Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 19

Thread: வணிக செய்திகள்(தமிழக அரசு NO: 1)

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0

    வணிக செய்திகள்(தமிழக அரசு NO: 1)

    அரசு போக்குவரத்து கழகத்தில் விரைவில் 'இ-டிக்கெட்'

    அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில், வரும் செப்டம்பர் மாதம் 'இ-டிக்கெட்' முறையை அறிமுகப் படுத்த விரைவு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
    தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம் 955 பஸ் சேவைகளை மாநிலம் முழுவதும் இயக்கி வருகிறது. சாதாரண விரைவு பஸ்களை விட அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களின் கட்டணங்கள் அதிகமாக இருப்பினும், பயணிகள் இப்பஸ்களில் பயணம் செய்ய அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

    இப்பஸ்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய நீண்டவரிசையில் பயணிகள் வெகுநேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது.

    கம்ப்யூட்டர் மூலம் முன்பதிவு செய்யும் முறையை அமல்படுத்தினால், பயணிகளுக்கு சிரமங்கள் குறைவதோடு, டிக்கெட் விற்பனையும் 35 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது.

    ஆன்- லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்ய விரைவு போக்குவரத்துக் கழகம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. ரயில்களில் கம்ப் யூட்டர் மூலம் முன்பதிவு செய்வதை போல, இம்முறையில் எக்ஸ்பிரஸ் பஸ்களுக்கு எளிதாக பயணிகள் முன்பதிவு செய்து கொள்ள முடியும். அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் ஆன்-லைன் மையங்கள் பெங்களூரு, கோவை, ஈரோடு, ஓசூர், கோயம்பேடு, கும்பகோணம், கன்னியாகுமரி, மதுரை, மார்த்தாண்டம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாகர்கோவில், புதுச்சேரி, ராமேஸ்வரம், செங்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருவனந்தபுரம், திருப்பதி, திருவாரூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேளாங்கண்ணி உள்ளிட்ட 24 மையங் களில் 34 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட் டன. இதில் சில மையங்களைத் தவிர மற்ற இடங்களில் ஆன்-லைன் வசதி உண்டு. தினமும் ஐந்து ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்-லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விரைவு போக்குவரத்துக் கழகத்தின் ஆன்-லைன் திட்ட செயல்பாடுகள் குறித்து மேலாண்மை இயக்குனர் ராமசுப்பிரமணியன் கூறியதாவது:

    ஆன்- லைன் மூலம் 10 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

    சென்னை கோயம் பேடு மையத்தில் நான்கு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட் டுள்ளன. இந்த கவுன்ட்டர்களில் தினமும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப் பட்டு வருகின்றன.

    ஆன்-லைன் திட்ட செயல்பாடுகள் வெற்றிகரமாக செயல்பட துவங்கியவுடன், 'இ-டிக்கெட்' திட்டத்தையும் செப்டம்பர் மாதத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். 'இ-டிக்கெட்' நடைமுறைக்கு வந்தவுடன் பயணிகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கான டிக்கெட் டுகளை பதிவு செய்து கொள்ளலாம்.

    ஆம்னி பஸ்களை மிஞ்சும் வகையில் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களை அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாண்டுக்குள் 200 புதிய அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதில் 50 பஸ்கள் குளிர்சாதன வசதிகளோடு பயணிகளை கவரும் வகையில் அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

    நன்றி தினமலர்
    Last edited by namsec; 20-08-2007 at 04:52 AM.
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    சிங்கப்பூர் கம்பெனியை வாங்கியது 'விப்ரோ'

    சிங்கப்பூரில் உள்ள பிரபல அழகு சாதன நிறுவனமான, 'அன்சா'வை விலைக்கு வாங்கி விட்டது, இந்தியாவின் பிரபல சாப்ட்வேர் நிறுவனம் 'விப்ரோ'.சாப்ட்வேர் நிறுவனம், 'விப்ரோ' நுகர்வோர் பொருட்கள் தயாரிப்புக்காக, 'விப்ரோ கன்ஸ்யூமர் கேர் மற்றும் லைட்டிங்' நிறுவனத்தை நடத்தி வருகிறது. சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனமான, 'அன்சா' பல கோடி ரூபாய் மதிப்புக்கு, அழகு சாதன பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.இந்த நிறுவனத்தை, இரண்டு மாதம் முன்பே, விப்ரோ வாங்கிவிட்டது. ஆனால், அதை மூச்சு காட்டாமல் இருந்தது. இந்த நிறுவனத்தை வாங்கவில்லை என்று தொடர்ந்து மறுத்து வந்தது. இப்போது, சிங்கப்பூர் நிறுவனத்தை வாங்கியதை உறுதிப்படுத்தி விட்டது.இந்த சிங்கப்பூர் நிறுவனத்தை வாங்க, இந்தியாவின் பிரபலமான டாபர், இமாமி, கோத்ரேஜ் போன்ற நிறுவனங்களும் போட்டி போட்டன. யுனிலிவர், கால்கேட் பாமலிவ், சாரா லிவ் போன்ற நிறுவனங் களும் தொடர்ந்து முயற்சி செய்து வந்தன. இவ்வளவு போட்டி இருக்கும் போது, திடீரென விப்ரோ வாங்கியது யாருக்கும் தெரியாமல் இருந்தது. கடந்த மாதம் இறுதியில் தான் உறுதியான தகவல் தெரியவந்துள்ளது.சிங்கப்பூர் நிறுவனத்தை விப்ரோ நிறுவனம், ரூ.1250 கோடி தொகை கொடுத்து வாங்கியுள்ளது. வெளிநாட்டு அழகுசாதன பொருள் தயாரிப்பு நிறுவனமான சிங்கப்பூர் நிறுவனத்தை விப்ரோ வாங்கியிருப்பது பலரையும் வியப் படைய வைத்துள்ளது.

    நன்றி தினமலர்
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    எரிக்ஸன் நிறுவனத்துடன் பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ. 8 ஆயிரம் கோடிக்கு வர்த்தக ஒப்பந்தம்

    இந்தியாவின் பிரபல தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், சுவீடனின் எரிக்ஸன் நிறுவனத்துடன் ரூ.8 ஆயிரம் கோடிக்கு வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையில், தனியார் நிறுவனம் ஒன்று இவ்வளவு பெரிய தொகைக்கு வர்த்தக ஒப்பந்தம் செய்திருப்பது இதுவே முதல் முறை. தங்களது தகவல் தொழில் விரிவாக்கத்திற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஜாயின்ட் மேனேஜிங் டைரக்டர் அஹில் குப்தா தெரிவித்தார். இந்தியாவில் 15 இடங்களில் பார்தி ஏர்டெல் நிறுவனம் அமைக்கும் ஜிஎஸ்எம் நெட்வொர்க் சேவையை, எரிக்ஸன் நிறுவனம் திட்டமிட்டு, வடிவமைத்து, நிறுவி, நிர்வாகம் செய்யும் என்பது போன்ற விஷயங்கள் இந்த ஒப்பந்தத்தில் ஒரு பகுதியாக இருக்கிறது. பி எஸ் என் எல் நிவுவனம் ஏற்கனவே தங்களது நெட்வொர்க் சேவை விரிவாக்கத்திற்காக எரிக்ஸன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பின் அது சிக்கலாகிப்போனதை அடுத்து பார்தி ஏர்டெல் நிறுவனம் அவர்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

    நன்றி தினமலர்
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    சென்னையில் அடுத்தாண்டு 8வது சர்வதேச தொழில் கண்காட்சி
    சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ள அக்மி கண்காட்சி கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (அய்மா) மற்றும் அய்மா தொழில்நுட்ப மையம் (ஏ.டி.சி.,) ஆகியவற்றின் சார்பில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.அடுத்தாண்டு ஜூன் மாதம் 19 முதல் 23ம் தேதி வரை சென்னை, நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடக்கவுள்ள இக்கண்காட்சிக்கு ஐ.டி.பி.ஓ., அங்கீகாரம் வழங்கி உள்ளது. கண்காட்சியில் 15 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் வர்த்தகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    எல்லாமே எனக்குத்தெரியாத புது விஷயங்கள் நாம்செக் அவர்களே. புதிய செய்திகளை தெரிந்துகொள்ள உதவியதற்கு மிக்க நன்றி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    ரூபாய் மதிப்பு உயர்வால் ஐ.டி., தொழிலுக்கு பாதிப்பா? விப்ரோ நிறுவன தலைவர் பிரேம்ஜி பேட்டி

    ""இந்திய தகவல் தொழில்நுட்பத் தொழிலின் தரம் சிறந்தது என்றும் நிலையானது என்றும்'', விப்ரோ நிறுவனத் தலைவர் ஆசிம் பிரேம்ஜி தெரிவித்தார்.

    டாலருக்கு நிகரான மாற்று மதிப்பில் ரூபாய் மதிப்பு அதிகரிப்பதால், அமெரிக்காவில் இருந்து வரும் மென்பொ ருள் வர்த்தகம் பாதிப்பாகும் என்ற கவலையும் தேவையற்றது என்று குறிப்பிட்டார். மென்பொருள் ஏற்றுமதியில் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது விப்ரோ நிறுவனம். நாடு முழுவதும் உள்ள முன்னணி "சாப்ட்வேர் தொழில்நுட்ப நிறுவனங்கள்' மொத்தம் இருபது. அதில் டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ், விப்ரோ என்று மூன்றாவது இடத்தில் உள்ள நிறுவனம். இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.

    அதன்படி, விப்ரோ நிறுவனத்தின் வருவாய் ரூ. 725.6 கோடியாக அதிகரித்துள்ளது. ஆயினும், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால், லாப மதிப்பு 17 சதவீதமாக உள்ளது. இது எதிர்பார்த்ததைவிட குறைவு என்று அந்நிறுவனம் கருதுகிறது. விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ஆசிம் பிரேம்ஜி இது குறித்து கூறுகையில், ""கடந்த காலாண்டில் நிறுவனத்தின் வளர்ச்சி திருப்திப்படும்படி உள்ளது. புவியியல் எல்லைகளைத் தாண்டி எங்களின் வர்த்தகம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. எங்களுடைய சேவை, தொழில்நுட்ப கட்டுமான சேவை மற்றும் மென் பொருள் சாதனம் ஆகியவை ஆண்டுதோறும் 50 சதவீத வளர்ச்சி அடைந்து வருகின்றன. வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ள இரண்டாவது காலாண்டில் எங்களுடைய வருவாய் ரூ. 3,263.40 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ""சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் எங்கள் நிறுவனத்தின் 65 சதவீத வருவாய் அமெரிக்காவிலிருந்தும், 30 சதவீதம் ஐரோப்பாவிலிருந்தும் வருகிறது. ""டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ள காரணத்தால், இந்தியாவில் நிறுவனங்கள் அமைத்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் வேறு நாடுகளுக்கு சென்று விடுமோ என்று இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை கவலைப் படதேவையில்லை.

    ""பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனா, பிலிப்பைன்ஸ், லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்றவற்றில் ஏற்கனவே கிளைகளை துவக்கியுள்ளன. டாலருக்கு எதிரான கரன்சி மதிப்பு குறைவாக இருக்கும் வியட்நாம் போன்ற நாடுகளில் கிளைகளை பரப்ப அவை முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இவற்றால் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் பாதிக்கப்படாது. ஏனெனில், நிலைத் தன்மை, தரம், தலைமைப்பண்பு, அறிவுத் திறன் ஆகியவற்றில் மற்ற நாடுகளை விட இந்திய தகவல் தொழில்நுட்ப துறை முன்னணியில் உள்ளது,'' என்று கூறினார். தவிரவும் தன் மூத்த மகன் ரிஷத் பிரேம்ஜி வர்த்தக வளர்ச்சி நிர்வாகியாக நேற்று முன்தினம் சேர்ந்ததாகவும், அதற்கு முறையான ஒப்புதலை கம்பெனி நிர்வாகம் தந்தது என்றும் குறிப்பிட்டார்.


    நன்றி தினமலர்
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    அண்ணா, அசத்துங்க... தமிழ் மன்றத்தூண் ஆகிவிட்டீர்கள்..
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by தங்கவேல் View Post
    அண்ணா, அசத்துங்க... தமிழ் மன்றத்தூண் ஆகிவிட்டீர்கள்..
    வாழ்த்துக்கு நன்றி தூண் ஆனால் மட்டும் போதுமா உதவியாளர் ஆக வேண்டாமா
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    சென்செக்ஸ் உயர்வு சிதம்பரம் எச்சரிக்கை

    ''பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மதிப்பீடுகளை முழுவதுமாக நம்ப வேண்டாம்,'' என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.மும்பைப் பல்கலைக்கழகத்தில் நுண்ணறிவியல் மற்றும் நுண்தொழில்நுட்ப மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:பங்குச் சந்தையில் சென்செக்ஸ் உயர்வு என்பது சில முக்கிய நிறுவனங்கள் வளர்ச்சியை குறிப்பிடும் அளவீடுதானே தவிர, அது ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தின் அளவீடு அல்ல. ஏனெனில், பங்குச் சந்தை சென்செக்ஸ் மதிப்பீட்டில், விவசாயம் மற்றும் இதர துறைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் பாரத ரிசர்வ் வங்கி சிறப்பாக பணியாற்றியுள்ளது. பொருளாதார வளர்ச்சியால் தான் பணவீக்கம் ஏற்படுகிறது. வருங்காலத்தில் பணவீக்கம் அதிகரிக்கும். ஆனால், அது சரியான வீதத்தில் தான் இருக்கும்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    பங்குச் சந்தை... அதிருதுல்ல...!

    இறங்குமா... இறங்கிடுச்சுன்னா... என்ற பதைபதைப்புடன் ஒவ்வொரு நாளும் பங்குச் சந்தையை உற்று நோக்கும் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் தான் அதிகம். இது பயமா அல்லது எச்சரிக்கையுடன் அணுகுகிறார்களா என்பது புரியாத புதிர். பங்குச்சந்தை சரிந்து கொண்டே இருந்தால், எப்போத்தான் ஏறுமோ என அங்கலாய்ப்பதும். ஏறிக் கொண்டே இருந்தால், பாரு சட்டுன்னு ஒரு நாளைக்கு அடிவாங்கத்தான் இப்படி ஏறிக்கொண்டு இருக்கும் என பலரும் புலம்புவதை கேட்க முடியும். இந்த மாதிரி புலம்புபவர்கள் எல்லாருமே பங்குச் சந்தையில் பணத்தை விட்டவர்களாகத்தான் இருப்பார்கள். இவர்கள் அனைவருமே பங்குச் சந்தையை பணம் காய்க்கும் மரம் என நினைத்து வந்து ஏமாந்தவர்களாக இருப்பார்கள். உலக நாடுகளில் பங்குச் சந்தைகள் நன்றாக இருப்பதும், நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் நன்றாக இருப்பதால் பங்குச் சந்தை தொடர்ந்து ஏறிக்கொண்டு இருக்கிறது. இதுதான் உண்மை. பங்குச் சந்தையை நீண்ட கால முதலீடாக பார்ப்பவர்களுக்கு இது அமுதசுரபி என்றால் அது மிகையில்லை. இதுவரை பங்குச் சந்தையில் ஈடுபடாதவர்கள் நாமும் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா என்று பலரும் நினைக்கும் அளவுக்கு பங்குச் சந்தை உச்சத்தில் போய் நிற்கிறது. வாரம் ஒரு புதிய உச்சத்தை எட்டுகிறது. இந்த வாரம் மும்பை பங்குச் சந்தை 15,565 புள்ளிகளுடன் முடிவடைந்தது. இது ஒரு புதிய அளவாகும். பதினைந்து வருடங்களுக்கு முன், பங்குச் சந்தை பங்கு நிலவரங்களை உடனடியாக தெரிந்து கொள்ள 'ஸ்டாக் எக்சேஞ்சு'க்கு சென்றால் தான் தெரிந்து கொள்ள முடியும். ஆதலால், ஆர்வமுள்ளவர்கள் பங்குச் சந்தைகளுக்கு முன் கூடி நிற்பர். தற்போது நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், வீட்டில் இருந்தபடியே நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம்; வர்த்தகத்தில் ஈடுபடலாம் என்ற நிலை வந்தவுடன் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். குஜராத் போன்ற மாநிலங்களில் காய்கறி விற்பவர்களில் இருந்து பால்காரர் வரை பங்குச் சந்தை நிலவரம் பேசும் அளவுக்கு முன்னேறியுள்ளனர். மும்பை பங்குச் சந்தை தன்னுடைய நடவடிக்கைகளை, நிலவரங்களை தற்போது குஜராத்தி மொழியிலும் வெளியிட ஆரம்பித்துள்ளது.
    இந்த வார முக்கிய நிகழ்வாக டி.சி.எஸ்., கம்பெனியின் முடிவுகளை சொல்லலாம். சென்ற வாரம் வெளிவந்த இன்போசிஸ் கம்பெனியின் முடிவுகளை வைத்து பார்த்தபோது டி.சி.எஸ்., கம்பெனியின் முடிவுகள் எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருக்கும் என பலர் அபிப்பிராயம் தெரிவித்து இருந்தனர்.

    ஆனால், அந்த கம்பெனியின் முடிவுகள் எதிர்பார்த்ததற்கு எதிராக நன்றாக இருந்ததால், பங்குச் சந்தையை தூக்கிச் சென்றது. தொடர்ந்து வந்த சில கம்பெனிகளின் (எல் அண்டு டி ரான்பாக்கி மற்றும் டி.எல்.எப்.,) முடிவுகளும் அதுபோலவே இருந்ததால் வாரம் முழுவதும் பங்குச் சந்தை களை கட்டியிருந்தது.

    திங்களன்று துவக்கமே சிறிது ஏற்றத்துடன தான் ஆரம்பித்தது. முடிவாக 32 புள்ளிகள் மேலே சென்றது. கன்ஸ்ட்ரக்ஷன் பங்குகள் மேலே சென்றன. திங்களன்று மாலை வெளிவரும் டி.சி.எஸ்., கம்பெனியின் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற பயமும் சந்தையில் சிறிது தெரிந்தது.

    மூன்று தினங்களாக மேலேயே சென்று கொண்டிருந்த பங்குச் சந்தை, செவ்வாயன்று சந்தை ஒரு குறைந்த மூடிலேயே இருந்தது. அன்றைய தினம் மேலும், கீழுமாக சென்று கொண்டிருந்த சந்தை முடிவாக 21 புள்ளிகள் சரிந்தது. நல்ல ரிசல்ட்டால் டி.சி.எஸ்., கம்பெனியின் பங்குகள் மேலே சென்றது.

    செவ்வாய்க்கிழமை போலத் தான் இருந்தது புதன் கிழமையும். ஒரு 'டல்'லான நாளில் 11 புள்ளிகள் மட்டுமே மேலே சென்றது.

    ரான்பாக்சி மற்றும் எல்.டி., கம்பெனிகளின் அருமையான காலாண்டு முடிவுகள் ரிலையன்ஸ் கம்பெனிக்கு சாதகமாக கிடைத்த காஸ் விலை சம்பந்தப்பட்ட கோர்ட் தீர்ப்பு ஆகியவை பங்குச் சந்தையை வியாழனன்று தூக்கிச் சென்றது. முடிவில் 248 புள்ளிகள் அதிகமானது. 67 பங்குகள் புதிய அளவை எட்டின.

    வெள்ளியன்று, வியாழனின் மூடிலேயே பங்குச் சந்தை துவங்கியது. ஏறுவதும், இறங்குவதுமாக இருந்த பங்குச் சந்தை முடிவாக 15 புள்ளிகள் அதிகமாகி முடிவடைந்தது. வெள்ளியன்று இறுதியில் மும்பை பங்குச் சந்தை 15,565 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 4,566 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. இது ஒரு சாதனை அளவாகும். சாதனைகள் ஏற்படுத்தப்படுவதே முறியடிப்பதற்காக தானே. மக்களிடம் அபரிமிதமாக புழங்கும் பணம், அவர்களின் மூடு ஆகியவை பங்குச் சந்தையை மேலே கொண்டு செல்லலாம். அடுத்த வாரம் பல புதிய வெளியீடுகள் வருகிறது. குறிப்பாக மத்திய அரசாங்கத்தின் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் புதிய வெளியீடு வருகிறது. இது ஒரு பெரிய வெளியீடு ஆகும். ஆதலால் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். மார்க்கெட்டில் தற்போது இந்த வெளியீட்டுக்கு 30 முதல் 36 வரை பிரிமீயம் கிடைப்பதாக செய்திகள் வெளிவருகின்றது. முதலீடு செய்யலாம். சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த 'எவரான்' என்ற நிறுவனம் புதிய வெளியீடைக் கொண்டு வந்தது. அந்த வெளியீடு 125 தடவைக்கு மேல் உடன்பாடு செய்யப்பட்டு ஒரு சாதனை படைத்தது.

    'ஸ்பைஸ் டெலிகாம்' புதிய வெளியீடு இந்த வாரம் மும்பை பங்குச் சந்தையில் பட்டியல் செய்யப்பட்டது. ரூ.46 க்கு வெளியிடப்பட்ட பங்குகள் முதல் நாள் 62 வரை விற்கப்பட்டது. பரவலாக போட்டவர்கள் எல்லாருக்கும் கிடைத்த வெளியீடு இது. ஆதலால், எல்லாரும் லாபம் அடைந்தனர். வெள்ளியன்று முடிவடைந்த 'ஓமேக்ஷ்' என்ற டில்லியைச் சேர்ந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் புதிய வெளியீடு 70 தடவைகளுக்கு மேல் செலுத்தப்பட்டு உள்ளது. பங்குகள் கிடைப்பவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். சமீப காலமாக யாரும் வேண்டாத கன்ஸ்ட்ரக்ஷன், சிமென்ட் போன்ற துறைகள் மறுபடியும் விருப்பமான துறைகளாக கருதப்படுகிறது. இத் துறைகளின் பங்கு விலைகள் கூடிக் கொண்டே போகிறது. சந்தை மிகவும் கீழே இறங்குமா? இது ஒரு பெரிய கேள்விக் குறிதான். இந்திய பங்குச் சந்தை உலகச் சந்தைகளின் போக்கிலேயே போவதால், உலகளவில் ஏதேனும் கரெக்ஷன் வருமானால் அது இங்கேயும் எதிரொலிக்கும். அதுவரை மேலே செல்ல வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும்'நிப்டி' க்கும் 'நிப்டி பியூச்சரு'க்கும் புள்ளிகள் வித்தியாசம் இருப்பதால் பங்குச் சந்தை ஆட்டம் காண்பதற்கு அறிகுறியாக இருக்கலாம் அனுபவஸ்தர்கள் கோடிட்டு காட்டுகின்றனர். சீனா வட்டி வீதங்களை கூட்டி உள்ளது என்ற செய்தி - வெள்ளியன்று சந்தை முடிவடைந்த பிறகு வந்த செய்தி. மேலும், பண வீக்கம் 4.27 சதவீத அளவில் உள்ளது என்பதாகும். இவை பங்குச் சந்தையை திங்களன்று எவ்வாறு பாதிக்கப் போகிறது என்று காத்திருந்து பார்க்க வேண்டும்.

    நன்றி தினமலர்
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    கோடி கோடியாய் கொட்டுது அன்னிய முதலீடு * தொழில் வளர்ச்சியில் ஒளிர்கிறது தமிழகம்

    கடந்த ஓராண்டில் மட்டும் 12 ஆயிரத்து 535 கோடி ரூபாய் என்ற அளவில் தமிழகத்திற்கு நேரடி அன்னிய முதலீடுகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் ஏராளமான தொழில் நிறுவனங்கள் துவங்க இருப்பதால், பல லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.தகவல் தொழில் நுட்பம், வாகன உதிரி பாகங்கள் என பல்வேறு தொழில்கள் உலக அளவில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த துறைகளில் புதிதாக தொழில் துவங்க கடந்த சில ஆண்டுகளாக பல அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றன. தட்ப வெப்ப நிலை, சாலை மற்றும் போக்குவரத்து வசதி, துறைமுகம், விமான நிலையம், இடவசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் கால் பதித்து வருகின்றன. கடந்த ஓராண்டில் 12 ஆயிரத்து 535 கோடி என்ற அளவில் தமிழகத்தில் அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது இதற்கு சிறந்த உதாரணமாகும்.மொபைல் போன் உற்பத்தியில் பெயர் பெற்ற மோட்டரோலா நிறுவனம் 135 கோடி ரூபாய் செலவில், 'ஹேன்செட்ஸ்' தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7ம் தேதி ஒப்பந்தம் செய்தது. அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் 520 கோடி ரூபாய் முதலீட்டில், 'ரேடியல் டயர்' தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி ஒப்பந்தம் செய்தது. தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, 'டெஸ்ஸால்வ்' நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாயில் புதிய தொழிற் சாலை துவங்க ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி ஒப்பந்தம் செய்தது. 'டெல்' நிறுவனம் 280 கோடி ரூபாய் முதலீட்டில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்க கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதே போல் 300 கோடி ரூபாய் செலவில் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலை துவங்க, 'தாய்வான்' நிறுவனம் ஒன்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 'சாம்சங்' நிறுவனம் 450 கோடி ரூபாய் செலவில் வாஷிங் மெஷின், 'டிவி', ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.ஒரகடம் பகுதியில் ஆயிரத்து 100 ஏக்கர் பரப்பளவில் ஆண்டிற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் வகையில் மஹிந்திரா கார் தொழிற்சாலை நான்காயிரம் கோடி ரூபாய்க்கு கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி ஒப்பந்தம் செய்துள்ளது. அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்த முதலீடு முழுமை அடையும். மோட்டார் வாகன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அமைக்க ஆயிரத்து 500 கோடியும், ஒரகடத்தில் கனரக வாகன தயாரிக்கும், 'கோமட்சு' நிறுவனம் 75 கோடியும் முதலீடு செய்து, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மின்னணு வன்பொருள் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம் கடந்த மாதம் 225 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. மூன்றாயிரத்து 750 கோடி முதலீட்டில் மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று கடந்த மே மாதம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த வகையில் மொத்தம் 12 ஆயிரத்து 535 கோடி ரூபாய் நேரடி அன்னிய முதலீடு தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. அதே போல் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டிய நிறுவனங்களும் ஏராளமாக உள்ளன. இந்த வகையில் கூடுதலாக 10 ஆயிரத்து 575 கோடி ரூபாய் முதலீடு கிடைக்க உள்ளது. 10 இடங்களில் தொழிற்பேட்டைகள் :தமிழகத்தில் 2007-08ம் ஆண்டில் 10 இடங்களில் புதிய தொழிற்பேட்டை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, திருவாரூர், விழுப்புரம், பெரம்பலூர், கிருஷ்ணகிரி மாவட்டம் பொல்லுபல்லி, பர்கூர் பாகம் 2, ஒரகடம் (காஞ்சிபுரம்), கக்கலூர் (திருவள்ளூர்), சங்ககிரி (சேலம்), சேடபட்டி (மதுரை), மொடகுறிச்சி (ஈரோடு) ஆகிய இடங்களில் புதிய தொழிற் பேட்டைகள் அமைக்கப் பட்டு வருகின்றன.

    நன்றி தினமலர்
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    இந்தியாவில் அமைக்கிறது போயிங் விமான கம்பெனியின் ஒர்க் ஷாப்

    புதுடில்லி : உலகின் மிகப்பெரிய விமான கம்பெனியான போயிங் நிறுவனம், இந்தியாவில் அதற்கென்று ஒர்க் ஷாப் அமைக்கிறது. எம் ஆர் ஓ என்று அழைக்கப்படும் மெயின்டனன்ஸ், ரிப்பேர் மற்றும் ஓவர்ஹவுல் வேலைகளை செய்வதற்காக இந்தியாவில் நாக்பூரில் அது ஒர்க்ஷாப் அமைக்கிறது. இதற்காக நாக்பூரில் இருக்கும் சிறப்பு பொருளாதார மையத்தில் 75 ஏக்கர் நிலத்தை அந்த கம்பெனி தேர்வு செய்துள்ளது. 10 கோடி டாலர் ( சுமார் 400 கோடி ரூபாய் ) முதலீட்டில் அமைய இருக்கும் ஒர்க்ஷாப்பிற்கான வேலைகள் இந்த ஆண்டு துவங்கும் என்று அந்த கம்பெனி வைஸ் பிரஸிடென்ட் ( விற்பனை ) தினேஷ் கேஸ்கர் தெரிவித்தார். இந்த கம்பெனியில் போயிங், ஏர் - இந்தியா மற்றும் இன்னொரு கம்பெனி ஆகியவை பார்ட்னராக இருப்பர். அந்த மூன்றாவது பார்ட்னரை தேடும் வேலை நடந்து வருகிறது. ஏற்கனவே எம் ஆர் ஓ தொழிலில் அனுபவம் உள்ள பல கம்பெனியினரிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். போயிங் கம்பெனியிடம் 68 விமானங்களுக்கு ஏர் இந்தியா ஆர்டர் கொடுத்துள்ள நிலையில், இந்தியாவில் இந்த ஒர்க்ஷாப்பை போயிங் அமைக்கிறது. இந்த ஒர்க்ஷாப்பில் விமானங்களை பெரிய அளவில் சோதித்து பார்க்கவும், ரிப்பேர் வேலைகள் பார்க்கவும் முடியும். இங்கு ஏர் இந்தியா வை சேர்ந்த விமானங்கள் மட்டும் அல்லாமல், மற்ற நிறுவனத்தை சேர்ந்த போயிங் விமானங்களையும் சர்வீஸ் செய்ய இருக்கிறார்கள். இந்தியாவில் ஏர் இந்தியா,ஜெட் ஏர்வேஸ்,ஸ்பைஸ்ஜெட், ஜெட்லைனர் போன்ற நிறுவனங்களில் இருந்து இப்போதே போயிங்கிற்கு 141 விமானங்களுக்கு ஆர்டர்கள் இருக்கின்றன. இந்தியன் ஏர்போர்ஸ் கூட வி.ஐ.பி.களின் பயணத்திற்காக 3 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. மேலும் இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள விமான கம்பெனிகளுக்கு 911 புதிய விமானங்கள் தேவைப்படும் என்று போயிங் கணக்கிட்டுள்ளது. இது 8 ஆயிரத்து 600 கோடி டாலர் ( சுமார் 34 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ) மதிப்புள்ளது.

    நன்றி தினமலர்
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •