Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 19 of 19

Thread: வணிக செய்திகள்(தமிழக அரசு NO: 1)

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    போஸ்ட் ஆபீசில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் * ரயில்வே - அஞ்சல் துறை ஒப்பந்தம்

    இனி அஞ்சலகங்கள் மூலமாகவும் ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ரயில்வே மற்றும் அஞ்சல் துறை அமைச்சகங்களுக்கு இடையே நேற்று கையெழுத்தானது.
    ரயில்வே ஸ்டேஷன்களில் டிக்கெட் முன்பதிவு செய்யக் கூடும் கூட்டத்தை குறைப்பதற்காகவும், பயணிகளின் வசதி கருதியும் ரயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக ரயில் டிக்கெட் முன் பதிவு வசதியை, தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்கள் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜா முன்னிலையில் நேற்று டில்லியில் கையெழுத்தானது. இதையடுத்து, இம்மாதம் 15ம் தேதியில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்கள் மூலமாக பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை பெற முடியும். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை இரண்டு அமைச்சகங்களும் பகிர்ந்து கொள்ளும். முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 30 முக்கிய அஞ்சலகங்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அஞ்சலகங்கள் மூலமாக முன்பதிவு டிக்கெட்டுகளை பெற, ரூ. 15லிருந்து ரூ. 30 வரை சேவைக் கட்டணம் பெறப்படும். இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி மற்றும் இருக்கை டிக்கெட்டுக்கு ரூ. 15ம், ஏசி 3 டயர் மற்றும் 'சேர் கார்' டிக்கெட்டுக்கு ரூ. 20ம், ஏசி முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்புக்கு ரூ. 30ம் சேவை கட்டணமாக வசூலிக்கப்படும். டிக்கெட்டை ரத்து செய்வதற்கு ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்படும்.புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பேசியதாவது:இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம். பயணிகளின் வீட்டுக்கே சென்று டிக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உருவானது. அஞ்சலகங்களின் வளர்ச்சிக்கும், அவற்றுக்கு தேவையான கம்ப்யூட்டர் மற்றும் பணியாளர்களை நியமிப்பதற்காகவும் தான் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி, தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்களில் கம்ப்யூட்டர் மூலமான பயணி முன்பதிவு முறை (பி.ஆர்.எஸ்.,) கவுன்டர்கள் மூலமாக அஞ்சல் துறை ரயில்வே டிக்கெட்டுகளை வழங்கும். இவை, 'இந்திய அஞ்சல் பி.ஆர்.எஸ்., மையங்கள்' என்ற பெயரில் செயல்படும். முதல் கட்டமாக நாடு முழுவதும் 30 அஞ்சலகங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் ஐகோர்ட் அஞ்சலகம், ஸ்ரீபெரும்புதூர் அஞ்சலகம் ஆகியவை இத்திட்டத்தில் சேர்க்கப்படும். இத்திட்டத்திற்கு தேவையான 'ஹார்டுவேர்' மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை ரயில்வே அமைச்சகம் வழங்கும். இட வசதி, பணியாளர்கள் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை அஞ்சல் துறை கவனித்துக் கொள்ளும். எதிர்காலத்தில், இ-டிக்கெட்டுகளை வழங்கும் வசதியும் சில அஞ்சலகங்களில் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பேசினார்.மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா பேசியதாவது:நாட்டில் அனைத்து இடங்களிலும் அஞ்சலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்வது வசதியாக இருக்கும். குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களுக்கு இத்திட்டம் பெரிய உதவியாக இருக்கும். ரயில்வே ஸ்டேஷன்கள் இல்லாத இடங்களில் கூட அஞ்சலகங்களில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்படும். அஞ்சலகங்களை ரயில்வே துறை பயன்படுத்துவது போல நாட்டின் அனைத்து இடங்களுக்கும் அஞ்சல்களை எடுத்துச் செல்ல ரயில்வே துறையின் சேவையை அஞ்சல் துறையும் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் நண்பன் என்ற சமூக பொறுப்பை அஞ்சல் துறை நிறைவேற்றியுள்ளது.இவ்வாறு அமைச்சர் ராஜா பேசினார்.


    நன்றி தினமலர்
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  2. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    இந்தியாவின் மூன்றாவது பெரிய தனியார் வங்கியான யு.டி.ஐ. (UTI) வங்கியின் பெயர் ஆக்ஸிஸ் வங்கி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 30ம் தேதி திங்கட்கிழமையில் இருந்து இந்த பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  3. #15
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    மகேந்திரா அண்டு மகேந்திரா வாகன விற்பனை 46 சதவீதம் அதிகம்


    மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவனம் இந்த வருட ஜூலையில் 19,163 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை விற்பனையை விட 46 சதவீதம் அதிகம். ஆனால் ஏற்றுமதி 4 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 655 வாகனங்களை ஏற்றுமதி செய்த அந்த நிறுவனம், இந்த ஆண்டு ஜூலையில் 627 வாகனங்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது.
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  4. #16
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    'இந்திய ரூபாய் மதிப்பு உயர்வுக்கு ஏற்ப வர்த்தகத்தை அமைத்து கொள்ளுங்கள்' * சிதம்பரம் வேண்டுகோள்

    ரூபாய் மதிப்பின் உயர்வால் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்ட மீண்டும் சலுகை வழங்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்றும், ரூபாய் மதிப்பு உயர்வுக்கு ஏற்றபடி தங்களுடைய வர்த்தகத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தெரிவித்தார்.அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஒரு டாலருக்கு ரூ.45 என்ற நிலையில் இருந்த ரூபாயின் மதிப்பு ஒன்பது சதவீதம் அதிகரித்து, தற்போது, ஒரு டாலர் மதிப்பு ரூ. 40 என்ற அளவில் உயர்ந்துள்ளது. இதனால், ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்த அளவே வருமானம் கிடைப்பதால், அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ரூ. ஆயிரத்து 400 கோடி திட்டத்தை கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால், ரூபாய் மதிப்பு உயர்ந்ததால், தங்களுடைய வருமானம் மிகவும் குறைந்து விட்டதாகவும், தாங்கள் குறிப்பிடும் விலைக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் ஒத்துக் கொள்ளாமல் வேறு விற்பனையாளரை தேடி சென்று விடுகின்றன என்றும் கூறியுள்ள ஏற்றுமதியாளர்கள், தங்களுக்கு அரசு மேலும் சில சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான திட்டங்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு சிந்தித்து வருகிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கமல்நாத் நேற்று முன்தினம் தெரிவித்தார். ஆனால், இதற்கு மாறாக, செய்தியாளர்களிடம் நேற்று பேசிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:ஏற்றுமதியாளர்களின் நிலையை உணர்ந்து, அவர்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளோம். தற்போதைய ரூபாய் மதிப்பு உயர்வுக்கு ஏற்றபடி ஏற்றுமதியாளர்கள், தங்களை மாற்றிக் கொள்வர் என்று நம்புகிறேன். அவர்களுக்கு மீண்டும் சலுகை வழங்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. பொருளாதாரம் வளர்ச்சி அடையும் போது, ரூபாய் மதிப்பு மட்டும் குறைவாக இருக்க வாய்ப்பில்லை. இதை, ஏற்றுமதியாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

    நன்றி தினமலர்
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  5. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    இந்திய ஜவுளிக்கு வெளிநாடுகளில் மவுசு * ஏற்றுமதி அதிகரிப்பால் 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

    இந்திய ஜவுளிகளுக்கு வெளிநாடுகளில் நல்ல மவுசு உள்ளதால், ஐந்தாண்டுகளில் ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்து, கூடுதலாக 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி வளர்ச்சிக்கான தேசிய கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.ஜவுளி தொழில் இந்தியாவில் பெரும் வளர்ச்சி பெற்று ள்ளது. அமெரிக்கா, பிரிட் டன், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குஜராத், மும்பை, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் ஜவுளி தொழிலில் முன்னணியில் உள்ளன. கைத்தறியில் தயாராகும் லுங்கி, வேஷ்டி போன்றவற்றுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகரித்து வருகிறது.துணிகள், டீ சர்ட் மற்றும் சட்டை போன்ற ரெடிமேட் ரகங்கள் உற்பத்தி நவீனப்படுத்தப்பட்டுள்ளது. ஜவுளி உற்பத்தியில் சீனா உலகில் முன்னணியில் உள்ளது. நவீன இயந்திரங்களே ஜவுளி உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. உற்பத்தி அதிகம் என்பதால் சீன ஜவுளிகளின் விலை குறைவு. இதனால், சீன ஜவுளிகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. தரத்தில் அளவில் இந்திய ஜவுளிகளுக்கு தனிமுத்திரை உள்ளது.இந்தியா - சீனா இடையே ஜவுளி உற்பத்தியில் 2008ம் ஆண்டு கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது. தொழில் வளர்ச்சி இந்தியாவில் அதிகரித்துள்ளதால், ரூபாய்க்கு இணையான அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்து ள்ளது. ஜவுளி தொழில் வீழ்ச்சியை தடுக்க வரி குறைப்பு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.ஒட்டுமொத்த வளர்ச்சி எட்டு சதவீதத்தில் தேசிய அளவில் தற்போது உள்ளது. இது மேலும் உயர வாய்ப் புள்ளது. கடந்த ஆண்டு ஜவுளி ஏற்றுமதி, 77 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. ஐந் தாண்டுகளில் இது ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டில் 41 ஆயிரத்து 850 கோடி ரூபாய்க்கு கூடுதலாக ஜவுளி ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ளதாக கவுன்சில் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆயத்த ஆடை தயாரிப்புக்கான பயிற்சி மையம் இந்தியாவில் 22 இடங்களில் உள்ளன. இதை உயர்த்தி கூடுதலாக 50 பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது. இதில் மூன்று மையங்கள் சென்னையில் அமையும். ஜவுளி கட்டமைப்பை விஸ்தரிக்க 35 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தேவை என்று கவுன்சில் கணித்துள்ளது. இந்த முதலீட்டில் தொழில் வளர்ச்சி அடையும் போது, 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி கவுன்சில் வட்டாரங்கள் தெரிவித்தன.


    நன்றி தினமலர்
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  6. #18
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    சென்னையில் விப்ரோ முழுமையாக கால் பதிக்கிறது! * ஆள் எடுப்பதும் அதிகரிப்பு


    தகவல் தொழில்நுட்பத்தில் தன் வர்த்தகத்தை விரிவுபடுத்த, சென்னையை குறி வைத்துள்ளது, பிரபல சாப்ட்வேர் நிறுவனம் விப்ரோ.சென்னையில் முழுமையான நிறுவனத்தை நிறுவி, விரிவாக்கத் திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ள இந்த நிறுவனம், சென்னையில் ஆள் எடுப்பதையும் அதிகரித்துள்ளது.விப்ரோ நிறுவனம் இதுவரை, ஐதராபாத் நகரில் முழுமையாக செயல்பட்டு வந்தது. இப்போது, சென்னையில் அதிக முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.தகவல் தொழில் நுட்ப வசதிகள், திறமையான பட்டதாரிகள் அதிகம் இருப்பதால், சென்னையில் அதிக திட்டங்களை செயல்படுத்த விரும்புகிறது. மாநில அரசின் ஒத்துழைப்பு, அதிகமாக கிடைத்திருப்பதால், விப்ரோவின் கவனம் இப்போது சென்னை பக்கம் திரும்பியுள்ளது.திறமையான இளைஞர்கள் கிடைப்பதால், ஐதராபாத்தை, ஆள் தேர்வில் சென்னை முந்தி விட்டது. கடந்தாண்டு, ஐதராபாத்தில், எட்டாயிரம் பேர் தான் தேர்வு செய்யப்பட்டனர்; சென்னையில், 8500 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.பெங்களூரு நகரில், தன் விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ள முதலில் விப்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், அங்கு நிலம் விலை அதிகம்; மாநில அரசின் ஒத்துழைப்பும் குறைவு. சென்னையில், அதிக சலுகை கிடைப்பதை உணர்ந்து, சென்னையில் முழு அளவில் விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ள உள்ளது.நான்காண்டில், சென்னையில், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து, அதிகம் பேருக்கு வேலை தர இலக்கு நிர்ணயித்துள்ளது. சென்னை அருகே, சோழிங்கநல்லூரில், 82 ஏக்கர் நிலம் வாங்க உள்ளது. 36 ஆயிரம் பேர் வேலை செய்யக்கூடிய வகையில், கட்டடங்களை கட்ட விப்ரோ திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, நான்காயிரம் பேர் வேலை செய்யக்கூடிய வகையில், முதல் கட்ட கட்டடம் அமைக்கப்படும்.கட்டுமான பணிகள் ஆரம்பித்துவிட்டதால், செப்டம்பர் மாதம், முதல் கட்ட பணிகளை விப்ரோ துவங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'அடுத்தடுத்து விரிவாக்கத் திட்டங்கள், இரண்டாண்டில் நிறைவேற்றப்படும்' என்று, விப்ரோவின் துணைத்தலைவர் சந்திரசேகர் கூறினார்.முதல் கட்ட திட்டத்துக்காக, 100 கோடி ரூபாய் செலவு செய்கிறது விப்ரோ. அடுத்தாண்டு மார்ச் மாதத்தில், ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்கவும் முடிவு செய்துள்ளது.

    நன்றி தினமலர்
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  7. #19
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் தமிழக அரசு 'நம்பர் ஒன்' * தனியார் நிறுவனங்கள் முதலீட்டில் குஜராத் முதலிடம்

    கடந்த நிதியாண்டில், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி, முதலீட்டில் முதலிடத்தை பிடித்துள்ள குஜராத். பெரிய நிறுவனங்களின் முதலீடுகளில் குஜராத் மட்டும் 25 சதவீதத்தை ஈர்த்துள்ளது.இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ள முடிவுகள்:குஜராத் மாநிலத்துக்கு, பல்வேறு பெரிய நிறுவனங்கள் 86 திட்டங்களில் ரூ.74,988 கோடி முதலீடு திட்டங்களை முன்வைத் துள் ளன. இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஆந்திரா, ரூ.24,173 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது. மகாராஷ்டிரா ரூ.24,330 மதிப்பிலான முதலீடுகளையும், தமிழகம் ரூ.22,229 கோடி மதிப்பிலான முதலீடுகளையும் ஈர்த்து அதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.வர்த்தக தலைநகராக உள்ள மும்பையை பின்னுக்கு தள்ளி, ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 54 திட்டங்களில் மொத்தம் ரூ.இரண்டு லட்சத்து 83 ஆயிரத்து 440 கோடி மதிப்பிலான திட்டங்களில் 25 சதவீதத்தை குஜராத் மாநிலமே பெற்றுள் ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில், மொத்தம் 812 திட்டங்களில், ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 299 கோடி மதிப்பில் பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தன. கடந்த 2002ம் ஆண்டில் பெரிய நிறுவனங்களின் முதலீடுகள் துவங்கி, கடந்த 200-05ல் உச்சக்கட்டத்தை அடைந்தது. தற்போது, இந்த முதலீடுகள் இதற்கு மேலும் அதிகரிக்காமலோ அல்லது குறையாமலோ, நிலைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.புதிய திட்டங்களுக்கனா அனுமதி அளித்ததில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் பெரிய நிறுவனங்களின் 157 திட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தை பிடித்துள்ள மகாராஷ்டிரா, மொத்தம் 142 திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.மிகப்பெரிய மாநிலங் களாக உள்ள உ.பி., ராஜஸ் தான், ம.பி., மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள், பெரிய நிறுவனங்களின் முதலீடுகளில் மிகவும் குறைவாக, முறையே 3.5 சதவீதம், 3.5 சதவீதம், 1.7 சதவீதம் மற்றும் 1.2 சதவீதம் பெற்றுள்ளன.இதற்கு முந்தைய ஆண்டில் கிடைத்த புதிய திட்டங்கள் 339. ஆனால், கடந்த நிதியாண்டில் கிடைத்துள்ள புதிய திட்டங்களின் எண்ணிக்கை 566. இவற்றில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை 33.

    நன்றி தினமலர்
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •