Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 33

Thread: லண்டனில் ஒருநாள் - பகுதி 3

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    லண்டனில் ஒருநாள் - பகுதி 3

    ஓவியாக்காவோட வீட்டைப் பார்த்ததுமே பிரமிச்சுப் போயிட்டேன். பின்னே? மலேசியாவிலிருந்து இங்கிலாந்து போன

    மகராசி இப்படி ஒரு மாளிகையிலயா குடியிருக்கணும்?./. அக்கா இருந்தாலும் இது டூ மச். சுவத்தில ஒரு பொண்ணோட

    படம் மாட்டியிருந்தது. அந்தப் பொண்ணூ பாக்கறதுக்க நல்ல லட்சணமா மூக்கும் முழியுமா இருந்தது. தலையில

    கொண்டை, அதைச்சுத்தி மல்லிகைப் பூ, கண்ணைத் தாண்டுற மை, வரைஞ்சுவிட்ட புருவம், உதட்டுல எடுத்தடிக்கிற

    சாயம், புடவையை கொஞ்சம் வித்தியாசமா கட்டிட்டு ஒருவித போஸில் அந்த பொண்ணூ இருந்தது. அக்காகிட்ட இது

    யாருன்னு கேக்கலாம்னு நினைச்சேன். அப்பறம் நம்மள தப்பா நினைச்சுருவாங்களேன்னு கேக்கல. ஆனா அந்த

    பொண்ணோட போட்ட மூலைக்கு மூலை கிடந்தது. எல்லாமே வித்தியாசமான போஸில.... நண்பர்களே! அந்த அம்மணி

    யாருன்னு நீங்களாவது கேட்டு சொல்லுங்க,.. வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் நேரே போனது அக்காவோட சமையலறைக்கு..

    எங்கவீட்ல சமையலறை எப்படி இருக்கும் தெரியுங்களா? அங்கங்கே புழுதியடிச்ச பாட்டில்களும் பழைய காம்ப்ளான்

    டப்பாக்களும் அஞ்சறைப் பெட்டிகள் சிலதும் தொங்கவிடப்பட்டிருக்கும். அப்பறம் கீழே சிலிண்டர், அருவாமனை கத்தி

    கடப்பாறை போன்ற இத்தியாதிகள். ஆனா நம்ம ஓவியாக்காவோட வீட்ல ரொம்பவே வித்தியாசம். எந்தப் பொருளை

    எடுத்துகிட்டீங்கனாலும் அது நவீனமா இருந்தது. சுத்தமான தண்ணீ வரதுக்குன்னே ஏதோ ஒரு பெட்டியை சொறுகி

    வச்சுருக்காங்க. அதுல இருந்து சொட்டு சொட்டா தண்ணி ஒழுகும்.. பாத்திரமெல்லாம் பளிச்சுனு சுத்தமா அடுக்கி

    வச்சுருந்தாங்க... ரொம்ப சுத்தமான ஆள்தான் ஓவியாக்கா. சாப்பாடும் பருப்பும் செஞ்சி வச்சுருந்தாங்க. சரி கொடுங்க

    உங்க டேஸ்ட பார்ப்போம்னு சொன்னேன்... அடடா,,,, வெள்ளிக் கிண்ணம் மாதிரி ஒரு தட்டத்தில பரிமாறிப் போட்டாங்க

    பாருங்க..... அங்கிருக்கிற நவீன அழகுல மயங்கி விழுந்துட்டேன். சாப்பாடு நம்ம ஊர்மாதிரி பெரிசு பெரிசா இல்லிங்க,..

    நல்ல நீள நீளமா பாசுமதி அரிசி மாதிரி இருந்துச்சி. நல்லா வயிறு முட்ட சாப்பிட்டு முடிச்சேன். அப்படியே மன்றம் பத்தி

    பேசினோம். கொஞ்சம் வாழ்க்கை பத்தி பேசினோம். ரெண்டு பேரும் கண்ணுல தண்ணீ வர சிரிச்சு பேசியிருக்கோம். இது

    கொஞ்சம் வித்தியாசம்... சிரிக்கலை...

    கொஞ்சம் நேரத்தில வயிறு கடமுடா... சாப்பாடு பிரச்சனையோ?

    ஓடினேன் பாருங்க டாய்லெட்க்கு.... கொஞ்சம் வெளிப்படையா சொல்றேன். என்னடா இதைப் போய் சொல்றானேன்னு

    தப்பா நினைக்காதீங்க.. நம்மூர்ல ரெண்டு வகை பார்த்திருப்போம். ஒண்ணு உள்ளூர் முறை, இன்னொன்னு பாம்பே முறை..

    என்ன சொல்ல வரேன்னு புரியுதுங்களா? . அக்காவீட்ல இருந்தது இண்டர் நேசனல் முறை... கொஞ்சம் கஷ்டம் தான்..

    சமாளிச்சுட்டேன்.

    சாப்பாடு வெச்சு என்னை கொல்லப் பார்த்த ஓவியாக்காமேல எனக்குத் துளி கூட கோவமில்லை. ஏன்ன்னா அவங்க

    என்னோட உடன் பிறவா சகோதரி (பிண்ணனி இசையெல்லாம் வேண்டாம்).. அப்படியே வீட்டை சுத்திப் பார்த்துட்டு

    இருந்ததில நேரம் போனதே தெரியல... லண்டனை சுத்தாம ஓவியா வீட்டைச் சுத்தினா பொழப்பு எப்படி இருக்கும்?

    பின்னே லண்டனை சுத்திப் பார்க்கும் போதுதானே இண்டர்நேசனல் பிகருங்க நம்மள கொஞ்சம் பார்ப்பாங்க...

    ஓவியாக்காவை கிளப்பினேன். லண்டனை ஒரே நாள்ல சுத்திக் காமிக்கணும்.. இல்லாட்டி பெங்களூர் ஆட்டோ வரும்னு

    எழுதி கையெழுத்து வாங்கிட்டுத்தான் வீட்டைவிட்டு கிளம்பினோம். நேரா இவங்க படிக்கற காலேஜுக்கு... ஹி ஹி.

    அங்கதானே பொண்ணுங்க நிறையா இருக்கும்.... ( இதையெல்லாம் வெச்சு ஆதவன் ஜொள்ளுறானேனு தப்பா ஃபீல்

    பண்ணாதீங்க... ஆதவனுக்கு மறுபக்கம் இருக்கு... அதுக்குப் பேரு முதுகுன்னு சொல்லி கிண்டல் பண்ணாதீங்க.. ஆமாம்

    சொல்லிப்புட்டேன். )

    ஓவியா கல்லூரியில் சோகம் : அடுத்த பாகத்தில்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    ஆமா... டொயிலட்டுக்குள் என்ன நடந்தது? அது உடைந்துவிடவில்லையே???
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஆதவா..மூன்றாம் பாகம் சட்டென்னு முடிஞ்சிருச்சே....சோகம் நமக்கு வந்தால் பிடிக்காது..கதைகளில் அதைப்படிக்க ஆசையாக* இருக்கும்.


    அன்பு என்னாதிது..

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதவா View Post
    சாப்பாடு வெச்சு என்னை கொல்லப் பார்த்த ஓவியாக்காமேல எனக்குத் துளி கூட கோவமில்லை. ஏன்ன்னா அவங்க

    என்னோட உடன் பிறவா சகோதரி (பிண்ணனி இசையெல்லாம் வேண்டாம்).


    விமர்சிக்க வார்த்தை வருகுதில்லையே ஆதவா!.......................

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    ஆமா ஆதவரே... இடைவெளி விட்டு எழுதினால், பெரிதாகத் தோன்றும் என்ற தந்திரமா...
    இதெல்லாம் சரிப்படாது... ஆதவரை மன்றத்தில் கட்டி வையுங்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அப்படின்னா ஓவியாக்கா வீட்டில் சாப்பிடக்கூடாது என்கிறீர்களா? நல்ல வர்ணனை. தொடருங்கள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அன்பு.. உதையெல்லாம் எழுதினா அப்பறம் குப்பையில போட்டிருவாங்க.... ஜாடை மாடையா சொல்றேன் புரிஞ்சுக்கோங்க..... ஒரே சத்தமா இருந்தது..
    -----------------------------
    அமரரே! பின்னூட்டங்களில் கதையை முடிச்சுடலாமோன்னு ஒரு யோசனை இருக்கு... கவலை வேண்டாம் ....
    ---------------------------------------------
    ஓவியரே! உண்மை சுடுதோ?
    -------------------------
    அக்னியாரே! ஏற்கனவே உம்மைப் பிடிக்கமுடியாது... நெருப்பாகிவிட்டீர்... இப்போது ஆவியாக அலைகிறீர்!! என்ன செய்ய?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    அப்படின்னா ஓவியாக்கா வீட்டில் சாப்பிடக்கூடாது என்கிறீர்களா? நல்ல வர்ணனை. தொடருங்கள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்
    அண்ணா உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா?

    பின்லேடனோட விஷத் துப்பாக்கிகளுக்கு மெட்டீரியலை சரியாக உபயோகிக்க டெமோ காட்டியது யாரு என்று நினைக்கிறீர்கள்?, நம்ம ஓவியா தான்...

    போகும்போதே ரெண்டு செட் தோசை வாங்கிக் கொண்டு போகணும்.... இல்லாட்டி நாம பெட் ஆகிடுவோம்.....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதவா View Post
    அண்ணா உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா?

    பின்லேடனோட விஷத் துப்பாக்கிகளுக்கு மெட்டீரியலை சரியாக உபயோகிக்க டெமோ காட்டியது யாரு என்று நினைக்கிறீர்கள்?, நம்ம ஓவியா தான்...

    போகும்போதே ரெண்டு செட் தோசை வாங்கிக் கொண்டு போகணும்.... இல்லாட்டி நாம பெட் ஆகிடுவோம்.....
    ஹீ!

    ஓவியா அக்கா வந்ததும் அதே துப்பாக்கியோட தான் வருவா!

    உம்மைப் பொசுக்க...........

  10. #10
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by ஆதவா View Post
    அன்பு.. உதையெல்லாம் எழுதினா அப்பறம் குப்பையில போட்டிருவாங்க.... ஜாடை மாடையா சொல்றேன் புரிஞ்சுக்கோங்க..... ஒரே சத்தமா இருந்தது..
    நான் கேட்டது உங்க வயித்துக்குள்ள இருந்து வந்த கடமுடா இல்ல...

    நானும் வெளிப்படையாவே கேட்க்கிறேன். அந்த கொமட் இல் நீங்கள் ஏறி இருந்து உடைத்துவிட்டீர்களாமே... உண்மையா,??
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    நான் கேட்டது உங்க வயித்துக்குள்ள இருந்து வந்த கடமுடா இல்ல...

    நானும் வெளிப்படையாவே கேட்க்கிறேன். அந்த கொமட் இல் நீங்கள் ஏறி இருந்து உடைத்துவிட்டீர்களாமே... உண்மையா,??

    ஆதவன் அவ்வளவு வெயிட்டான பார்டியா.

    ஓவியாதான் வெயிட்டான பார்டி என்று மணியா அவர்கள் சொன்னார்கள்.

  12. #12
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by aren View Post
    ஆதவன் அவ்வளவு வெயிட்டான பார்டியா.

    ஓவியாதான் வெயிட்டான பார்டி என்று மணியா அவர்கள் சொன்னார்கள்.
    அதில் சாதாரணமாக இருந்தால் உடையாது. பழக்கதோசத்தில் வில்லங்கமாக ஏறினால் உடையாதா?
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •