Results 1 to 6 of 6

Thread: 'போதும், போதும் ..' மனம் திறந்த கலாம்!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    'போதும், போதும் ..' மனம் திறந்த கலாம்!

    'போதும், போதும் ..' மனம் திறந்த கலாம்!



    டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் அரசியல் புகுந்து விட நான் காரணமாகி விடக் கூடாது என்பதற்காகத்தான் மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

    குடியரசுத் தலைவர் மாளிகையில், நேற்று அப்துல் கலாமை செய்தி நிறுவனம் ஒன்றின் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் கலாம் மனம் விட்டுப் பேசினார். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

    கலாமை மையமாக வைத்த பல அரசியல் விளையாட்டுக்கள் நடந்து விட்ட போதிலும் கூட, அதுகுறித்த தடுமாற்றும் ஏதும் இல்லாமல், வழக்கமான கலாமாக படு உற்சாகமாக பேசினார் அப்துல் கலாம்.

    செய்தியாளர்களிடம் கலாம் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ராஷ்டிரபதி பவனை மக்களின் பவனாக மாற்ற நாங்கள் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளோம். எங்களின் உழைப்பால் இன்று ராஷ்டிரபதி பவன், மக்கள் பவனாக மாறியுள்ளது.

    இது நாட்டுக்கே உதாரணமாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இது சிதைக்கப்பட்டு விடக் கூடாது. அதனால்தான் ராஷ்டிரபதி பவனில் அரசியல் நுழைந்து விடக் கூடாது, அதற்கு நான் காரணமாக அமைந்து விடக் கூடாது, ராஷ்டிரபதி பவனின் மாண்பு கெட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் நான் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை. போதும், போதும் என்று கூறி விட்டேன்.

    ஆண்டுதோறும் ராஷ்டிரபதி பவனுக்கு இன்று 5 முதல் 10 லட்சம் பேர் வரை வருகிறார்கள். அவர்களில் சாதாரணமானவர்களும் இருக்கிறார்கள், மிகப் பெரிய மனிதர்களும் இருக்கிறார்கள்.

    குடியரசுத் தலைவராக அடுத்து வருகிறவர்கள் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவரால்தான் இந்த மாளிகைக்குப் பெருமை சேர்க்க முடியும்.

    அடுத்த குடியரசுத் தலைவராக யார் வந்தாலும், அது ஆணோ அல்லது பெண்ணோ, அவர் நிச்சயம் குடியரசுத் தலைவர் மாளிகைக்குப் பெருமை சேர்ப்பார் என்று நம்புகிறேன்.

    எனக்கு முன்பு இருந்த அனைத்து குடியரசுத் தலைவர்களையும் நான் பார்த்துள்ளேன். ஒருவர் ஆசிரியர் என்றால் இன்னொருவர் தத்துவஞானியாக இருந்தார். மற்றொருவர் சிறந்த அரசியல் தலைவராக இருந்தார். இன்னொருவரோ நீதித்துறையில் சிறந்தவர். இப்படி ஒவ்வொருவரும் ஒரு துறையில் திறமை மிக்கவர்களாக இருந்தனர்.

    அதுபோலவே அடுத்து வரும் குடியரசுத் தலைவரும் திறமை மிக்கவராக இருப்பார் என்று நம்புகிறேன்.

    இரண்டு பிரதமர்களிடம் பணியாற்றியுள்ளேன். ஒருவர் முடிவு எடுப்பதில் திறமையானவர், இன்னொருவர் நிபுணத்துவம் பெற்றவர். சில நேரங்களில் இவர் முடிவு எடுப்பதில் திறமையானவராக இருக்கிறார். அவர் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். இது அற்புதமானது.

    நான் கையெழுத்திட்ட மசோதாக்களிலேயே மிகவும் கடினமானது, ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதாதான். அதை நான் முதலில் திருப்பி அனுப்பினேன். அது பெரும் சர்ச்சையை எழுப்பியது. அதேபோல பயோடீசல் தொடர்பான மசோதா.

    குடியரசுத் தலைவராவதற்கு முன்பு விஞ்ஞானியாக அரசியல்வாதிகளுடன் பழகினேன். பின்னர் குடியரசுத் தலைவர் என்ற முறையில் பழகினேன். நது நாட்டில் இரண்டு வகையான அரசியல் உள்ளது. ஒன்று அரசியல் ரீதியிலான அரசியல், இன்னொன்று வளர்ச்சி ரீதியிலான அரசியல்.

    அரசியல் ரீதியான அரசியல் 30 சதவீதமாகவும், வளர்ச்சி ரீதியிலான அரசியல் 70 சதவீதமாகவும் இருக்க வேண்டும். ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறாக உள்ளது.

    குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் எடுப்பேன். எல்லாப் பல்கலைக்கழகங்களுக்கும் செல்வேன் என்றார் கலாம்.

    நன்றி−தமிழ் தட்ஸ்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் alaguraj's Avatar
    Join Date
    09 May 2007
    Location
    குவைத்
    Posts
    311
    Post Thanks / Like
    iCash Credits
    37,433
    Downloads
    49
    Uploads
    1
    அருமையான முடிவு, கனத்த இதயத்தோடு ஏற்றுக்கொள்கிறோம், மாண்புமிகு காலம் குடியரசு தலைவராய் இருந்து இன்று பலநூறு மாணவர்கள் கலாம்கள் உருவாக ஒரு (Roll Model) உதாரணமாக உள்ளார்.

    இங்கே வாசிக்க கொடுத்ததற்கு மிக்க நன்றி காந்தியாரே!..
    ++அழகு++
    ______________________
    வாழ்க தமிழ் அன்னை.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    தலைவணங்குகிரேன்
    உயர்திரு அப்துல் கலாம் அவர்களே,
    அரசியல் சார்பு இல்லாமல் ஜனநாயகத்தில்
    உலகில் மிகப்பெரிய நாடான இந்தியாவின்
    முதல் குடிமகனாக கடந்த ஐந்தாண்டுகள்
    உங்களை தனது மானசீக வழிகாட்டியாக*
    உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள*
    இந்தியர்களின் மனதில் வீற்றிக்க
    உங்களது முடிவில் பெருமிதம் கொள்கிரேன்

    மனோ.ஜி
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    இந்திய நாட்டின் மிகப்பெரிய இழப்பு.
    இந்த கேடுகெட்டவர்களின் அரசியலால் ஒரு பண்பட்ட உயர்ந்த மனிதரை
    குடியரசுத்தலைவர் பதவிக்குப் பெருமைசேர்த்த ஒரு மனிதரை இழக்கிறோம்.
    கலாம் இடத்தைவேறு யாரும் சிறப்பாக நிறைக்க முடியாது.
    இந்தியாவின் சாபக்கேடு இந்த உலுத்துப்போன அரசியல் வாதிகள்தாம்!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக இருக்கவேண்டும் என்று சொல்லியிருந்தால் அனைத்து கட்சிகளும் அவரையே தொடரும்படி சொல்லியிருக்கும். அந்த அளவிற்கு செல்வாக்கு மிகுந்த ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்.

    ஜனாதிபதி என்ற பதவிக்கே மரியாதை கொண்டுவந்தார்.

    அவர் இன்னும் பல சாதனைகள் புரிய என் வாழ்த்துக்கள்.


    நன்றி வணக்கம்
    ஆரென்

  6. #6
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    ஆரன் அண்ணா கூறுவது போல் அவரால் ஜனாதிபதி என்ற பதவிக்கே ஒரு பெருமை கிடைத்தது. அதை தொடர்ந்து தக்கவைப்பது தொடரும் ஜனாதிபதிகளின் கடமை.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •