PDA

View Full Version : இனியும் எனக்கு வலுவில்லை..!அக்னி
08-06-2007, 03:59 PM
http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/My%20poems/j1.jpg

என் மனதை ஊடுருவும்
உன் உணர்வுகள்...
எனக்கு உறவாகிப் போகுமா?
என் மனதை தடுமாற்றும்
உன் நினைவுகள்...
எனக்குள் உயிரூற்றிப் போகுமா?

உன் விழி
தாக்கும் சக்தி தாங்க,
இனியும் எனக்கு வலுவில்லை...

அன்பே சொல்லிவிடு..!

உன் தோள் கொடுப்பாயா..?
எனக்கு..,
நான் சாய்ந்துகொண்டு
கதறி அழ..!
அல்லது,
உன் மடி தருவாயா..?
எனக்கு..,
நான் நிரந்தரமாய்
உறங்கி விட...

இணைய நண்பன்
08-06-2007, 07:35 PM
மனதில் உள்ள சோகத்தை கவிதை மட்டுமல்ல பின்னணி படம் கூட, அழகாக எடுத்துக்காட்டுகிறது.வாழ்த்துக்கள்

சிவா.ஜி
09-06-2007, 04:47 AM
என் மனதை ஊடுருவும்
உன் உணர்வுகள்...
எனக்கு உறவாகிப் போகுமா?
என் மனதை தடுமாற்றும்
உன் நினைவுகள்...
எனக்குள் உயிரூற்றிப் போகுமா?
மனதை தடுமாற்றும் நினைவுகளைக் கொண்டு உயிர்ரூட்டச்சொன்ன நீங்கள்
உன் மடி தருவாயா..?
எனக்கு..,
நான் நிரந்தரமாய்
உறங்கி விட...

கடைசியில் நிரந்தர உறக்கத்தை விரும்பியது ஏனோ? மடி கிடைத்த சந்தோஷத்திலா? உணர்வுகளை சொன்ன வித்ம் அருமை அக்னி.

ஆதவா
09-06-2007, 04:54 AM
என் மனதை ஊடுருவும்
உன் உணர்வுகள்...
எனக்கு உறவாகிப் போகுமா?
என் மனதை தடுமாற்றும்
உன் நினைவுகள்...
எனக்குள் உயிரூற்றிப் போகுமா?

உன் விழி
தாக்கும் சக்தி தாங்க,
இனியும் எனக்கு வலுவில்லை...

அன்பே சொல்லிவிடு..!

உன் தோள் கொடுப்பாயா..?
எனக்கு..,
நான் சாய்ந்துகொண்டு
கதறி அழ..!
அல்லது,
உன் மடி தருவாயா..?
எனக்கு..,
நான் நிரந்தரமாய்
உறங்கி விட...


ஏதோ லாஜிக் உதைக்கிற மாதிரி இல்ல?.. அக்னி.. மென்மையாக படைத்திருக்கிறீர்கள். அதென்ன நிரந்தர உறக்கம்? இறப்பா? இல்லை வேறொன்றா?

முதல் பாரா வரிகள் பிரமாதம். அடுத்தடுத்து ஏற மறுத்து இறங்கியதைப் போன்ற உணர்வு.. வாழ்த்துக்கள் அக்னி. காதலில் இந்த அளவுக்கு சொல்லக்கூட தகுதியின்றி வாழ்த்து மட்டுமே சொல்லி மறையும்

ஆதவன்..

அமரன்
10-06-2007, 07:12 PM
என் மனதை ஊடுருவும்
உன் உணர்வுகள்...
எனக்கு உறவாகிப் போகுமா?
என் மனதை தடுமாற்றும்
உன் நினைவுகள்...
எனக்குள் உயிரூற்றிப் போகுமா?

உன் விழி
தாக்கும் சக்தி தாங்க,
இனியும் எனக்கு வலுவில்லை...

அன்பே சொல்லிவிடு..!

உன் தோள் கொடுப்பாயா..?
எனக்கு..,
நான் சாய்ந்துகொண்டு
கதறி அழ..!
அல்லது,
உன் மடி தருவாயா..?
எனக்கு..,
நான் நிரந்தரமாய்
உறங்கி விட...

உணர்வுகளால் உயிரூட்ட மறுத்ததால்
அவர் உணர்வுகளில் அவள்
உறவெனக்கலந்ததால்
வாழ்வதற்கு மனசைத்தான் தரவில்லை
வீழ்வதற்கு மடியையாவது தா

என்று காதலைக் கேட்கின்றாரோ.

மனோஜ்
10-06-2007, 07:34 PM
உணர்வுகள் உயிரைதரவும் தயங்காது
உணர்சியின் உச்சகட்டம் இது அருமை நண்பரே

sreeram
10-06-2007, 10:37 PM
என் மனதை ஊடுருவும்
உன் உணர்வுகள்...
எனக்கு உறவாகிப் போகுமா?

----- இங்கே உணர்வுகளே உறவாகிப் போவது புதுமை...அழகான கற்பனை....

என் மனதை தடுமாற்றும்
உன் நினைவுகள்...
எனக்குள் உயிரூற்றிப் போகுமா?

--------------- நினைவுகள் உயிர் ஊற்றுவதா....? போனமுறை உணர்வுகளே உறவென்றீர். இப்பொழுது நினைவுகள் உயிர்...? -----

உன் விழி
தாக்கும் சக்தி தாங்க,
இனியும் எனக்கு வலுவில்லை...

அன்பே சொல்லிவிடு..!

--------- என்ன சொல்ல...? ஐ லவ் யூ ... என்றா....? ----

உன் தோள் கொடுப்பாயா..?
எனக்கு..,
------------- உங்களால அந்தக் கணத்தைத் தாங்க முடியுமா...? ஏன்னா விழி தாக்கும் சக்தியையே தாங்க முடியாதவர் அவ்ளோ பெரிய தோளை எப்படித்தான் தாங்குவீர்....? --------

நான் சாய்ந்துகொண்டு
கதறி அழ..!
--------------ஆம் தோளின் வல்லிய கணத்தால் அழுகின்றீரோ....?----

அல்லது,
உன் மடி தருவாயா..?
எனக்கு..,
நான் நிரந்தரமாய்
உறங்கி விட...

---- ஏன் அவ்வளவு பயம்....? உங்கள் காதலி இனிமையானவள் இல்லையா....? இல்லையென்றால் வேறு ஒரு நல்ல காதலியைத் தேடலாமே...? நம்பிக்கையோடிருங்கள்... நாளை நமதே.....! -------

அறிஞர்
10-06-2007, 10:46 PM
காதலியின் வார்த்தைகளுக்கு ஏங்கும் காதலனின் வரிகள் அருமை...

ஆதவனின் பாணியில் எனக்கும் ஏதோ லாஜிக் உதைக்கிற மாதிரி இருக்கே.

இளசு
12-06-2007, 12:09 AM
பேனா கண்டுபிடித்த பிறகும்
இன்னும் விழிகளால் எழுதுபவள் பெண்

பா.விஜய் வரிகள் இவை.

விழியீர்ப்பு சக்தியின் வீரியம் பற்றி
விலாவரியாய்ச் சொன்னவர் தபூசங்கர்..

மன்றத்தில் அக்னியின் இக்கவிதையிலும்
அத்தகைய காதல் ஆழம் தெறிக்கிறது..

சக்தி தருவதும் சக்தி எடுப்பதுமான
சதிராட்டம் ஆடும் பாவை விழிகளால்
குழைந்த கவியின் வரிகளில் லாஜிக்
குலைந்ததுபோல் தோன்றாமல் இருந்தால்தான்
குறையே!

அக்னி
12-06-2007, 01:02 AM
விமர்சனங்களில் என்னைப் புடம்போட்ட அனைத்து உறவுகளுக்கும்,
நன்றிகள்...