Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 30

Thread: பூவிலும் பாலுண்டு ( அ.மை. - 26)

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நானும் பார்த்தேன், வந்திருக்கிறார். கூடியவிரைவில் இங்கே வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    வாத்தியார், ஓவியா பின்னூட்டங்களுக்கு நன்றி...

    ஆமாம் ஆரென், முகிலனின் கவனம் இங்கே ஈர்க்கப்படவேண்டும்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #15
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    அன்புள்ள அண்ணா,

    உங்களின் அன்பால் மன்ம் நெகிழ்ந்தது. பூவிலும் பாலுண்டு! தலைப்பிடுவதில், தனித்தமிழில் எழுதுவதில் உங்களுக்கு நிகர் நீங்களேதான் அண்ணா. வழக்கம் போல் உங்கள் முத்தான பதிப்பு. இந்தியப் பயணம் முடிந்து இரண்டு நாட்களுக்கு முன் தான் வந்து சேர்ந்தேன். வேறு ஊர் மாற்றலகி உள்ள படியால் இன்னமும் இணைய இணைப்பு கொடுக்கவில்லை. கொடுத்ததும் முன்பு போல மன்றத்துச் சொந்தங்களுடன் அளவளாவ முடியுமென நினைக்கின்றேன்.
    சூலகம்,- Ovary (சூல்- கர்ப்பம் என்ற பொருளும் உண்டு)
    சூல் முடி, மகரந்தக் கேசரம்- Stamens
    Last edited by mukilan; 11-09-2007 at 11:29 PM.

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    தாவரங்கள் பற்றி புதிய தகவல்.. நன்றி இளசு.
    -------
    முகிலனை இங்கு காண்பதில் மகிழ்ச்சி.... விரைவில் எங்களுடன் இணைந்து கலக்க வாழ்த்துக்கள்.... தனி மடலில் புதிய போன் நம்பர் தாருங்கள்.. .

  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நன்றி முகிலன்..

    விரைவில் புதிய இணைப்புகள் அமைந்து, முழுமையாய் மன்றத்துடன் இணைய வாழ்த்துகள்.. அதுவரை கட்டுண்டோம்..பொறுத்திருப்போம்!


    நன்றி அறிஞர்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    பலே பலே! பாடத்தில் படித்தவைகள்.... அப்படியே தெளிவாக நீங்கள் சொல்கிறீர்கள்... பேசாமல் அறிவியல் பாடங்களுக்கு உங்களை ஆசிரியராகப் போட்டிருக்கலாம்... நல்ல தகவல்...

    பூவிலும் பாலுண்டு... அட என்ன அருமையான தலைப்பு.... கலக்கறீங்க அண்ணா.

    இந்த ஆராய்ச்சிகளின் விளைவு நாளை என்னாகும்?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #19
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    அற்புத பதிவு பெரியண்ணா.

    பூக்களின் பாலின வேற்றுமை பற்றி பனிரெண்டாம் வகுப்பில் தாவரவியலில் படித்த நினைவு அப்படியே தட்டி எழுப்புகிறது.

    மெண்டலின் அவரை விதை ஆராய்ச்சியை நானும் படித்து பரிச்சையும் எழுதியிருக்கிறேன்.

    பூக்களின் இனம் மகரந்த சேர்க்கையால் பல்வேறு வித்தியாசமான மரபு கட்டமைப்புடன் விதை உருவாகி, முற்றிலும் புது விதமான பூக்கள் வண்ணமயமாக விளைவது விந்தையிலும் விந்தை தான்.

    இங்கே படித்துக் கொண்டிருக்கையில் எனக்கு ஒரு சந்தேகம்.

    சின்ன வயதில் எங்கள் வீட்டில் "அந்திமந்தாரை" என்று அழைக்கப்படும் மாலையின் மட்டுமே மலரும் பூக்கள் கொண்ட செடியை வீட்டில் அழகுக்காக வளர்த்தோம்.

    வெள்ளை மற்றும் வாடா மல்லிக் கலர்(Dark Pink) பூக்கள் கொண்ட இரு செடிகள் அருகருகே வளர்ந்து பூத்தன.

    சில நாட்கள் கழித்து பார்த்தால், வெள்ளை நிற பூக்களில் ஒரு விந்தையான மாற்றத்தைக் கண்டேன். அவைகளில் வாடா மல்லிக் கலரில் புள்ளிகள் இருந்தன.

    வித்தியாசமான இந்த மாற்றத்துக்கு என்ன காரணமென்று பல காலம் யோசித்து சோர்ந்துவிட்டேன்.

    மகரந்த சேர்க்கையால் விளைந்த மாற்றமா? இல்லை.. வேறு ஏதேனும் தாவரவியல் பரிமாற்றமா??

    விளக்கமளிக்க இயலுமா இளசு அண்ணா??
    Last edited by பூமகள்; 08-02-2008 at 06:55 AM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #20
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Jan 2008
    Location
    புதுக்கோட்டை
    Age
    66
    Posts
    540
    Post Thanks / Like
    iCash Credits
    21,512
    Downloads
    49
    Uploads
    0
    தமிழில் அறிவியல் கற்பிக்கப் படவேண்டும் என்று நான் கொண்டுள்ள கருத்துக்கு நல்ல பலமூட்டுவதாக அமைந்த திரி. அறிவியல் ரீதியாக தரப்பட்ட தகவல்கள் அனைத்தும் அருமை திரு இளசு.

    விஞ்ஞானத்தின் அனைத்துக் கருத்துக்களை மறுப்பது மெய்ஞானமாகும். அந்த வகையில் ஆண் பெண் என்ற பாலினமே ஒரு தவறான கருத்து என்ற வாதத்தை இங்கு வைக்கிறேன்.

    ஒரு செய்தி. உயிரினங்களில் பாலின வேறுபாடான ஆண் பெண் என்ற பகுப்பே ஒரு மாயைதான். இனப் பெருக்க சித்தாந்தத்தால்தான் ஆண் பெண் பேதமே உருவானது. உண்மையில் உயிரினங்கள் அனைத்துமே பெண்பால்தான். ஆண் என்னும் புருஷத்தத்துவம் கடைசியில் உயிரினங்களில் உயர்ந்ததான மனு என்ற உயிரினத்தால் மட்டும் அடையக்கூடிய பக்குவநிலை. இதைத்தான் பரமம் புருஷார்த்தம் என்று வேதாந்தங்கள் சார்ந்த மெய்ஞானம் போதிக்கிறது.

    இதை ஆழமாகப் பார்ப்போம்

    பிறப்பின் தத்துவம்

    நால்வகை யோனி, எழுவகைத் தோற்றம் என்பது உயிரினங்களின் ஜனன மரண சித்தாந்தத்த காரணி. உயிரினங்களின் தோற்றம் புழுக்கம், அண்டம், சினை, வித்து என்ற நான்கு வகை யோனிகள் மூலம் பூமியில் உருவாகிறது. பஞ்சபூதங்களான மண், காற்று,அக்கினி, வாயு, நீர் போன்ற உபகாரணிகள் உயிரினங்களை காக்கும் தொழிலைச் செய்கிறது. இந்த அமைப்பு பூமியில்மட்டும்தான் உள்ளது.

    அண்டம் எனப்பட்ட முட்டை என்ற காரணியால் வந்த உயிரினங்கள் பறப்பன என்னும் வகையிலும், வித்து மூலமாக வருவது எழுவான், படுவான் என்று சொல்லப்பட்ட தாவர வகையிலும், சினை என்னும் கருவுற்று உருவாகும் உயிரினங்கள் நான்கு கால் ஐயறிவு மிருகங்கள், மற்றும் ஆறறிவு மனிதர்கள் என்ற இனத்தில் உண்டாகிறது.

    ஆனால் புழுக்கத்தால் பிறக்கும் ஒரு உயிரினம் இருக்கிறது. அதற்கு ஆணினச் சேர்க்கை தேவை இல்லை. வெப்பத்தாலும், அதீத புழுக்கத்தாலும் உண்டாகும் உயிரனங்கள் ஒரு ஆச்சிரியமான பிறப்பு. பொடுகு, பேன், அரிசியில் உண்டாகும் வண்டு போன்ற உயிரினங்கள் இந்த வகையைச் சாரும். இந்த உயிரினத்தில் ஆண்பாலே கிடையாது. ஆண்பாலே இல்லாமல் உருவாகும் சாத்தியக் கூறுகள் இருப்பதால், ஜீவ அணுக்கள் கொண்ட அனைத்தும் ஆண் இனம் என்று நாமாகவே சிருஷ்டித்துக் கொண்டோம். பாலினம் என்பது ஒரு மாயையே.

    நான்கு வகை யோனி மூலமாக அவதரித்த உயிர் வகைகள் அனைத்தும் தருக்கினம் எனப்பட்ட தாவரவகைகள், ஊர்வன, பறப்பன, ஜலவாழ் ஜந்து, நரன், மனு, அமரன் என்ற எழுவகைத் தோற்றத்துள் அடங்கும். சினை என்ற யோனிக் காரணியில் பன்றி, காண்டாமிருகம் முதல் மனிதப்பிறப்பு வரை அடக்கம் குணத்தால் நரன் என்ற தோற்றத்தில் உள்ளது. இதில் தாவர, ஊர்வன, பறப்பன, ஜலவாழ் ஜந்து போன்று தோற்றத்தில் உள்ளவற்றை மட்டும் நாம் அறிவோம்.

    இதில் மனு மற்றும் அமரன் என்ற இரு தோற்றம் மட்டும் நம்மில் எங்கு உள்ளது அது யார் என்று மெய்யறிந்த ஞானிகளைத் தவிர யாரும் அறியார். நரப்பிறப்பிலிருந்து மனு வாக ஆவதும், மனுவிலிருந்து அமரனாகி புருடத்துவம் என்னும் ஆண்பாலை அடைவதும் தான் மனிதனுக்கு விதிக்கப்பட்ட விதி. இவை எதுவும் நரன் என்ற நிலையில் உள்ள உயிரனிங்களுக்கு தெரியவே வராது.

    மறுபிறப்பு என்னும் மனுவாக இந்த நரத் தோற்றத்திலிருந்து ஒரு பிறப்பை ஒரு புருஷனின் புணர்ச்சியால் அடைந்தவன்தான் தானும் ஆண்பால் ஆகிறான். மற்றபடி உயிரனங்கள் அனைத்துமே பெண்பால்தான்.

    இந்த ஜனனம் ஆவிடை யோனி என்னும் ஒரு தேவ யோனி்யில் பிறப்பது. அப்படிப் பிறக்கும் உயிரினங்கள் தோற்றம் நீங்கிய ஒரு தேவன் என்ற உயர்நிலையாகிய ஆண் இனத்தை அடையும். ஆவிடையோனியில் போகிக்கும் போது அனைத்து உயிரும் பெண்பாலாகவும், போகிப்பவர் ஆண்பாலாகவும் உள்ளார். அவரே புருஷோத்தமர் என்பது.

    இநத் நிலையை கிருஷ்ண பரமாத்மா புருடத்துவத்தை அடைந்தவராக, ஒரு பிரம்ம ஞானியாக சிருஷ்டிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணன் இறைநிலை அடைந்த புருஷர். பெண்பாலர்களாகச் சித்தரிக்கப்பட்ட கோபியர்கள் என்பது அவர்மீது பக்தி கொண்ட அனைத்து கோகுலத்தைச் சார்ந்த மனிதர்கள்தான்.

    குழவி, குழந்தை, குதலை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை என்ற பரிணாம நிலைகள் மனித இயக்கத்தில் அறிவின் வேறுபாட்டால் வரும் மாறுபட்ட நிலைகள். இது ஆண் பெண் என்ற இருபாலருக்கும் பொது. இவை அனைத்தும் பெண்பாலை விளிப்பதுபோல்தான் உள்ளது.

    எனவே உயிரினங்களில் பாலின பேதம் என்ற ஒன்று கிடையாது. ஜனன உறுப்புகளால் உண்டான பேதம் ஆண் பெண் என்ற நிலைக்குப் பொருந்தாது.

    இது சற்று வேடிக்கையாகத்தான் இருக்கும். இதில் பல ஆச்சிரியகரமான விஷயங்கள் நமது வேதங்களில் பொதிந்து இருக்கிறது என்பது சத்தியம்.

    கருத்துச் சிதைவு ஏதும் கண்ணில் பட்டால் நினைவூட்டவும்.
    Last edited by சாலைஜெயராமன்; 08-02-2008 at 07:59 PM.

  9. #21
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    அந்திமந்தாரை- எத்துணை அழகான காரணப் பெயர்! அந்தியில் மலரும் தாரை (அந்தி மலர்ந்தாரை) ஆங்கிலத்தில் Four'o' Clock Plant என்றழைக்கப்படுகிறது. ஈழத்தில் நாலுமணிப் பூ என்றே அழைக்கிறார்கள். தென்னமெரிக்காவின் பெரு நாட்டினை பூர்வீமாகக் கொண்ட இந்தச் செடியின் தாவரவியல் பெயர் Mirablis jalaba. ஐரோப்பிய வணிகர்களால் அனைத்து நாடுகட்கும் எடுத்துச் செல்லப்பட்டது.

    வயது முதிர்ந்த காலத்தில் மலர்ந்த காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தனது திரைப்படத்திற்கு பாரதிராஜா அந்திமந்தாரை எனப் பொருத்தமாக பெயர்வைத்திருப்பார் (தாஜ்மகால்னு ஏன் பேரு வெச்சாருன்ணு என்னையைக் கேள்வி கேட்கக் கெளம்பிடாதீங்க!!!)


    மேலே உள்ள படத்தில் நீங்கள் காண்பதுதான் அந்தி மந்தாரை. இந்த நிறத்தில்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாத அளவில் உங்கள் தோட்டமெங்கும் வண்ணக் கோலங்கள் படைப்பது உங்கள் அந்திமந்தாரை தான்.

    மரபியலின் தந்தை மெண்டல் வகுத்த மரபியல் விதிகளைப் பின்பற்றி வகுத்த மரபியல் விதிகளில் முக்கியமான விதி Law of Dominance (வல்லான் வகுத்ததே வாய்க்கால்). அதாவது நம் உடலில் ஒவ்வொரு பண்பிற்கும் (traits or characteristics) இரு ஒன்றோடொன்று மாறுபட்ட மரபணுக்கள் இருக்கும் (Differnt alleles of a gene). எ.கா முடியின் நிறம் கருப்பு அல்லது வெண்பழுப்பு (Blond ). மெண்டல் ஆய்வு செய்த பட்டாணியில் பச்சைப்பட்டாணி அல்லது மஞ்சள் பட்டாணி. இவற்றில் எது வலிமை மிகுந்ததோ அதுவே புறத்தோற்றத்தைத் தீர்மானிக்கும். வலிமை குறைந்த மரபணு என்ணிக்கையில் கூடிவிட்டால் வலிமை கூடி விடும் அல்லவா? அந்த்ச் சமயங்களில் வலிமை குறைந்த மரபணு புறத்தோற்றத்தை தீர்மானிக்கும். இடைப்பட்ட நிலையில் இருக்க சாத்தியமே இல்லை என்பது மெண்டலின் கூற்று.

    ஆனால் பின்னாளில் வந்த ஆய்வாளார்கள் அது தவறு என நிரூபணம் செய்வதில் நமது அந்திமந்தாரையார்தான் உதவினார். அந்தி மந்தாரையில் சிவப்பு, வெள்ளை என இரு வேறுபட்ட மரபணு ஜோடிகள் உள்ளன. இவற்றில் எப்பொழுதுமே சிவப்பு ஓங்கி இருக்கும் எனவே சிவப்பு நிறம்தான் புறத்தோற்றத்தில் இருக்க வேண்டும் அல்லது வெள்ளை மரபணுக்கள் சிவப்பை விட எண்ணிக்கையில் கூடிவிட்டால் வெள்ளைத் தோற்றம் தரவேண்டும். எப்படி இந்த இடைப்பட்ட அல்லது வேறுபட்ட (variegated) நிறப்பண்பு வந்தது என்பதை விளக்க இந்த்ச செடியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதுவே பின்னாளில் மெண்டலின் dominance law க்கு மாற்றாக incomplete dominance (ஜெயலலிதா சொல்வது போல மைனாரிட்டி !!!! அரசு போலன்னு வெச்சிக்கோங்களேன்) வகுக்கப்பட்டது. அதன்படி வலிமை மிகுந்த மரபணு என்பது எப்பொழுதும் வலிமை மிகுந்தே இருப்பதில்லை அவ்வப்பொழுது கூட்டணியும் வைத்துக் கொள்ளும் என்று அறியப்பட்டது. சரிபாதியாக பங்கு தந்தால், இடைப்பட்ட நிறங்களும், வெளியில் இருந்து ஆதரவு தந்தால் வாரியத்தலைவர் பதவி போல ஆங்காங்கே சில சமரசங்கள் செய்து கொள்வதும் உண்டு (சற்றே எளிய விளக்கமாக இருக்கட்டும் என்றுதான் அரசியலை உதாரணம் காட்டினேன். யாரேனும் மனம் புண்படும்படியாக நினைத்தால் இங்கே தெரிவிக்கவும். மன்ற நிர்வாகிகளும், ஆட்சேபகரமாக இருந்தால் சம்பந்தப்பட்ட வரிகளை நீக்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்)

    பெரும்பாலும் ஆரம்ப கால இனப் பெருக்கங்களின் போது சிவப்பு நிறமே மேலோங்கியிருக்கும். பின்னரே வெள்ளையும் வெள்ளையோடு கலந்த நிறத்திலும் பூக்கள் பூக்கும். அதனால் தான் இடைப்பட்ட நிறங்களில் மட்டுமல்லாது கூட்டணிக்குத் தகுந்தவாறு எல்லாம் நிறம் மாறிக் காட்சியளிக்கும். அதன்படிதான் பூமகள் பார்த்த பூக்கள் நிறம்மாறிய புள்ளிகளைக் கொண்டுள்ளன. குரோட்டன் செடியின் இலைகளில் நிறக்காரணிகளின் மரபணுக்கள் (pigments) பச்சையம்( chlorophylls, ஜாந்தோபில்ஸ் Xanthophylls) இப்படி விளையாடுவதாலெயே இலைகள் அப்படித்தோற்றமளிக்கின்றன. ஆனால் அவ்வாறாக திடீரென வலிமை மிகுந்த பச்சையத்தார் மஞ்சளுடன் கூட்டணிவைக்கக் காரணம் காலத்தின் கோலம்தான். அதை திடீர்மாற்றம் (Mutation) என்பார்கள். அதைப்பற்றி விளக்கமாக இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

    தாவரத்தில் மட்டுமல்ல விலங்குகளிலும் (மனிதனையும் சேர்த்துத்தான்) இப்படித்தான். அதனாலேயே ஒரு கறுப்பின ஆண்வெள்ளைப் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் குழந்தைகள் இடைப்பட்ட நிறத்தில் இருப்பது. இயல்பாகவே மனிதனின் நிறம்,முடி, கண் நிறம், தாடை மற்றும் மூக்கு அமைப்பை தீர்மானிக்கும் மரபணுக்களில் எதற்குமே தனி மெஜாரிட்டி இல்லை. கூட்டணிதான் ஆனால் நிறத்தில் எப்பொழுதுமே வெள்ளை (மனிதனில் மட்டுமாவது) கொஞ்சம் வலிமையானதாக இருக்கும். முடிகள் சுருட்டையாக இருப்பதில் இருந்து கருப்பின மக்களின் முடிகளின் மரபணுக்கள் சற்று வலிமை கூடியது என்றும் தோன்றுகிறது அல்லவா? கீழே உள்ள பூனையைப் பாருங்கள். வெள்ளையும் அரக்கு நிறமும் கலந்து இருக்கிறது. இது போல மனிதனிலும் ஆங்காங்கே வெள்ளை நிறமும் கருப்பு நிறமும் கொண்ட குழந்தைகள் ஏன் பிறப்பதில்லை?


    எனக்கும் மனித மரபியலுக்கும் தொடர்பில்லை. மனிதனால் விளங்கிக் கொள்ள முடியாத அல்லது மனிதனால் கட்டுப் படுத்த முடியாத பல விநோதங்களை உள்ளடக்கி இயற்கை அதை வெல்ல நினைக்கும் யாரையும் அலட்சியப் படுத்திக்கொண்டு அதன் போக்கிலே போய்க்கொண்டிருக்கிறது என்பதே உண்மை!
    Last edited by mukilan; 13-02-2008 at 01:16 AM.

  10. #22
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    அடடே நம்ப செஸ்கடோன் ஆபீசர் முகில்ஸ், நல்வரவுகள் சார்.

    உங்க பின்னூட்டத்தை பார்த்ததும் எனக்கு ஒரே குஷியாகி விட்டது, அருமையான எழுத்தாளர் நீங்கள். உங்கள் பதிவை கண்டு குதுகலிக்கும் கூட்டத்தில் நானும் ஒருவள்.

    இந்த பின்னூட்ட பதிவை இன்னும் படிக்கவில்லை படித்து விட்டு கருத்து சொல்கிறேன்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  11. #23
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    மிக அற்புதமான விளக்கம் முகில்ஸ் அண்ணா.
    எனது தாவரவியல் பாடங்கள் அனைத்தும் நினைவு கூர்ந்த திருப்தி.

    தகுந்த ஆய்வாளரை இங்கே பதிலிட அழைத்ததுக்கும், எனது கேள்விக்கு இத்துணை பொறுமையாகவும் அழகாகவும் பதிலிட்டமைக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் அன்பின் முகில்ஸ் அண்ணா மற்றும் எனதினிய பெரியண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  12. #24
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    முகிலனுக்கு அண்ணன் என்பதில் எனக்குப் பெருமை..

    இந்த வகை விளக்கம் மதன் , சுஜாதா தரத்துக்கு இருக்கிறது முகில்ஸ்..

    மேல் படிப்பில் இருப்பதால் உன்னைச் சும்மா விடுகிறேன்..

    இல்லையென்றால் அறிவியல் நூல் தமிழில் எழுத தகுந்த நபர் நீ..

    (பின்னாளில் நிச்சயம் நீ மேற்கொள்ளவேண்டிய பணி இது..)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •