PDA

View Full Version : நானும் காதலில்...!



வசீகரன்
08-06-2007, 09:53 AM
துயர் என்னைத்
துகிலூரிக்கும் வேளையில்
மலர்ந்த உன் முகம் பார்க்க
மறைந்து விடுகிறது

அத்தனையும் காயங்கள்
பாரமாய் கணக்கின்ற போது
உன் சிலிர் சிரிப்பில்
சிதறிவிடுகின்றது அத்தனையும்


பொதிகை மலைதனில்
தவழ்ந்த தென்றலை போன்ற
நம் நினைவுகள்
வாழ்க்கை ஓட்டத்தில்
மெல்ல மெல்ல
மறைந்து விடுமா,,,,

உன்னால் முடியுமானால்

இணைய நண்பன்
08-06-2007, 10:07 AM
நண்பரே..கவிதை வடிவில் தந்தால் நன்றாக இருக்கும்.வாழ்த்துக்கள்

விகடன்
08-06-2007, 10:48 AM
இதுதாங்க கவிதை. வடிவம் மட்டும் மாறிவிட்டது. அடுத்து கவிதையினமைப்பில் தர முயற்சியுங்கள்.

பாராட்டுக்கள்.

வசீகரன்
08-06-2007, 10:58 AM
தங்களது கருத்துக்கு மிக்க நன்றி நண்பர் இப்ராகிம் அவர்களே இனி கவிதை நடையில் எழுதுகிறேன்,,,,, வசீகரன்

வசீகரன்
08-06-2007, 11:03 AM
உங்களது மேலான கருத்துக்கு நன்றி நண்பரே.... இனி கவிதை நடையில் எழுதுகிறேன்

என்றும் நட்புடன் வசீகரன்

அமரன்
08-06-2007, 03:44 PM
உங்களது மேலான கருத்துக்கு நன்றி நண்பரே.... இனி கவிதை நடையில் எழுதுகிறேன்

என்றும் நட்புடன் வசீகரன்
வசீகரன் எடிட் செய்து கவிதை நடைக்கு மாற்றி விடுங்களேன்.

ஓவியா
08-06-2007, 03:47 PM
நல்ல கவிதை, பாராட்டுக்கள் வசீகர்ரன்.

உண்மை காதலுக்கு பலம் ஜாஸ்தி, அன்பும் என்றுமே மாறாது.

உங்கள் காதல் நலம் வாழ எனது வாழ்த்துக்கள்.

இணைய நண்பன்
08-06-2007, 07:37 PM
கவிதை நடைக்கு மாற்றி விட்டீர்கள்.நன்றி

சிவா.ஜி
09-06-2007, 05:07 AM
துயர் என்னைத்
துகிலூரிக்கும் வேளையில்
மலர்ந்த உன் முகம் பார்க்க
மறைந்து விடுகிறது

அத்தனையும் காயங்கள்
பாரமாய் கணக்கின்ற போது
உன் சிலிர் சிரிப்பில்
சிதறிவிடுகின்றது அத்தனையும்
இன்னுமொரு சிறிய மாற்றம் தேவை நன்பரே.
அத்தனையுமென்பது மேலே வரவேண்டும்.
மலர்ந்த உன் முகம் பார்க்க
மறைந்து விடுகிறது அத்தனையும்
கவிதைக்கு பாராட்டுக்கள்.மேலும் மேலும் படையுங்கள்.வாழ்த்துக்கள்.