Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 35

Thread: அரிய செய்திகள்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் aromabest's Avatar
    Join Date
    30 Jun 2006
    Location
    srilanka
    Posts
    110
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    17
    Uploads
    0

    அரிய செய்திகள்

    தாடியுடன் பிறந்த ஆண்குழந்தை

    இந்தோனேசியாவில், தாடியுடன் பிறந்த அதிசய ஆண் குழந்தையை தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து பார்த்து விட்டுச் செல்கின்றனர். இந்தோனேசியாவில் உள்ள மத்திய சுலவேசி மாகாணத்தின் சிறியதொரு நகர்ப்பிரதேசமொன்றில், கடந்த வாரம் ஒரு தம்பதியருக்குப் பிறந்த ஆண் குழந்தைக்குப் பிறக்கும் போதே, அதன் முகக்கடவாயிலிருந்து, மூன்று சென்ரிமீற்றர் நீளத்திற்கு, பழுப்புநிறத்தில் சாம்பல் கலந்த வர்ணத்தில் சிறிய தாடிகள் முளைத்துக் காணப்பட்டுள்ளது. இவை கன்னங்களின் ஓரத்திற்கும் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


    தொகுப்பு :- அரோமா பெஸ்ட்
    Last edited by aromabest; 27-07-2007 at 03:09 PM.

  2. #2
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    9,062
    Downloads
    77
    Uploads
    2
    [IMG][/IMG]

    இது போன்று ஒரு 11 வயது சிறுவன். தீர்வு கிடைக்க பிரார்த்திப்போம்.
    Last edited by அரசன்; 16-07-2007 at 05:23 PM.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அடடா..எத்தனை ரகமான சோதனைகள்..இறைவ*னைப் பிரார்த்திப்போம்..

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் aromabest's Avatar
    Join Date
    30 Jun 2006
    Location
    srilanka
    Posts
    110
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    17
    Uploads
    0
    புதிய உலக அதிசயஙகள் 7




  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அரோமபெஸ்ட் உங்களது திரியினது தலைப்பை அரிய செய்திகள் அல்லது புதுமையான செய்திகள் என்று மாற்றலாமே?

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    அருமையான பதிவுகள்.அரோமா பெஸ்ட் அவர்களே பெயருக்கேற்ப உங்கள் சேவை நறுமணம் வீசட்டும்.வாழ்த்துக்கள்
    இணையத்தில் ஒரு தோழன்

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    ஓவியன் கூறிய தலைப்பைப் பரிசோதியுங்கள்...
    கிடைத்தற்கரிய பல தகவல்கள் எங்களை வந்து சேரும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    செய்தித் தொகுப்புகள் அருமைஅ அரோமா..... இந்த பகுதியை செய்திச் சொலைப் பகுதிக்கு மாற்றுகிறேன்... உங்கள் பணி தொடரட்டும்..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் aromabest's Avatar
    Join Date
    30 Jun 2006
    Location
    srilanka
    Posts
    110
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    17
    Uploads
    0

    மகாராஷ்டிராவில் ஒரு சிறுவனுக்கு முகம் முழுவதும் முடி வளர்ந்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள சாங்கிலிவாடி கிராமத்தைச் சேர்ந்தவன் பிருத்விராஜ் பாட்டீல்(11). பிறவியிலேயே எல்லோருக்கும் தலையில் தான் முடியிருக்கும். ஆனால் இந்த சிறுவனுக்கு தலையில் மட்டுமல்லாது முகம் முழுவதும் முடியாக இருந்தது. இது நாளடைவில் சரியாகிவிடும் என பெற்றோர்கள் எண்ணினார்கள். ஆனால் வித்தியாசமாக பிருத்விராஜூக்கு முகத்தில் முடி தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தது. சிகிச்சைக்காக பெற்றோர்கள் அலையாத டாக்டர்கள் இல்லையாம். ஆனால் பாவம் டாக்டர்களுக்கே இந்த பிரச்சனை சவாலாக அமைந்து விட்டது. இதுவரை இதற்கான தீர்வு காண முடியாமல் டாக்டர்கள் தங்கள் சோதனையில் தோல்வி அடைந்து விட்டனர். சமீபத்தில் சாங்கிலி கிராமத்தில் வித்தியாசமான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் சிகிச்சை பெறுவதற்காக பெற்றோருடன் பிருத்விராஜ் பாட்டீல் வந்திருந்தான். டாக்டர்கள் முயற்சி வெற்றி பெறுமா? காத்திருந்து பார்ப்போம்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    புதிய தகவல்கள் அருமை நன்றி தொடருங்கள் நண்பரே
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் aromabest's Avatar
    Join Date
    30 Jun 2006
    Location
    srilanka
    Posts
    110
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    17
    Uploads
    0
    பயங்கரம் ஆனால் உண்மை வாகன ஓட்டுனர்களே இது உங்களின் அவதானத்திற்கு

    (தயவுசெய்து நீங்கள் சிறுவர்களாகவோ அள்றில் மனவலிமை அற்றவர்களாகவோ இருந்தால் இதனைப் பார்வையிட வேண்டாம்.)








  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் aromabest's Avatar
    Join Date
    30 Jun 2006
    Location
    srilanka
    Posts
    110
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    17
    Uploads
    0
    உலக வெப்ப அதிகரிப்பால் விபரீதம் ஆரம்பமா?

    உலக வெப்பம் அதிகரிப்பதால், விபரீத விளைவுகள் ஆரம்பமாகி விட்டதா என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உலக வெப்பம் அதிகரித்து வருகிறது. செயற்கை எரிபொருள் அதிகம் பயன்படுத்துவதால், வெப்பம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இது இப்படியே போனால், 2020 ஆம் ஆண்டில், உலகில் பெரும் அழிவுகள் ஏற்படும் என்று நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்து விட்டனர். இப்போது, பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்துவிட்டது. வானிலை மாற்றம் ஏற்படவும் ஆரம்பித்துவிட்டது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட சிலநாடுகளில் வெள்ளம் அதிகரிக்க வெப்பமயமாதல் தான் காரணம் என்று நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். வானிலை மாற்றம் ஆராய்ச்சி தொடர்பாக, பிரிட்டன் ஈட்ஸ் ஆங்கிலியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆலோசனை நடத்தினர். அதன் பின், தலைவர் பில் ஜோன்ஸ் கூறியதாவது; உலகின் வெப்ப நிலை கடந்த 1860 ஆம் ஆண்டுக்கு முன் ஓரிரு ஆண்டுகள் மிகவும் அதிகரித்தது. அதன் பின், 1998 ஆம் ஆண்டில், வெப்பம் மிக அதிகமாக இருந்தது. இரண்டாவது முறையாக, கடந்த ஏப்ரல் மாதம் எடுத்த அளவை வைத்துப்பார்த்தால், இரண்டாவது அதிக வெப்பம் நிலவிய ஆண்டு என்று சொல்ல முடியும். வரட்சி அதிகரித்ததால் தான், பனிப்பாறைகள் உருகி, புயலும் அதிகரித்து, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், இந்தியா,பாகிஸ்தான், ஆப்பகானிஸ்தான் நாடுகளில் வெள்ளத்தில் 500 பேர் இறந்தனர். அசாதாரணமாக ஏற்பட்ட மழை வெள்ள சம்பவங்களை வைத்துப்பார்க்கும் போது, உலக வெப்பமயமாதல் விபரீதம் ஆரம்பித்துவிட்டதாகவே சந்தேகிக்கப்படுகிறது. இனி வரும் ஆண்டுகளில், இப்படி திடீர் புயல், வெள்ளம், வரட்சியும் அதிகரிக்கலாம். இவ்வாறு பில்ஜோன்ஸ் கூறினார்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •