புரியாது உன்
கோபமும் கொஞ்சலும்,
புரியாது உன்
தமிழும் ஆங்கிலமும்**,
புரியாது உன்
வேகமும் விவேகமும்
புரியாது உன்
அன்பும் ஆளுமையும்
இப்படிப் பல
புரியாதுகளிருந்தாலும்
புரிகிறது நீ என்னைக்
காதலிக்கவில்லையென்று.

**தமிழ் அவளுக்குத் தெரியாது, அவள் ஆங்கிலம் எனக்குப் புரியாது .