Results 1 to 3 of 3

Thread: எணழகு.... என்னவள் அழகு.....!

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0

    எணழகு.... என்னவள் அழகு.....!

    மஞ்சள் அழகா....!
    மாதுளம் பூவழகா...!

    கொஞ்சல் அழகா...... கோபுரம் தானழகா....!
    வஞ்சி அழகா.... வாய்வெடித்த பூவழகா....!
    குஞ்சம் அழகா... கூந்தல் மலரழகா....!

    இல்லை பஞ்சமில்லா மஞ்சம் அழகா.....!

    மிஞ்சும் அழகு மெருகூட்டும் அழகெதென்றால்....
    வெள்ளை நெஞ்சம் அழகு....!

    நெடுநாட் காதலித்தும் அஞ்சுதற்கு அஞ்சுகின்ற
    வஞ்சமில்லா நெஞ்சமே அழகென்பேன் யான.....!.

    சாதம் இடுகின்ற சந்தனக்கையழகா....!
    அவள் பாதம் படுகின்ற பக்குவப் புல்லழகா....!

    நாதம் கொடுக்கின்ற நங்கை குரலழகா....!
    பாதம் நோகாமல் பக்குவமாய் நடை நடந்து....
    தோதாய் வளர்ந்திருக்கும்
    கார்குழலை வாரிவிட்டு.....

    கோதிப்பூ முடித்து காதலாள் காத்திருந்தால்
    என்ன அழகு மின்னும் அழகு......!

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    அவளும் அழகு
    உங்கள் கவியும் அழகு.நன்றி
    இணையத்தில் ஒரு தோழன்

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    எல்லாமே அழகு.உள்ளம்தான் உள்ளதிலேயே அழகு என்றுரைத்த உங்கள் கவிதை மிக அழகு. பாராட்டுக்கள் வசீகரன்
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •