பொங்கு பொங்கு என்றனர்
பொங்கினால்
அரிசியால் அடிக்கிறனர்
பொங்கு பொங்கு என்றனர்
பொங்கினால்
அரிசியால் அடிக்கிறனர்
பொங்கும் போதே
சரியாகப் பொங்கியிருப்பின்,
அரிசியிலும் அரசியல்
நடத்தியிருப்பார்களா?
Last edited by ஓவியன்; 21-06-2007 at 10:15 PM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
நன்றி ஓவியன் மற்றும் பென்ஸண்ணா இந்தக்கவிதையில் மூன்று விடயங்கள் அடங்கி இருக்கிறது. முதாலாவது இது
அடிவயிற்றில் தீவைத்து
பொங்கு பொங்கு என்க
பொங்கியதும்
அரிசியால் அடித்தனர்
பொங்கலோ பொங்கல்
Last edited by அமரன்; 30-07-2007 at 09:11 AM.
ஏழ்மையை எகத்தாளமிட்ட இரண்டுரூபாய் அரிசி
பசிப்பிணியை பணியவைத்த பாம்ரனின் அரிசி
Last edited by ananthu123; 22-06-2007 at 07:40 AM.
அரசியல்வாதியின்
வாய்க்கரிசியும்
பொன்னி, பாசுமதியாம்
எழையின் பொங்கலும்
இரெண்டு ரூபாய்
நொய்யரிசியாம்
− கலி முத்திபோச்சாம்.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
அரிசி இரண்டு ரூபாய்...
நன்று...
பானை இருவது ரூபாய்...
பரவாயில்லை...
எரிபொருள் இருநூறு ரூபாய்...
முன்னரே பரவாயில்லை...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அக்கினி, எரிபொருள் விலையேற்றத்தை கச்சிதமாக கவிதையில் சொரு(று)விட்டீக, படித்து சிரித்தேன், அஹஹ்ஹஹ.
************************************************************************
அனைவரின் அரிசி சிந்தனையும் அருமை.
பாராட்டுக்கள்
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
ஒரு பொருளை இலவசமாவும் கொடுப்பார்கள்...
ஆனால், மற்றவற்றின் விலை எல்லாம் அற்லாண்டிஸ் ஏறி எங்கேயோ போய்விடும்...
அரசியல் விளையாட்டுக்களில் பாதிக்கப்படுவது என்னமோ, நடுத்தர வர்க்க மனிதர்கள்தான்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
பொங்கென்றனர்
அநீதியை கண்டு
பொங்கையில்
போட்டனர்
வாயில் அரசி
Last edited by அமரன்; 22-06-2007 at 09:35 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks