Page 3 of 8 FirstFirst 1 2 3 4 5 6 7 ... LastLast
Results 25 to 36 of 93

Thread: தமிழ் மன்றம் தலைமை மாறுகிறது

                  
   
   
  1. #25
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    மன்ற உறவுகள் அனைவருக்கும் பணிவான வணக்கம்.

    தமிழின் மீது தீராப் பற்றுக்கொண்ட தலைவர் இராசகுமாரன் அவர்கள் தொடர்ந்தும் நிர்வாகத்தில் இருப்பேன் என சொல்வது மகிழ்ச்சியான செய்தி. ஏலவே ஆலோசகர்களாக இருந்த இளசு அண்ணன், மனோஜி அவர்கள், போன்றோருடன் தாமரை, பிரதீப், மன்மதன்,ஆரென் என நான்கு தமிழ் ஆவலர்களான அண்ணாக்கள் சேர்கிறார்கள் என்னும் அறிவிப்பில் உள்ளத்தில் உற்காசம் கலந்த உவகையைத் பொங்குகிறது. மன்றம் வந்த நாள் முதல் பாரதி அண்ணாவை இங்கே காண்கிறேன். எல்லாத் திரிகளிலும் தலைவர்தந்த வரத்தால் அவர் வருகை பதிவுசெய்யப்பட்டிருக்கும். அவர் பின்னூட்டங்களில் அழகு தமிழ் குடிகொண்டிருக்கும். அவர் தமிழைப்போல எழுத விளைந்து தோல்வியடைந்த சந்தர்ப்பங்கள் ஏராளம். விதிமுறைகளை மீறும் பதிவுகளை நிர்வாக நண்பர்களுக்கு தெரியப்படுத்தும் முறை இருப்பது இவரால்த்தான் எனக்குத் தெரிந்தது. பல சமயங்களில் இவர் அதைப்பயன்படுத்துவதை கண்டுள்ளேன். தமிழ் மீதும் மன்றம்மீதும் அளவில்லா பற்றுள்ள பாரதி அண்ணாவும் ஆலோசகர் குலாமில் இணைந்துள்ளமை இரட்டிப்பு மகிழ்ச்சி.

    அறிஞர் அவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு கையில் அன்பு அமுதசுரபியையும் மறுகையில் சாட்டையும் கொண்டுள்ளவர். இவர் சாட்டையை பயன்பத்துவது அத்தி பூத்தாற்போன்றது. பயன்படுத்துகையில் கொஞ்சும்சாட்டையாகவே கண்டுள்ளேன். பென்ஸ் அண்ணாவின் பயனர் தகவலில் அவரைபற்றிய சில வரிகள் (வாழ்க்கை வரலாறு) எனுமிடத்தில் நிலைகண்ணாடி என இருக்கும். நாம் எப்படிப்பார்கின்றோமோ அப்படித்த் தெரிவார் என நினைத்துக்கொள்வேன். அது உண்மையும் கூட. ஆதவாவைப் பற்றி ஒற்றைவார்த்தையில் சொல்லி விடலாம். அவர் மன்றத்தில் இளவரசன். ஓவியன்,அன்புரசிகன்,அக்னி மூவரும் முத்தமிழ்கள். முத்தமிழ்களைப்பற்றி உங்களுக்கு சொல்லவேண்டுமா என்ன?

    மன்றத்தை வழிநடத்திச்செல்லும் சீரிய பணியில் உள்ள இவர்களுடன் இந்த எளியவனையும் நம்பிக்கையுடன் இணைத்துக்கொண்டமைக்கு நன்றி. உங்கள் நம்பிக்கைக்கு களங்கம் ஏற்படாதவாறு இட்ட பணியை, நிர்வாகிகள், ஆலோசகர்கள்,மூத்த பொறுப்பாளர்கள், உறவுகள் போன்றோர் உதவியுடன் செவ்வனே செய்ய முயற்சிக்கின்றேன்.

    எனது தோள்களே...!

    ஊர் கூடி இழுத்தால்தான் தேர் நகரும். மன்றமெனும் தேர் இணைய வீதியில் பவனிவர அனைவரும் ஒன்றிணைந்து வடம் பிடிப்போம். நிர்வாக நண்பர்களின் நடவடிக்கைகள் சில, தேரினை சரியான பாதையில் செலுத்த அப்பப்போ போடும் கட்டைகள் போல் அமைந்து, வடம்பிடிக்கும் உங்களை வேதனைப்படுத்தலாம். அவ்வேதனைகள் எல்லாம் நம் மன்றம் நிகழ்த்திக்கொண்டிருக்கும் நிகழ்த்தப்போகும் சாதனைகளுக்கான பசளைகளாக நினைத்து ஒத்துழைப்பை நல்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.


    நான் இணைந்து பணியாற்ற இருக்கும் சக நிர்வாக உறவுகளுக்கும் மற்றைய மன்ற உறவுகளுக்கும் அவர்தம் பணியில் சிறப்பாக செயல்பட வாழ்த்தி, வாழ்த்தும் உள்ளங்களுக்கு நன்றி நவின்று புதிய நிர்வாகக்குழுவுக்கு உங்கள் ஆதரவை வேண்டுகின்றேன்..
    நம்பிக்கையுடன்
    Last edited by அமரன்; 15-08-2007 at 09:36 AM.

  2. #26
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2005
    Location
    TAMILNADU
    Posts
    402
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    1
    Uploads
    0
    அனைவருக்கும் வாழ்த்துக்கள். புதிய தலைவர் அறிஞர் வழியில் நடப்பேன் என உறுதி அளிக்கிறேன்.

  3. #27
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by அமரன் View Post
    நான் இணைந்து பணியாற்ற இருக்கும் சக நிர்வாக உறவுகளுக்கும் மற்றைய மன்ற உறவுகளுக்கும் அவர்தம் பணியில் சிறப்பாக செயல்பட வாழ்த்தி, வாழ்த்தும் உள்ளங்களுக்கு நன்றி நவின்று புதிய நிர்வாகக்குழுவுக்கு உங்கள் ஆதரவை வேண்டுகின்றேன்..
    நம்பிக்கையுடன்
    உங்கள் புதிய பொறுப்புக்கு வாழ்த்துக்கள் அமரன். குறைந்த சமயத்தில் மிகவும் உயரிய பதவியை பெற்றுள்ளீர்கள். அதற்கு உங்களுடைய அன்பும் இடைவிடாது பங்களிப்புகளும் நடுநிலையும் காரணம்.

    கடினமான பணி. அதை நீங்கள் செவ்வனே செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by leomohan View Post
    புதிய நிர்வாக குழுவிற்கு வாழ்த்துக்கள்.

    எந்த ஒரு பக்கமும் சாயாமல், நடுநிலையுடன், ஒரு மதம் புண்பட்டால் பரவாயில்லை இன்னொரு மதம் புண்படக்கூடாது போன்ற நிலையெடுக்காமல், பகுத்தறிவு போர்வையின் கீழ் மெய்யான ஆன்மீக உணர்வுகளை யாரையும் காயப்படுத்தவிடாமல், கருத்துள்ள கண்ணியமான திரிகளை ஊக்குவித்து, தனிமனித தாக்குதல்களை நேரிடியாகவோ மறைமுகமாகவோ ஊக்குவிக்காமல் அரும்பணியாற்றும் என்று நம்புகிறேன்.
    கவலைப்படாதீர்கள்..! நீங்கள் குறிப்பிட்ட கவலைகள் தொடர்பாக உங்களை விட அதிக அக்கறை எடுத்து, இந்த மன்றத்தின் மாண்பை கட்டிக்காப்பதில் மன்ற பொறுப்பாளர்கள் என்றும் தவறமாட்டார்கள்.

    எல்லை தாண்டும் திரிகள் உடனுக்குடன் பூட்டப்பட்டு, அவை குப்பைக்கு அனுப்பப்படுவதை கண்டும் உங்களுக்கு ஏன் இந்த சந்தேகம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. பொறுப்பாளர்கள் தங்கள் கடமையை நம் மன்றத்தில் நடுநிலையுடன் செய்ததற்கு சிறந்த உதாரணங்கள் தான் பூட்டப்பட்ட, குப்பைக்கு போன வீண் திரிகள்..!
    அன்புடன்,
    இதயம்

  5. #29
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    புதிய நிர்வாகக்குழுவிற்கு என் நல்வாழ்த்துக்கள்.நிர்வாகி இராசகுமாரன் அவர்களின் சேவை மகத்தானது.உங்கள் ஆலோசனையின் கீழ் புதிய நிர்வாகம் செவ்வனே தம்பணியை தொடரும் என்பதில் ஐயமே இல்லை.அதே போல் எங்கள் சேவையும் மன்றத்திற்கு என்றென்றும் இருக்கும்.நன்றி
    இணையத்தில் ஒரு தோழன்

  6. #30
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by இதயம் View Post
    பொறுப்பாளர்கள் தங்கள் கடமையை நம் மன்றத்தில் நடுநிலையுடன் செய்ததற்கு சிறந்த உதாரணங்கள் தான் பூட்டப்பட்ட, குப்பைக்கு போன வீண் திரிகள்..!
    எவர் ஒருவரின் திரி 10 தடவைக்கு மேல் பூட்டப்படுகிறதோ, இல்லை குப்பைக்கு அனுப்பப்படுகிறதோ, அவர் தமிழ்மன்றத்திற்கு எதிரானவர் அல்லது தமிழ்மன்றத்தின் விதிமுறைகளை பின்பற்ற இயலாதவர் என்று அவரின் கணக்கை ஒரேதடியாக முடக்க வேண்டும்.. புதிய நிர்வாக குழு இதை பற்றி சிந்தித்து செயல்படுவார்கள் என நம்புவோம்.

  7. #31
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by மன்மதன் View Post
    எவர் ஒருவரின் திரி 10 தடவைக்கு மேல் பூட்டப்படுகிறதோ, இல்லை குப்பைக்கு அனுப்பப்படுகிறதோ, அவர் தமிழ்மன்றத்திற்கு எதிரானவர் அல்லது தமிழ்மன்றத்தின் விதிமுறைகளை பின்பற்ற இயலாதவர் என்று அவரின் கணக்கை ஒரேதடியாக முடக்க வேண்டும்.. புதிய நிர்வாக குழு இதை பற்றி சிந்தித்து செயல்படுவார்கள் என நம்புவோம்.
    நல்ல யோசனை மன்மதன். ஆனால் இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று என்னவென்றால் திரி துவங்குபவரை விட அந்த திரியில் புகுந்த அதை திசை மாற்றி அதனை மூட முயல்பவர்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

    பெரும்பாலான நேரத்தில் திரி சரியான திசைகளில் செல்லும் போது சில விஷமிகள் அதை பூட்ட முயல எல்லா முயற்சிகளையும் எடுக்கின்றனர். சிலர் ஒருசிலரை குறிப்பிட்டும் இந்த தாக்குதல்களை செய்கின்றனர். இதையும் நிர்வாகம் கண்டுக்கொள்ள வேண்டும்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  8. #32
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    இந்த அறிவித்தல்த் திரியும் தற்போது தன் பாதையை தவறவிடுகிறதோ என்றொரு குழப்பம் இருக்கிறது தோழர்களே. ஆகையால் இத்தோடு திரிமூடும் சமாச்சாரத்தை விடுத்து திரியின் பாதையில் செல்வோமா...

  9. #33
    இளம் புயல் பண்பட்டவர் வெண்தாமரை's Avatar
    Join Date
    27 Jul 2007
    Location
    mukkadal sangamikkum
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    8,965
    Downloads
    34
    Uploads
    0
    அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.. மனறம்
    மேலும் மேலும் வளர வாழத்துக்கள்..

  10. #34
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by மன்மதன் View Post
    எவர் ஒருவரின் திரி 10 தடவைக்கு மேல் பூட்டப்படுகிறதோ, இல்லை குப்பைக்கு அனுப்பப்படுகிறதோ, அவர் தமிழ்மன்றத்திற்கு எதிரானவர் அல்லது தமிழ்மன்றத்தின் விதிமுறைகளை பின்பற்ற இயலாதவர் என்று அவரின் கணக்கை ஒரேதடியாக முடக்க வேண்டும்.. புதிய நிர்வாக குழு இதை பற்றி சிந்தித்து செயல்படுவார்கள் என நம்புவோம்.
    ஒரு திரி பூட்டப்படுவது பற்றி மன்றத்தவர் முதலில் கவனம் கொள்ளும் விஷயம் "அந்த திரியின் நோக்கம்". அப்படி அந்த திரியின் நோக்கம் நல்லதாக இருந்தால் அதை திசை திருப்ப விரும்புபவர்கள் எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள், பிறகு அவர்களின் விஷமத்தனமான பதிவு அந்த திரியிலிருந்து நீக்கப்படுகிறது. ஆனால், அந்த திரியே விஷமத்தனமாக இருக்கும் பட்சத்தில் அந்த திரிக்கே திண்டுக்கல் பூட்டுப்போடப்படுவதை தவிர வேறு வழியில்லை. அதைத்தான் பொறுப்பாளர்கள் மிகவும் அருமையாக செய்து வருகிறார்கள். இந்த பணி மிகவும் பாராட்டத்தக்கது. மிக, மிக நடுநிலைத்தன்மையுடையது. ஒரு திரி பூட்டப்பட வேண்டும் என்று யார் வேண்டுமானாலும் கேட்கலாம். அது அவர்களின் உரிமை. ஆனால், அது பூட்டப்படுவது என்பது நிர்வாகிகளின் பகுத்தாய்விலேயே இருக்கிறது. இந்த விஷயத்தில் யாருடைய அறிவுரையும் நிர்வாகிகளுக்கு அவசியப்படுவதில்லை. காரணம், நம்மைவிட அவர்கள் மிகச்சரியாக ஒரு திரியின் நோக்கத்தை அடையாளம் கொண்டு விடுகிறார்கள். அதற்கான நடவடிக்கையையும் உடனடியாக எடுத்துவிடுகிறார்கள்.

    மன்மதன் குறிப்பிட்ட யோசனை மிகச்சிறப்பானது என்றாலும் அதனால் சிலருக்கு பாதகம் ஏற்படும் வாய்ப்புள்ளது. அப்படி அவர் கூறுவது போல் விஷம பதிவின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவரை மன்றத்திலிருந்து நீக்க வேண்டுமென்றால் அப்படிப்பட்ட திரிசங்கு சொர்க்க நிலையில் இங்கு சிலர் உண்டு. இந்த யோசனையை நானும் நிர்வாகிகளுக்கு பரிந்துரைக்கிறேன். நன்மை, தீமையை ஆராய்ந்து அவர்கள் எடுக்கும் நல்ல முடிவுகளை நான் நிச்சயம் வரவேற்பேன்..!


    Quote Originally Posted by விராடன் View Post
    இந்த அறிவித்தல்த் திரியும் தற்போது தன் பாதையை தவறவிடுகிறதோ என்றொரு குழப்பம் இருக்கிறது தோழர்களே. ஆகையால் இத்தோடு திரிமூடும் சமாச்சாரத்தை விடுத்து திரியின் பாதையில் செல்வோமா...
    புதிய தலைமை பதவியேற்பது பற்றிய இந்த திரியில் இது போன்ற ஆலோசனைகள் அவசியமற்றது தான். ஆனால், கொடுக்கப்பட்ட முரண்பாடான கருத்திற்கு பதிலிடுவது அவசியம். இல்லையென்றால் அந்த கருத்து உண்மையாகிவிடும் அபாயம் இருக்கிறது. போதும் என நினைக்கிறேன். இதோடு நிறுத்திக்கொண்டு திரி தொடர்பானவற்றை பதிப்போம்.
    அன்புடன்,
    இதயம்

  11. #35
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    புது விதிகளைப் பற்றி புது நிர்வாகம் நிச்சயமாகக் கவனத்திற் கொள்ளும் நண்பர்களே,

    அத்துடன் உங்கள் அனைவரதும் கருத்துக்களுக்கும் நன்றிகள்......
    இத்துடன் இந்த திரி அதன் போக்கில் பயணிக்கட்டுமே......
    Last edited by ஓவியன்; 15-08-2007 at 10:36 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #36
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஒரு கோலாகலமான விழா நடக்கும்போது...சொல்லாமலேயே சில நல்ல உள்ளங்கள் சுறு சுறுப்பாய் அங்குமிங்கும் ஓடிதிரிந்து,எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு...எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்நோக்காமல்..சேவை ஒன்றையே பிரதானமாகக்கொண்டு செயல்படுவார்கள். அப்படிப்பட்ட நல்ல இதயங்களை அடையாளம் கண்டு,அதே மேடையில் அத்துனை பேர் மத்தியிலும்,அவர்கள் கௌரவரப்படுத்தப்படுவதைப் போல இன்று பொறுப்பாளர்களாகவும்,நிர்வாகிகளாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மன்றத்தின் மான்புக்கு இது ஒரு சான்று. பொறுப்பளிக்கப்பட்ட பென்ஸ்,ஆதவா,அமரன்,அக்னி,அன்புரசிகன் மற்றும் ஓவியன் அனைவரையும் மனநிறைவோடு வாழ்த்துகிறேன்.மான்புமிக்க இந்த மாமன்றத்தை செவ்வனே நடாத்தி செல்வார்களென்ற பரிபூரண நம்பிக்கை உள்ளது.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 3 of 8 FirstFirst 1 2 3 4 5 6 7 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •