூணு நாள் டிரிப்பா?.. வரும் போது புடவையோட வருவ... கொடுத்து வெச்ச மகராசி.. இந்தத் தடவையாவது ஒரு ரேடியோ வாங்குடி"

  ****

  "வாங்க சித்தி... உங்க சாமான் எங்க?"
  வாசலில் உள்ள ஒரு பெட்டியை உள்ளே எடுத்து வந்தாள் கோமதியம்மாள்.

  "இருங்க சித்தி.. நான் பால் காய்ச்சிட்டு வரேன்"

  கோமதியம்மாள் சாம்பார் பண்ணிக் கொண்டிருந்தாள். உருளைக் கிழங்கு ரோஸ்ட் அடுத்த அடுப்பில்.

  உருளை ரோஸ்ட் சூப்பர் சித்தி.. நாளைக்கு வெண்டைக்காய் ரோஸ்ட் பண்ணுங்க.

  "சித்தி உங்களுக்கு ஒரு மாசமாய் இருமல் இருக்குன்னு சொன்னீங்க இல்ல .. இன்னும் இரண்டு வாரம் வைட் பண்ணுங்க.. எங்க கம்பெனி டாக்டரிடம் கூட்டிட்டுப் போறேன்."

  ஸ்ரீலேகாவிற்க்கு ஒரு அருமயான பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை கோமதிப்பாட்டியிடம் ஒட்டிக் கொண்டது. தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர எல்லா வேலைகளையும் செய்தாள். அந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாவில் கோமதியம்மாவிற்க்கு ஐந்நூறு கொடுத்தார்கள். பஜாருக்குச் சென்று ஒரு ரேடியோ வாங்கி வந்தாள். என்னிக்காவது ஒரு புதன் இரவு பத்து மணிக்குள் வேலைகளை முடித்து விட்டுத் தேன் கிண்ணம் கேட்க வேண்டும், தன் ஆன்மா அதைக் கேட்டுக் கொண்டு பிரிய வேண்டும். ஆனால் அவள் ஆன்மா முன்று வருடமாய்ப் பிரியவில்லை. அவளும் தேன் கிண்ணத்தை மறந்து விட்டாள்.

  "சித்தி.. சிவாவிற்கு சாப்பாடு ரெடியா? நான் இன்னும் பதினைந்து நிமிஷத்திலே உப்புமா சாப்பிடறேன். அப்புறம் இந்த மாச இ.பி. பில் கட்டிடுங்க. சரி, அப்புறம் மறக்காம பிள்ளயார் பூஜைக்கு ஏற்பாடு பண்ணிடுங்க. நான் ஒன்பது மணிக்கு வேலைக்குப் போறேன். அதுக்குள்ள எனக்கு லஞ்சு எடுத்து வெச்சுடுங்க"

  அன்று உழைப்பாளிகள் தினத்திற்க்கு அடுத்த நாள். காலை நான்கு மணிக்கு எழுந்து விட்டு, வீட்டுத் துணிகளைத் துவைத்து விட்டு, குளித்து விட்டு, குழந்தைகளுக்கு ஒரு சமையல், பி.பி. உள்ள சிவாவிற்கு ஒரு சமையல், ஸ்ரீலேகாவிற்கு ஒரு சமையலெல்லாம் முடித்து விட்டு, பிள்ளைகளைக் குளிப்பாட்டி விட்டு, எல்லோருக்கும் சாப்பாடு போட்டு விட்டு, சாப்பாடு கட்டிக் கொடுத்து விட்டு, குழந்தைக்கு டாட்டா காட்டி விட்டு, இப்படியே இரவு வரை அவள் தொடர்ந்து வேலை செய்தாள். இரவு பத்து மணி ஆனது. ஆசையாக ரேடியோவில் தேன் கிண்ணம் கேட்க உட்கார்ந்தாள். தேன் கிண்ணம் வரவில்லை. யாரோ ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு முன்பு காதலைப் பற்றி கதைத்துக் கொண்டு இருந்தனர். ரேடியோவில் தேன் கிண்ணம் கேட்பாரில்லாமல் நிறுத்தபட்டிருந்தது. கோமதியம்மாளின் மூச்சும் மேலிருப்பவனால் நிறுத்தப்பட்டது.

  ******
  நட்புடன்

  சடகோபன்

 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  39
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  290,584
  Downloads
  151
  Uploads
  9
  கதையின் ஓட்டத்தோடு பயணிக்கையில் போகிற போக்கில் பலவற்றை தொட்டுசெல்கின்றது கதை. ஒவ்வொரு பத்தியிலும் ஒவ்வொரு கரு. கதை ஜமீன் வீடு போல விசாலமாகவே உள்ளது. இதுதான் பிடித்தது என்று சொல்லமுடியாத குழந்தையாக நான். பாராட்டுக்கள் சடகோபன். தேன்கிண்ணத்தில் சுவைக்கு ஏது குறை. தொடருங்கள்...

 3. #3
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  173,726
  Downloads
  39
  Uploads
  0
  நல்ல கதை பாராட்டுக்கள் சடகோபன்.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 4. #4
  இளம் புயல் பண்பட்டவர் தளபதி's Avatar
  Join Date
  17 Jul 2007
  Location
  Saudi Arabia
  Posts
  360
  Post Thanks / Like
  iCash Credits
  5,049
  Downloads
  1
  Uploads
  0
  முகம் சுளிக்காத கோமதிப்பாட்டி!! அனைவரையும் புரிந்துகொண்டு தேவைகளைத் தீர்த்துக்கொண்டு, உழைப்பதில் சளைக்காமல் இருக்கும் ஒரு தன்னம்பிக்கை பாத்திரம். கலக்கிவிட்டீர்கள். சடகோபன்.
  அளவில்லா அன்புடன்,

  தளபதி.

  எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது.
  எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது.
  எது நடக்குமோ அதுவும் நல்லதாகவே நடக்கும்
  .

 5. #5
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  118,744
  Downloads
  4
  Uploads
  0
  முற்றிலும் புதிய பாணியில்..
  வெட்டி வெட்டி வேறு வேறு காட்சிகளாக
  ஜெட் வேகத்தில் கதை சொல்லி இருக்கிறீர்கள் சடகோபன்!
  புதுயுக கணினி தலைமுறைக்கான சரியான வேகம்!
  ''காக்க காக்க'' படத்தின் வேகம் போல!

  தனியாய் தன்னிச்சை பல்லிடத் தொழிலா..
  அன்பாலான அடிமை ஓரிடத் தொழிலா..
  இருதலைக்கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி?
  அந்த எறும்பும் இளைப்பாற ஓர் பிடிப்பாய் தேன்கிண்ணம்!

  திரை அரங்கு புழங்காத அக்கால
  சிக்கலில்லா சிம்ப்பிள் ஆன்மாக்களின் புகலிடம் தேன்கிண்ணம்!

  இன்று 24 மணிநேரமும் இசை கேட்க பலப்பல ஊடகங்கள் வந்துவிட்டன..

  அதனால் பழைய தேன்கிண்ணம், ஒலியும் ஒளியும் அருமை
  இக்காலத்தவர்க்கு விளங்குவது கடினம்..

  அதிலும் கஞ்சத்தனமாய் பாட்டை பாதியில் நிறுத்துவது,
  வடநாட்டில் பழைய தலைவர் மாண்டால் சித்தார் இசை போடுவது
  என இம்சைகள் தாண்டி −− தேனாய் இரவின் மடியில் தெளித்த தேன்கிண்ணம்!

  கோமதியம்மாள் மாண்டதில் ஒரு தார்மீக நியாயம் உள்ளது!


  பாராட்டுகள் சடகோபன்!
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

 6. #6
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
  Join Date
  27 Feb 2007
  Location
  Coimbatore
  Posts
  3,823
  Post Thanks / Like
  iCash Credits
  95,451
  Downloads
  10
  Uploads
  0
  வித்தியாசமான கதை
  ஒரு வயதான மூதாட்டி, உழைத்து பழகி போய் தன் வாழ்கையை ஓட்டி செல்லும் கஷ்டமான அனுப்வத்திலும் பாடல் கேட்கும் ஆவல் நிரைந்த தேன் கின்னம் இனிய அனுபவமாக இருந்து இறுதியில் நின்று விட்டதே
  லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
  என் படைப்புகள்
  என் கவிதைகள்

 7. #7
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  37,420
  Downloads
  5
  Uploads
  0
  ஆழமான கருத்தினை ஒருபக்ககதையில் சொல்லி முடிக்க முடியாது. இருப்பினும் உங்கள் கதை பிரமாதம். கரு மனதை கணக்க செய்கின்றது.

  இன்னும் எத்தனையோ கோமதியம்மாள்கள் இந்த பூவுலகில் இன்றும், இந்த நிமிடமும் இதுபோல் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

  நல்ல படைப்புக்கு என் பாராட்டுக்கள்.

  மிக்க நன்றி.
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 8. #8
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
  Join Date
  16 Jan 2007
  Location
  திருச்சி
  Posts
  4,192
  Post Thanks / Like
  iCash Credits
  8,746
  Downloads
  14
  Uploads
  0
  தேனாய் இனித்த கதையுடன் தேன் செட்டிய கதை அமைப்பு நன்றி சடகோபன்
  உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
  இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •