Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 32

Thread: நானும் என் கவி ஓவியங்களும்.............!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2

    நானும் என் கவி ஓவியங்களும்.............!

    அன்பான மன்றத்து உறவுகளே!, மன்றம் வந்து பல நாளாகியும் இந்த பகுதியில் என்னை அறிமுகப் படுத்தாதமைக்கு நான் இதற்கு தகுதியானவனா என்று என்னிடம் நானே கேட்ட கேள்வியே பிரதான காரணமானது. ஆனாலும் என்னை வளர்ந்துக் கொண்டு இங்கே என்னை அறிமுகப் படுத்தலாமென முடிவெடுத்திருந்தேன், ஆனால் பின்னர் தான் அறிந்தேன் என் வளர்ச்சிப் பாதை மிக மிக நீளமா.........னது என்று. அத்துடன் அன்பு உறவு அமரன் உற்சாகப் படுத்தியதன் உடனடி விளைவே இந்த பதிவு.........

    ஈழத்தின் வன்னியில் பிறந்து மத்தியகிழக்கிலே பிழைக்க வந்து மன்றத்திலே தஞ்சம் நாடி வந்த அன்றில் நான். வாசனைமிக்க என்பெயரை கலை வாழ்க்கைக்காக ஓவியனாக்கியவன். சிறுவயது தொடங்கி ஓவியங்கள் மீதும் வர்ணங்கள் மீதும் நான் கொண்ட தீராக் காதல் இந்த புனை பெயருக்கும் வழி கோலியது. சிறுவயது முதலே நான் காதலித்தாலும் கரம் பற்ற மறந்த அல்லது மறுத்த காதலி கவிதை, அதற்கு நான் கரம் பற்றிய மற்றொரு காதலியான ஓவியம் காரணமாக இருந்திருக்கலாம். கவிதைக் காதலியைக் கண்கொட்டாமால் இரசித்தும் அவள் அழகைப் பருகி வந்தாலும் ஒருவனுக்கு ஒருத்தியே போதுமென இருந்து விட்டேன் போல..........!.

    சிறு வயதில் பாடசாலைக் காலங்களில் ஓவியம், கதை, கட்டுரை போன்ற போட்டிகளில் அய்ராமல் கலந்து கொண்டிருந்தாலும் கவிதைப் போட்டிகள் பக்கம் தலை வைத்துக் கூடப் படுத்ததில்லை. ஆனால் கவிதைகளை ஆழமாக இரசித்துக் கொண்டே இருந்தேன். அப்போது 2005 ம் ஆண்டு யாழ்ப்பாணம் மீதான இராணுவ ஆக்கிரமிப்பால் எங்கள் பகுதிக்கும் பாடசாலைக்கும் யாழில் வசித்த பல உறவுகள் புலம் பெயர்ந்து வந்து எங்களுடனிணைந்து கொண்டனர். புலம் பெயர்வு எவ்வளவு மோசமானதானாலும் அது எனக்கு ஒரு நன்மையையும் செய்தது. ஆமாம் அந்த புலப் பெயர்வால் எங்கள் பாடசாலைக்கு வந்தசேர்ந்த ஈழத்தின் புகழ் பூத்த கவிஞர் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் ஐயா அவர்களின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அந்தக் காலத்தில் அந்தப் பெரியவரின் வார்த்தைகளிலும் வசனங்களிலும் என்னையே தொலைத்து செந்தமிழில் நனையக் கிடைத்தமை என் பாக்கியமே. அந்த பெரியவரால் கவிதைகள் மேல் எனக்கிருந்த காதல் அதிகரித்தாலும் நான் ஒரு கவிதைகளேனும் எழுதவில்லை. எனக்கு ஏன் இந்த பொல்லாப்பு என்று விட்டுவிட்டேன்.

    பின்னர் காலத்தின் சுழற்சியால் மத்திய கிழக்குக்கு பணிபுரிய வந்த போது தமிழ்மன்றம் என்னை இருகரம் நீக்கி வரவேற்று என் தமிழார்வத்தை வளர்த்தது. மன்றத்தின் ஆரம்ப காலத்தில் நான் திரிகளை ஆரம்பிப்பதிலும் மற்றையவர்களின் திரிகளுக்குப் பின்னூட்டம் இடுவதிலுமே என் காலத்தைக் கழித்தேன். அப்போது ஒரு நாள் பென்ஸ் அண்ணா என் கையெழுத்தைப் பார்த்து ஓவியன் கலக்கல் ஒரு கவிதையையே கையெழுத்தாக வைத்திருக்கிறாயே பாராட்டுக்கள் என்றார். அந்த பாராட்டு என்னை வசிட்டர் வாயால் பிரமரிஷிப் பட்டம் பெற்ற பெருமையை எனக்கு அளித்து நானும் கவிதை எழுத வேண்டுமென மேன் மேலும் ஆர்வமூட்டியது. தொடர்ந்து என்னை மாற்றவென வந்தது ஒரு திரி, கவிதை எழுதுவது எப்படி என்று.........
    ஆதவன் ஆரம்பித்த அந்த திரி எனக்குக் கவிதை எழுதும் ஆவலை அதிகரித்தது அந்த திரியில் எங்கள் இளசு அண்ணா இப்படி என்னைக் கவிதை எழுத ஊக்குவித்தார். அப்போதும் நான் எழுதவில்லை, ஒருவாறாக அரட்டையடித்து மயூவைக் கிண்டலடித்து மன்றத்தின் தூணாகிய போது பூ அண்ணா வாழ்த்து தெரிவிக்கையில் ஓவியன் மன்றத்தில் தனித்தன்மையைப் பேண எதாவது செய்யுங்கள் என்று ஊக்கமூட்டினார், தொடந்து அவரது தனிமடல்கள் என்னை ஊக்கப் படுத்த எனது முதல் கவிதையை நான் கண்ட தமிழ் மன்றம் என்ற தலைப்பில் இட உடனே அன்பு நண்பர் ஷீ எனக்கு ஆலோசனை தந்து அந்தக் கவிதையைச் செம்மைப் படுத்தினார். அந்த திரிக்குக் கிடைத்த உற்சாகப் பின்னூட்டங்கள் என்னைக் தொடந்து கவி எழுத வைத்தன.

    என்னை ஊக்குவிக்க வந்தது போலவே எனக்குத் தெரிந்தது கவிச்சமர் திரி அங்கே செல்வன் அண்ணாவின் கவியால் மயங்கி அவர் கவிதைகளிலிருந்து ஏராளம் விடயங்களைக் கற்றேன். அங்கே கவிச்சமர் நண்பர்களது கவிதைகளும் என்னை வளர்த்தன, எங்கள் கவிச் சமர் எல்லாத் திரிகளிலும் பரவின. முக்கியமாக அமரன் தொடக்கிய அரிசியல் என்ற குறுங்கவிதைத் திரியும் நான் தொடக்கிய வெறொரு(த்)தீ குறுங்கவிதைத் திரியும் என்னை மேன்மேலும் வளர்த்தது. தொடர்ந்து எனக்குக் கிடைத்த பின்னூட்டங்களாக முக்கியமாக இளசு அண்ணா, பென்ஸ் அண்ணா, பூ, ஆதவா, ஷீ, அக்னி, அமரன், சிவா, அன்பு, இனியவள், ஓவியா, வாத்தியார், போன்றோர் வடிவில் என் கவிதை வரிகளுக்கு மேன் மேலும் பலமூட்ட இன்று நான் என் கவி ஓவியங்களுடன் உங்கள் முன்னே என் அறிமுகம் செய்யும் பாக்கியம் கிட்டியது.

    இந்த அரும்பாக்கியத்தை எனக்களித்த அன்புள்ளங்களுக்கு நன்றிகள் கோடி....................!


    மன்றத்தில் எனது கவிதைகள்..........!

    வாழ்த்துக் கவிதைகள்
    நான் கண்ட தமிழ் மன்றம்!

    குறுங்கவிதைகள்
    பசுமை!
    வேறொரு(த்)தீ!
    தமிழ்!
    மறதி!.
    நேர்(மாறு) விகித சமன்!
    வேட்டை...!
    விலாங்கும் வெளவாலும்!

    காதல் கவிதைகள்
    கண்மூடா(து) காதல்!.
    புரிகிறது!.
    காலத்தின் நிமிடங்கள்!

    புதிய கவிதைகள்
    கைவந்த கழுகுகள்!
    மீண்டும் போவதெப்போ............?
    படைப்பின் பேதம்.........!
    காணாமல் போன கவிதை...........
    Last edited by ஓவியன்; 04-08-2007 at 06:40 PM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இது கவிஞர் அறிமுகமா..
    சிந்திக்க வைக்கிறது.
    கவிஞனும் ஓவியனும்
    கலந்து செய்தகலவை இது...

    இதைப்படிக்கையில் ....
    காட்சிகள் விரிகிறது.
    வார்த்தைகள் தொடர்கிறது..
    அதனால் இது
    விபரணச்சித்திரம்..

    கவிஞர்கள் எதையும்
    மிகைப்படுத்திக் கூறுவார்கள்.
    இந்தக்கவிஞனின் நேற்றையகாற்று
    யதார்த்தமாக சுகந்தம் பரப்புகிறது. .
    அதனால் இது
    எனதருமை நண்பனின் கறுப்புபெட்டி...

    மன்றம் வளர்த்த செடி
    மரமாகி கிளைபரப்பி நிற்கிறது.
    இம்மரத்தில் இளைப்பாற
    புதிய பறவைகள் வரும்..
    அப்போ நானும்
    ஒரு பறவையாக இருப்பேன்....


    மன்றச்சிற்பிகள் செதுக்கிய சிற்பமே
    சிலையாகிப்போனேன்..நான்...
    Last edited by அமரன்; 29-07-2007 at 10:08 AM.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by அமரன் View Post
    மன்றம் வளர்த்த செடி
    மரமாகி கிளைபரப்பி நிற்கிறது.
    இம்மரத்தில் இளைப்பாற
    புதிய பறவைகள் வரும்..
    அப்போ நானும்
    ஒரு பறவையாக இருப்பேன்....


    மன்றச்சிற்பிகள் செதுக்கிய சிற்பமே
    சிலையாகிப்பொனேன்..நான்...
    ஆகா நண்பா!, நீங்கள் இன்னுமொரு விருட்சமாக பக்கத்தில் அல்லவா நிற்பீர்கள் புதிய பறவைகளை வரவேற்க............

    உங்கள் அன்புக்கும் அழகான பின்னூட்டக் கவிதைக்கும் என் நன்றிகள் கோடிகள்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய பாதை என்று சொல்வார்கள் வழமையான பேச்சு நடையில். ஆனால் அவற்றையெல்லாம் மரகதத்தால் பதித்ததைப்போல உணருகின்றேன்.
    ஒழுங்கான வழினடத்தலில் உருவம் பெற்று நிற்கும் ஓவியனிற்கும் அவரை வடித்தெடுக்க அச்சுக்களாக அமைந்த மன்றத்து சான்றோர்களுக்கும் பாராட்டுக்கள்.

    மேலும்,
    தமிழின்பால் கொண்ட பற்ற்றினால் இன்னும் இன்னும் பல ஆக்கங்களையும் உதவிகளையும் தந்து மன்றம் சிறக்க வழிகோல வாழ்த்துகின்றேன்.

    அன்புடன்
    நான்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ஓவியன் View Post
    ஆகா நண்பா!, நீங்கள் இன்னுமொரு விருட்சமாக பக்கத்தில் அல்லவா நிற்பீர்கள் புதிய பறவைகளை வரவேற்க............

    உங்கள் அன்புக்கும் அழகான பின்னூட்டக் கவிதைக்கும் என் நன்றிகள் கோடிகள்.
    ஏம்பா ஓவியன்...இது கவிதை இல்லப்பா..
    இதைப்படித்ததும் என்னுள் விழுந்த விதை..
    உமக்காக ஒரு கவிஎழுத ஆசைதான்...பார்ப்போம்.
    காலம்கூடிவந்தால் எல்லாம் கைகூடுமாமே...

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by விராடன் View Post
    தமிழின்பால் கொண்ட பற்ற்றினால் இன்னும் இன்னும் பல ஆக்கங்களையும் உதவிகளையும் தந்து மன்றம் சிறக்க வழிகோல வாழ்த்துகின்றேன்.
    மிக்க நன்றி விராடன்!,
    காலத்தால் இணைந்த நாம் இங்கும் கை கோர்த்து நடப்போம் − ஒன்றாகவே!.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by அமரன் View Post
    ஏம்பா ஓவியன்...இது கவிதை இல்லப்பா..
    இதைப்படித்ததும் என்னுள் விழுந்த விதை
    ஹீ!,ஹீ! அமரா!
    அது என்னமோ தெரியலைப்பா.........!
    நீங்க எழுதுறது எல்லாமே கவிதை, கவிதையாத் தான் தெரிகிறது!.
    Last edited by ஓவியன்; 28-07-2007 at 07:54 PM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    ஓவியரே வாழ்த்துக்கள்

    அழகான அறிமுகம்..
    ரசிக்க வைத்து எங்களையும்
    எழுதத் தூண்டும்
    அழகிய கவிதைகள்...
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    மிக்க நன்றி இனியவள்!

    உங்களைப் போல நிறையக் கவிதைகள் எழுதவில்லையே என்று என்னைக் கவலைப் பட வைத்தவரல்லா நீங்கள், உங்கள் அனைவரது அன்புக்கு இன்னமும் எழுதலாம் பல ஆயிரம் கவிதைகள்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அன்பு ஓவியன்..

    மன்றச்சோலையில்
    தண்ணென்ற ஆக்கநீர் பாய்ச்சும்
    ஜீவநதிகள் பல...
    ஓவியநதியும் அதில் ஒன்று..

    அன்பும் பண்பும் அடக்கமும் ஆக்கமான ஆளுமையும்
    சுயமரியாதை, சுயபரிசோதனை, சுயசிந்தனையும்...


    ஏழும் கலந்து என்ன ப*டைக்கும்?
    எங்கள் வர்ணநேச வானவில் ஓவியநதி கிடைக்கும்!





    அண்ணனின் பாச மலர்கள் உன் நதிக்கரை எங்கும்!


    வாழ்த்துகள் ஓவியன்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    வியங்கள் வரைந்து எம்மை
    வியப்பில் ஆழ்தியது இன்னும் என் மனதினில்
    தார்த்தமான கவிதைகள் பல தந்து
    ன்னும் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த தொடர்ந்து வேண்டுகிறோன்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அன்பு நன்பர் ஓவியனுக்கு மனம் நிறந்த வாழ்த்துக்கள். எழுத்துக்களில் தமிழ் விளையாடுகிறது,எதார்த்தம் கோலோச்சுகிறது,வித்தியாசப் பார்வையின் விவரணம் தெரிகிறது.ஓவியர்களின் எண்ணக்கலவையே வண்ணக்கலவையாகத்தான் இருக்கும். அதுவும் தூரிகை பிடித்த கையில் எழுதுகோல் ஏந்தியபோது எழுத்துக்களெல்லாம் வண்ணங்களாக வடிவாக வருகிறது. காதல் கவிதையிலும் சமுதாயக் கருத்து சொல்லும் கவிதைகளிலும் உங்கள் தனி முத்திரை பதித்து எங்களை பரவசமாக்கி வருகிறீர்கள்.மென்மேலும் பலப்பல கவி ஈந்து எங்களோடு இணைந்திருக்க மனமார வாழ்த்துகிறேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •