PDA

View Full Version : வாழ்க்கை



இனியவள்
08-06-2007, 08:53 AM
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதீர்கள்.
வாழ்க்கை ஒரு பயணம் - சென்று முடியுங்கள்.
வாழ்க்கை ஒரு விடுகதை- விடுவியுங்கள்
வாழ்க்கை ஒரு விளையாட்டு - ஈடுபடுங்கள்
வாழ்க்கை ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள்
வாழ்க்கை ஒரு வெகுமதி - ஏற்றுக் கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு வேதனை - தாங்கிக் கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு சவால் - எதிர் நோக்குங்கள்
வாழக்கை ஒரு போட்டி - வெற்றி பெறுங்கள்
வாழ்க்கை ஒரு சோகம் - மனம் தளராதீர்கள்
வாழ்க்கை ஒரு பிரச்சனை - தீர்வு காணுங்கள்
வாழ்க்கை ஒரு கலை - அழகு படுத்துங்கள்.

அமரன்
08-06-2007, 09:37 AM
வாழ்க்கை ஒரு விளையாட்டு - ஈடுபடுங்கள்
ஏற்றுக்கொள்கின்றேன் விலையாடிப்பார்த்து விடனும்
வாழ்க்கை ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள்
வாழ்க்கையில் போராட்டம் சகஜம். சிலருக்கு வாழ்க்கையே போராட்டம்.

வாழ்த்துக்கள்

இணைய நண்பன்
08-06-2007, 09:43 AM
அற்புதமான கவி வரிகள்.வாழ்த்துக்கள்

இனியவள்
08-06-2007, 02:37 PM
அற்புதமான கவி வரிகள்.வாழ்த்துக்கள்

நன்றி இக்ராம்

இனியவள்
08-06-2007, 02:38 PM
வாழ்க்கை ஒரு விளையாட்டு - ஈடுபடுங்கள்
ஏற்றுக்கொள்கின்றேன் விலையாடிப்பார்த்து விடனும்
வாழ்க்கை ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள்
வாழ்க்கையில் போராட்டம் சகஜம். சிலருக்கு வாழ்க்கையே போராட்டம்.
வாழ்த்துக்கள்


நன்றி
போராட்டம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையில்லையே

ஓவியா
08-06-2007, 02:45 PM
கீதையின் உபதேசந்தான் நினைவில் வருகின்றது.

உயர்ந்த சிந்தனை. பாராட்டுக்கள் தோழி.

மனோஜ்
08-06-2007, 02:54 PM
வாழ்க்கை ஒரு மெழிகுவர்த்தி உருகும் முன் பலறுக்கு பயண்தர வேண்டும்
அருமை வாழ்க்கை பாதையை காட்டும் கவிதை நன்றி

ஜோய்ஸ்
08-06-2007, 02:58 PM
தாங்கள் எழுதியது கவிதையல்ல என்னை பொறுத்தவரை.
அது வாழ்வின் வெற்றி ரகசியம் என்பேன்.
ஜெயிக்கும் தாரக மந்திரம் என்பேன்.
வாழ்க்கையை தொலைக்காமலிருக்க ஓர் ஊன்று கோல் என்பேன்.
வாழ்வின் வெற்றிப் படிக்கட்டுக்கள் என்பேன்,
சொன்னால் இன்னமும் சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் விரிவுக்கு அஞ்சி இத்துடன் நிறுத்துகிறேன்.
பாராட்டுக்கள்.

அமரன்
08-06-2007, 03:05 PM
நன்றி
போராட்டம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையில்லையே
உண்மைதான். போராடி ஜெயிக்கும் வாழ்க்கை நிச்சயம் இனிக்கும்.

இனியவள்
08-06-2007, 03:16 PM
கீதையின் உபதேசந்தான் நினைவில் வருகின்றது.

உயர்ந்த சிந்தனை. பாராட்டுக்கள் தோழி.

நன்றி தோழியே...!

இனியவள்
08-06-2007, 03:19 PM
தாங்கள் எழுதியது கவிதையல்ல என்னை பொறுத்தவரை.
அது வாழ்வின் வெற்றி ரகசியம் என்பேன்.
ஜெயிக்கும் தாரக மந்திரம் என்பேன்.
வாழ்க்கையை தொலைக்காமலிருக்க ஓர் ஊன்று கோல் என்பேன்.
வாழ்வின் வெற்றிப் படிக்கட்டுக்கள் என்பேன்,
சொன்னால் இன்னமும் சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் விரிவுக்கு அஞ்சி இத்துடன் நிறுத்துகிறேன்.
பாராட்டுக்கள்.

வாழ்க்கை பற்றி சொல்லப்போனால் சொல்லிக்கொண்டே போகலாம் வானம் போல் முடிவு காணமுடியாது
நன்றி