Results 1 to 12 of 12

Thread: தொடரும் தேவதாசி முறை

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0

    தொடரும் தேவதாசி முறை

    இந்தியாவில் தேவதாசி முறை தொடர்கிறது

    இந்தியாவில் பெண்கள் மத ரீதியாக பாலியல் அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படுவது இன்னமும் தொடர்கிறது என்று பிபிசி நடத்திய ஒரு புலனாய்வில் தெரியவந்துள்ளது.

    இந்த வழக்கத்தை ஒழிப்பதற்காக சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், பாரம்பரிய இந்துக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய இந்த வழமை இன்னமும் தொடரத்தான் செய்கிறது.

    எல்லம்மா என்னும் பெண் தெய்வத்தை வழிபடும் முறைமை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு தொடருகிறது. அந்த பெண் தெய்வத்தை வழிபடுபவர்கள், தமது பெண் குழந்தைகளை அந்த தெய்வத்துக்கு சேவை செய்வதற்காக காணிக்கையாக்குகின்றனர்.

    அந்தப் பெண்கள் தேவதாசிகள், அதாவது தெய்வத்தின் அடிமைகள் என்று அழைக்கப்படுவார்கள். ஆனால் தெய்வத்தின் அடிமைகளாக சித்தரிக்கப்படும் இந்த பெண்களில் பலரது வாழ்க்கை ஒட்டுமொத்தத்தில் பாலியல் அடிமைகளாகத்தான் சென்று முடிகிறது.

    50 வருடங்களுக்கு முன்னர் இந்த தேவதாசி முறைமையைத் ஒழிக்கும் சட்டம் அமலுக்கு வந்திருக்கின்ற போதிலும், தேவதாசிகளாக பெண்கள் பொட்டுக்கட்டப்படுவது, பாலியல் அடிமைகளாக வாழ்க்கை தொடர்வதும் இன்னமும் தொடரத்தான் செய்கிறது. கர்நாடக மாநிலத்தில் மாத்திரம் சுமார் இருபத்தையாயிரம் தேவதாசிகள் இருப்பதாக இந்த முறைமைக்கு எதிரான செயற்பாட்டாளர்களாள் கணிக்கப்பட்டுள்ளது.

    நன்றி: பிபிசி
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    கொடுமை. ஒரு பெண் பாலியல் தொழிலாளியாக வேண்டுமா இல்லையா என்பதை அவள்தான் முடிவு செய்ய வேண்டும். அவள் பிறப்பு அதை முடிவு செய்வது மிகக் கொடுமையானது.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஆம் ராகவன் அண்ணாவின் கருத்தே என்னுடையதும். இம்முறைகூட ஒரு பலாத்காரமே.
    அன்புடன்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    பால்ய வயது திருமணம், மற்றும் தெய்வ காணிக்கை என்ற பெயரில் நடக்கும்,
    இப்படியான கொடுமைகள் அனைத்தும்,
    முற்றாக ஒழிக்கப்படவேண்டும்.
    விபச்சாரம், தடை செய்யப்பட்ட பொழுதிலும் கூட,
    தெய்வத்தின் பெயரால், நடத்தப்படும் கொடுமைகள்,
    சில போலி மத பிரியர்களின், காமவெறிக்காக என்பதை,
    மக்கள் அனைவருமே தெளிவாகப் புரிந்து கொள்ளல் வேண்டும்.
    அரசுகளினால், தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும்.
    இப்படியான வெறிச்செயெலின் காரணகர்த்தாக்களுக்கு,
    மிகவும் உச்சபட்சத் தண்டனை நிறைவேற்றப்படுதல் வேண்டும்.
    Last edited by அக்னி; 30-06-2007 at 11:08 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    சிலர் வீட்டில் பெண் குழந்தைகள் பிறந்தால் வருமானம் என்று நினைக்கிறார்கள். பல பெண்கள் விபசாரத்தில் அவர்கள் இஷ்டம் இல்லாமலே ஈடுபடுத்தப்படுகிறார்கள். இது வருந்தத்தக்கது.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    இவை அனைத்தும் கல்வியறியு இல்லமையே காரணம் என்று என்னுடய கருத்து
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    இந்த கொடுமை ஒழிய அனைவரும் கல்வி பயில வேண்டும்
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் ஜோய்ஸ்'s Avatar
    Join Date
    10 Apr 2007
    Location
    மதுரை.
    Posts
    357
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    0
    Uploads
    0
    பகுத்தறிவும் கல்வியறிவும் இல்லாததே இப்படி ஆக காரணம்.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    இது கொடுமை ஆனாலும் மிக பெரிய நாட்டில் இதை தடுக்க முடியாது. காரனம் என்னவென்றால்

    Quote Originally Posted by அக்னி View Post
    விபச்சாரம், தடை செய்யப்பட்ட பொழுதிலும் கூட,
    தெய்வத்தின் பெயரால், நடத்தப்படும் கொடுமைகள்,
    இங்கு தான் பிரச்சனை, நேர்மையாக விபச்சாரம் நடத்த தடை செய்ய படும் போது இப்படி வேறு வழியில் தான் நடக்கும்.
    சாயாயம் குடிப்பதை தடுக்க சாராயத்தை தடை செய்தால்
    கள்ள சாராயம் தானாக வரும்.

    Quote Originally Posted by joys View Post
    பகுத்தறிவும் கல்வியறிவும் இல்லாததே இப்படி ஆக காரணம்.
    கல்வியறிவு பகுத்தறிவு இருக்கும் இடங்களில் பாலியல் தொழில் நடக்காமலா இருகிறது.
    Last edited by lolluvathiyar; 01-07-2007 at 08:05 AM.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    சாயாயம் குடிப்பதை தடுக்க சாராயத்தை தடை செய்தால்
    கள்ள சாராயம் தானாக வரும்.
    .
    கர்நாடகாவில் பட்டை சாராயத்திற்கு தடை அமுலுக்கு வந்தது

    பெங்களுரு : கர்நாடகாவில் ஜூலை 1ம் தேதி முதல் பட்டை சாராயத்துக்கு தடை விதிக்கப்படும் என்று ஏற்கனவே அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த தடை உத்தரவு இன்று முதல் அமுலுக்கு வந்தது. பல்வேறு மகளிர் அமைப்புகளிடம் இருந்து வந்து கோரிக்கையை ஏற்று இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக துணை முதல்வர் எட்டியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் மட்டும் ஒரு மாதத்துக்கு 13 லட்சம் லிட்டர் பட்டை சாராய வியாபாரம் நடந்து வந்தது. இதன் மூலம் 80 ஆயிரம் பேர் பயனடைந்து வந்தனர். இந்த தடை உத்தரவால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு மாற்று தொழிலுக்கு அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பட்டை சாராய வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    நன்றி தினமலர்
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by namsec View Post
    கர்நாடகாவில் பட்டை சாராயத்திற்கு தடை அமுலுக்கு வந்தது
    தடை விதிப்பது எனக்கு தவறாக படுகிறது.
    சாராயம் குடிக்கும் மக்கள் மற்றவர்களுக்கு இடையூராக இல்லாமல் இருக்கும் படி தான் சட்டம் இருக்க வேண்டுமே தவிர சாராயம் குடிக்க கூடாது என்று சட்டம் போட கூடாது. அது உன்மையில் உரிமை பிரச்சனை.
    தேவை இருக்கும் போது கள்ளசாராயம் பெருகும்.
    அதன் விலை கூடுதலாகும், சமூக விரோதிகளுக்கு கொண்டாட்டமாகும்
    சில சமயத்தில் உயிர்களை பலி வாங்கும்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    ஏற்றுக்கொள்கின்றேன் லொள்ளு வாத்தியார் அவர்களே..,
    ஆனால்,
    எங்கள் கலாச்சாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கை இன்றியமையாதது.
    அதனால், தடைகளும், அவை மீறப்படும்போது உச்சத்தண்டனைகளும் வழங்கப்பட்டால் விரைவில்,
    இவ்வாறான கொடுமைகள் ஒழிய சந்தர்ப்பம் உண்டல்லவா?
    சாராயம் குடிப்பது தடையாக அமையவில்லை.
    மாறாக பட்டை சாராயம் தடைப்படுவது, பாவனையாளரின் உடல் நலம் பேணும் என்பதனால்,
    அதனைத் தடை செய்வது மிக முக்கியமாகும் என்பது,
    என் கருத்தாகும்...
    நன்றி!

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •