Results 1 to 8 of 8

Thread: அன்னையே தெய்வம் -

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2

    அன்னையே தெய்வம் -

    என் குறிப்பேட்டிலிருந்து −


    அன்னையே தெய்வம்

    தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றான்
    அன்னை தந்தையே அன்பின்எல்லை என்றான்
    நேரில் நின்று பேசும்தெய்வம் என்றான்
    தாயைப் போலொரு தெய்வமுமில்லை என்றான்

    தாயைப் போற்ற முயன்ற வார்த்தையெலாம்
    ஆழக் கடலிலோர் குவளைமட்டுமே தந்தனவாம்
    எத்தனை கவிஞர்கள் எழுந்து வந்தாலும்
    அன்னையின் பெருமையை பாடிட முடியுமோ

    பாரிலுள்ள அன்பெலாம் ஒன்றுசேர்த்து வைத்தாலும்
    பெற்ற தாயின்முன் அவையெலாம் துச்சமாம்
    யானை மிதித்தாலும் தன்வலி பொறுத்திடுவாள்
    எறும்பு வலியாயினும் மகன்வலி பொறுத்திடாள்

    மனதிற் உருவேற்றி உடலிற் உருத்தாங்கி
    அன்பின் அமுதூட்டி இன்பத் தமிழூட்டி
    வலிய தோள்தந்து நெடிய இடைதந்து
    அன்புக் கைகோர்த்து மகிழ்வூட்டி வளர்த்தாளே.

    எல்லையற்ற பாசமும் பற்றுதலும் கொண்டனள்
    கண்ணின் இமையென தன்மகவு காத்து
    பசியாற்றிப் பின்பாட பேசநடக்க படிக்க
    கற்றுக் கொடுத்து முதற் குருவானவள்

    வாழ்க்கை முழுதும் ஊன்றுகோலாய் நின்று
    சரியான வழிகாட்டி ஊக்கமும் அளித்தனள்
    அறிவுரை வழங்கினள் தவறும்போது சுட்டினள்
    துணுக்குற்றபோது கலங்கினள் வென்றபோது மகிழ்ந்தனள்

    வாசற்தெளித்து கோலமிட்டு பாத்திரங்கழுவி சமையற்செய்து
    துணிதுவைத்து அலுவலகம் நடந்து ஏவல்கொண்ட
    பணிமுடித்து வீடுதிரும்பி காப்பி போட்டு
    சமையற்செய்து பாடஞ்சொல்லி நோய்கண்டு மருத்துவஞ்செய்து

    மீண்டும் வாசற்தெளித்து கோலமிட்டு பாத்திரங்கழுவி....
    மீண்டும்.. மீண்டும்...

    நாழிகையல்ல முகூர்த்தமல்ல ஜாமமுமல்ல பக்க்ஷமுமல்ல
    ருதுவுமல்ல ஆயனமுமல்ல இடைவிடாத ஓய்வற்ற
    தூய்மையான உழைப்பினையை எப்போதுமே ஈந்தனள்
    இதில் சொன்னதுபத்து சொல்லாதது கோடி

    அன்னையின் செயலுக்கு இலக்கண மேற்றமுடியுமோ
    நம்வாழ்வில் வெற்றிபெறுவதே அவளின் இலட்சியம்
    நம்மகிழ்ச்சி ஒருநொடி வேண்டின் ஆயிரம்நாட்கள்
    தன் துன்பத்தை ஏகமகிழ்வோடு ஏற்பனள்

    அவளுக்கு நான்என்ன கைம்மாறு செய்வேன்
    இறைவனே அன்னையின் உருவெடுத்து வருகிறான்
    என் ஆதியந்தம் அனைத்தும் என்தாயின்
    புனித பொற் பாதங்களுக்கு சமர்ப்பணம்.

    அவள் நினைத்ததை முடிப்பதே எம்பணி.
    அவள் கனவை நனவாக்குவதே எம்கடமை
    அவளை மகிழ்வோடு காப்பதே எம்பாக்கியம்
    அவளை போற்றி புகழ்வதே எம்மகிழ்ச்சி

    ஆம். அன்னையே தெய்வம்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    பல நல்ல கவிஞர்களும், விமர்சகர்களும் குழுமியுல்ல இந்த மன்றத்தில், மற்ற சான்றோர்களின் விமர்சங்கண்டு, கவிதையை நன்கு உள்வாங்கி பின் விமர்சனமிடுகிறேன். அதுவரை மன்னிக்கவும். நன்றி

    ********************************************************************************************************


    உங்கள் கவிதை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. நன்றி.
    அன்னையை போல் ஒரு தெய்வமில்லை என்று, பலர் பாடி கேட்டுள்ளேன். ஆனாலும் அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் ஒரு நல்ல தாய் என பேரேடுப்பேன் என்று இக்கனம் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.

    **********************************************************************************************************

    மீனாக்குமார் அவர்களே,
    இப்பொழுதெல்லாம் தங்களின் பங்களிப்பு சற்று அதிகரித்துள்ளது, மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள்.
    Last edited by ஓவியா; 25-06-2007 at 12:44 AM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    ஆம். அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லைதான். அகத்தியர் படத்தில் முதலில் வரும் பாடலான -
    தாயிற் சிறந்தொரு கோவிலுமில்லை
    தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
    ஆயிரம் உறவினில் பெருமைகள் இல்லை
    அன்னை தந்தையே அன்பின் எல்லை

    இந்தப்பாடலை கோடானுகோடி முறை கேட்டாலும் சலிப்பதில்லைதான்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    எத்தனை கவிஞர்கள் எழுந்து வந்தாலும்
    அன்னையின் பெருமையை பாடிட முடியுமோ
    சத்தியமான வார்த்தை...

    எத்தனை குழந்தைகள் பிறந்து வந்தாலும்,
    தாய்மையின் ஊற்று வற்றித்தான் போகுமோ..?

    விஞ்ஞானத்தால் பிறப்பிக்கமுடியாத,
    மகத்தான பிறப்பின் பிரசவங்கள்..,
    என்றும் சொல்லும்...
    உலகின் வலிமையான
    சிருஷ்டிகர்த்தா..,
    தாய்மை என்று...

    பாராட்டுக்கள் மீனாகுமார்...

    அன்பளிப்பாக 200 iCash.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அற்புதம் மீனாகுமார்.கடலில் கைக்கொண்டு எடுக்கும் குவளை நீர் போன்றதுதான் நாம் அன்னைக்காக வடிக்கும் அத்தனைக் கவிதையும்.எத்தனை வலிகள் தாங்கினாலும் பெற்றெடுத்த பிள்ளைகளின் வலி தாங்காத பேருறவு அது.மிகச் சிறந்த முறையில் அமைந்துள்லது உங்கள் கவிதை.பாராட்டுக்கள் மீனாகுமார்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    அகராதியின் மூலம் பொருளுணர முடியாத
    அன்பின் மாண்பின் மகத்துமிக்க வார்த்தை
    தாய்மை...!

    திருமணம் முடிந்தபின் தன் தாயை துணிதுவைக்கும் இயந்திரமாக, சமையல்காரியாக, வேலைக்காரியாக நடத்தும், தன் மனைவின் தலையணை மந்திரத்திற்கு கட்டுண்டு கிடக்கும் ஜீவராசிகள் இந்த கவிதையைப் படிக்கவேண்டும்.
    Last edited by ஜெயாஸ்தா; 20-09-2007 at 01:40 PM.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by ஜே.எம் View Post
    அகராதியின் மூலம் பொருளுணர முடியாத
    அன்பின் மாண்பின் மகத்துமிக்க வார்த்தை
    தாய்மை...!

    திருமணம் முடிந்தபின் தன் தாயை துணிதுவைக்கும் இயந்திரமாக, சமையல்காரியாக, வேலைக்காரியாக நடத்தும், தன் மனைவின் தலையணை மந்திரத்திற்கு கட்டுண்டு கிடக்கும் ஜீவராசிகள் இந்த கவிதையைப் படிக்கவேண்டும்.
    முகத்திலறையும் உண்மை ஜே.எம் அவர்களே...இப்படிபட்ட ஜீவராசிகள் தானும் பின்னாளில் ஒதுக்கப்படுவோம் என்பதை உணராமல்,தாயின் உன்னதம் புரியாமல் தவறு மேல் தவறாக செய்கிறார்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    தாய்!
    அந்த ஒரு சொல்லுக்கு உண்டா ஈடு...?
    இந்த புவியிலே....?

    அள்ளமுடியுமா சமூத்திர நீரை.....?
    சொல்ல முடியுமா தாயின் பெருமையை.....?

    சொல்ல முயன்று சாதித்த அண்ணாவுக்கு பாராட்டுக்கள்!.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •