Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: கிழவி கேட்ட உதவி

                  
   
   
 1. #1
  இளம் புயல் பண்பட்டவர் alaguraj's Avatar
  Join Date
  09 May 2007
  Location
  குவைத்
  Posts
  311
  Post Thanks / Like
  iCash Credits
  24,940
  Downloads
  45
  Uploads
  1

  கிழவி கேட்ட உதவி

  பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதலமைச்சராக இருந்தபோது கும்பகோணம் அருகே ஒரு கல்லூரிக்கு வந்திருந்தார். ஏராளமான மக்கள் அவரைப் பார்க்க முண்டியடித்தனர். இந்நிலையில் கல்லூரிஆசிரியர்களுக்குத் தினந்தோறும் அவர்களது வீடுகளிலிருந்து மதியச்சாப்பாட்டைத் தூக்கிவரும் ஒரு மூதாட்டியும் அங்கே நின்றிருந்தார். அந்த அம்மாவின் இடுப்பில் ஒரு கூடை நிறைய சாப்பாட்டு தூக்குகள். இவ்வளவையும் சுமந்து கொண்டு அவர் முதலமைச்சரைப் பார்க்கப் போராடிக் கொண்டிருந்தார்.
  தலைவர் வரும் வழியில் அவர் அருகில் அந்த கிழவி நெருங்கிவிட்டார். காவல்துறையினரும். மற்றபிரமுகர்களும் அந்த அம்மையாரைப் பிடித்துக் தள்ளி ஓரங்கட்டிவிடப் பார்த்தனர்.

  விடுங்கய்யா நான் ஐயாகிட்ட ஒண்ணு கேக்கணும்" என்று கத்தினார் அந்த அம்மா. இதைக் கேட்ட தலைவர்,அந்த அம்மாவை விடுப்பா, இங்கே வாங்கம்மா என்ன கேக்கப் போறீங்கன்னேன்" என்றார். தலைவரே தன்னை அழைக்கிறார் என்ற மகிழ்ச்சி தாளமுடியாமல் அந்தத் தாய் "ஐயா என்ன மாதிரி ஆதரவு இல்லாத எத்தனையோ கெழம் கட்டைங்க இப்படி சாப்பாடு கூடை தூக்கி பொழைக்கிறோம். இது நிச்சயமில்லாத வருமானமய்யா...! கை காலு விழுந்துச்சுன்னா எங்கள யாரு காப்பாத்துவா..! என்று பட பட வென்று பேசினார். இதைக் கேட்டுக் கெண்டு பக்கத்தில் நின்ற ஒரு பிரமுகர், அந்தக் கிழவி ஏதோ பண உதவி கேட்கிறார் என்று நினைத்து, தன் பையிலிருந்து ஒரு இருபது ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.

  இது யாருக்கையா வேணும் இன்னிக்கு நீங்க இதக் கொடுத்துப்புட்டுப் போயிடுவீங்க..இது நிரந்தரமா எங்க பசிய ஆத்திப்புடுமா? எங்கள் மாதிரி வயசானவங்களுக்கு காமராஜ் ஐயா நெனச்சா நிரந்தரமா ஏதாவது செய்ய முடியும்" என்றபடி அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார் அந்த மூதாட்டி, அந்தத் தாயின் வேண்டுகோளையும், ஆதங்கத்தையும் ஆழ்ந்து கேட்டுக்கொண்டிருந்த தலைவர், ஆகட்டும்..பார்க்கலாம்! என்றபடி நகர்ந்தார் காமராஜ்.

  காரில் ஏறியவுடன்" இந்த மாதிரி ஆதவில்லாத ஒண்டிக் கட்டைகளுக்கு மாசம் எவ்வளவு ஆகும்..? அதிகாரிகள் சொன்னார்கள் ஒரு இருபது ரூபா ஆகும்.

  சென்னை வந்து சேர்ந்த மறுநாளே மாநிலம் முழுக்க உள்ள ஆதரவற்ற முதியவர்களின் புள்ளி விவரத்தை சேகரிக்கச் சொன்னார். அவர்களுக்கு எவ்வளவு செலவாகும் என்று ஒரு பட்ஜெட் போடச் சொன்னார் பத்தே நாளில் "முதியோர் பென்சன் திட்டம்" தயாராகிவிட்டது. மாதம் தோறும் இருபது ரூபாய் அவர்களுக்கு நிரந்தரமாய் கிடைக்க வழி செய்தார் தலைவர். நன்கொடையாக வாங்க மறுத்த இருபது ரூபாயை சட்டப்பூர்வமாகவாங்கி மகிழ்ந்தார் கும்பகோணம் முதாட்டி..
  ++அழகு++
  ______________________
  வாழ்க தமிழ் அன்னை.

 2. #2
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  173,626
  Downloads
  39
  Uploads
  0
  அதெல்லாம் ஒருகாலம்..ஹீம்..என்று பெருமூச்சு விடத்தான் முடிகிறது.இப்போதெல்லாம் எந்த மூதாட்டியும் முதல்வர்களை இப்படி சந்திக்க முடியாது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி கிடைத்த பெரியவர்கள் தங்களை அரசர்களாய் நினைத்துக்கொள்கிறார்கள்.அன்றைய அரச்சியல் தலைவர்களின் எளிமையும்,உதவும் மனப்பான்மையும் இன்று எந்த தலைவர்களிடமும் காணப்படுவதில்லை. அப்படியே எளிமையான தலைவர்கள்(நல்லக்கண்ணு போன்றவர்கள்) இருந்தாலும் அவர்களுக்கு ஆளும் அதிகாரம் கிடைப்பதில்லை.நேற்று வரை குப்பை பொறுக்கிகொண்டிருந்தவர்கள் தலைவரின் தயவால் மந்திரி ஆகிவிட்டு,பின் செய்யும் அட்டகாச பந்தாக்கள்......அப்பப்பா...இதுகளெல்லாம் திருந்தாது.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 3. #3
  இளம் புயல் பண்பட்டவர் gayathri.jagannathan's Avatar
  Join Date
  13 Dec 2006
  Location
  Bangalore
  Posts
  273
  Post Thanks / Like
  iCash Credits
  5,085
  Downloads
  9
  Uploads
  0
  என்னே பெருந்தன்மை...காமராஜரை இதனால் தானே பெருந்தலைவர் என அழைப்பது வழக்கமாயிற்று...

  (ஒரு விஷயம் தெரியுமா? காமராஜரைக் கிண்டலடிப்பவர்கள் அவர் உபயோகிக்கும் "ஆகட்டும் பார்க்கலாம்" என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவார்கள்... ஆனால் காமராஜர் ஏதாவது ஒரு கோரிக்கைக்கு "ஆகட்டும் பார்க்கலாம்" என்று சொன்னால் அந்த விஷயத்தைக் கண்டிப்பாகச் செய்து முடிப்பாராம்...!!)
  தமிழபிமானி
  ஜெ.காயத்ரி.

 4. #4
  இளம் புயல் பண்பட்டவர் alaguraj's Avatar
  Join Date
  09 May 2007
  Location
  குவைத்
  Posts
  311
  Post Thanks / Like
  iCash Credits
  24,940
  Downloads
  45
  Uploads
  1
  நன்றி... சிவா அண்ணா.
  நன்றி காயத்ரி...

  இதோ இன்னுமொரு தகவல்...

  கனரக தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது. இதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் காமராஜ். மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் அலைந்தனர்.

  பரந்த வெளி, தூய்மையான நீர், தேவையான மின்சக்தி, போக்குவரத்துக்கான ரயில் வசதி இத்தனையும் கூடிய ஓர் இடத்தைத் இந்திய அதிகாரிகளால் தமிழகத்தில் காட்டமுடியவில்லை. சோர்ந்து போன செக் நாட்டு தொழில் முனைவர்கள் அத்தொழில் கூடமமைக்க தமிழகத்தில் சரியான் இடம் எதுமே இல்லை என்ற சொல்லி கிளம்பத் தயாரானார்கள். இதைக் கேள்வியுற்ற காமராஜ் அவர்களையும் உடன் சென்றாய்ந்த அதிகாரிகள் சுட்டி காட்டிய இடங்களையும் விசாரித்தார். அதிகாரிகள் சென்று காட்டிய இடங்களைப் பட்டியலிட்டனர். அவர்கள் கேட்க்கும் வசதிகள் ஒரு சேர அமைந்த இடத்தைக் காட்ட முடியவில்லை என்றனர்.

  ஆனால் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் தமது சுற்றுபயணங்கள் மூலம் நன்கறிந்திருந்த காமராஜ் ஒரு கணம் சிந்தித்து விட்டுக் "காவிரியாற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே, அந்த இடத்தைக் காட்டினீர்களா?", அதிகாரிகள் இல்லையென்று தலையாட்டினார்கள்.

  "ஏன்?... இவங்க கேட்டிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே, போய் முதல்ல அந்த இடத்தை காட்டிட்டு எங்கிட்ட வாங்க" என்றார்.

  என்ன ஆச்சர்யம்! அந்த இடத்தைப் பார்வையிட்ட செக் நாட்டு வல்லுனர்களுக்கு அந்த இடம் எல்லா வகைகளிலும் பொருத்தமான இடமாக தொன்றியது.

  அங்கு உருவாகி இன்று உலக நாடுகளுக்கு தன் செய்பொருளை ஏற்றுமதி செய்யும் "பெல்" என்றழைக்கப்படும் (BHEL) என்ற நிறுவனமே அது.

  காமராஜ் ஆட்சிப் பொறுப்பேற்ற சில ஆண்டுகள் வரை எதிர்கட்சி மேடைகளில் அவர் உயர்நிலைப் படிப்பைக் கூட முடிக்காதவர், இவருக்கு ஆளும் ஆற்றல் எப்படியிருக்கும் என்று கிண்டல் வார்த்தைகளை வீசியதுண்டு.

  அப்போது காமராஜ் மிக அடக்கமாக கூறினார், "பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை".
  ++அழகு++
  ______________________
  வாழ்க தமிழ் அன்னை.

 5. #5
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  173,626
  Downloads
  39
  Uploads
  0
  அதுதான் காமராஜர் என்பது.வெறும் வசனங்களால் வாய்ச்சவடால் விடும் இன்றைய அரசியல்வாதிகள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது.நன்றி அழகுராஜ்.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 6. #6
  இளம் புயல் பண்பட்டவர் alaguraj's Avatar
  Join Date
  09 May 2007
  Location
  குவைத்
  Posts
  311
  Post Thanks / Like
  iCash Credits
  24,940
  Downloads
  45
  Uploads
  1
  காமராஜர் திரைப்படத்தில் பார்த்தது- உண்மைச்சம்பவம்

  திடீரென முன்னாலிருந்த காவலர் வண்டியிலிருந்து "சைரன்" என்ற மிகுவொலி எழுந்தது. புறப்பட்ட காரை நிறுத்தச் சொன்னார். முன்னாலிருந்த வண்டியிலிருந்த காவல் துறை அதிகாரியை அழைத்தார். "அது என்னையா சத்தம்?" காமராஜ்.

  "ஐயா, இது முதலமைச்சர் செல்லும் போது போகுவரத்தை உஷார்படுத்த எழுப்பப்படும் ஒலி. முன்னால் முதல்வர்கள் பிரகாசம் ஐயா, ஓமந்தாரையா, குமாரசாமிராஜா ஐயா, ராஜாஜி ஐயா எல்லோர் காலத்திலுமிருந்து வருகிற சம்பிரதாயம்" என்றார் காவல்துறை அதிகாரி. "இதோ பாருங்க... இதுக்கு முன்னால இந்த சம்பிரதாயமெல்லாம் இருந்திருக்கலாம்... எனக்கு இதெல்லாம் வேண்டாம்னேன். சத்தம் போடாமப் போங்க" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

  காமராஜ் முதலமைச்சராக இருந்தவரை அவருக்கு பாதுகாப்பாகச் சென்ற காவல்துறை வண்டிகள் ஒலி எழுப்பியதே இல்லை. தன்னை தலைவராக எண்ணிக்கொள்ளாமல் மக்களில் ஒருவராகவே தன்னைப் பாவித்துக் கொண்டார்.
  ++அழகு++
  ______________________
  வாழ்க தமிழ் அன்னை.

 7. #7
  இளம் புயல் பண்பட்டவர் alaguraj's Avatar
  Join Date
  09 May 2007
  Location
  குவைத்
  Posts
  311
  Post Thanks / Like
  iCash Credits
  24,940
  Downloads
  45
  Uploads
  1
  ஒரு நாள் சந்திப்பில் போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருந்த காவலர் இவர் சென்ற சாலையில் வரும் வண்டிகளை நிறுத்திவிட்டு காத்திருந்த மற்ற சாலை வண்டிகள் செல்ல அனுமதியளித்தார். ஆனால் அவர் காருக்கு முன் நின்ற மேலதிகாரிகளின் கடுங்கோபம் கொண்டனர். ஆனால் காமராஜரோ அந்த நடுத்தெருக் காவாலரின் கடமையாற்றலைக் கண்டு உள்ளம் புளகித்தார். அந்த காவலரை திட்டுவதற்காக கதவைத்திறந்த அதிகாரியை "எங்க போறீங்கன்ணேன்..அவர் அவர் கடமைய செய்யரர்..போக்குவரத்து விதி எல்லாருக்கும் தான்னேன் என்று சொல்லி அதிகாரியை வண்டியிலேயே அமரச்செய்தார்.

  காவலரைத் தாண்டி இவரது கார் செல்லும் போதுதான் அவருக்கு காமராஜர் போய்க்கொண்டிருப்பது புரிந்தது. முதல்வர் காரையே நிறுத்திவிட்டோமெ என்று பத்றிப்போனா காவலர் அன்று மாலை காமராஜர் வீடு திருப்பியபோது வாசலில் காத்து நின்று மன்னிப்புக் கேட்ட காவலரை தட்டிக்கொடுத்த காமராஜ் அவரது கடமை உணர்வை பாரட்டியபோது தான் காவலரின் உள்ளம் சாந்தியுற்றது.
  ++அழகு++
  ______________________
  வாழ்க தமிழ் அன்னை.

 8. #8
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  39
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  290,584
  Downloads
  151
  Uploads
  9
  காமராஜரை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. பேச்சு வாக்கில் கேட்ட செய்திகள் பல பிரம்மிப்பையும் அவர்மீதான மரியாதையையும் தந்தன. அவ்வகையான இன்னும் சில சம்பவங்களை அறியத்தந்த அழகுராஜுக்கு நன்றி.

 9. #9
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
  Join Date
  05 May 2007
  Location
  பிருந்தாவனம்
  Posts
  3,852
  Post Thanks / Like
  iCash Credits
  12,968
  Downloads
  37
  Uploads
  0
  காமராஜர் பற்றி தகவல்களை தந்த alaguraj க்கு நன்றி...
  இது எங்க அம்மா என்னிடம் சொன்னது..
  அவர்கள் பள்ளியில் படிக்கும் போது அந்த ஊருக்கு காமராஜர் வந்திருந்தாராம்.யார் வேண்டுமானாலும் பக்கத்தில் சென்று பேச முடியுமாம்,இத்தனைக்கும் அப்போதைய முதல்வர் அவர்..அத்தனை எளிமையானவர் காமராஜர்...

 10. #10
  இளம் புயல் பண்பட்டவர் alaguraj's Avatar
  Join Date
  09 May 2007
  Location
  குவைத்
  Posts
  311
  Post Thanks / Like
  iCash Credits
  24,940
  Downloads
  45
  Uploads
  1
  இதொ இன்னுமொரு தகவல்...........

  கிராமங்களில் மட்டும் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பித்த மதிய உணவுத் திட்டத்தை மேலும் விரிவுபத்த ஆலோசனை கூட்டம் நடந்தது அதிகாரிகள் "அரிஜனப் பள்ளியில் போட்ட பகல் உணவை, ஆசிரியர்களும் சாப்பிடுகிறார்கள், இத்திட்டத்தை கைவிட்டு விடுவதே நல்லது இதனால் இதை மேலும் விரிவு படுத்த வேண்டாமென்று சொல்லப்பட்டது.

  உடனே காமராஜ் உத்தரவு போட்டார் சிரித்த முகத்தோடு "திட்டத்தில் உங்கள் ஞாபகமாக ஒரு விதியை சேர்த்து விடுங்கள். 'மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஆசிரியர்களும், பிள்ளைகளோடு சேர்ந்து சாப்பிடலாம்.' அந்த கூடுதல் சாப்பாட்டுச் செலவு, நியாயமானது என்று ஏற்றுக் கொள்ளப்படும்" என்று பதில் கூறினார். அப்புறம் யாரும் குறுக்கிடவில்லை, பகல் உணவுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப் பட்டது.

  பல ஊர்களில் பொதுமக்கள் காமரஜின் அறிக்கைகளை ஏற்று தங்கள் சொந்த செலவில் நிறைவேற்றிட முனைந்தனர். பகல் உணவுத் திட்டத்தை முதலில் பாரதியின் எட்டயபுரத்தில் தொடங்கினர். பகல் உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய காமராஜ் பேசினார், அதில் சில "...நாம் பெறத் தவறிவிட்ட படிப்பை, வரும் தலைமுறையாவது பெற்று, வளர்ந்து வாழட்டும். அன்னதானம் நமக்கு புதியது அல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்குப் போட்டோம். இப்போது, பள்ளிக் கூடத்தை தேடிப்போய் போடச்சொல்கிறோம். அப்படி செய்தால் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுக்கும் புண்ணியம் இரண்டும் சேரும்.......என் மனதில், எல்லோர்க்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட முக்கியமான வேலை இப்பொதைக்கு இல்லை. எனது மற்ற வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, ஊர் ஊராக வந்து, மதிய உணவுத் திட்டத்திற்க்குப் பிச்சையெடுக்கவும் நான் தயார்" என்று சொன்னார். இதனால் ஏராளமான குழந்தை தொழிலாளர்கள் பள்ளிக்கூடத்திற்கு வர ஆரம்பித்தனர். மேலும் பல இனத்தை சேர்ந்த பிள்ளைகளை ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தியதால் அக்காலத்தில் நிலவி வந்த ஜாதி வேறுபாடுகள் மாணவர்களிடம் குறைய ஆரம்பித்து.
  ++அழகு++
  ______________________
  வாழ்க தமிழ் அன்னை.

 11. #11
  இளம் புயல் பண்பட்டவர் alaguraj's Avatar
  Join Date
  09 May 2007
  Location
  குவைத்
  Posts
  311
  Post Thanks / Like
  iCash Credits
  24,940
  Downloads
  45
  Uploads
  1
  நன்றி....அமரன்...மலர்.....

  மேலும் மேலும் பல புதிய வியப்புகள் நிறைந்த சம்பவங்கள் நிறைந்தது காமராஜர் வாழ்க்கை. ஏதொ ஒரு சம்பவம் சொல்லலாம் என்று நினைத்துத்தான் திரியை ஆரம்பித்தேன்...ஆனால் பல பல ஆச்சரியமான சம்பவங்கள் நிறைந்தது கர்ம வீரரின் எளிமையான வாழ்க்கை.

  நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா......


  திராவிட கொள்கைகளில் ஈர்கப்பட்ட கல்லூரி இளைஞன் ஒருநாள் குற்றால அருவிக்கு குளிக்கச் சென்றான். உடுத்தி இருந்தது கறுப்பு/சிவப்பிலான திராவிடர் கழக உடை. திடீரெனக் குளிக்கும் கூட்டத்தில் சலசலப்பு.

  இரண்டணாக்கள் கொடுத்து சிற்றருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களை காவலர்கள் , அமைச்சர் திரு.வெங்கிடசாமி வந்திருக்கிறார். அவர் குளித்து செல்லும் வரை அனைவரும் வெளியேர வேண்டும் என அவர் கூறி வன்முறையாக அனைவரையும் வெளியேற்ற, "மக்கள் காலில் விழுந்து வாக்கு கேட்டு வெற்றிப்பெறும் MLAக்கள், மன்னர்கள் போல நடந்து கோள்கிறார்களே. இதை தட்டிக் கேட்க மக்களுக்கேன் வீரமில்லை" என் கூறிக்கொண்டே வெளியேறினார்கள்.அமைச்சரோ, ஒரு நண்பருடன் பேசிக் கொண்டே உள்ளே நுழைந்து அருவி பூராவையும் அரைமணி நேரம் ஆக்கிரமித்துக்கொண்டு குளித்தார்.

  அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் அதே அருவி, அதே இடம்..ஆனால் காட்சிமட்டும் வேறு...வந்தவரோ முதலமைச்சர். நிச்சயமாக வெளியேற்றப்படுவோம் என் உறுதி செய்து கொண்டாண். அவன் நினைத்தது பொலவே காவலர்கள் வந்தார்கள். துப்பக்கி கத்தியை காட்டி மிரட்டினர். எல்லோறும் வெளியேரினர். இடுப்பில் துண்டு கட்டி, கூட ஒருவருடன் படிக்கட்டிலிருந்து இறங்கி வரும் காமராஜரை கண்ட வண்ணமிருந்தனர்.

  அருகில் வந்த காமராஜர் கோபத்துடன் அந்த காவலரை நோக்கி பேசத் தொடங்கினார். "ஏய்! நான் மேலிருந்து பார்த்துக்கிட்டுத்தான் இருந்தேன்னென். நீ இந்த வேலை செய்யத்தான் முன்னாலேயே வந்தியான்னேன். இவங்க எல்லோரையும் வெளியேத்திட்டு நான் மட்டும் குளிக்கனுமான்னேன், போ மேலே...இங்க இருக்காதேன்னேன்" என்று உத்தரவிட்டு விட்டு ஒதுங்கி நின்ற எங்களையெல்லாம் பார்த்து 'வாங்க..வாங்க... எல்லொறும் வாங்க. ஒண்ணாக் குளிக்போம்" என்றார்.

  அந்த இளைஞனுக்கு இக்காட்சியை நம்பவே முடியவில்லை.

  இந்த பண்பின் இமயத்தின் மீது எவ்வளவு தவறான எண்ணம் கொண்டிருந்தோம். இந்தத் தலைவன் காலைத்தொட்டு வணங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே அவர் குளிக்கும் இடம் அருகே நின்றான். கீழே குனிந்து கால்களைத் தேய்ப்பது போல் அவர் பாதங்களை தொட்டுக் கண்களில் அவருக்கு தெரியாமல் ஒற்றிக் கொண்டு மகிழ்ந்தான்.


  "நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
  தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
  இந்த நாடு முன்னேற நாளும் உழைத்தவனை - நாடு பார்த்துண்டா ..

  வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தான்
  வெள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவனே"
  ++அழகு++
  ______________________
  வாழ்க தமிழ் அன்னை.

 12. #12
  இளம் புயல் பண்பட்டவர் தளபதி's Avatar
  Join Date
  17 Jul 2007
  Location
  Saudi Arabia
  Posts
  360
  Post Thanks / Like
  iCash Credits
  5,049
  Downloads
  1
  Uploads
  0
  கர்ம வீரர் காமராஜர் மறைவுக்குப் பிறகு அனைவருக்கும் தெரிந்து மிகவும் ஆச்சரியப்பட்ட விசயம் "சொத்துக்கள் எதுவும் அவர் சேர்த்து வைக்கவில்லை" என்பது.

  வித்தியாசமான நல்ல முன்மாதிரியான முதலமைச்சர்.
  அளவில்லா அன்புடன்,

  தளபதி.

  எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது.
  எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது.
  எது நடக்குமோ அதுவும் நல்லதாகவே நடக்கும்
  .

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •