-
பயனர் தகவல்கள்
பயனர் தகவல்களை எப்படி மாற்றுவது?
மன்றத்தின் இடது பக்க மூலையிலுள்ள User CP என்பதைப் பாவித்து பயனாளர் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்து மாற்றலாம்.
பயனர் பெயரை மாற்றுவது எப்படி?
உங்கள் பயனர் பெயரை உங்களால் மாற்ற முடியாது. நிர்வாகியின் உதவியுடனேயே மாற்றலாம். பெயர் மாற்றம் செய்ய திரியில் விண்ணப்பம் செய்து உங்கள் பயனர் பெயரை மாற்றலாம்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17215
உங்கள் கையொப்பங்களை சேர்ப்பது /மாற்றுவது எப்படி?
பயனர் தகவல் அறைக்கு (User CP) சென்று Edit Signature தெரிவுசெய்து உங்கள் கையெழுத்தை புதிதாக தட்டச்சி/மாற்றி Save Signature கொடுத்தால் போதும்.
அவதார் எப்படி ஏற்றுவது அல்லது மாற்றுவது?
மன்றத்தின் இடது பக்க மூலையிலுள்ள User CP என்பதைப் பாவித்து பயனாளர் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்து Edite Avatar என்பதைத் தெரிவு செய்யவும்.
இங்கே நீங்கள் இரு முறையில் உங்களது பயணாளருக்கான அவதாரைத் தெரிவு செய்யலாம்.
Option 1 - Enter the URL to the Image on Another Website − ஏதாவது ஒரு தளத்திலே உங்கள் அவதாருக்குரிய படத்தினை இணைத்து அதற்குரிய இணைப்பை இங்கே கொடுத்தால் போதும் உங்களது அவதாருக்குரிய படம் பதிக்கப்படும்.
Option 2 - Upload Image From Your Computer நேரடியாக உங்கள் கணினியிலுள்ள அவதாருக்கான படத்தை Browse செய்து ஏற்றிக் கொள்ளலாம்.
-
பட்டங்கள்
பட்டங்கள் என்ன அடிப்படையில் வழங்கப்படுகிறது?
மன்றத்தின் உறுப்பினர்களை ஊக்கப்படுத்தும் முகமாக கொடுக்கப்படும் பட்டங்கள் பதிவுகளின் எண்ணிக்கை அடிப்படையிலே கொடுக்கப்படுகின்றன. பதிவுகளின் அடிப்படையில் மன்றத்தில் வழங்கப்படும் பட்டங்கள் பயனாளர் பெயருக்கு கீழ் வரும் User Title-லில் அவரவர் பதிப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கீழ் கண்டவாறு (பதிவுகள் எண்ணிக்கை -பட்டம்) தோன்றும்.
- 1-49 ... புதியவர்
- 50-99 ... இளையவர்
- 100-499 ... இளம் புயல்
- 500-999 ... இனியவர்
- 1000-1999 ... அனைவரின் நண்பர்
- 2000-க்கு மேல் ... மன்றத்தின் தூண்
- 5000-க்கு மேல் மன்றத்தின் சுடர்
- 10000 க்கு மேல் மன்றத்தின் மகுடம்
பெயரின் கீழ் இரண்டாவது வரியில் "Member" ஏதாவது ஒன்று வரவேண்டும். அப்படி வந்தால் மூன்றாவது வரி தானாகவே உங்களை தேடி வரும். மூன்றாவது வரி பற்றிய விளக்கத்துக்கு அடுத்த பதிவை படியுங்கள்.
பயனர் பெயர்களின் நிறவித்தியாசத்திற்குக் காரணம் என்ன?
தமிழ்மன்றத்தில் நிர்வாகக் குழுவை வெறுபடுத்துவதற்காக, இந்த நிறவேறுபாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது...
மன்ற உறுப்பினர் (கறுப்பு)
நிர்வாக உதவியாளர் (பச்சை)
மன்ற நிர்வாகி (சிவப்பு)