PDA

View Full Version : ஒர் வரம் வேண்டும்...



இனியவள்
08-06-2007, 09:05 AM
ஒருவராலும் ஈடு செய்ய முடியாத
அன்னையின் அன்பும்
சகோதரர்களால் கிடைக்கின்ற
என்றும் அழியாத பாசமும்
பள்ளி வாழ்க்கையில் ஏற்படுகின்ற
தூய்மையான நட்பும்
ஆசிரியையின் மாசில்லா உறவும்
இறைவா !
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
இந்த பாச பந்தங்களை
தொடர்ந்தும் கிடைக்கும் படி
எனக்கு ஒர் வரம் வேண்டும்.......

அன்புரசிகன்
08-06-2007, 09:25 AM
அனைவரும் தேடும் ஒரு விடையம். சிலர் தெரிந்தே தொலைக்கிறார்கள்.
வரிகளுக்கு நன்றி இனியவளே...

அமரன்
08-06-2007, 09:26 AM
இவற்றுடன் இவையையும் சேர்த்துக்கொள்ளுங்கள் சகோதரி.
தீங்கு நினைக்கா மனம்
நெறி பிறழா வாழ்க்கை
தன்னுயிர் போல இன்னுயிர்
சமாதானக் காற்று
சமத்துவ சமூகம்
கவிதைக்கு நன்றி கலந்த பாராட்டுகள். நீங்கள் கேட்கின்ற அத்தனையும் கிடைத்துவிட்டால் மற்றவையெல்லாம் தானாகத் தேடி வரும்.

இனியவள்
08-06-2007, 03:28 PM
அனைவரும் தேடும் ஒரு விடையம். சிலர் தெரிந்தே தொலைக்கிறார்கள்.
வரிகளுக்கு நன்றி இனியவளே...

நன்றி அன்புரசிகன்
தெரிந்தே தொலைப்பவர்கள் வாழ்க்கையின் இன்பங்களை தவறவிடுகின்றார்கள்

இனியவள்
08-06-2007, 03:29 PM
இவற்றுடன் இவையையும் சேர்த்துக்கொள்ளுங்கள் சகோதரி.
தீங்கு நினைக்கா மனம்
நெறி பிறழா வாழ்க்கை
தன்னுயிர் போல இன்னுயிர்
சமாதானக் காற்று
சமத்துவ சமூகம்
கவிதைக்கு நன்றி கலந்த பாராட்டுகள். நீங்கள் கேட்கின்ற அத்தனையும் கிடைத்துவிட்டால் மற்றவையெல்லாம் தானாகத் தேடி வரும்.

உண்மை தான் சகோதரரே