ஓவியாக்காவோட வீட்டைப் பார்த்ததுமே பிரமிச்சுப் போயிட்டேன். பின்னே? மலேசியாவிலிருந்து இங்கிலாந்து போன

மகராசி இப்படி ஒரு மாளிகையிலயா குடியிருக்கணும்?./. அக்கா இருந்தாலும் இது டூ மச். சுவத்தில ஒரு பொண்ணோட

படம் மாட்டியிருந்தது. அந்தப் பொண்ணூ பாக்கறதுக்க நல்ல லட்சணமா மூக்கும் முழியுமா இருந்தது. தலையில

கொண்டை, அதைச்சுத்தி மல்லிகைப் பூ, கண்ணைத் தாண்டுற மை, வரைஞ்சுவிட்ட புருவம், உதட்டுல எடுத்தடிக்கிற

சாயம், புடவையை கொஞ்சம் வித்தியாசமா கட்டிட்டு ஒருவித போஸில் அந்த பொண்ணூ இருந்தது. அக்காகிட்ட இது

யாருன்னு கேக்கலாம்னு நினைச்சேன். அப்பறம் நம்மள தப்பா நினைச்சுருவாங்களேன்னு கேக்கல. ஆனா அந்த

பொண்ணோட போட்ட மூலைக்கு மூலை கிடந்தது. எல்லாமே வித்தியாசமான போஸில.... நண்பர்களே! அந்த அம்மணி

யாருன்னு நீங்களாவது கேட்டு சொல்லுங்க,.. வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் நேரே போனது அக்காவோட சமையலறைக்கு..

எங்கவீட்ல சமையலறை எப்படி இருக்கும் தெரியுங்களா? அங்கங்கே புழுதியடிச்ச பாட்டில்களும் பழைய காம்ப்ளான்

டப்பாக்களும் அஞ்சறைப் பெட்டிகள் சிலதும் தொங்கவிடப்பட்டிருக்கும். அப்பறம் கீழே சிலிண்டர், அருவாமனை கத்தி

கடப்பாறை போன்ற இத்தியாதிகள். ஆனா நம்ம ஓவியாக்காவோட வீட்ல ரொம்பவே வித்தியாசம். எந்தப் பொருளை

எடுத்துகிட்டீங்கனாலும் அது நவீனமா இருந்தது. சுத்தமான தண்ணீ வரதுக்குன்னே ஏதோ ஒரு பெட்டியை சொறுகி

வச்சுருக்காங்க. அதுல இருந்து சொட்டு சொட்டா தண்ணி ஒழுகும்.. பாத்திரமெல்லாம் பளிச்சுனு சுத்தமா அடுக்கி

வச்சுருந்தாங்க... ரொம்ப சுத்தமான ஆள்தான் ஓவியாக்கா. சாப்பாடும் பருப்பும் செஞ்சி வச்சுருந்தாங்க. சரி கொடுங்க

உங்க டேஸ்ட பார்ப்போம்னு சொன்னேன்... அடடா,,,, வெள்ளிக் கிண்ணம் மாதிரி ஒரு தட்டத்தில பரிமாறிப் போட்டாங்க

பாருங்க..... அங்கிருக்கிற நவீன அழகுல மயங்கி விழுந்துட்டேன். சாப்பாடு நம்ம ஊர்மாதிரி பெரிசு பெரிசா இல்லிங்க,..

நல்ல நீள நீளமா பாசுமதி அரிசி மாதிரி இருந்துச்சி. நல்லா வயிறு முட்ட சாப்பிட்டு முடிச்சேன். அப்படியே மன்றம் பத்தி

பேசினோம். கொஞ்சம் வாழ்க்கை பத்தி பேசினோம். ரெண்டு பேரும் கண்ணுல தண்ணீ வர சிரிச்சு பேசியிருக்கோம். இது

கொஞ்சம் வித்தியாசம்... சிரிக்கலை...

கொஞ்சம் நேரத்தில வயிறு கடமுடா... சாப்பாடு பிரச்சனையோ?

ஓடினேன் பாருங்க டாய்லெட்க்கு.... கொஞ்சம் வெளிப்படையா சொல்றேன். என்னடா இதைப் போய் சொல்றானேன்னு

தப்பா நினைக்காதீங்க.. நம்மூர்ல ரெண்டு வகை பார்த்திருப்போம். ஒண்ணு உள்ளூர் முறை, இன்னொன்னு பாம்பே முறை..

என்ன சொல்ல வரேன்னு புரியுதுங்களா? . அக்காவீட்ல இருந்தது இண்டர் நேசனல் முறை... கொஞ்சம் கஷ்டம் தான்..

சமாளிச்சுட்டேன்.

சாப்பாடு வெச்சு என்னை கொல்லப் பார்த்த ஓவியாக்காமேல எனக்குத் துளி கூட கோவமில்லை. ஏன்ன்னா அவங்க

என்னோட உடன் பிறவா சகோதரி (பிண்ணனி இசையெல்லாம் வேண்டாம்).. அப்படியே வீட்டை சுத்திப் பார்த்துட்டு

இருந்ததில நேரம் போனதே தெரியல... லண்டனை சுத்தாம ஓவியா வீட்டைச் சுத்தினா பொழப்பு எப்படி இருக்கும்?

பின்னே லண்டனை சுத்திப் பார்க்கும் போதுதானே இண்டர்நேசனல் பிகருங்க நம்மள கொஞ்சம் பார்ப்பாங்க...

ஓவியாக்காவை கிளப்பினேன். லண்டனை ஒரே நாள்ல சுத்திக் காமிக்கணும்.. இல்லாட்டி பெங்களூர் ஆட்டோ வரும்னு

எழுதி கையெழுத்து வாங்கிட்டுத்தான் வீட்டைவிட்டு கிளம்பினோம். நேரா இவங்க படிக்கற காலேஜுக்கு... ஹி ஹி.

அங்கதானே பொண்ணுங்க நிறையா இருக்கும்.... ( இதையெல்லாம் வெச்சு ஆதவன் ஜொள்ளுறானேனு தப்பா ஃபீல்

பண்ணாதீங்க... ஆதவனுக்கு மறுபக்கம் இருக்கு... அதுக்குப் பேரு முதுகுன்னு சொல்லி கிண்டல் பண்ணாதீங்க.. ஆமாம்

சொல்லிப்புட்டேன். )

ஓவியா கல்லூரியில் சோகம் : அடுத்த பாகத்தில்