Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 41

Thread: செய்துவிடு

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    செய்துவிடு

    கடற்கரையில் அமர்ந்து காத்துக்கொண்டிருந்தான் செல்வம். முன்னிரவு நேரம்அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தலைகள் தென்பட்டுக்கொண்டிருந்தன.
    "வந்து ரொம்ப நேரமாச்சா..?"

    பின்னாலிருந்து குரல் கேட்க,மெல்ல திரும்பினான். பதிலளிப்பது அவசியமில்லை வந்த காரியத்தைப் பார்ப்போம் என்பதைப்போல் வந்தவனின் முகம் நோக்கினான்.

    'மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துவிட்டது. போட்டுவிடு! ஆனால் நீதான் போடப்போகிறாய் என்பது காரியம் முடியும்வரை யாருக்கும் தெரிய வேண்டாம்.உனக்கு சேரவேண்டியது வேலை முடிந்ததும் உன்னிடம் வந்து சேரும். விஷயத்தை முடித்துவிட்டு கொஞ்ச நாளைக்கு எங்காவது தலைமறைவாகிவிடு. எல்லாம் அடங்கிய பிறகு வந்தால் போதும். நாங்கள் எல்லா உதவிகளும் செய்கிறோம்!' சொல்லிவிட்டு அந்த காரியத்திற்காக முன்பணத்தையும் செல்வத்திடம் கொடுத்தான்.

    'அவன் நடமாட்டங்களை கவனிக்க வேண்டும்,ஒரு வாரம் அவகாசம் கொடு சிக்காமலா போய்விடுவான்'
    செல்வம் சொல்வதை ஏற்றுக்கொள்கிறவனாய் தலையசைத்து சம்மதம் தெரிவித்தான்.

    மூன்று நாட்களாக அவனை பின் தொடர்ந்ததில் செல்வத்துக்கு அவனை அவ்வளவு சீக்கிரம் அனுகமுடியாது என்று தோன்றியது. அவனை மடக்குவது சற்று சிரமம் போல்தான் தெரிந்தது. ஆனால் அதிர்ஷ்டம் செல்வம் பக்கம் இருந்தது. நான்காவது நாள் ஒரே ஒரு உதவியாளனுடன் அந்த ஆள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த கேளிக்கை விடுதிக்கு வந்திருந்தான்.ரகசிய விருந்து போலிருக்கிறது. தன் புதிய ஸ்கார்பியோவிலிருந்து இறங்கியவன் பின்னாலேயே இரண்டு பெண்களும் இறங்கினார்கள். மெலிதான முகப்பு பலகையின் விளக்கு வெளிச்சத்தில் அந்த பெண்களை இவனால் அடையாளம் கான முடிந்தது.மேல்தட்டுமக்களின் விருந்துகளில் அவர்களுக்கு விருந்தாகும் விலைமாதர்கள்.

    நிறுத்தியிருந்த கார்களுக்கு பின்னால் நின்றிருந்த செல்வம் கறுப்பு நிறத்திலிருந்த அந்த சக்திவாய்ந்த வஸ்துவை கையில்எடுத்துக்கொண்டு மெல்ல அவர்களை அனுகினான். தூரத்திலிருந்தே காரியத்தை முடிக்கும் அந்த பொருளை உயர்த்தினான். வாகான தொலைவில், இரண்டு பெண்களையும் இறுக கட்டிப்பிடித்தபடி இருந்த அந்த ஆசாமியின் போதைக் கண்கள் உட்பட அத்தனையும் இவனுக்கு தெளிவாக தெரிந்தது. சரியான சந்தர்ப்பம். சத்தமில்லாமல் அந்த காரியத்தை செய்து முடித்தான்.

    அடுத்தநாள் தமிழ்நாட்டின் பரபரப்பான அந்த புலனாய்வு தினசரியில் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் அந்த செய்தி புகைப்படத்துடன் பிரசுரம் ஆகியிருந்தது.
    " அடுத்த முதல்வராக அறிவிக்கப்பட்டிருக்கும் உள்துறை அமைச்சர் கனகரத்தினத்தின் காமக்களியாட்டம்!! தன்னை தாய்க்குலங்களின் தனித்தலைவனாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அமைச்சர் கனகரத்தினத்தின் உண்மையான முகம் தமிழ்நாட்டுக்கு தெரிய வந்துள்ளது. நமது நிருபர் தன் உயிரை பணயம் வைத்து எடுத்திருக்கும் இந்த புகைப்படங்களே அதற்கு சாட்சி. இனி அவருக்கு முதல்வர் பதவி கிடைக்குமா..? கட்சிக்குள் குழப்பம்......."

    தான் எடுத்த அந்த புகைப்படங்களையும் செய்தியையும் பார்த்துக்கொண்டிருந்த செல்வம் அதே கட்சிக்குள் கனகரத்தினத்தின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் 'போட'ச்சொன்னபடி செய்தி போட்டதற்காக கிடைத்த பெரும்தொகையை எடுத்துக்கொண்டு,கூடவே அந்த கறுப்பு நிற சக்திவாய்ந்தகேமராவையும் பைக்குள் போட்டுக்கொண்டு, தலைமறைவுக்குத்தயாரானான்.
    Last edited by சிவா.ஜி; 28-07-2007 at 09:25 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    கதை நன்றாகவே இருக்கிறது.

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    கறுப்பு நிறத்திலிருந்த அந்த சக்தி வாய்ந்த வஸ்துவை கையில்
    எடுத்துக்கொண்டு மெல்ல அவர்களை அனுகினான்.
    தூரத்திலிருந்தே காரியத்தை முடிக்கும் அந்த பொருளை
    உயர்த்தினான்.


    சக்திவாய்ந்த ஒளிப்படக்கருவிகள் எல்லாம் கறுப்பாகத்தான் இருக்கும் என்ற உண்மையை(???) உணர்த்தியிருப்பது கதையில் துருத்திக்கொண்டிருக்கிறது.

    பாராட்டுக்கள்.
    Last edited by விகடன்; 24-07-2007 at 08:55 AM.

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி விராடன். எனக்குத் தெரியாத ஒரு நல்ல தகவலை நீங்கள் வெளிப்படுத்தியிருப்பதற்கு மிக்க நன்றி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஆரம்பத்தில் படித்தபோது வழக்கமான கொலைக்கதையாக இருக்கும் என நினைத்தேன். போடவேண்டும் என்ற பதம் இப்போ கொலை செய்வதையே அதிகமாக நினைவுறுத்துகிறது. படிக்கும் க்ரைம் புத்தகங்களும், சினிமா வசனங்களும் தந்த பரிசு (!) இது. ஆனால் இறுதியில் செய்தி போடுவதாக திருப்பமான முடிவு. காரியம் நடப்பதைக்கூட "தூரத்தே இருந்து காரியம் முடிக்கும் பொருளை எடுத்தான்" என்று கொலை நடக்கப்போகிறது என எண்ணவைத்தது. இங்கே "தூர இருந்து சுட்டான்" என சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். சுடுதல் என்பதை படம்பிடித்தலுக்கும் பயன்படுத்துகிறார்களே..எதிர்பார்க்காத முடிவைத் தரும் விதத்தில் அமைந்த கதை. "விருந்துகளில் அவர்களுக்கு விருந்தாகும் மாதர்கள்" நல்லதொரு வசனம்
    பாராட்டுக்கள் சிவா. இன்னும் எதிர்பார்கிறேன்.
    Last edited by அமரன்; 25-07-2007 at 03:13 PM.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    அட கதையிலும் இறங்கிவிட்டீர்களா! வாழ்த்துக்கள்!

    கதை முடிந்த விதம் நன்றாகவே இருந்தது... வாழ்த்துக்கள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    வார்த்தைப்பிரயோகங்கள் சற்று வித்தியாசமாக முதலில் தென்பட்டது. பின்னர் புரிந்தது. வாழ்த்துக்கள் சிவாஜி.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் பார்த்திபன்'s Avatar
    Join Date
    25 Feb 2007
    Posts
    140
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    346
    Uploads
    0
    ஏதோ மர்ம நாவல் போல் தொடங்கி கதையையே மாற்றி விட்டீர்கள்..

    கதை நன்றாக இருந்தது

    வாழ்த்துக்கள்...

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இரசித்தேன் சிவா.ஜி!, இடை நடுவே கருவைப் போட்டு உடைக்காமல் கொண்டு சென்று முத்தாய்ப்பாக முத்தாய்ப்பாய் முடித்தமை உங்கள் தேர்ந்த திறமையைக் காட்டுகிறது. விறு விறுப்பாக வரிகளை நகர்த்திய உங்கள் திறமைக்கு என் பாராட்டுக்கள்.

    ஒரு கவிஞன் என்பதாலோ என்னவோ ஆங்காங்கே கவித்துவம் தென்பட்டது உங்கள் வரிகளில், அது கூட கதைக்கு மெருகூட்டத் தவறவில்லை.

    இறுதியாக வரிகளைக் கவிதை மாதிரி ஒழுங்கில்லாமல் வரைந்திருந்தது மட்டும் எனக்கு பிடிக்கவில்லை, அதை கதையாக நேர்த்தியாக பந்தி பிரித்து எழுதியிருந்தால் இன்னமும் அழகாக இருந்திருக்குமோ என்று எண்ணுகிறேன். இது என் மனதில் பட்ட கருத்து அவ்வளவே...........

    மற்றும் படி மன்றத்தில் இன்னுமொரு பரிணாமத்தை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் guna's Avatar
    Join Date
    09 Oct 2006
    Location
    Malaysia
    Posts
    249
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    3
    Uploads
    0
    "கொலை" தான் என்று அனைவரும் யூகிக்க வேண்டும் என்பதட்காகவே தேர்ந்தெடுக்கப் பட்ட வார்தைகளைப் படிக்கும் போதே, முடிவு வேறக இருக்குமோ என்ற எண்ணத்தை குணாக்கு வரவழைத்ததைத் தவிர்து, கரு, விரு விருப்பான கதை ஓட்டம், தேர்வான வார்தைகள் எல்லாமே நன்று..

    சுவாரஸ்யமான கடுகு கதைக்கு வாழ்துக்கள் சிவா...
    சுகுணா ஆனந்தன்

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அமரன்,ஷீ−நிசி,அன்பு,பார்த்திபன்,குனா..அனைவருக்கும் என் மனப்பூர்வமான
    நன்றிகள்.
    ஓவியன் உங்கள் கருத்தை கவனத்தில் கொள்கிறேன். இது தொடக்கமென்பதால் சிறு சிறு பிழைகள். இனி சிறிது சிறிதாக வளப்படுத்திக் கொள்கிறேன்.

    உங்கள் அனைவரின் பின்னூட்டத்தையும் படித்தபோது ஆனந்தமாக இருந்தது. ஏதோ ஒரு கதை என்று எண்ணாமல் அலசியிருந்த விதம்
    மிக நன்றாக இருந்தது. அதிலும் குனா அவர்கள் நிறைய படிப்பவர் என்பது புலனாகிறது. இப்படிப்பட்ட விமர்சனங்கள் எழுதுபவரை இன்னும் வளர்த்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நன்றிகள்.
    Last edited by சிவா.ஜி; 26-07-2007 at 04:53 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    கதை வித்தியாசமாக தந்து இருகிறீர்கள்
    கொலை கதை ஆரம்பித்தாலும் இறுதி டிடெக்டிவ் ஜர்னிலசம்.
    உன்மை கருத்துகள்
    1. தாய் குலத்தின் தலைவன் என்று சொன்னவனின் தனிபட்ட குணம்
    2. சொந்த கட்சிகுள்ளேயே கெடுதல் செய்யும் ஆட்கள்
    3. நல்ல நோக்கம் இல்லாமல் வெறும் பனத்துக்காக செய்யும் ஜர்னலிச தொழில்
    அருமையான மெசெஜ்
    Last edited by lolluvathiyar; 26-07-2007 at 07:24 AM.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி வாத்தியார் அவர்களே. அருமையான விளக்கம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •