Page 2 of 9 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast
Results 13 to 24 of 97

Thread: ரிதுவேந்தர் - புதிய தொடர்கதை

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    6

    ரிதுபவனின் மூன்று மைல்கல் தொலைவில் இருந்த அந்த கிராமத்தின் தபால் நிலையத்தை சென்று அடைந்தனர் கோபால்-ராணி தம்பதியர்.

    வழியில் துளுவில் பேசிக் கொள்ள முயன்றனர். அடிக்கடி ஒருவர் சொன்னதை இன்னொருவர் புரிந்துக் கொள்ளாததால் தமிழ் படுத்தி பேச வேண்டியிருந்தது.

    எடுத்துக் கொண்ட காரியம் கடினம் என்பதைவிட இந்த மொழி பிரச்சனை அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது.

    ஆசனவாயில் கல்வைத்து எடுக்க முயன்ற அவன் பின்புறம் ரணமாகியிருந்தது. உட்கார முடியாமல் தவித்தான்.

    வருவதற்கு முன்பு ஒரு சர்ஜரி வேறு. இரண்டு பேருடைய இடது மணிக்கட்டில் ஒரு சிறிய ஜிபிஸ் சிப் வைத்து தைத்தனர்.

    இது நீங்கள் எங்கே போகறீங்கன்னு சாட்டிலைட்டில் நாங்க கண்டுபிடிக்கறதுக்கு. இது மெடல் டிடெக்டரில் கண்டுபிடிக்க முடியாது.

    சார் இந்த ஆபேரேஷனோட தழும்பு இருக்குமா என்று கேட்டாள் ஜெயா.

    இருக்காது. கவலை படாதீங்க. உங்க கல்யாணத்துக்கு முன்னாடி வேண்டுமானாலும் ஒரு காஸ்மெடிக் சர்ஜரி பண்ணிடலாம்.

    மொரிஷியஸில் கடைசியாக நடந்த உரையாடல்கள் அவர்களுடைய மனதில் வந்து சென்றன.

    மிகவும் எளிமையான துணிமணிகளாக பார்த்து சரவணா ஸ்டோர்ஸில் வாங்கியிருந்தார்கள். கால்களில் ஹவாய் செருப்புகள். மொரிஷியஸில் இன்னொரு பயிற்சி உடல் கறுப்பதற்கு. தினமும் வெயிலில் பல மணி நேரம் ஒரு மருந்து தடவிக் கொண்டு படுத்திருக்க வேண்டும். ரமேஷூம், ஜெயாவும் நிறைய கருத்திருந்தனர். ரமேஷ் தபால்காரனின் உடைகள் தைத்துக் கொண்டான்.

    நேராக தபால் நிலையத்திற்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டான் கோபால். பிறகு போஸ்மாஸ்டரிடம் இங்கே ஏதாவது வீடு கிடைக்குமா என்று கேட்டான்.

    கவலைப்படாதீங்க கோபால் நம்ம க்ளாஸ்போர் ஜெயபால் எல்லா ஏற்பாடும் செய்வார் என்றார்.

    இவருக்கு மிஷன் பற்றி தெரியுமா இல்லை இவரை பொருத்த வரையில் தான் நிஜமான தபால்காரனா என்று தெரியவில்லை. பாஸிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

    அந்த சந்தடி மிக்க சிறிய ஊரின் முக்கிய வீதியில் பல வீடுகளை காட்டினான் ஜெயபால். அதில் தேனீர் கடையின் அருகில் இருந்த அதிக சந்தடி மிக்க அந்த வீட்டை தேர்ந்தெடுத்தனர் தம்பதியர்.

    1000 ரூபாய் அட்வான்ஸ் 200 வாடகை என்று சுருக்க பேசினார் அந்த வீட்டின் உரிமையாளர். புதியவர்கள் வருவதை அந்த ஊரில் யாரும் விரும்பவில்லை என்பது மட்டும் அவர்களுடைய சுருக்கமான பேச்சுகளால் இருவருக்கும் புரிந்தது. ஆனால் அனைவரும் பரிவாக இருந்தார்கள்.

    ஜெயபால் சென்றதும் இருவரும் கடைத் தெருவிற்கு சென்று அலுமினிய பாத்திரங்கள் மற்றும் சமையல் அடுப்பு இதர வீட்டு சாமான்களை வாங்கி வந்து வீட்டை அமைத்துவிட்டு, கொண்டு வந்த நவீன மின்-அணு கருவிகளை வீட்டில் அங்கங்கு பதுக்கி வைத்தனர்.

    பிறகு அருகிலிருந்து சிறிய உணவகத்தில் உண்டுவிட்டு பேசாமல் உறங்கச் சென்றனர்.

    மறுநாள் காலையில் ராணி ஒரு நல்ல நடுத்தர குடும்ப மனைவியை போல காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு சாணி தெளித்து காலை சிற்றுண்டியை செய்தாள்.

    கோபாலும் நடுத்தர குடும்பத்து உழைப்பாளி போல குளித்து முடித்து சாப்பிட்டுவிட்டு நேராக தபால் நிலையம் சென்றான்.

    கோபால், இன்னிக்கு உங்களுக்கு சிதம்பரம் துணையா வருவார். ரிதுபவன் இருக்கறதால இங்க நிறைய தபால்கள் வர ஆரம்பிச்சிடுச்சு, அதனால் இரண்டு தபால்காரங்க வேண்டும்னு கேட்டிருந்தோம். அதனால பீட் பார்த்து இரண்டு பேரும் வேலை செய்யனும்.

    சைக்கிள் இருக்கா

    இல்லை சார். இப்பதான் வந்திருக்கேன். அடுத்த மாசம் சம்பளம் கிடைச்சதும் வாங்கிடறேன்.

    பரவாயில்லை. போஸ்டாபீஸ்ல ஸ்பேர் வண்டி இருக்கு.

    சரி சார்.

    ரிதுபவனுக்கு தபால் போட போகும்போது ஜாக்கிரதையா இருக்கனும். அதிகம் பேசக்கூடாது. தபால் வெளியில் இருக்கற பெட்டியில் போட்டுட்டு வந்திடனும். யாராவது உள்ளே கூப்பிட்டா போயிடாதீங்க. எது கொடுத்தாலும் வாங்கிக்காதீங்க. சில பிரச்சனைகள் இருக்கு இந்த ஊர்ல. அது தான் தமிழ் நாட்டிலேர்ந்து யாரையும் எடுக்காம தமிழ் பேசத் தெரிஞ்ச ஆனா வெளி மாநிலத்து ஆளா உங்களை மங்களூர்லேர்ந்து வரவழைச்சிருக்கோம். போக போக தெரிஞ்சிப்பீங்க என்று பீடிகையுடன் பேசினார்.

    ஆஹா. இவருக்கு நம்மை பத்தி எதுவும் தெரியாது என்று முடிவு செய்துக் கொண்டான்.

    வேலை முடித்து வீட்டுக்கு போகும் முன் தேனீர் கடைக்கு சென்று அண்ணே இங்கே அது கிடைக்குமா என்றான்.

    எது

    அதான்னே பாக்கெட்டு

    பால் பாக்கெட்டா

    இல்லைண்ணே சரக்கு

    சரக்கா

    ஆமா

    அட நீ சாராயக் கடையை கேட்கறீயா. உனக்கு அந்த பழக்கம் எல்லாம் இருக்கா

    ஐயோ போஸ்ட் மாஸ்டர் கிட்டே சொல்லிடாதீங்க. வெறும் ராவுக்கு மட்டும்தான் என்றான் கோபால் நெளிந்தபடியே.

    அட இதுக்கு போயி. இந்த தெருக்கோடியில் வலது பக்கம் ஒரு சந்து இருக்கு. அதுல போனின்னா ஒரு தென்னந்தோப்பு வரும். அதுக்கு நடுவில இருக்கு. 7 மணிக்கு தான் தொறக்கும். இப்பவே போயிடாதே என்றார் அந்த டீக்கடைக்காரர்.

    சரி என்று மண்டையாட்டிவிட்டு அங்கே உட்கார்ந்தான்.

    என்னப்பா வீட்டுக்கு போயேன் என்றார்.

    என்ன வீடு அண்ணே. வீட்டுக்கு போனா ஒரு சண்டை தான்.

    அப்படியா என்னப்பா பிரச்சனை.

    அட போங்கண்ணே. முதல் நாளே சோக கதை சொல்றதுக்கு கஷ்டமா இருக்கு.

    அட சொல்லுப்பா. ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா இருக்கலாம்ல

    அண்ணே, எங்களுக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சு. இன்னும் கொழந்தையே பொறக்கலை. தினம் சாயந்திரமானா அழுவ ஆரம்பிச்சிடும். நானும் சமாதானம் பண்ணுவேன். அப்புறம் சண்டையாயிடும். அது அதோட தங்கச்சிய கட்டிக்கோன்னு சொல்றா அண்ணே. எப்படி முடியும் என்றான் கோபால் அப்பாவியாக.

    சரிதாம்பா நீ சொல்றது. அத்தோட கஷ்டமும் பார்த்தா பாவமா தான் இருக்கு. இந்தா டீ சாப்புடு

    அவர் பரிவாக கொடுத்த டீயை வாங்கி குடித்தான்.

    பிறகு ஏழு மணி ஆனதும் சாராயக் கடையை நோக்கி நடந்தான்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    7

    ரமேஷ், கல்ட் ஆரம்பிக்கறவங்க ஒருத்தரா ஆரம்பிக்கிறாங்களா இல்லை ஒரு குழுவாக ஆரம்பிக்கிறாங்களா.

    இரண்டு வகையும் இருக்காங்க ஜெயா. சில பேர் தன்னிடம் மக்களை கவரும் சக்தி இருக்கறதை தெரிஞ்சிகிட்டு தனியாக தைரியமா இறங்கராங்க. இவங்க மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள். பணமோ, காமமோ இல்லை வேறு பல காரணங்களுக்காக மக்களை ஆக்ரமிக்க ஆரம்பிக்கிறாங்க.

    சிலர் நண்பர்கள் சமுதாயத்தால சந்திக்கும் ஒரு மாதிரியான துன்பங்களால் சமுதாயத்தை எதிர்த்து இது மாதிரி குழுக்கள் ஆரம்பிக்கிறாங்க.

    இந்த குழுக்களை சட்ட விரோதமா அறிவிக்க முடியாதா

    கஷ்டம். சட்டத்திற்கு புறம்பா ஏதாவது நடக்கதுன்னு ஆதாரத்தோட நிரூபிச்சா தான் அது முடியும். இல்லாட்டி மத நம்பிக்கைகளில் குறுக்கிடுது அரசு அப்படின்னு பிரச்சனை வந்துடும். மேலும் கூட்டு பிராத்தனைகள் தப்புன்னு சட்டம் சொல்லலை.

    மக்கள் ஏன் முட்டாள் மாதிரி இவங்க கிட்டே மாட்டிக்கிறாங்க.

    இது பாருங்க ஜெயா எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை. பணம் இருக்கறவங்க கிட்டே மனசு நிம்மதி இருக்கறதில்லை, ஏழைங்க கிட்டே பணம் இருக்கறதில்லை, சிலருக்கு உடம்பில் நோய், சிலருக்கு உறவுகளில் பிரச்சனை, சிலருக்கு சமுதாயத்தின் மேல் வெறுப்பு இப்படி கஷ்டப்படற மனிதர்கள் தான் அதிகம். அப்படி இருக்கும் போது ஆறுதலா யாராவது பேசனாலோ அல்லது ஏதாவது கூட்டு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டாலோ லேசாக உணர்றாங்க மக்கள். அதை இந்த மாதிரி குழுக்கள் நல்லா பயன்படுத்திக்கிறாங்க. இதுல முழுசா மாட்டிக்கிட்டோம் அப்படின்னு அவங்க உணர்வதற்கு முன்னாலே பணம், கற்பு, உடல் உறுப்புகள் இப்படி பலவற்றை இழந்துடறாங்க.

    ச்சோ ச்சோ. இதுக்கு என்ன தீர்வு.

    சமநிலை இல்லாத சமுதாயம் தான் இதுக்கெல்லாம் காரணம் ஜெயா. பணக்காரன் என்னதான் பணக்காரனா ஆனாலும், தங்க தட்டில் சாப்பிட்டாலும் அவனால மூணு ரொட்டிக்கு மேல சாப்பிட முடியாது. தாதாக்களால தொல்லை, அரசியல் கட்சிகள் லஞ்சம், வரி ஏய்ப்பு எப்படி பண்ணனும், மனைவி-குடும்பம் இவர்களுடன் உறவு சரியில்லாம இருக்கறதுன்னு அவனோட பிரச்சனைகள்.

    ஏழைக்கோ பிள்ளைகளை படிக்க வைக்க முடியலை, வீடு கட்ட முடியலை, உடம்பு சரியானா மருத்து வசதி பார்க்க முடியலை இப்படி கஷ்டங்கள்.

    இதற்கு தீர்வு சுலபமானது அல்ல.

    அப்ப வளர்ந்த நாடுகள்ல....

    வளர்ந்த நாடுகள்ல வேறு பிரச்சனைகள். பெரும்பான்மையான பிரச்சனைகள் உடைந்த குடும்பங்களால வருது. தாய் ஒருபக்கம், தந்தை ஒருபக்கம், பிள்ளை இன்னொரு தந்தையை தந்தையாக ஏத்துகிட்டு வளருது. இல்லை தாய் வேறு யாரோடு உறவு வைத்துக் கொள்கிறாள். அவன் இந்த பிள்ளையை கேவலமாக நடத்துகிறான். இப்படி மன அமைதியில்லாம இருக்கறதால அதிகப்படியான கல்ட்டுகள் மேலை நாடுகளில் உருவாகின்றன. மேலும் இந்த மாதிரி கல்ட்டுகளில் கொண்டுவரப்படும் புதுமையான பழக்கங்கள் இவர்களை கவர்கின்றன.

    சட்டத்தாலே மட்டுமே இதை தீர்க்க முடியாதுன்னு தோணுது ரமேஷ்.

    ஆமா ஜெயா. பெரிய அளவுல மக்கள் மனசுல மாத்தம் வரணும். அதுக்கு மக்கள் தனக்கு கிடைச்சதை வைச்சி சந்தோஷமா வாழ கத்துக்கனும். இல்லை தனக்கு கிடைக்க வேண்டியதும் நியாமான வகையில் கிடைக்க வேண்டும் அப்படிங்கற மனப்பக்குவம் வரணும். மத்தவனை மிதிச்சு யாரும் முன்னுக்கு வர முடியாது.

    சரியா சொன்னீங்க ரமேஷ்.

    இவ்வாறாக நேற்று மதியம் சென்னை இரயில் நிலையத்தில் நின்றவாறு அவர்கள் இருவரும் பேசியதை நினைவுப்படுத்திக் கொண்டிருந்தாள் ராணி.

    இரவு சமையலை புத்தகத்தை பார்த்து சமைத்திருந்தாள். கோபால் எங்கே. முதல் நாளே தன் வேலையை ஆரம்பிச்சிட்டானா. நம்ம ரோல் எப்போ.

    குடித்துவிட்டு உள்ளே நுழைந்தான் கோபால். அவனால் பட்டை சாராயத்தை அடிக்க முடியவில்லை. பாதி குடித்துவிட்டு பாதி தன் உடலில் கொட்டிக் கொண்டான். அவன் உள்ளே நுழையும் போது துர்நாற்றம் தாங்க வில்லை.

    உள்ளே வந்ததும் கண்ணடித்தான்.

    அவள் ஜோராக அழ ஆரம்பித்து துளுவில் ஏதேதோ உளறினாள்.

    அவனும் சற்று நேரம் துளுவில் உளறினான். பிறகு ஏண்டி உனக்கு சொன்னா புரியாதா கழுதை கழுதை, செத்து தொலையேன்டி, ஏன் என் உசிரை வாங்கற

    இவ்வாறாக சராசரி நிலை குடும்ப சண்டை ஒரு 10 நிமிடம் நடந்தது. அவள் அழுதுக் கொண்டே வீட்டின் சொந்தகார வீட்டு வாசலில் வந்து அமர்ந்து விசும்பி அழுதாள். உள்ளேயிருந்து எட்டிப் பார்த்த அவர், பேசாமல் கதவை சாற்றிக் கொண்டார்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    8





    மொரிஷியஸில் ஒரு மாலை நேரத்தில் அவனுடைய குறிப்பேட்டில் இருந்ததை படித்துவிட்டு ஜெயா சொன்னாள். நல்ல கம்பேரிசன்.


    தாங்கஸ் ஜெயா. நாம் எப்போதும் அறிவோட மூலத்தை அதாவது source தான் குறை சொல்கிறோம். ஆனால் அறிவின் மூலம் source எதுவாக இருந்தாலும் அதன் பயன்பாடு, அதாவது application தான் சரியாகவோ தவறாகவோ ஆகிறது. அதை யோசித்து தான் இதை தயாரித்தேன்.

    ஆனால் ஒன்னு விட்டுட்டீங்க.

    என்ன

    போலி மதவாதிகள், போலி சாமியார்கள், போலி மருத்துவர்கள், போலி ஜோதிடர்கள், இன்னும் பல போலிகள். வக்கீல்களும், ஏன் பல அரசாங்க அதிகாரிகளும் கூட போலி பட்டம் சான்றிதழ்களை கொண்டுதானே வேலைக்கு சேரராங்க.

    ஆமா ஜெயா. நல்ல பாயிண்ட் சொன்னீங்க. நான் இந்த சார்ட்ல படிச்சவங்களை மட்டுமே எடுத்துக்கிட்டேன். ஆனால் போலிகளை கணக்கில் எடுத்துக்கலை.

    இப்ப இந்த கல்ட் லீடர்கள் எப்படி உருவாகறாங்க.

    சரி இந்த சார்ட்டை வேறுவிதமாக ஆராய்வோம்

    அவளுடைய ஆழந்த சிந்திக்கும் அறிவை கண்டு வியந்தவாறு கவனித்தான். அந்த அருமையான மொரீஷியஸ் மாலை, நல்ல காற்று ஒரு இன்பமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது. பகல் முழுவதும் பட்ட கடினங்கள் அவள் அருகில் இருக்கும் போது லேசாவது போல் உணர்ந்தான் ரமேஷ்.

    யூ ஹாவ் அ சார்ம் என்றான்.

    என்ன சைட் அடிக்கிறீங்களா

    நானா சைட்டா இல்லவே இல்லையே. வேலைக்கு வந்திருக்கோம்மா. அதுவும் பெண்டாட்டியை யாராவது சைட் அடிப்பாங்களா.

    ஹா ஹா என்று சின்னதாக அளவாக சிரித்துவிட்டு தொடர்ந்தாள்.

    நாம பாக்க வேண்டிய இன்னொரு கோணம் போலி மதவாதிகளால் ஏமாற்றப்பட்டு அவர்களை அழிக்கப்புறப்படுபவர்கள். போலி டாக்டர்ஸ், லாயர்ஸ், அரசியல்வாதிகள், பணக்காரர்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள், சமுதாயத்தால் அவமானப்படுத்தப்பட்டவர்கள் இப்படி பல பேர் கல்ட் அமைக்க காரணமாக இருக்கலாம் இல்லையா.

    அதுவும் நல்ல பாயிண்ட் தான். அவர்களை இந்த சார்டில் எப்படி கொண்டுவருவது.

    கொஞ்ச நேரம் வீட்டுக்காரரின் வீட்டிற்கு முன் அழுவது போல் நடித்துக் கொண்டிருந்த ராணிக்கு இந்த பேச்சுகள் நினைவில் வந்து சென்றன. சிறிது நேரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டோம் என்று உறுதி செய்துக் கொண்டு உள்ளே சென்று உறங்கினாள். மக்களுக்கு எந்த சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காக ஒரே அகல பாயில் இரு தலைகாணிகள் வைத்துக் கொண்டு ஆளுக்கு ஒரு புறமாக உறங்கினார்கள். மெத்தை படுக்கை கடமைக்காக சிமெண்டு மெத்தையாக மாறியிருந்தது.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  4. #16
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    மிகவும் வித்தியாசமானதொரு கதை....
    உங்களின் தனித்தன்மையில்...

    இடையிடையே ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையான நெருடல்கள்...

    அருமையாக உள்ளது. நிறைய பொதுவிடையம் அறியலாம் என எண்ணுகிறென்.

    தொடருங்கள்....

    பாராட்டுக்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #17
    இளம் புயல் பண்பட்டவர் gayathri.jagannathan's Avatar
    Join Date
    13 Dec 2006
    Location
    Bangalore
    Posts
    273
    Post Thanks / Like
    iCash Credits
    8,995
    Downloads
    9
    Uploads
    0
    'Cult' பத்தின பல தகவல்களை, தனது "மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்" புத்தகத்தில் சுவையாக/எளிமையாக* தந்துள்ளார் மதன்(கார்ட்டூனிஸ்ட்/சிந்தனையாளர்/பத்திரிக்கையாளர்....)...

    "சிறு வயதில் ஏற்படும் கசப்பான அனுபவங்கள், சக வயதுக் குழந்தைகளின்/தாய்/தந்தை/ யின் புறக்கணிப்பு, என்பன போன்ற காரணங்களால் "கல்ட்" இன் தலைவன்/தலைவி உருவாகின்றனர்.. " என்பது ஆராய்ச்சியில் கண்ட உண்மை என்று எழுதியுள்ளார் மதன்...
    தமிழபிமானி
    ஜெ.காயத்ரி.

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    9

    மறுநாள் வழக்கம் போல பீட்டுக்கு சென்று அனைத்து கடிதங்களையும் பட்வாடா செய்தான். ஆனால் ரிதுபவனுக்கு போக வழி கிடைக்கவில்லை இன்னமும்.

    டீக்கடையில் நட்பான சிரிப்பு கிடைத்தது.

    சாராயக்கடையில் கைதூக்கி வரவேற்பும் கிடைத்து. மறுபடியும் பாதி குடித்து மீத துணிமணிகளில். எப்படித்தான் குடிக்கிறார்கள் இந்த கருமத்தை.

    கடைத்தெருவில் மேலும் சில நட்புகள் ஏற்படுத்த முயன்று தோற்றான்.

    ராணிக்கு மிகவும் போர் அடித்தது. தடாலடியாக வேலைகள் செய்து பழகியவள் இப்போது சிறையில் அடைத்த உணர்வு. போகும் வழி தெரியாமல் தவித்தாள். ஆனாலும் இந்து ரிதுபவன் ஆராய்ச்சி எத்தனை மெதுவாக நடந்தாலும் நல்லது என்று நினைத்தாள்.

    வந்து சில நாட்களில் ஊரை தள்ளிப் போனால் தான் மொபைலில் சிக்னல் கிடைக்கும் என்பதை உணர்ந்தான்.

    மாலையில் வேலை முடிந்ததும் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊரைச் சுற்றி சென்று அளவெடுத்தான்.

    நடுத்தர மற்றும் ஏழைகள் இருக்கும் இடம். வெளிநாட்டவர் ரிதுபவனுக்கு செல்லும் வழியில் நின்று தண்ணீர் பாட்டில் குளிர்பானம் குடிக்க நிறுத்துவதோடு சரி.

    ஆனாலும் பெரிய மனிதர்கள் வந்து சென்றவண்ணம் இருப்பதை கண்டான். அவர்களுடைய கார்களின் எண்கள், மற்றும் கண்ணில் தெரியும் புதியவர்களை விரைவாக குறித்து, படங்கள் வரைந்து மாலையில் செல்லும் தபால் மூட்டையில் ஒளித்து வைக்க இவன் பெயர் சம்பந்தமில்லாமல் கடிதம் வரும். அதில் அவனுடைய மேலதிகாரிக்கு அவன் அனுப்பியவைகளுக்கு சங்கேத மொழியில் ஆனால் சரளமாக தோன்றும் மொழியில் பதிலும் வந்தது. சரி வேலை நடக்கிறது என்று ஆறுதல் அடைந்தான்.

    அவன் எதிர்பார்த்த நாளும் வந்தது. சக தபால்காரர் அன்று வராததால் ரிதுபவன் பீட்டும் அவனிடம் வந்தது. மூன்று மைல் சைக்கிளில் மிதித்து அந்த வெயிலில் சற்று களைப்புடனே சென்று அடைந்தான்.

    அந்த ரிதுபவனுக்கு வெளியில் பெரிய காம்பௌண்ட் சுவர் இருந்தது. வெளியில் தபால்கள் என்று போட்டு ஒரு பெரிய சிவப்பு பெட்டி இருந்தது. கண்ணுக்கு பட்டெதல்லாம் விநோதமாக இருந்தது.

    முதலில் தூரத்தில் உள்ளே கண்ணுக்கு பட்ட மனிதர் அவனுக்கு அதிர்ச்சியை தந்தது. முற்றிலும் கண் புருவத்தை மழித்திருந்தான் அவன். இவனை கண்காணிப்பது போல் தோன்றியது. அதிக நேரம் செலவிடாமல் தபால்களை அங்கு போட்டுவிட்டு திரும்பினான். அதற்கு முன் பென் ஸ்கானர் மூலம் அவற்றை ஸ்கான் செய்து வைத்துக் கொண்டான். திறந்ததை தெரியாமல் கடிதங்களை திறக்கும் வகையும் சொல்லிக் கொடுத்திருந்தாள் ரீனா.

    சிக்னல் கிடைக்கும் போது எம்எம்எஸ் அனுப்பினான் தலைமையகத்திற்கு.

    வீட்டிற்கு வந்து மீண்டும் சண்டை நாடகம். இந்த முறை ராணி நேரடியாக டீக்கடைக்கு சென்று அழுதாள். 15 நிமிடங்கள் குறுக்கிடாத அந்த கடைக்காரர்

    என்னம்மா ஏன் அழுவறே

    பாருங்கண்ணே என்று உரிமையாடு ஆரம்பித்தாள் ராணி. பாருங்கண்ணே எனக்கு குழந்தையே பொறக்கமாட்டேங்குது. என் தங்கச்சியை கட்டிக்கோன்னா கேட்கமாட்டேங்குது என் வூட்டுக்காரன்.

    சே. நீயே உன் வாழ்கையை இப்படி நாசாமாக்கிப்பியா

    அதுல்லைண்ணே. அது தினமும் குடிக்குது. குழந்தை பொறக்கலைன்னு அதுக்கு துக்கம் தான். என் மேல உசிரையே வைச்சிருக்கு. அதனால ரெண்டாங்கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குது. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை.

    ஏம்மா ஏதாவது வைத்தியர்கிட்டே காண்பிக்க வேண்டியது தானே.

    மங்களூர்ல நிறைய பார்த்தாச்சு ஒன்னும் சரியாகலை.

    கவலை படாதேம்மா. இந்த ஊரல் ரிதுவேந்தர்னு ஒரு பெரிய மகான் இருக்காரு. ஒரு தடவை அவரை வந்து பாரு எல்லாம் சரியாகிடும்.

    ஓ நீதான் அவனோட ஏஜென்டா என்று நினைத்துக் கொண்டு விடாமல் அழுதாள்.

    நெசம்மாவா.

    அட நெசம்மாதாம்மா. நீ கூட பாத்திருப்பியே. இதே தெருவ தாண்டி தான் எல்லா ஊர்லேர்ந்து பெரிய பெரிய மனுஷங்க மகானை பார்க்க வந்துட்டு போறாங்க.

    அப்படியா அண்ணே. என்னையும் அழைச்சிகிட்டு போங்க. ரொம்ப புண்ணியமா போகும்.

    சரிம்மா. நாளைக்கு ராத்திரி 11.30 மணிக்கு போகலாம்.

    ஐயோ ராத்திரியிலா. அது திட்டுமே.

    பேசாம உம் புருஷனை அழைச்சிகிட்டு வா. கோவிலுக்கு அழைச்சிகிட்டு போறேன்னு சொல்லு.

    ராவுக்கா

    ஆம் ராத்திரி பூஜை நடக்கும் போது போனா தான் விசேஷம்.

    சரி அண்ணை. என்று நன்றாக மூக்கை சிந்தி கீழே போட்டுவிட்டு நடிகையர் திலகமாய் அவள் வீட்டினுள் நுழைந்தாள்.

    அவன் கை கொடுத்து வெல் டன் என்று வாழ்த்தினான்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    10

    இன்று பிரவேசம் என்று சங்கேத மொழியில் ஒரு குறுந்தகவல் அனுப்பிவிட்டு செல்போனை அனைத்து மறைவிடத்தில் வைத்தான்.

    இரவு சாப்பாடு சற்று மிகுதியாகவே சாப்பிட்டு வைத்தனர் இருவரும். அடுத்த சாப்பாடு எப்போது கிடைக்கும் என்ற குழப்பத்தில்.

    11.30 மணிக்கு கிராமமே இரண்டாம் ஆட்டம் காண செல்வது போல் பலரும் நடந்தும் சைக்கிளிலும் கூட்டமாக ரிதுபவனை நோக்கிச் சென்றார்கள்.

    எங்குமே மின்சாரம் இல்லை. சில தீப்பந்தங்கள் மட்டும் எரிந்துக் கொண்டிருந்தன.

    காம்பௌண்டில் நுழைவதற்கு முன்பே அனைவரும் சைக்கிளை கைவிட்டனர். பிறகு உள்ளே நுழையும் 100 அடிக்கு முன் அனைவருடை கையில் பச்சை நிறத்தில் ஒரு பட்டை கட்டப்பட்டது. அதில் எண்கள் இருந்தன. நூறடி தாண்டி பெரிய கதவில் நுழையும் போது அனைவருக்கும் ஒரு சிறிய பாலதீன் பை கொடுக்கப்பட்டது. முன்னால் இருந்தவர்கள் செய்வது போல் அதில் எச்சிலை துப்பி அங்கு நீல நிற உடைகளில் இருந்த ரிதுவேந்தர்கள் என்று அழைக்கப்பட்ட உதவியாளருக்கு கொடுக்க அவர்கள் அந்த கவரில் கொடுத்தவருடைய பட்டையில் இருக்கும் எண்ணை எழுதி உள்ளே வைத்துக் கொண்டார்கள்.

    இதுவெல்லாமே விந்தையாக இருந்தது இருவருக்கும். வெளிச்சமில்லாததால் யாருடைய முகமும் சரியாக தெரியவில்லை. வெளியில் கும்மிருட்டு.

    ராணிக்கு சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்த கதவில் நுழையும் முன் அவர்களுக்கு முன்னால் இருந்தவர்கள் அனைவரும் முழுக்க ஆடைகளை அகற்றி ஒரு பையில் வைத்து உதவியாளர்களிடம் கொடுத்துவிட்டு முற்றிலும் நிர்வாணமாக உள்ளே நுழைந்தார்கள்.

    ராணி சட்டென்று கோபாலை பார்த்து கண்களால், என்ன நடக்குது, நான் துணியை அவிழ்க்கமாட்டேன் என்று சாடை காட்டினாள்.

    கோபால் கண்களால் அவளை அமைதிபடுத்தினான்.

    சங்கடமாக துணிகளை அவிழ்த்துவிட்டு பையில் போட்டுவிட்டு உள்ளே நுழைந்தனர். ஜெயாவுக்கு மிகவும் கோபமாக இருந்தது. இந்த மிஷனில் இந்த பிரச்சனை இருக்கிறது என்று பாஸூக்கு தெரியும். இருந்தும் ஏன் நம்மிடம் சொல்லவில்லை. தெரிந்திருந்தால் இங்கு வந்திருக்க மாட்டேனே என்று நினைத்துக் கொண்டாள்.

    உள்ளே ஒரு பிரம்மாண்டமான அறையிருந்தது. வெளியில் இருந்ததை விட நிறைய தீப்பந்தங்கள் இருந்தன. சற்று வெளிச்சமாக இருந்தது. முடிந்த அளவு அவனருகில் இருக்க முயன்றாள். அவளுக்கு தெரியாதவர்கள் தன்னை பார்ப்பதை விட கோபால் பார்த்துவிடுவானோ என்று சங்கடம் அதிகமாக இருந்தது. கோபாலும் அவள் கண்களை மட்டுமே பார்த்து சாடைகள் செய்து முடிந்த அளவிற்கு அவளை அமைதியாக வைக்க முயன்றுக் கொண்டிருந்தான்.

    அங்கிருந்த உதவியாளர்கள் கிராமத்து உடலமைப்புகைளை விட இவள் செழிப்பாக இருந்ததை கண்டிருந்தார்கள். கண்களால் அவளை அளந்துக் கொண்டிருக்க முடிந்த அளவிற்கு அவள் சக பெண்களுக்கு பின்னால் மறைந்துக் கொண்டிருந்தாள்.

    எதிரே மிகப்பெரிய மேடை தென்பட்டது. சிவப்பு நீல நிறங்களில் மிகப்பெரியதாக ஏதோ கிறுக்கப்பட்டிருந்தது. தாங்கமுடியாத ஒரு நெடி அங்கிருந்தது. இருவரும் பயிற்சியின் போது சந்திக்காத புதிய கடினங்களை சந்தித்துக் கொண்டிருந்தனர்.

    இன்னும் போகப்போக என்ன வரும் என்ற பயம் ராணிக்கு ஏற்கனவே ஏற்படத் தொடங்கியிருந்தது. இந்த மிஷின் சாதாரணமானவர்களுக்கு அல்ல. உன்னைப் போன்ற திறமைசாலிகளுக்கும் தைரியசாலிகளுக்கு மட்டும் தான். நீ அப்பாவி மக்களை காப்பாற்ற வந்திருக்கிறாய். உன் உயிரை கொடுத்தாவது இதை செய்ய வேண்டும் என்று தன்னிடமே சொல்லிக் கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  8. #20
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இப்படியெல்லாம் நடக்கிறதா?

    என்ன கொடுமைசார்...

    தொடருங்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #21
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    11

    அடுத்த நிகழ்ந்த நிகழ்வுகள் மிகவும் பயங்கரமானவை.

    நிர்வாணமாக உள்ளே நுழைந்தவர்களுக்கு ஒரு சிறிய கண்ணாடி கோப்பைகளில் ஒரு விதமான திரவம் வழங்கப்பட்டது. கோபால் மூக்கினுள் இருந்த காலியான மருந்து குப்பிகளை கீழை குனிவது போல் குனிந்து சட்டென்று அந்த திரவத்தை அதில் நிரப்பிக் கொண்டான். சோதனை கூடத்திற்கு இதை அனுப்பி இதில் என்ன கண்றாவி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

    சிறிது மட்டும் அதிலிருந்து அருந்திவிட்டு, சே சாராயத்தைவிட மோசமாக இருக்கும் போலிருக்கே என்று எண்ணியவாறு மீதமிருந்ததை மெதுவாக யாரும் பார்க்காத வண்ணம் கீழே கொட்டினான்.

    அனைவரும் வந்து முடித்தவுடன் பெரிய கதவு மூடப்பட்டது. ஒவ்வொருவரும் அமர ஒரு மர பலகை போடப்பட்டிருந்தது. மனிதரின் வேர்வை மற்றும் ஆணின் உயிர்திரவங்கள், சாராயம், மருந்து, தீ பந்ததினால் வரும் புகை போன்று பலவும் கலந்த துர்நாற்றங்கள் ராணியை படாதபாடு படுத்திக் கொண்டிருந்தன. இதோ இப்போது வரும் வாந்தி என்று பயம் காட்டிக் கொண்டிருந்தது அவளுக்கு.

    ரிதுவேந்தா, ரிதுவேந்தா என்று மக்கள் திடீரென்று ஓலமிட்டனர். எதிரே இருந்த மேடையின் பெரிய கறுப்பு திரை மெதுவாக விலக, ஓலம் அதிகரித்தது.

    உள்ளே இருந்து ஒரு உருவம் காற்றில் மிதந்தபடியே முன்னால் வந்து மேடையின் விளிம்பில் வந்து நின்றது.

    சீப் டிரிக் என்று மனதில் நினைத்துக் கொண்டான். அவனுடைய கண்களில் இருந்த நைட் விஷன் கான்டாக்ட் லென்ஸ் மூலம் ரிதுவேந்தர் வந்தது ஒரு கறுப்பு நிற கன்வேயர் பெல்டில் என்று நன்றாக தெரிந்தது. அது மட்டுமல்லாமல் அவன் பின்னால் தோன்றிய ஆரோ மாத்திரம் மலிவான ஓளி விளையாட்டு. ஆனால் திடமான திரவம் மூலம் மூளை மந்தமாகி போன மந்திகள் அந்த சித்துவேலையை பார்த்து மகிழந்துக் கொண்டிருந்தனர்.

    இரண்டு நீல நிற ஆடை அணிந்த கண் புருவம் மழிக்கப்பட்டு ரிதுவேந்தர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் அந்த கைகூலிகள் மேடையின் மேல் ஏறி எல்லோரும் பிம்ப தரிசனதுக்கு வாங்க என்று கூக்குரலிட்டனர்.

    மக்கள் வரிசையாக நின்று ஒரு கண்ணாடி மூலம் இரண்டு கைகளையும் தலையின் இரண்டு பக்கங்களில் சிறிய மேசையில் வைத்துக் கொண்டு ரிதுவேந்தரை தரிசனம் செய்துவிட்டு அவரவர்களுடைய பலகைகளில் வந்து அமர்ந்த வண்ணம் இருந்தனர்.

    ராணிக்கு அது ஐரிஸ் ஸ்கானர் எனும் கண்களின் அமைப்பை படம் எடுக்கும் கருவி என்பதையும் கை வைக்கும் இடம் கைரேகைளை பதிக்கும் கருவி என்றும் உடனடியாக அறிந்தாள். இது ரிதுவேந்தரின் விசுவாசிகளின் டேட்டாபேஸ் செய்ய என்பதையும் உணர்ந்தாள். வாயில் நாக்கின் கீழ் மறைத்து வைத்திருந்த பப்பிள் கம்மை எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு, கண்ணாடி பெட்டிக்குள் முகத்தை விடும் முன் கூந்தலால் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

    பிறகு ஒரு பெரிய தங்கத்தட்டு எடுத்துக் கொண்டு ஒவ்வொருவரிடமும் வந்தனர். ஒவ்வொருவரும் அந்த தட்டில் கை வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கும் போது சிறிய கண்ணாடி குடுவை ஒன்றை தனித்தனியாக வைத்த வண்ணம் வந்தான் ஒரு கைக்கூலி.

    ரமேஷ் அந்த தட்டில் கைவைத்ததும் சுரீரென்று கையில் ஒரு ஊசி துளைத்தது போல் இருந்தது. ஜெயா அங்கிருந்து உதட்டை அசைத்து ப்ளட் டெஸ்ட் என்றாள்.

    இந்த நாடகங்களை பார்க்க மிகவும் வெறுப்பாக இருந்தது இருவருக்கும். படுபாவிகள் விஞ்ஞான மருத்துவ மேம்பாடுகளை பயன்படுத்தி ஒரு இனத்தையே அழிக்க பார்க்கிறார்களே என்று நினைத்துக் கொண்டனர்.

    பிறகு ஒவ்வொருவரும் சென்று ரிதுவேந்தரின் கால் கட்டை விரலை முத்தமிட்டு சென்று அமர்ந்தனர். அவனும் காலை நீட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான். சே இவன் காலுக்கு முத்தமிடுவதா என்று எரிச்சல் அடைந்தாள் ராணி.

    நேராக அவனிடம் சென்று பட்டும் படாமலும் முத்தமிட்டு திரும்பினாள். ஆனால் ரிதுவேந்தரின் கண்களுக்கு அவள் பட்டுவிட்டாள்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  10. #22
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    மிகவும் அட்வான்ஸான பாதகர்களாக இருக்கிறார்கள்....
    தொடருங்கள் மோகன்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #23
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    கதை செம சஸ்பென்ஸாக போகிறது.. தொடருங்கள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  12. #24
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    02 Jul 2007
    Posts
    308
    Post Thanks / Like
    iCash Credits
    22,159
    Downloads
    192
    Uploads
    0
    பயங்கரமான முயற்சி வாழ்த்துக்கள்

Page 2 of 9 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •