Search:

Type: Posts; User: Arudkavi Ganesh; Keyword(s):

Search: Search took 0.25 seconds.

  1. Sticky: தமிழும் கலையும் தலைசிறந் தோங்குமெம் ...

    தமிழும் கலையும் தலைசிறந் தோங்குமெம்
    திமிதிமி தாளமும் திரைகடற் கப்பாலும்
    அமிர்தமாய் இனித்திடும் அன்பரே உம்பணி
    இமயமாய் வளர்ந்திட ஏற்றினேன் வாழி!

    ...
  2. கற்பகதரு என பனைமரத்தினை அழைப்பர். பனையிலிருந்து...

    கற்பகதரு என பனைமரத்தினை அழைப்பர். பனையிலிருந்து எடுக்கப்படும் கள்ளு முதலாய மதுபானங்களை அருந்தி மடியினும் என்பது பொருள்-

    அருட்கவி
  3. காதலிக்கும் காளையர்க்கு காதலர்தின வாழ்த்துக்கள்(ஆக்கம்: அருட்கவி)

    இன்னிசை வெண்பா)

    சக்தியளே! வித்தகியே! சாந்த சொரூபிணியே!
    சர்க்கரையும் சாரவலும் சாதமும்- முக்கனியும்
    முன்னே படைத்தேன்யான் முத்தமிழில் நற்கவிதை
    பின்னிடவே ஈவாய் அருள்!

    கண்ணே கருத்தில் கலந்தவென்...
  4. உற்றதோழி உன்மனையாள் ஒருத்தியே! (ஆக்கம் : அருட்கவி)

    உற்றதோழி உன்மனையாள் ஒருத்தியே!
    (நிலைமண்டில ஆசிரியப்பா)


    கற்றவர் யாவரும் கவிதையிற் பாடுவர்
    பெற்றவள் அன்பே பெரிதென வாழ்வில்!
    பற்றிய கணவன் பாதை மாறியே
    தொற்று நோயொடு தொழுநோய்; காணினும்
    கற்பக...
  5. பெண் தெய்வம் (ஆக்கம் : அருட்கவி)

    பெண் தெய்வம்
    (எண்சீர் ஆசிரிய விருத்தம்)

    பெண்ணைப் பேயென்று பேசிடும் பித்தரே
    உன்னை யீன்ற உன்தாயும் பெண்ணே!
    கண்ணின் இமையடா காத்திடும் தெய்வங்கள்
    உண்மையாய்ப் பழகிப்பார் உயிரையும் ஈவாள்...
  6. அன்பைப் பெருக்கியே அன்றிலாய் வாழ்கவே! ஆக்கம் : அருட்கவி

    ஓம்
    அன்பைப் பெருக்கியே அன்றிலாய் வாழ்கவே!

    அன்பைப் பெருக்கியே அன்றிலாய் வாழ்ந்திட
    இன்பம் பெருகுமாம் இல்வாழ்வில்- துன்பம்
    அகன்று தூயதாம் இன்வாழ்வு ஓங்கி
    பகைமையே பறந்திடும் பார்.
  7. உன்னுள் உறைந்த இறைவனைத் தேடு! (ஆக்கம் அருட்கவி)

    வெண்பா
    இறைவனைத் தேடி இகமெலாம் ஓடி
    உறைவிடம் காணா உறவே- புறத்தே
    அலைந்துமே புண்ணியம் இல்லையே ஆறி
    அகத்திலே காண்பாய் அருள்!

    ஆயிரம் பூசைகள் அர்ச்சனை ஏதற்கு
    பாயிரமும் பண்ணும் எதற்கப்பா?- நீயிருந்து...
  8. அருட்கவியின் அறிமுகம்

    வணக்கம் தமிழ் மன்ற எழுத்தாளர்களே, நேயர்களே

    எனது பெயர் தம்பிஐயா ஞானகணேசன், புனைப்பெயர் அருட்கவி. விநாயகர் வீதி, நல்லூர். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட நான் கனடிய மண்ணில் கடந்த 30 வருட காலமாக...
  9. தந்தையர்புகழ் பாடிடுவோம் (பாவினம்)

    தந்தையர்புகழ் பாடிடுவோம்
    (ஆக்கம்: அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன்)


    (பாவினம்)
    பல்லவி
    தந்தையர்புகழ் பாடிடுவோம் தெய்வங்களாய்ப் போற்றிடுவோம்
    முந்தைவினைப்...
  10. ஞானாவின் சிறுவர் செந்தமிழ்ப் பாடல்

    ஓம்
    ஞானாவின் சிறுவர் செந்தமிழ்ப் பாடல்
    (ஆக்கம்: அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன்)

    எந்தன் செல்ல நாய்க்குட்டி
    (புலம்பெயர் மண்ணில்)

    வாலைச் சுழற்றி வளையும் நாய்க்கு
    ...
  11. சோற்றைக் குறைத்திடச் சோகம் தீர்ந்திடும்!

    ஓம்
    சோற்றைக் குறைத்திடச் சோகம் தீர்ந்திடும்!
    (ஆக்கம் அருட்கவி ஞானகணேசன்)

    பானை வயிறும் பன்றிபோல் உருவமும்
    ஆனை நடையும் அடிக்கடி நோயும்
    மோனை ஏனடி? முழுதும் சோறடி
    ஊனை மாற்றிட உருவமும் மாறுமே!...
  12. இந்திர லோகம் இம்மையில் காண்பமே!

    ஓம்
    இந்திர லோகம் இம்மையில் காண்பமே!
    (ஆக்கம் அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன்)

    மானிடப் பிறப்பு மகேசனைத் துதிக்கவே
    வானரம் போலநாம் வாழுதல் சரியோ?
    கானம் தொடுத்து கடவுளை அனுதினம்
    தேனாய்ப் பாடிடத் தேவன்...
  13. தமிழும் மரபும் தமிழரின் கண்களே? (ஆக்கம் அருட்கவி ஞானகணேசன் தம்பிஐயா

    வெண்பா

    செந்தமிழ்ப் பேரறிஞர் சேர்தமிழ் மன்றினில்
    எந்தனைப் பாடவைத்த ஈசனே- வந்தருள்வாய்
    வானோங்க வண்தமிழ்ப்பா வாயார நான்பாட
    தேனாம் தமிழினைத் தா!

    ஆசிரியப்பா
    தமிழையும் மரபையும்...
Results 1 to 13 of 13