பெரும் வணிக நிறுவனங்கள் கேரளாவின் சில்லறை வியாபாரத்தில் இடம் பெறுவதற்கு கேரளா வணிகர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களின் சில்லறை விற்பனையில் ஆர்வம் காட்டி வருகின்றன. முக்கிய நகரங்களில் தங்களுக்கென வணிக நிறுவனங்களை அமைத்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டம் நடைபெறுகிறது. இந்த நிறுவனங்களின் வருகைகள் அதிகமான அளவில் வேலை இழப்பு ஏற்படும் எனவும், இது மாநிலத்தின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் அமைந்துவிடும் எனவும் வியாபாரி, விவசாயிகள் சங்கங்கள் அச்சம் தெரிவித்துள்ளன
20லட்சம் பேர் இதில் நேரடியாகவும் 60 லட்சம் மக்கள் மறைமுகமாகவும் இதனால் பாதிப்படையும் நிலை ஏற்படும் எனவும், இதனை தடுக்க மாநிலம் தழுவிய போராட்டமும் தேவைஏற்படுமாயின் ஆயுதம் ஏந்தி போராடவும் தயங்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.


நன்றி தினமலர்