Page 1 of 15 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 169

Thread: கவிதையில் நகைப்போம்

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    கவிதையில் நகைப்போம்

    மன்ற உறவுகளே,கவிதையால் எதையும் செய்யலாம்.சாம்ராஜ்யங்களையே மாற்றக்கூடியது கவி வரிகள். இங்கு நாம் அப்படி எதுவும் செய்யவேண்டாம்.
    எல்லோரும் இன்புற்றிருக்க சிரிக்க வைக்கலாம்.[U]நகைச்சுவையாய்[/ஊ]மட்டுமே கவிதைகள் படைப்போம்,அவை படைத்தவரையும்,படித்தவரையும் மனம் விட்டு சிரிக்க வைப்பதாய் இருக்க வேண்டும்.நம்மைச்சுற்றி எத்தனையோ நிகழ்வுகள்..அதிலிருந்து அமுத சுரபியாய் கவிதைக்கான கரு கிடைத்துக்கொண்டே இருக்கும்.அதனால் கவலையின்றி கவிதை படைக்க தொடங்குங்கள்.சந்தோஷப்படுத்த தெரிந்த அனைவரும் இதில் பங்கேற்கலாம்.

    உதாரணமாக

    நான் டாடா காட்டினால்
    அவள் பாட்டா காட்டுகிறாள்
    அவளுக்கென்ன தெரியும்
    அடி வாங்குவதற்கென்றே
    நான் தினம் பேட்டா
    வாங்குபவனென்று!

    பேட்டா−தினப்படி(இதிலும் அடி...!)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    என்று தான் நீ நேரத்திற்கு வந்தாய் என்று அவள் திட்ட
    இன்று சரியான நேரத்தில் போக வேண்டும் என்று நேரம் பார்க்க
    அவளுக்கு திரிகாணி வாங்க அடகு வைத்த கடிகாரம்
    எங்கோ நேரம் காட்டியதே
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2005
    Location
    TAMILNADU
    Posts
    402
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    1
    Uploads
    0
    நல்ல விஷயம் நன்றி அய்யாக்களே

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அசத்தலான ஆரம்பம் மோகன். தொடருங்கள்.அடகுவைத்த கடிகாரம் எங்கோ அசைகிறது...நல்ல வரிகள்.வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நண்பரே! எனக்கும் சிரிப்புக் கவிதைகளுக்கும் வெகு தூரம்.. பிரச்சனைகளைக் குழைத்து எழுதவே என்னால் தெரியும்... ஜோக்ஸ் வேண்டுமானால் முயற்சிக்கிறேன்.. கவிதையில் புகுத்தத் தெரியாது.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆதவாவுக்குத் தெரியாது என்பதை என்னால் ஒத்துக்கொள்ளமுடியாது.என்ன இங்கே கொஞ்சமாய் உங்கள் பாண்டித்தியத்தை லேசாக்கிக்கொள்ள வேண்டியிருக்கும்....முயலுங்களேன்.

    அவசரமாய் வீடு வந்த
    கணவன்
    அகப்பையை மறைக்கிறான்
    அரைமணியில்
    அவன் தவறு
    மனைவிக்குத் தெரியும்போது
    அகப்படாமலிருக்க..!


    இப்படி ஏதாவது....ஆதவா....
    Last edited by சிவா.ஜி; 22-08-2007 at 04:49 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நல்ல முயற்சி சிவா..........
    நானும் எழுத முயற்சிக்கின்றேன்.............

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    உன்னைப் பார்த்ததும்
    காதல் வந்தது
    உன் அண்ணனைப்
    பார்த்ததும் ஓட்டம்
    வந்தது...

    நகைச்சுவை இல்லாட்டியும்
    நகைச்சுவை என்று நினைச்சாவது
    சிரிச்சுடுங்கா

    ஆதவா சொன்ன மாதிரி எனக்கும்
    நகைச்சுவைக் கவிதை எல்லாம் வராது
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நல்ல ஆரம்பம் சிவா. எனக்கு கவிதை எழுதத்தெரியாது. ஆகையால் நான் ஏதாவது கிருக்கமுடியுமா என்று பார்க்கிறேன்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    முதல் காதல் கடிதத்தை
    என்னவளிடம் கொடுத்தேன்
    அவள்
    என் வலது கண்ணத்தில்
    ஒரு அடி கொடுத்தாள்!!!

    மறுநாள்
    என்னவளிடம் மறுபடியும்
    காதல் கடிதம் கொடுத்தேன்
    அவள் இம்முறை
    என் இடது கண்ணத்தில்
    ஒரு அடி கொடுத்தாள்!!!

    துவளவில்லை நான்
    முயற்சியுடையார்
    இகழ்ச்சியடையார்
    ஆயிற்றே!!!

    மூன்றாவது நாள்
    என்னவளிடம் மறுபடியும்
    காதல் கடிதம் கொடுத்தேன்!!!

    அவள் என்னைப் பார்த்து
    நாக்கைப் பிடிங்கிக்கொண்டு
    சாகிற மாதிரி கேட்டாள்

    நீ எழுதுவதை
    நீ படிப்பதே
    இல்லையா?

    எவ்வளவு எழுத்துப்பிழைகள்
    உன் முகரகட்டையைப்போல்

    திருத்தி அழகாக
    எழுதிக்கொண்டுவா
    என்றாள்.

    எனக்கு குதுகூலம்
    ஆனால் முகத்தில்
    ஈயாடவில்லை!!!

    அவள்
    முகரகட்டையை
    அழுத்திச் சொன்னவிதம் கண்டு
    ஒரு அசட்டுச்
    சிரிப்புடன் நான்!!!!
    Last edited by aren; 24-08-2007 at 01:49 AM.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    என்னவளுக்கு
    காதல் கடிதம்
    இரண்டு கொயர்
    நோட்டு பாழாகி
    பின்னர் கடைசியாக
    கவிதையை முடித்து
    அவள் கையில்
    கொடுத்தேன்!!!!

    வாங்கினாள்
    படித்தாள்
    என்னைப் பார்த்தாள்!!!

    உன் நண்பர்கள்
    நன்றாக
    கவிதை
    எழுதுவார்கள்
    போலிருக்கிறதே
    என்றாள்!!!

    நான்
    ஒன்றும் புரியாமல்?????

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    மேலேயுள்ள கிருக்கலை வேறுவிதமாக:

    என்னவளுக்கு
    காதல் கடிதம்
    இரண்டு கொயர்
    நோட்டு பாழாகி
    பின்னர் கடைசியாக
    கவிதையை முடித்து
    அவள் கையில்
    கொடுத்தேன்!!!!

    வாங்கினாள்
    படித்தாள்
    என்னைப் பார்த்தாள்!!!

    அடுத்த தடவையாவது
    ஒழுங்காக
    தமிழில் எழுது
    என்றாள்!!!

    நான்
    ஒன்றும் புரியாமல்?????
    Last edited by aren; 24-08-2007 at 01:55 AM.

Page 1 of 15 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •