Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 54

Thread: விண்ணியல் செய்திகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0

    விண்ணியல் செய்திகள்

    விண்வெளி சம்பந்தமான சகல செய்திகளையும் இதிலே இனணைத்து தொடராக சேமிக்கலாம் நண்பர்களே
    Last edited by சுட்டிபையன்; 05-08-2007 at 03:05 PM.
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    ஒளிமிகு வளையல்கள் அணிந்த பனிமிகு சனிக் கோளம்

    விண்வெளியில் தொலை நோக்கி மூலம் பார்ப்போர் நெஞ்சைக் கவர்ந்து கண் கொள்ளாக் காட்சியாய் வெண்ணிற ஒளியுடன் மிளிர்வது, சனிக்கோள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பூர்வீகக் குடிமக்களுக்கே அறிமுகமானது, சனிக் கோள். தொலை நோக்கிக் கருவிகள் தோன்றாத காலத்திலே, அதன் ஆமை நகர்ச்சியை ஒழுங்காகத் தொடர்ந்து, வெறும் கண்கள் மூலமாகக் கண்டு பழங்குடி வானியல் ஞானிகள் ஆராய்ந்து வந்தார்கள். ரோமானியர் சனிக் கோளை வேளாண்மைக் கடவுளாய்ப் [God of Agriculture] போற்றினார்கள்.

    கி.பி.1610 ஆண்டில் இத்தாலிய வானியல் மேதை காலிலியோ, தனது பிற்போக்கான தொலை நோக்கிக் கருவியில், ஒளி மயமான சனிக் கோளை முதலில் பார்த்த போது, ஒளிப் பொட்டுக்கள் [Bright Spots] சனியின் இருபுறமும் ஒட்டி இருப்பதாக எண்ணினார்! தெளிவாகத் தெரியாத வடிவத்தைக் கொண்டு, சனியின் தள அமைப்பு [Geometry] புரியாது, சனி இருபுறமும் குட்டி அண்டங்கள் ஒட்டி நடுவே உருண்டை வடிமுள்ள ஒரு முக்கோள் கிரகம் [Triplet Planet] என்று தவறாக அறிவித்தார்!


    1655 இல் டச் வானியல் வல்லுநர் கிரிஸ்டியான் ஹூயூஜென்ஸ் செம்மையான தொலை நோக்கியில் சற்று கூர்ந்து பார்த்து, மெலிதான வட்ட வளையம் சனிக்கோளின் இடுப்பைச் சுற்றி உள்ளது என்று அறிவித்துக் காலிலியோவின் தவறைத் திருத்தினார். மேலும் சனியின் வட்டத் தட்டு, சனி சுற்றி வரும் சுழல்வீதியின் மட்டத்திலிருந்து [Orbital Plane] மிகவும் சாய்ந்துள்ளது என்றும் எடுத்துரைத்தார். சனியின் வளையம் திரட்சி [Solid] யானது, என்று அவர் தவறாக நம்பினார்.

    இத்தாலியில் பிறந்த பிரெஞ்ச் வானியல் நிபுணர், காஸ்ஸினி சில ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் வளையங்களில் இடைவெளி இருப்பதை முதன் முதல் கண்டு பிடித்து, வளையம் திரண்ட தட்டு [Solid Disk] என்னும் கருத்தை மாற்றினார். 1789 இல் பிரான்ஸின் பியர் ஸைமன் லப்லாஸ் சனியின் வளையங்களில் எண்ணற்ற சிறு துணுக்குகள் [Components] நிறைந்துள்ளன என்னும் புதிய கருத்தை எடுத்துரைத்தார். சனிக்கோளின் வட்ட வளையங்களில் கோடான கோடிச் சிறு துகள்கள் [Particles] தங்கி இருப்பதால்தான், வளையங்களில் ஒழுங்கு நிலைப்பாடு [Stability] நீடிக்கிறது என்னும் நியதியைக் கணித மூலம் 1857 இல் நிரூபித்தவர் ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்.


    சூரிய மண்டலத்தில் சனிப் பெயர்ச்சி
    சூரிய மண்டலத்தில் பூத வடிவான வியாழக் [Giant Jupiter] கோளுக்கு அடுத்தபடி, மிகப் பெரிய கிரகம் சனிக் கோளம். சனிக் கிரகம் பூமியிலிருந்து குறைந்தது 720 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது. கோள வடிவில் சனி, பூமியை விட சுமார் பத்து மடங்கு பெரியது. ஒரே மட்ட அமைப்பில் ஏகமைய வட்டங்களில் [Concentric Circles] பல வளையங்களை அணிந்து மிக்க எழிலுடன் இலங்கும் சனிக் கோளுக்கு ஈடு, இணை சூரிய மண்டலத்தில் எந்தக் கோளும் இல்லை.

    சூரிய குடும்பத்தில் 858 மில்லியன் தூரத்தில் தொலை வரிசையில் ஆறாவது அண்டமாகச் சுழல்வீதியில் சுற்றி வருவது, சனிக் கோள். சனியின் மத்திம ரேகை விட்டம் [Equatorial Diameter] 75,000 மைல்; துருவ விட்டம் [Polar Diameter] 66,000 மைல். துருவங்களில் சப்பையான உருண்டை, சனிக் கோளம். ஒரு முறைச் சனிக்கோள் சூரியனைச் சுற்றி வர, 29 ஆண்டுகள் 167 நாட்கள் ஆகின்றன.

    பூமியில் உள்ள நவீன பூதத் தொலை நோக்கி மூலம் பார்த்தாலும், சனி மண்டலத்தில் ஒரு சில ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளிக்கு மேல் ஆராய முடியாது. பூகோளச் சுழல்வீதியில் [Earth s Orbit] சுற்றி வரும் ஹப்பிள் விண்வெளித் தொலை நோக்கியில் [Hubble Space Telescope] 1990 ஆம் ஆண்டு, முதன் முதலில் சனிக் கோளில் ஒரு மாபெரும் வெண்ணிறத் தளம் [White Spot] கண்டு பிடிக்கப் பட்டது. பல மில்லியன் மைல் தூரத்தில் சூரிய மண்டலத்தின் வெளிக்கோள்களில் ஒன்றாக, ஆமை வேகத்தில் சுற்றி வரும் சனிக்கோளை, விண்வெளி ஆய்வுச்சிமிழ்கள் [Space Probes] மூலமாகத்தான் அறிய முடியும்.

    சனிக்கோள் அருகே பறந்த அமெரிக்க விண்வெளிக் கப்பல்கள்

    ரஷ்யா செவ்வாய், வெள்ளிக் கோள்களை மட்டும் ஆராய, பல விண்வெளி ஆய்வுச்சிமிழ்களை ஏவிக் கொண்டு, வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுடோ போன்ற மற்ற அண்ட கோளங்களை ஆய்வதில் எந்த வித ஆர்வமும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அப்பணியில் முழு முயற்சி எடுத்து, அமெரிக்கா நிதியையும், நேரத்தையும் செலவு செய்து மும்முரமாக முற்பட்டு பல அரிய விஞ்ஞானச் சாதனைகளை உலகுக்கு எடுத்துக் காட்டியது.

    1972-1973 ஆண்டுகளில் முதன் முதல் ஏவப்பட்டுப் பயணம் செய்த மூன்று விண்வெளி ஆய்வுச்சிமிழ்கள் [Space Probes] கண்டனுப்பிய சனி மண்டல விபரங்கள் மாபெரும் முற்போக்கான விஞ்ஞானச் சிறப்புக்கள் உடையவை. பயனீயர்-10,-11 [Pioneer-11,-12] ஆகிய இரண்டு விண்வெளிக் கப்பல்கள் வியாழக் [Jupiter] கோளைக் குறிவைத்து அனுப்பப் பட்டாலும், அதைத் தாண்டி அப்பால் பறந்து சென்று, அண்டவெளி விண்மீன் [Interstellar] மந்தைகளைப் படமெடுக்கவும் உதவின.


    பயனீயர்-11 [Also called Pioneer-Saturn] 1973 ஏப்ரல் 5 ஆம் தேதி ஏவப்பட்டு, வியாழனை நெருங்கி 1974 டிசம்பர் 2 ஆம் நாள் பயணம் செய்து, சனிக்கோளை 1979 செப்டம்பர் முதல் தேதி 12600 மைல் அருகி, வளையத்தை ஊடுருவிச் சென்று, பூமியிலிருந்து மனிதர் ஏவி முதலில் சனிக்கோளை அண்டிய விண்கப்பல் என்று விண்வெளிச் சரித்திரப் புகழ் பெற்றது. அத்துடன் பயனீயர்-11 சனியின் இரண்டு புதிய வளையங்களை முதன் முதல் கண்டு பிடித்தது. மேலும் சனியின் காந்தக் கூண்டுக்குள் [Magnetosphere] கதிர்வீச்சு வளையங்கள் [Radiation Belts] பரவி இருப்பதையும் படமெடுத்துப் பூமிக்குப் புள்ளி விபரங்களை அனுப்பியது.

    அடுத்து 1977 இல் யாத்திரைக் கப்பல்கள் வாயேஜர்-1,-2 [Voyager-1,-2] சனிக் கோளைக் குறிவைத்து ஏவப்பட்டு விஞ்ஞான விளக்கங்களை அறிந்திடவும், வியாழக் கோளை ஆராய்ந்தபின் சனிக் கோளைச் சுழல்வீதியில் சுற்றி வந்து, அதன் இயற்கைச் சந்திரன்களைப் படமெடுக்கவும் அனுப்பப் பட்டன. 1977 செப்டம்பர் 5 ஆம் தேதியில் வாயேஜர்-1 ஏவப்பட்டு, சனிக் கோளை 1980 நவம்பர் 12 ஆம் நாள் அடைந்து சுற்ற ஆரம்பித்தது. அதற்கு முன்பே 1977 ஆகஸ்டு 20 இல் ஏவப்பட்ட வாயேஜர்-2 வியாழனைப் பற்றிய தகவல்களை அனுப்பி விட்டு, சனிக் கோளை 1981 ஆகஸ்டு 25 இல் அண்டிச் சுழல்வீதியில் சுற்ற ஆரம்பித்தது. இரண்டு விண்வெளி ஆய்வுச்சிமிழ்களும் சனி மண்டலக் கூட்டுறுப்புகள் [Composition], தளவியல் [Geology], சூழகத்தின் தட்ப, வெப்பநிலை [Meteorology], துணைக் கோள்கள் நகர்ச்சி [Dynamics of Regional Bodies] ஆகியவற்றை ஆராய்ந்து விபரங்களைப்பூமிக்கு அனுப்பின.

    சனி மண்டலம் வாயுப் பாறை உறைந்த ஒரு பனிக்கோளம்!

    சனித் தளத்தின் திணிவு [Density] பூமியின் திணிவில் எட்டில் ஒரு பங்கு! காரணம் சனிக் கோளில் பெரும்பான்மையாக இருப்பது, ஹைடிரன் [Hydrogen] வாயு. மிக்க பளு உடைய சனியின் சூழ்நிலை, சூழக அழுத்தத்தைச் [Atmospheric Pressure] சனியின் உட்பகுதியில் விரைவில் உச்சமாக்கி ஹைடிரஜன் வாயு திரவமாய்த் தணிவடைகிறது [Condenses into a Liquid]. உட்கருவில் திரவ ஹைடிரஜன் மிக்கப் பேரழுத்தத்தால் இரும்பாய் இறுகி, உலோக ஹைடிரஜன் [Metallic Hydrogen] பாறை ஆகி, மின்கடத்தி யாக [Electrical Conductor] மாறுகிறது. சனிக்கோளம் ஒரு பிரமாண்டமான காந்தக் களமாக [Magnetic Field] இருப்பதற்கு இதுவே காரணம்.

    சனியின் நடுவே ஒரு வேளை கடும் பனிக்கரு[Icy Nucleus] உறைந்துபோய் இருக்கலாம்! அல்லது கன மூலகங்கள் [Heavy Elemets] பேரழுத்தத்தில் பாறையாகி சுமார் 15,000 டிகிரி C உஷ்ணம் உண்டாகி யிருக்கலாம்! 4.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சூரிய குடும்பத்தில் பிறந்த வியாழன், சனிக் கோள்கள் ஈர்ப்பியல் கொந்தளிப்பு [Gravitational Settlement] அடங்கி இன்னும் நிலைப்பாடு [Stability] பெறவில்லை. அதனால் அண்டத்தின் கருச் சுருக்கம் [Contraction] உஷ்ணத்தை மிகுந்து வெளிப்படுத்தி, சனிக்கோள் தான் சூரியனிட மிருந்து பெறும் வெப்பத்தைவிட மூன்று மடங்கு மிகையாக விண்வெளியில் அனுப்புகிறது!

    சனியின் வாயு மண்டலத்தில் இருப்பது, ஹைடிரஜன் 88%, ஹீலியம் 11%. மேகக் கூட்டங்களின் வெளித் தோல் உஷ்ணம் -176 டிகிரி C. சனி தன்னைத் தானே சுற்றும் காலம் சுமார் பத்தரை மணி நேரம். மத்திம ரேகைக் காற்று [Equatorial Winds] அடிக்கும் வேகம் மணிக்கு 1060 மைல்!

    சனிக்கோள் அணிந்துள்ள ஒளிவீசும் எழில் வளையங்கள்!

    சனி மண்டலத்தின் ஒளிமயமான வளையங்கள் மிகவும் பிரம்மாண்டமான பரிமாணம் உடையவை! சனியின் வளையங்களை பெண்ணின் கை வளையல் என்றோ, கால் சிலம்பாகவோ, அன்றி இடை அணியாகவோ எப்படி வேண்டு மானாலும் ஒப்பிடலாம்! சனிக் கோளின் விட்டம் சுமார் 75,000 என்றால், அதற்கு அப்பால் பரவிய வெளி வளையத்தின் விட்டம் 170,000 மைல்! உள்ளே முதல் வளையத்தின் விட்டம் 79,000 மைல்! E,G,F,A,B,C,D, என்னும் பெயர் கொண்ட ஏழு வளையங்கள், சனியின் இடையை ஒட்டியாண அணிகளாய் எழிலூட்டுகின்றன! E என்னும் வளையம் அனைத்துக்கும் வெளிப்பட்டது. D என்னும் வளையம் அனைத்துக்கும் முற்பட்டது. A வளையத்துக்கும் B வளையத்துக்கும் இடைவெளி மட்டும் சுமார் 3000 மைல்! காலில் அணியும் சிலம்புக்குள்ளே இருக்கும் முத்துக்களைப் போல் ஒவ்வொரு வளையத்தின் உள்ளே கோடான கோடித் தனித்தனித் துணுக்குகள் [Individual Ringlets] பரவலாகி, சனிக் கோளை வட்டவீதிகளில் [Circular Orbits] சுற்றி வருகின்றன. வாயேஜர்-2 தனிக்கருவி மூலம் எண்ணியதில் சனியின் வளையங்களில் 100,000 மேற்பட்ட கற்களையும், பாறைகளையும் காட்டி யுள்ளது!

    வளையங்கள் யாவும் சனியின் மத்திம ரேகை மட்டத்தில் [Equator Plane] சுற்றும், வட்டவீதிக்கு 27 டிகிரி சாய்ந்து அமைந்துள்ளன. சுடர்வீசும் வளையங்கள் எல்லாம் திரட்சியான தட்டுக்கள் [Solid Disks] அல்ல! சில இடத்தில் வளையம் 16 அடியாக நலிந்தும், சில பகுதியில் 3 மைல் தடிமன் பெருத்தும் உள்ளன. வளையங்களில் பல்லாயிரக் கணக்கான பனித்தோல் போர்த்திய கூழாம் கற்கள் [Pebbles], பாறைகள், பனிக் கட்டிகள், தட்ப வாயுக் கட்டிகள் [Frozen Gases] தொடர்ந்து விரைவாக ஓடிச் சனியைச் சுற்றித் தொழுது வருகின்றன! வளையங்கள் சூரிய ஒளியில் மிளிர்வதற்குப், பனி மூடிய கற்களும், பனிக் கட்டிகளுமே காரணம். சனிக்கோளை நெருங்கிய உள் வட்ட வளையத்தின் துணுக்குகள் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வெகு வேகமாகச் சுற்றி வரும் போது, வெளி வட்ட வளையத் துணுக்குகள் சிறிது மெதுவாக 15 மணி நேரத்தில் ஒரு தரம் சுற்றுகின்றன. வளையத் துணுக்குகளின் பரிமாணம் தூசியாய் இம்மி அளவிலிருந்து, பாறைகளாய் 33 அடி விட்டமுள்ள வடிவில், வட்டவீதியில் உலா வருகின்றன.

    சனிக் கிரகத்தைச் சுற்றி வரும் சந்திரன்கள்

    சனிக் கோளின் உறுதி செய்யப் பட்ட 18 சந்திரன்களில் எல்லாவற்றிலும் மிகப் பெரியது, டிடான் [Titan]. அதன் விட்டம் 3200 மைல் என்று அனுமானிக்கப் பட்டுள்ளது. நைட்ரஜன் வாயு மண்டலத்தைக் கொண்டு, ஆரஞ்சு நிறத்தில் மந்தார நிலையில் இருப்பதால், டிடான் கோளின் விட்டத்தைக் கணிப்பது, கடினம். புதன் கோளை [Planet Mercury] விடச் சற்று பெரியது, டிடான். 1655 இல் டச் வானியல் வல்லுநர் கிரிஸ்டியான் ஹூயூஜென்ஸ் டிடான் சந்திரனை முதன் முதலில் கண்டு பிடித்தார். சனியின் மிகச் சிறிய சந்திரன் 12 மைல் விட்டம் கொண்டது.

    ஒரு காலத்தில் சனிக் கோளின் சந்திரனாகச் சுற்றி வந்த அண்ட கோளங்கள், சனியின் ஈர்ப்பு ரோச் எல்லைக்குள் [Roche Limit] சிக்கிக் கொண்ட போது, அதிர்வலை விசையால் [Tidal Force] உடைக்கப் பட்டுத் தூள் தூளாகி, வட்ட வளையங்களாய் மாறி விட்டன என்று கருதப் படுகிறது.

    சனிக்கோளை நோக்கி அடுத்த மாபெரும் படையெடுப்பு

    2004 ஆம் ஆண்டு சனியை நோக்கி ஏவப்பட இருக்கும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல் [Cassini Space Ship] மூலம் சனியைப் பற்றியும், அதன் பெரிய சந்திரன் டிடானைப் பற்றியும் நிறைய விஞ்ஞான ஆராய்ச்சி விளக்கங்கள் அறியப்படும். இதற்கு முன் பயணம் செய்த பயனீயர், வாயேஜர் விண்வெளிக் கப்பல்கள் சனிக்கோளை வெறும் ஒளிப்படங்கள் மட்டுமே எடுத்தன. ஆனால் காஸ்ஸினி

    விண்கப்பல் சனிக்கோளை பற்றி ஒரு முழு நீளத் திரைப்படமே எடுக்கப் போகிறது. நாசா [NASA] காஸ்ஸினி திட்ட விஞ்ஞானி, டென்னிஸ் வாட்ஸன், சனிக் கோளின் காந்தக் கூண்டு [Magnetosphere], அதன் மாபெரும் சந்திரன் டிடான், பனி மூடிய குட்டித் துணைக் கோள்கள் [Smaller Icy Satellites], பிரமாண்டமான வளையங்களின் அமைப்பு ஆகிய ஐந்து பகுதிகளில் சிறப்பான விஞ்ஞானக் கருத்துகளைச் சேகரிக்கப் போகின்றது, காஸ்ஸினி ஆய்வுச்சிமிழ் என்று கூறினார். வளையங்களில் உலாவிடும் அண்டத் தூசியும் துகள்களும், பனி பூசிய கூழாம் கற்களும் ஒரே உடைப்பு நிகழ்ச்சியில் உண்டானவையா ? அல்லது அடுத்தடுத்து நிகழ்ந்த உடைப்புகளினால் உதயமானவையா ? சனியின் சந்திரனை மோதி நொறுக்கியது வால் விண்மீன்களா [Comets] ? அல்லது அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் பெருத்த சந்திரன், சிறுத்த சந்திரனைத் தாக்கி உடைத்து வட்டவீதியில் வளையமாகச் சுற்ற வைத்து விட்டதா ? போன்ற புதிர் வினாக் களுக்குப் பதில் விடை அளிக்கும், காஸ்ஸினியின் விண்வெளிப் பயணம்!

    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    நாசா தொலைக்காட்சி LIVE (Real Player)


    நாசா தொலைக்காட்சி LIVE (Win Media)





    Shuttle docks with space station.
    Space shuttle Atlantis has docked with the International Space Station (ISS), on the first shuttle mission of 2007.

    The craft locked onto the station at 1938 GMT, 220 miles (354km) above the western Pacific Ocean.

    Nasa scientists have been examining damage to the shuttle's thermal blanket sustained during take-off on Friday.

    Nasa spokesmen said that the agency did not consider the damage significant. A spokesman said: "We do not see any cause for concern right now."

    The docking therefore went ahead as planned.

    The seven astronauts aboard Atlantis will continue installation work on the ISS, adding a new pair of solar panels to increase its power generation capacity, paving the way for Europe's Columbus module to join the station later this year.

    -BBC News-



    சர்வதேச விண்வெளி ஆராட்சி நிலையத்துடன் (ISS) இணைவதற்காக நெருங்கிச் செல்லும் Space Shuttle Atlantis.


    சர்வதேச விண்வெளி ஆராட்சி நிலையத்தினுள் (ISS) கடமையில் ஈடுபடும் வீரர்கள்.


    சர்வதேச விண்வெளி ஆராட்சி நிலையத்திற்கு (ISS) வெளியே உள்ள கருவிகளை பழுது பார்க்கும் வீரர்கள் (Spacewalk).





    Photos: NASA.
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    Space Shuttle Atlantis இன்று பூமிக்கு திரும்புகின்றது Eastern Time 12.50 Pm (GMT நேரப்படி 16.50) மணிக்கு தரையிறக்கத்தை மேற்கொள்வதற்கான முதலாவது வாய்ப்பு இருக்கின்றது காலநிலை உகந்த நிலையில் இருக்கும் என்றால் Eastern Time 12.50 Pm (GMT நேரப்படி 16.50) மணிக்கு நாசாவின் ஜோன்சன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து Space Shuttle Atlantis இல் இருக்கும் வீரர்களுக்கு தரையிறக்கத்தை மேற்கொள்ளும் படி கட்டளை வழங்கப்படும் அதன்படி Space Shuttle Atlantis, Eastern Time 13.55 Pm (GMT நேரப்படி 17.55) மணிக்கு புளோரிடாவில் உள்ள கனெடி விண்வெளி ஆய்வு மையத்தில் தரையிறங்கும். காலநிலை மிக மோசமாக இருந்தால் தரையிங்குவதற்கான கட்டளை வழங்குவதற்கான அடுத்த வாய்ப்பு Eastern Time 14.25 p.m மணிக்கு இருக்கின்றது. Space Shuttle Atlantis புளோரிடாவில் உள்ள கனெடி விண்வெளி ஆய்வு மையத்தில் தரையிறங்கவுள்து ஆனால் காலநிலை தொடர்ந்து மோசமாக இருந்தால் தரையிறங்கும் இடம் மாற்றப்படலாம்.

    தரையிறக்கத்தை நாசா தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்!!! மேலே தொலைக்காட்சி சுட்டி உள்ளது(CNN , ABC தொலைக்காட்சிகளிலும் பார்க்கலாம்)
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நன்றி சுட்டி. தொடரட்டும் உனது சேவை....

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    நல்ல பயனுள்ள தகவல் தொடருங்கள் சுட்டி
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    தகவலுக்கு நன்றி!
    Space shuttle atlanties வெற்றிகரமய்த் திரும்ப பிரார்த்திப்போம்...
    விண்வெளி வீரர்களுக்கு முற்கூட்டிய வாழ்த்துக்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    Quote Originally Posted by அக்னி View Post
    தகவலுக்கு நன்றி!
    Space shuttle atlanties வெற்றிகரமய்த் திரும்ப பிரார்த்திப்போம்...
    விண்வெளி வீரர்களுக்கு முற்கூட்டிய வாழ்த்துக்கள்...
    கண்டிப்பாக நண்பரே
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    காலதமதத்தை தினமலரில் சித்தரித்த படம்


    நாசாவின் சிக்னலுக்காக காத்திருக்கிறது அட்லாண்டிஸ்

    ஹூஸ்டன் : மோசமான வானிலை காரணமாக அட்லாண்டிஸ் விண்கலம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய நேரப்படி நாளை காலை விண்கலம் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை மற்றும் சூறாவளி நீடித்தால் வேறு இடத்தில் தரையிறங்குவதற்காக தளங்கள் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. சுனிதா வில்லியம்ஸ் உள்பட 7 விஞ்ஞானிகளுடன் பூமியை நெருங்கியுள்ள அட்லாண்டிஸ் நாசாவின் சிக்னலுக்காக காத்திருக்கிறது. நாசாவிடம் இருந்து சிக்னல் கிடைத்ததும் எங்கு தரையிறங்குவது என்று தெரிந்து விடும். அதன் பின்னர் அட்லாண்டிஸ் தரையிறங்கும்.
    Last edited by namsec; 22-06-2007 at 06:55 AM.
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0

    ஊதிப் பெருத்த கோளும் புரியாத விடயங்களும்

    விண்ணியலாளர்கள் 450 ஒளியாண்டுகளுக்கு அப்பால் சோடி நட்சத்திரங்களில் ஒன்றை வலம் வந்து கொண்டிருக்கும் பொருமிப் பெருத்த கோள் என்று கருதக் கூடிய விண்பொருள் ஒன்றை அவதானித்துள்ளனர். இதற்கு HAT-P-1 என்ற குறியீட்டுப் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த HAT-P-1 இன் ஆரை கிட்டத்தட்ட வியாழக் கிரகத்தின் ஆரையைப் போல 1.38 மடங்குகள் இருக்கும் அதேவேளை அதன் திணிவு வியாழனின் திணிவைப் (வியாழனின் திணிவு 1.8987 10^27 கிலோகிராம்) போன்று வெறும் அரைப்பங்கு தானாம் இருக்கும் என்று அணுமானிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இவ்விண்ணியற் பொருளின் சராசரி அடர்த்தி என்பது சாதாரண கோள்களின் அடர்த்தியிலின்றும் மிகக் குறைந்திருப்பதுடன் இவற்றின் அடிப்படையில் இதன் தோற்றம் குறித்தும் பாரிய சந்தேகத்தைக் கிளப்பி உள்ளது.

    இதன் சராசரி அடர்த்தி குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள ஆய்வாளர்கள் இதன் அடர்த்தி நீரின் (1000 கிலோகிராம்/கன மீற்றர்கள்) அடர்த்தியின் 1/4 பங்கு தான் என்றும் இவ்விண் பொருளின் (கோள் என்று கருத்ததக்க) பெளதீகத் தன்மைகள் குறித்து விளக்கவல்ல கணிப்பீடுகளை வழமையான கணிதச் சமன்பாடுகளைக் கொண்டு தீர்க்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

    இது தான் சுற்றி வரும் தாய் நட்சத்திரத்தை மிக அண்மித்த சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும் அதேவேளை 4.5 பூமி நாட்களுக்குள் இது ஒரு தடவை அதன் சுற்றுப்பாதையில் முழுமையாகப் பயணித்தும் விடுகிறதாம். இது அதன் தாய் நட்சத்திரத்தைக் கடக்கும் போது தாய் நட்சத்திரம் மக்கலாகத் தோன்றுகின்றதாம்.

    இந்த HAT-P-1 விண் பொருள் சூரியத் தொகுதிக்கு அப்பால் அவதானிக்கப்பட்ட கோள்கள் என்று கருதத்தக்க சுமார் 200 விண் பொருட்களில் ஒன்று என்றும் ஏற்கனவே கண்டறியப்பட்ட சூரியக் குடும்பத்துக்கு வெளியில் உள்ள இதே வகைக் கோளான HD 209458b இன் பொருமிப் பெருத்த அளவையும் விட இதன் பொருமல் 24% எதிர்பார்க்கப்பட்ட அளவை விட அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுகின்றது.


    HAT-P-1 விண் பொருள்
    இந்தக் கோளின் பெளதீகத் தன்மைகள் குறித்து விளக்க பல வழிமுறைகள் முன்மொழியப்பட்ட போதும் அவை எதுவும் இதுவரை சரியாக அமையவில்லை என்றும் மேலும் ஆய்வுகள் தொடர்வதாகவும் இவ்வாய்வை நடத்தி வரும் ஆய்வு மையம் - Harvard-Smithsonian Center for Astrophysics (CfA)- விண்ணியல் சஞ்சிகை ஒன்றின் மூலம் அறியத்தந்துள்ளது.
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    அட்லாண்டிஸ் விண்கலம் வீராங்கனை சுனிதா உள்பட 7 நிபுணர்களுடன் பத்திரமாக தரை இறங் கியது.
    விண்வெளியில் அமைக்கப் பட்டு வரும் சர்வதேச மிதக் கும் ஆய்வுக்கூடத்துக்கு அமெரிக்காவின் நாசா நிறுவனம்கடந்த 8-ந்தேதி அட்லாண்டிஸ் விண்கலத்தை அனுப்பியது. விண்வெளி ஆய்வுக்கூடத்தில் 6 மாதங் களுக்கு மேல் தங்கி ஆய்வு நடத்திய இந்திய வீராங்கனை சுனிதாவை அழைத்து வரவும் அங்கு தளவாடங்களை பொருத்தவும் இந்த விண்கலம் அனுப்பபட்டது.

    சுனிதா மற்றும் 6 விண் வெளிநிபுணர்களுடன் அட்லாண்டிஸ் ராக்கெட் கடந்த 19-ந்தேதி மீண்டும் பூமிக்கு புறப்பட்டது.

    ஏற்கனவே அட்லாண்டிஸ் விண்கலம் பூமியில் இருந்து புறப்பட்ட போது அதன் வெப்ப தடுப்பு தகடு சேதம் அடைந்தது.

    ஆய்வுக் கூடத்தில் கம்ப்ட் டர்களும் பழுதடைந்தன. இதனால் சுனிதா பூமிக்கு திரும்புவதில் சிக்கல் எழுந்தது. இந்த கோளாறுகள் சரி செய் யப்பட்டு அட்லாண்டிஸ் விண்கலம் பூமிக்கு புறப்பட் டதும் புளோரிடா மாநிலம் கேப்கனவரால் கென்னடி தளத்தில் தரை இறங்க திட்ட மிடப்பட்டு இருந்தது.

    ஆனால் புளோரிடா மாநிலத்தில் மோசமான வானிலை காணப்பட்டது. பலத்த காற்று வீசியது. இதனால் விண்கலம் தரை இறங்குவது மேலும் தாமதமானது.

    இதைதொடர்ந்து கலி போர்னியா மாநிலத்தில் மொஜாவ் பாலைவனப்பகு தியில் உள்ள கென்னடி விமானபடை தளத்தில் விண் கலத்தை தரைஇறக்க முடிவு செய்யப்பட்டது.

    விண்கலம் வானவெளி மண்டலத்தில் இருந்து புவி மண்டலத்துக்குள் நுழையும் போது விண்கலத்துக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பரபரப்பு 3நிமிடங்களுக்கு ஏற்பட்டது. விண்கலம் பூமியில் தரை இறங்குவது மேலும் தாமதப்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. இதில் உள்ள எரிபொருள் ஞாயிற்றுக்கிழமை வரைதான் போதுமானாகதான் இருந் தது.

    ஆனால் மிகுந்த பர பரப்புக்கு இடையே நேற்று நள்ளிரவு 1.19 மணிக்கு அட்லாண்டிஸ் விண்கலம் கலிபோர்னியாவில் எட்வர்ட் கென்னடி விமானப்படை தளத்தில் பத்திரமாக தரை இறங்கியது.

    அப்போது `நாசா' நிறு வனத்தில் கட்டுப்பாட்டு நிலைய விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

    விண்வெளியில் 195 நாட் களுக்கு மேல் தங்கி இருந்த பெண் என்று சாதனை படைத்த சுனிதா பூமிக்கு எந்த ஆபத்தும் இன்றி திரும்பியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    அட்லாண்டிஸ் விண்கலத் தில் இருந்து இறங்கிய சுனிதாவுக்கும் மற்ற 6 வீரர்களும் பல்வேறு மருத் துவசோதனைகள் நடத் தப்பட்டன.

    விண்வெளியில் 6 மாதங் களுக்கு மேல் தங்கி இருந்த சுனிதாவுக்கு இந்த பூமி இப் போது ஒரு புதிய உலகம் போல் தோன்றுகிறது. அவர் சகஜ நிலமைக்கு திரும்ப இன்னும் 45 நாட்கள் ஆகும்.

    சுனிதாவுக்குப்பதில் இப்போது மிதக்கும் விண் வெளி ஆய்வுக்கூடத்தில் ஆன்டர்சன் என்ற வீரர்தங்கி இருக்கிறார்.

    அட்லாண்டிஸ் விண்கலம் தரை இறங்கும் இடம் எட்வர்ட் கென்னடி விமானப்படை தளத்துக்கு மாற்றப்பட்டதால் நாசா நிறுவனத்துக்கு கூடுதலாக 17 லட்சம் டாலர் செலவு பிடித்துள்ளது
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  12. #12
    புதியவர்
    Join Date
    27 Jun 2007
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0
    விண் வெளியில் உலா சென்ற* உணர்வு வந்தது

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •