PDA

View Full Version : வேஷம்



இனியவள்
07-06-2007, 05:38 PM
உனக்கென என் மனதில்
ஒரு வசந்த மாளிகை உருவாகினேன்
அதனை நீ கல்லறையாக மாற்றி விட்டாய்...
அழுதழு கண்ணீர் கூட
வற்றி விட்டதடா என் கண்ணில்...
உன்னை நினனைத்து நான்
வாடும் போது எல்லாம்
நாம் பழகிய பசுமையான
நினைவுகள் வந்து என்னைத் தாலாட்டுகிறது...
அந்த நினைவுகள் எனக்கு
தூக்கத்தைத் தருவதற்கு பதிலாக
எனது தூக்கத்தை கெடுக்குதடா
என் வாழ்வே நீ என
நினைத்து இருந்தேன் - நீயோ
உன் வாழ்வே அவள் என
சென்று விட்டாய்..
என் மேல் நீ வைத்த பாசம்
எல்லாம் வேஷம் ஆகிவிட்டதடா..
அன்பில் கூட வேஷமா..

விகடன்
07-06-2007, 06:00 PM
ரொம்ப கவலைப்பட்டு எழுதியிருக்கிறீர்கள்.
இதற்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.

இருந்தாலும் வலிகள் கவிதை வடிவில் செதுக்கியிருக்கிறீர்கள்.

அமரன்
08-06-2007, 08:31 AM
உன்னை நினனைத்து நான்
வாடும் போது எல்லாம்
நாம் பழகிய பசுமையான
நினைவுகள் வந்து என்னைத் தாலாட்டுகிறது...
அந்த நினைவுகள் எனக்கு
தூக்கத்தைத் தருவதற்கு பதிலாக
எனது தூக்கத்தை கெடுக்குதடா
..
அருமை சகோதரி தாலாட்டு என்பதே தூங்குவதற்காகப் பாடப்படுவது. ஆனால் கலைந்து விட்ட காதல் நினைவுகள் தாட்டுகின்றன. ஆனால் தூங்க வைக்கவில்லை. தூக்கத்தைக் கெடுக்கின்றன. முரண்பட்ட சிந்தனை. இது காதலில் மட்டுமே சாத்தியம். சிந்தனைக்குப் பாராட்டுகள். கவிதைக்கு நன்றிகள்.

சிவா.ஜி
09-06-2007, 05:19 AM
வேதனைகளை சொல்லும் கவிதை. அன்பில் கூட வேஷம் காட்டும் வேடதாரி கிடக்காமல் போனதே நல்லது.நல்ல இதயங்களுக்கு இடையில் இப்படியும் சிலர்.

கலைவேந்தன்
09-06-2007, 06:50 AM
தூக்கம் கெட்டலைவது தான் காதலா?
துக்கம் விட்டொழித்து
ஆக்கம் படைக்கலாமே!
ஏக்கம் எப்போதூம் நமைக் கொல்லும் வியாதி.
தாக்கம் தரும் இந்த காதலை
தூக்கியெறிந்து துயர் துடைப்பாய் என் நட்பே!