Results 1 to 3 of 3

Thread: நினைவுகள்.... நிறைந்திருக்கும்....!

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0

    நினைவுகள்.... நிறைந்திருக்கும்....!

    மலரென்று உனை எண்ணி
    மனதினில் வைத்திருந்தால்
    பிரிவென்று வரும்போது
    பெருந்தணலாய்ச்சுடுகின்றாய்....!

    கூடி இருக்கையிலே
    குளிர்நிலவாய்த்தானிருந்தாய....
    பக்கம் இல்லாது பகலவனை மிஞ்சுகின்றாய்...!

    கோடைகாலங்கள் இன்னல் பல தருகையிலே
    வசந்தமாய் உன் நினைவு வந்து வந்து போகின்றது...!

    காரிருள் என் மீது கவிழ்ந்து கிடக்கையிலே
    விளக்காய் வெளிச்சம் தராமல் வேறெங்கோ நீ...!

    மலரோடு மரங்கள் அழகாகத்தானிருக்கும்
    வேர்கள் இல்லையெனில்
    அது விறகாகிப் போயிருக்கும்....!

    உன் நினைவு எப்போதும் எனக்குள்ளே உறைந்திருக்கும்
    அது சுத்தமான காற்றாகி
    என் சுவாசம் நிறைந்திருக்கும்....!

  2. #2
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    9,062
    Downloads
    77
    Uploads
    2
    Quote Originally Posted by vaseegaran View Post
    மலரோடு மரங்கள் அழகாகத்தானிருக்கும்
    வேர்கள் இல்லையெனில்
    அது விறகாகிப் போயிருக்கும்....!

    உன் நினைவு எப்போதும் எனக்குள்ளே உறைந்திருக்கும்
    அது சுத்தமான காற்றாகி
    என் சுவாசம் நிறைந்திருக்கும்....!
    சுவையான வரிகள். 'மலரோடு மரங்கள் அழகாகத்தானிருக்கும்
    வேர்கள் இல்லையெனில் அது விறகாகிப் போயிருக்கும்....!'
    அற்புதமான சிந்தனை. நான் ரசித்த வரிகள் இவை. கவிதை சிந்தனையோடும், சொற்சுவையோடும் இருக்கிறது நண்பரே!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பாராட்டுக்கள் வசீகரன்..பிரிவு பற்றி அற்புதமாகக் கவிதை எழுதியுள்ளீர்கள். மூர்த்தி சொன்னதுபோல் அந்த வரிகள் உங்கள் கவிதைக்கு மகுடம் வைத்தாற்போல் இருக்கின்றது. தொடர்ந்து எழுதி எம்மை பரவசப்படுத்துங்கள். நன்றி
    அன்புடன்
    உங்கள்
    Last edited by அமரன்; 25-06-2007 at 07:28 AM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •