Results 1 to 5 of 5

Thread: இறுக்கினால்...அவிழ்ந்து கொள்ளும் முடிச்சĬ

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் sadagopan's Avatar
    Join Date
    11 Aug 2007
    Location
    Tirunelveli
    Posts
    160
    Post Thanks / Like
    iCash Credits
    19,827
    Downloads
    15
    Uploads
    0

    இறுக்கினால்...அவிழ்ந்து கொள்ளும் முடிச்சĬ

    என்ன தான்
    நீ
    ஓடி ஓடிப் போனாலும்,
    நின்றுகொண்டேதான்
    இருக்கின்றன
    உன் சின்னச் சிரிப்பும்,
    பெரிய புன்னகையும்!

    எவ்வளவு தான்
    நீ
    மழையில் நனைந்தாலும்,
    தெறிப்பதென்னவோ
    தீயும்,
    கதகதப்பும்தான்!

    எவ்வளவு தான்
    நீ
    மௌனமாய்ச் சென்றாலும்,
    பேசிக்கொண்டேதான்
    வருகின்றன
    உன் கொலுசும்,
    விழிகளும்!

    என்ன தான்
    நீ
    காதலை
    பயமுறுத்தி பயமுறுத்தி
    பதுக்கி வைத்தாலும்,
    கசிந்துகொண்டேதான்
    இருக்கிறது
    என்னைப் பார்த்தால்
    வரும் கோபத்திலும்,
    இல்லையென்றால்
    தேடும் ஏக்கத்திலும்!

    எவ்வளவு தான்
    நீ
    பத்திரமாய்
    பாதுகாத்து நடந்தாலும்,
    உனக்கும் தெரியாமல்
    உதிர்ந்துகொண்டேதான்
    வருகிறது
    உனது அழகு
    கவிஞனின் பேனாவிலும்,
    ஓவியனின் தூரிகையிலும்!

    ********

    நட்புடன்
    சடகோபன்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அழகான வார்த்தைகளை ஜோடித்து கவிதை பிரமாதமாக வந்திருக்கிறது.

    பாராட்டுக்கள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by sadagopan View Post
    என்ன தான்
    நீ
    ஓடி ஓடிப் போனாலும்,
    நின்றுகொண்டேதான்
    இருக்கின்றன
    உன் சின்னச் சிரிப்பும்,
    பெரிய புன்னகையும்!
    பெரிய புன்னகையையும்,சிறிய சிரிப்பையும் நிற்கவைத்துப் பார்த்தது அழகு..
    எவ்வளவு தான்
    நீ
    மழையில் நனைந்தாலும்,
    தெறிப்பதென்னவோ
    தீயும்,
    கதகதப்பும்தான்!
    ஆஹா...அருமையான உணர்வுகள்,அதை வெளிப்படுத்தியிருக்கும் வரிகளும் அருமை...
    எவ்வளவு தான்
    நீ
    மௌனமாய்ச் சென்றாலும்,
    பேசிக்கொண்டேதான்
    வருகின்றன
    உன் கொலுசும்,
    விழிகளும்!

    இந்த வரிகள் இக் கவிதைக்கு ஹைலைட்..பேசும் விழிகளும்,கொஞ்சும் கொலுசும் காதருகே ஒலிப்பதுபோல் ஒரு உணர்வு.
    என்ன தான்
    நீ
    காதலை
    பயமுறுத்தி பயமுறுத்தி
    பதுக்கி வைத்தாலும்,
    கசிந்துகொண்டேதான்
    இருக்கிறது
    என்னைப் பார்த்தால்
    வரும் கோபத்திலும்,
    இல்லையென்றால்
    தேடும் ஏக்கத்திலும்!
    பெண்ணின் உள்மனம் சொல்லும் காதலை கவிமணமாக்கிய வரிகள்
    எவ்வளவு தான்
    நீ
    பத்திரமாய்
    பாதுகாத்து நடந்தாலும்,
    உனக்கும் தெரியாமல்
    உதிர்ந்துகொண்டேதான்
    வருகிறது
    உனது அழகு
    கவிஞனின் பேனாவிலும்,
    ஓவியனின் தூரிகையிலும்!

    ********

    நட்புடன்
    சடகோபன்
    மிக அழகான ஒரு கவிதை. காதலைப் பாடாத கவிஞரில்லை...ஆனால் ஒவ்வொருமுறையும் அது பிரகாசிப்பது அந்த கவிஞன் கையாளும் சொல்லாடலில்தான்.வாழ்த்துக்கள் சடகோபன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் sadagopan's Avatar
    Join Date
    11 Aug 2007
    Location
    Tirunelveli
    Posts
    160
    Post Thanks / Like
    iCash Credits
    19,827
    Downloads
    15
    Uploads
    0
    அருமையன விரிவான பின்னூட்டம் நன்றிகள் திரு. சிவா.ஜி

    நட்புடன்
    சடகோபன்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    அகமொன்று வைத்து புறமொன்று சொல்பவர் என்று சொல்கிறீர்கள் சடகோபன்.....

    அப்படித்தானே

    கவிதை அழகு
    பாராட்டுக்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •