Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 35

Thread: அரிய செய்திகள்

                  
   
   
  1. #13
    இளம் புயல் பண்பட்டவர் aromabest's Avatar
    Join Date
    30 Jun 2006
    Location
    srilanka
    Posts
    110
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    17
    Uploads
    0
    ரிமோட்டில் இயங்கும் புதிய விமானம்


    அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா புதிய ரக விமானத்தை கண்டு பிடித்து இருக்கிறது. `போயிங் எக்ஸ்48பி' என்ற இந்த விமானத்தில் எல்லாபக்கங்களிலும் சிறகுகள் உள்ளன. சோதனை ரீதியில் இது வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டது. 500 இறாத்தல் எடையுள்ள இந்த விமானம் 3 என்ஜின்களை கொண்டது. ரிமோட் மூலம் இயங்கும். 7500 அடி உயரத்தில் அரை மணி நேரம்பறந்து மீண்டும் பத்திரமாக தரை இறங்கியது. எரிபொருள் செலவும் மிக குறைவு. அதிக பயணிகள் செல்லும் வகையில் மிக விரைவில் இந்த புதிய விமானம் அறிமுகம் ஆகிறது

  2. #14
    இளம் புயல் பண்பட்டவர் aromabest's Avatar
    Join Date
    30 Jun 2006
    Location
    srilanka
    Posts
    110
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    17
    Uploads
    0

    Smile செய்தித் துளிகள்

    ரிசானாவுக்கு கருணை காட்ட உயிரிழந்த குழந்தையின் குடும்பம் மறுப்பு


    சவுதி அரேபியாவில் மரண தண்டனைக்கு முகம் கொடுத்திருக்கும் ரிசானாவை மீட்பதற்கான வாய்ப்புக்கள் குறைந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


    ரிசானாவின் கவனக்குறைவால் உயிரிழந்ததாக கூறப்படும் 4 மாதக் குழந்தையின் குடும்பத்தினர் அவருக்கு எதுவித கருணையும் அளிக்க மறுத்துவிட்டதாக அரேபிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    சவுதி சென்றிருந்த சிறிலங்கா பிரதி அமைச்சர் உசைன் பைலா, அக்குடும்பத்தினரை கடந்த வாரம் நேரில் சந்தித்துப் பேசியபோது எதுவித கருணையும் தாங்கள் காட்ட முடியாது என்று கூறியுள்ளனர் என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரும் சவுதி அரேபிய நாளிதழின் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.

    சவுதி சென்றிருந்த ரிசானாவின் பெற்றோர் ஏற்கெனவே சிறிலங்காவுக்குத் திரும்பிவிட்டனர். அமைச்சர் பைலா இன்று சிறிலங்காவுக்கு திரும்புகிறார்

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    ஐயோ பாக்கவே கொடுமையா இருக்கே (பயங்கரம்.....)
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  4. #16
    இளம் புயல் பண்பட்டவர் aromabest's Avatar
    Join Date
    30 Jun 2006
    Location
    srilanka
    Posts
    110
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    17
    Uploads
    0

    எகிப்தில் புராதன நகரம் கண்டுபிடிப்பு

    எகிப்தின் மத்தியதரைக் கடல் பகுதியில் உள்ள அலெக்சாண்டரியா நகருக்கு அடியில் புராதன நகரம் இருந்ததை அமெரிக்க தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்மித்சோனியன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஜீன்-டேனியன் ஸ்டான்லி தலைமையிலான குழுவினர் இந்த புராதன நகரை கண்டுபிடித்துள்ளனர். ஸ்மித்சோனியன் குழுவினர் எகிப்தில் அலெக்சாண்டர் நிறுவிய அலெக்சாண்டரியா நகரில் உள்ள துறைமுகத்தில் நீருக்கு அடியில் தோண்டியபோது இந்த பழைய நகரம் இருப்பது தெரியவந்தது. அலெக்சாண்டர், கி.மு. 331 இல் அலெக்ஸாண்டரியா நகரை நிறுவினார் என்பது வரலாறு. அங்கு உலகிலேயே மிகப்பெரிய நூலகத்தை நிறுவினார். அங்குள்ள பரோஸ் தீவில் 119 மீற்றர் உயரமுள்ள கலங்கரை விளக்கத்தை நிறுவினார். ஆனால், அதற்கு முன் அலெக்ஸாண்டரியா நகருக்கு கீழே அதாவது கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் மீனவ கிராமம் ஒன்று அங்கு இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். ரகோடிஸ் என்ற அந்த கிராமத்தில் மீன்பிடித் தொழில் மும்முரமாக நடைபெற்றுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    ரகோடிஸ் கிராமத்தில் அதிகம் பேர் வசித்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கண்டுபிடிப்பு குறித்த விவரம், அமெரிக்க நில அமைப்பியல் சங்கம் வெளியிட்டுள்ள மாதாந்த சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    தகவல்கள் அனைத்தும் அருமை நன்றி தொடர்ந்து தாருங்கள்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    பிருத்விராஜ் பாட்டீல் இனுடைய கதை சோகக்கதைதான். சக வயதினரைப்பார்க்கும் அந்தப் பாலகனின் உள்ளம் எப்படி சஞ்சலப்படும்.

    குணமடைய பிரார்த்திப்போமாக ..... கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    வீதிவிபத்தை பார்க்கும்போதே தலை சுற்றுகிறது. காலத்தைத்தான் நொந்துகொள்ள முடியும்.


    ரிசானாவின் நிலை ப*ரிதாப*த்திற்குரிய*தே.

  8. #20
    இளம் புயல் பண்பட்டவர் aromabest's Avatar
    Join Date
    30 Jun 2006
    Location
    srilanka
    Posts
    110
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    17
    Uploads
    0

    Unhappy கணவரைக் கொலை செய்து அவரது உடலை குளிர்சாĪ

    கணவரைக் கொலை செய்து அவரது உடலை 11 துண்டுகளாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் பதுக்கி வைத்திருந்த பெண்ணை மலேசிய போலீஸார் கைது செய்துள்ளனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை ஒருவர் வாங்கினார். அந்த வீடு கடந்த 3 மாத மூடப்பட்டிருந்தது. இதனால் ஒருவரை அனுப்பி சுத்தம் செய்யப் பணித்திருந்தார். அதன்படி அந்த நபரும் வீட்டை சுத்தம் செய்வதற்காகச் சென்றார். அப்போது வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதையடுத்து வீட்டு உரிமையாளருக்குத் தகவல் கொடுத்தார். அவரும் விரைந்து வந்தார். இருவரும் வீட்டில் எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது என்று பார்த்தபோது வீட்டின் சமையலறையில் இருந்த குளிர்சாதனப் பெட்டியிலிருந்துதான் (ஃபிரிட்ஜ்) வாசனை வருவது தெரிய வந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த அவர்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து ஃபிரிட்ஜைத் திறந்து பார்த்தேபாது அதில் ஒரு ஆண் பிணம் அழுகிய நிலையில் இருந்தது தெரிய வந்து அதிர்ந்தனர். அந்தப் பிணம் 11 துண்டுகளாக வெட்டப்பட்டு பாலிதீன் பைகளில் போட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்தது. இந்தக் கொலையைச் செய்தது அந்த ஆணின் மனைவி என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கொல்லப்பட்ட நபர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். கொலை செய்த அந்தப் பெண் சரவாக் என்ற இடத்தைச் சேர்ந்தவர். விமானப் பணிப்பெண்ணாக அவர் பணியாற்றி வருகிறார். இதையடுத்து தீவிர வேட்டை நடத்திய போலீஸார் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்துக் கைது செய்துள்ளனர். அப்பெண்ணுடன், அவரது காதலரும் சேர்ந்து கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. காதலருக்கு வலை வீசப்பட்டுள்ளது. கள்ளக் காதலில் இந்தக் கொலை நடந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது. இந்த சம்பவம் கோலாலம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  9. #21
    இளம் புயல் பண்பட்டவர் aromabest's Avatar
    Join Date
    30 Jun 2006
    Location
    srilanka
    Posts
    110
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    17
    Uploads
    0

    சிகரெட் புகையை விட லேசர் பிரிண்டர் ஆபத்தĬ

    1


    சிகரெட் பிடிப்பதை விட லேசர் பிரிண்டரால் அதிக ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என்று அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

    சில வகை லேசர் பிரிண்டர்கள் அச்சிடும்போது "டோனர்' எனப்படும் நுண்ணிய துகள்களை வெளியிடுகின்றன. இந்தத் துகள்கள் நாம் சுவாசிக்கும்போது நுரையீரலுக்குள் சென்றுவிடும். இதனால் சிகரெட் புகையால் விளையும் தீமையை விட மோசமான விளைவுகள் ஏற்படும் என்று பேராசிரியர் லிடியா மொராவ்ஸ்காவை மேற்கொள்காட்டி "சிட்னி மார்னிங் ஹெரால்டு' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    சிகரெட் புகையில் வெளியாகும் துகள்களைப் போலவே லேசர் பிரிண்டர் துகள்களும் நுரையீரலுக்குள் செல்வதால் எரிச்சல், இதய நோய், புற்றுநோய் ஆகிய நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

    பல்கலைக்கழகத்தின் சர்வதேச காற்றின் தரம் மற்றும் சுகாதார ஆய்வகத்தில் 62 பிரிண்டர்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் 17 பிரிண்டர்கள் "டோனர்' துகள்களை வெளியிடுபவையாக இருந்தது தெரியவந்தது.

    "டோனர்' துகள்களை வெளியிடுவது பிரிண்டர் தயாரிப்பு நிறுவனம், பிரிண்டரை உபயோகிக்கும் காலம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது என்றும் ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

  10. #22
    இளம் புயல் பண்பட்டவர் aromabest's Avatar
    Join Date
    30 Jun 2006
    Location
    srilanka
    Posts
    110
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    17
    Uploads
    0

    Angry தூக்குக்கயிற்றை முத்தமிட இருக்கும் 17 வயத

    தூக்குக்கயிற்றை முத்தமிட இருக்கும் 17 வயது இளம் பெண்: குடும்பத்தை காப்பாற்ற சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றவளின் சோகக்கதை

    குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இலங்கையில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற 17 வயது பெண் ஒருத்தி, கொலை வழக்கில் சிக்கி, மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறாள். இலங்கையை சேர்ந்தவள் ரிசானா. 17 வயதான அவள் ஒரு மரம் வெட்டியின் மகள் ஆவாள். அவள் தந்தை முகமது சுல்தான் நபீக். இவர்கள் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது அவர்கள் வசித்த வீடு கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில் தான் குடும்பத்துக்கு உதவுவதற்காக சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு செல்ல ரிசானா முன்வந்தாள். அவள் அந்த நாட்டுக்கு சென்றாள். சவுதி அரேபியா சென்ற 2 வாரங்களிலேயே அவள் வேலை பார்த்த வீட்டுக்காரர்கள் 4 மாதக்குழந்தையை அவள் பொறுப்பில் விட்டு விட்டு வெளியே சென்றனர். அப்போது அந்த குழந்தை இறந்து போனது. இதற்கு அவள் தான் காரணம் என்று கூறி அவள் மீது கொலை வழக்கு தொடரப்பட்டது. அதற்கு அவள் பால் குடித்த குழந்தையின் தொண்டையில் பால் அடைத்து கொண்டு அதன் காரணமாக அது இறந்து போனது என்று கூறினாள். ஆனால் அவள் சொன்னது கோர்ட்டின் கவனத்தை ஈர்க்கவில்லை. அவளுக்கு கோர்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு மேடையில் அவள் தலை துண்டிக்கப்பட இருக்கிறது.


    மகளை காப்பாற்ற அவள் தந்தை முயற்சி செய்து வருகிறார். அவர் இலங்கை மந்திரியுடன் சவுதி அரேபியா சென்றார். அங்கு இறந்து போன குழந்தையின் உறவினர்களிடம் பேசி மன்னிப்பு பெற முயன்றார். அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

    அல்லாவிடம் பிரார்த்தனை

    சவுதி அரேபியா நாட்டுச்சட்டப்படி, கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றவர்கள் விடுதலை பெறவேண்டுமானால், கொலையானவர்களின் குடும்பத்தினர் கொலையாளியை மன்னிக்க வேண்டும். இறந்து போன குழந்தையின் பெற்றோர்கள், ரிசானாவின் குடும்பத்தினரையும், இலங்கை அதிகாரிகளையும் சந்திக்க மறுத்து விட்டனர். என் மகளை காப்பாற்றும்படி அல்லாவிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு இதை தவிர இப்போது வேறுவழி தெரியவில்லை என்கிறார் நபீக்.

    இலங்கை மந்திரி உசேன் பைலா கூறுகையில், இது தொடர்பாக இறந்து போன குழந்தை எந்த பழங்குடி இனத்தை சேர்ந்ததோ, அந்த பழங்குடி இனத்தின் தலைவர்களை சந்தித்து பேசி இருக்கிறோம். அவர்கள் குழந்தையின் பெற்றோரிடம் பேசுவார்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ரிஸ்வானா தூக்குமேடையில் இருந்து தப்பித்து விடுவாள் என்று தெரிவித்தார்.

    விடுதலைக்காக அனைவரும் பிராத்திப்போம்.

  11. #23
    இளம் புயல் பண்பட்டவர் aromabest's Avatar
    Join Date
    30 Jun 2006
    Location
    srilanka
    Posts
    110
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    17
    Uploads
    0

    Angry மதுவின் விளைவு-

    விபத்தில் காயமடைந்து ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டவர் வேன் மோதி பலி!

    கரூர் அருகே சாலை விபத்தில் காயமடைந்து ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டவர், அந்த ஆம்புலன்ஸ் மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள கோவில்பாளைய் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சண்முகம். இவர் கோவை ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி மயக்கமானார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து ஆம்புலன்ஸை வரவழைத்தனர். காயமடைந்த சண்முகத்தை ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆண்டாங்கோவில் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது எதிரே வந்த மாருதி வேன் மீது ஆம்புலன்ஸ் மோதியது. இந்த விபத்தில் ஏற்கனவே காயமடைந்திருந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் கொடுமை என்னவென்றால் சண்முகத்தை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸின் டிரைவர், குடிபோதையில் இருந்ததுதான். அந்த டிரைவரும் விபத்தில் காயமடைந்தார்.

  12. #24
    இளம் புயல் பண்பட்டவர் aromabest's Avatar
    Join Date
    30 Jun 2006
    Location
    srilanka
    Posts
    110
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    17
    Uploads
    0

    நாயகனைத் தேடிவந்த நட்புப் பறவை - பிரிந்தவ

    நாயகனைத் தேடிவந்த நட்புப் பறவை - பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா? (படம் இணைப்பு)

    மனிதர்களுக்கு மட்டுமா அந்த உணர்வு. ஏனைய உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் அதனை அதிகமாகவே கொடுத்திருக்கிறான் இறைவன். மோப்பம் பிடித்துத் தனது சொந்த இடத்துக்குத் திசை மாறாது, வழி தப்பாது திரும்பி வருவதில் மனிதர்களைவிட மிருகங்களும் பறவைகளும் வெகு திறமைசாலிகள்.

    குறிப்பாகப் பறவைகள் கால நிலை மாற்றத்துக்கு இசைவாக கடல் கடந்து நாட்டுக்கு நாடு இடம்மாறுவதில் கைதேர்ந் தவை. தமது சொந்த இடத்துக்கும் போய்ச் சேர்வதிலும் கெட்டித்தனம் மிக்கவை. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அதிசயப் பறவை ஒன்று இந்தப் பகுதியில் இதுவரை காணப்படாத பறவை ஒன்று மூளாயில் ஒரு குளத்தடியில் வந்துநின்றது.
    கடந்த மே மாதத்தில் இந்தப் புதிய பற வையை கண்டஇளைஞன் தங்கராஜா றேகன் அதனைப் பிடித்து கலைவாணி வீதியில் உள்ள வீட்டிற்குப் பிடித்துச் சென்று தனது செல்லப் பிராணியாக வளர்த்தார்.

    எனினும் பிராணிகள் வதையைத் தவிர்க்கும் நோக்குடன், பிரதேச செயலரின் ஆலோ சனைப்படி அந்தப் பகுதி கிராமசேவகர் முன்னிலையில் அந்தப் பறவை சுதந்திர மாகப் பறக்கவிடப்பட்டது.

    கட்டி வளர்க்கப்பட்டிருந்தாலும், வேறு சூழலில் வாழ்ந்திருந்தாலும் தனது வளர்ப் போனிடம் மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறது. ஐந்து அடி நீள இறக்கைகள் கொண்ட அந்த அதிசயப் பறவை. கடந்த ஜூலை மாதம் 6ஆம் திகதி தனது செல்லப்பறவை தன்னைத் தேடி தனது வீட்டுக்கு வந்ததாக மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் இளைஞன் றேகன்.

    அதிசப் பறவையைத் தான் கட்டி வளர்ப் பதில்லை என்றும், இரவில் வீட்டில் உள்ள மரம் ஒன்றில் உறங்கச் சென்று காலையில் இறங்கி வீட்டிற்குள் வந்துவிடும் என்றும் கூறுகிறார் அவர்.

    நாளாந்தம் சுமார் மூன்று கிலோ மீனை அதற்கு உணவாக வழங்குவதாகவும் அவர் மேலும் சொன்னார்.
    Last edited by aromabest; 05-08-2007 at 08:47 AM.

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •