PDA

View Full Version : சத்திய பிரமாணம்kusumban
07-06-2007, 05:04 PM
நண்பர்களே !!

தமிழ் மன்றம் பல சுவைகளில் இயங்கிக்கொண்டுருப்பினும் இதோ மேலும் மெருகேற்ற ஒரு சிந்தனைத்துளி.

இத்திரை மூலம் நாம் அனைவரும் ஒரு சத்தியம் எடுப்போம்.. அந்த சத்தியமானது முடிந்த வரை நாட்டிற்க்கு பயனுள்ளதாக இருப்பின் இரட்டிப்பு மகிழ்ச்சி..

எனக்கு தோன்றிய யோசனை மற்றும் உறுதிமொழி - " நான் வசிக்கும் நாட்டில் நான் அசுத்தம் ( எச்சில் உமிழ்தல், குப்பை , இன்னும்பல )செய்ய மாட்டேன் "

உங்கள் பதிப்பு கண்ணியத்திற்க்கு கட்டுப்பட்டிருந்தால் மட்டும் இங்கு என் சத்தியத்துடன் இணையுங்கள்.

""" உங்கள் சிந்தனையின் உறுதிமொழி பாராட்டுக்களுடன் வரவேற்க்கப்படுகின்றது. ""

ஆதவா
07-06-2007, 05:10 PM
சத்தியமெல்லாம் சரிதான் நண்பரே! ஆனால் தலைப்பை மாற்றிவிடுங்கள்.. அது சத்தியமாக நன்றாக இல்லை.. :)

இன்பா
08-06-2007, 11:08 AM
முற்ப்போக்குச் சிந்தையா...?

உம்... நடத்துங்க...
ஓகே அதை எல்லாம் நான் ஃப்லோ பண்றேன்...

(இன்னிக்கு பல்தேச்சி குளிச்சீங்களா...?)

அக்னி
08-06-2007, 11:19 AM
நான் வசிக்கும் நாட்டில் அசுத்தம் செய்யாமல் இருப்பது என்னமோ நல்ல சிந்தனைதான். ஆனால், இதற்குள் எங்கே தமிழ் மன்ற மேம்பாடு வருகிறது?

ஓவியா
08-06-2007, 11:26 AM
நண்பர்களே !!

தமிழ் மன்றம் பல சுவைகளில் இயங்கிக்கொண்டுருப்பினும் இதோ மேலும் மெருகேற்ற ஒரு சிந்தனைத்துளி.

இத்திரை மூலம் நாம் அனைவரும் ஒரு சத்தியம் எடுப்போம்.. அந்த சத்தியமானது முடிந்த வரை நாட்டிற்க்கு பயனுள்ளதாக இருப்பின் இரட்டிப்பு மகிழ்ச்சி..

எனக்கு தோன்றிய யோசனை மற்றும் உறுதிமொழி - " நான் வசிக்கும் நாட்டில் நான் அசுத்தம் ( எச்சில் உமிழ்தல், குப்பை , இன்னும்பல )செய்ய மாட்டேன் "

உங்கள் பதிப்பு கண்ணியத்திற்க்கு கட்டுப்பட்டிருந்தால் மட்டும் இங்கு என் சத்தியத்துடன் இணையுங்கள்.

உங்கள் சிந்தனையின் உறுதிமொழி பாராட்டுக்களுடன் வரவேற்க்கப்படுகின்றது. ""

என்றுமே நாங்கள் (என் குடும்பம்) கடைப்பிடிக்கும் ஒரு செயல் இது. சாதரனமாக சிறு துண்டான பஸ் டிக்கெட்டை கீலே போட்டாலும் அம்மா பிச்சுடுவாங்க.

இருப்பினும் மீண்டும் ஒரு முறை உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.

உங்க ஆலோசனைக்கு நன்றி.
என் சார்பா ஒரு விசயம், பொது இடத்தில் இருவர் உட்காருமிடத்தில் ஒருவராக ஆட்சி செய்வதை நிருத்துவோம்,
முக்கியமாக பேருந்து நிருத்துமிடம், நமக்கு ஒரு சீட், நம்ப பெட்டீக்கு ஒரு சீட் என்ற கொள்கையை மாற்றுவோம்.
வயதானவர்களுக்கு உட்காற இருக்கையை தானம் செய்வோம்.

மன்னிக்கவும், கோவிக்க வேண்டாம். நான் கண்ட இந்திய மக்கள் இதை பல நாடுகளில் செய்வதில்லை.

விகடன்
08-06-2007, 11:31 AM
குசும்பனின் திட்டம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தலைப்புத்தான்......???

சாதரனமாக சிறு துண்டான பஸ் டிக்கெட்டை கீலே போட்டாலும் அம்மா பிச்சுடுவாங்க.

.

ஏன் ஒவியாக்கா பஸ் டிக்கட் எல்லாம் எடுத்துக்கிறீங்க? :icon_shades:
சீச்ன் டிக்கட் எடுத்தால் இந்தப் பிரச்சினை வராதின்னு சொல்ல வந்தேங்க

அக்னி
08-06-2007, 11:32 AM
குசும்பனின் திட்டம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தலைப்புத்தான்......???

குசும்பாக இருக்கிறது....

ஓவியா
08-06-2007, 11:34 AM
குசும்பனின் திட்டம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தலைப்புத்தான்......???

ஏன் ஒவியாக்கா பஸ் டிக்கட் எல்லாம் எடுத்துக்கிறீங்க? :icon_shades:

சீச்ன் டிக்கட் எடுத்தால் இந்தப் பிரச்சினை வராதின்னு சொல்ல வந்தேங்க

அடராமா, இது சிறுவயதில் நடந்தது, தற்பொழுது லண்டனில் அல்ல. :medium-smiley-029:

அக்னி
08-06-2007, 11:36 AM
அடராமா, இது சிறுவயதில் நடந்தது, தற்பொழுது லண்டனில் அல்ல. :medium-smiley-029:
அப்போ லண்டனில் இப்போ எடுக்கிறதில்லயா...:icon_clap: :icon_clap:

சீசன் ரிக்கற்றத்தான் நானும் கேட்டேன்...:icon_shades:

ஷீ-நிசி
08-06-2007, 11:37 AM
குசும்பன், இதை நான் பலபேருக்கு வழியுறுத்தியுள்ளேன். உண்மையில் ஒவ்வொருவருமே கீழ்வரும் 3 விஷயங்களை கடைப்படித்தால் நம் சமூகம் சுத்தமானதாய் மாறும்..

1. குப்பைகளை கீழே போடாதீர்கள் (பஸ் டிக்கெட்டாயிருந்தாலும்)
2. எச்சில் துப்பாதீர்கள் (துப்பியே ஆகவேண்டும் என்றால் மணல் இருக்கும் இடமாக பார்த்து துப்பிவிட்டு அந்த இடத்தை மணலால் மூடிவிடுங்கள்)
3. (ஆண்களே) இயற்கை அழைப்பினை கண்ட இடங்களில் எல்லாம் போகாதீர்கள். உரிய கட்டண இடங்கள் இருக்கும்.

என் மனதில் இவை பலநாள் முன்பே தோன்றி யாஹூவில் ஒரு குரூப்பும் கூட உருவாக்கினேன்.. CLEAN CHENNAI CITY நிறைய பேர் இதில் ஆர்வமாய் சேர்ந்தார்கள்.. எப்படியோ அதை தொடராமல் விட்டுவிட்டேன்..

இதற்கென ஒரு கவிதையும் உருவாக்கினேன்...

கிழிக்கப்பட்ட காகிதங்கள்
கையிலே சுமையாய்,

உதட்டின் விழிம்பின் வரையிலும்
வந்துவிட்ட உமிழ்நீர்,

அவசரகதியில்
இயற்கையின் அழைப்பு,

இருந்தும்,
அவன் எதையுமே
இறைக்கவில்லை சாலையோரத்தில்,

காரணம்,
அவன் நின்றுகொண்டிருக்கும்
தேசம் இந்தியா இல்லையே!

உண்மையில், நம் தமிழ் மன்ற உறவுகள் இதற்கென ஒரு உறுதிமொழி எடுத்துக்கொண்டால் அதுவே நாம் வாழும் சமூகத்திற்கு நம்மாலான உதவி.

இதில் எவ்வளவோ உறுதியாயிருந்தும் சிற்சில சமயங்களில் நான் எச்சில் துப்பிவிடுகிறேன். இந்த திரி என்னை மறுபடியும் புதுப்பிக்க உதவியது...

இனி நான் மேற்சொன்ன 3 காரியங்களையும் செய்து சுற்றுபுறத்தை அசுத்தம் செய்யமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.

மன்ற உறவுகளே! நீங்களும் எடுத்துக்கொள்ளுங்கள்!

ஓவியா
08-06-2007, 11:38 AM
காரணம்,
அவன் நின்றுகொண்டிருக்கும்
தேசம் இந்தியா இல்லையே!

நச்சுனு இருக்கு ஷீ. நன்றி.

ஷீ-நிசி
08-06-2007, 11:41 AM
நச்சுனு இருக்கு ஷீ. நன்றி.

நன்றி ஓவியா... நீங்கள் இதை கடைபிடிப்பதாய் சொன்னீர்கள்.. பெருமையாக இருக்கிறது ஓவியா.

அக்னி
08-06-2007, 11:41 AM
அருமையான கவிதி ஷீ-நிசி...
மற்ற நாடுகளில் மட்டும் கண்ணியம் காக்கும் நாம் தாய் நாட்டில் ஏன் அதனை பின்பற்றுவதில்லை என்ற கேள்விக்கு,
விடையில்லைதான்...

ஒவ்வொருவரும் மனதால் உணர்ந்து, செயற்படுத்த வேண்டும். இன்று நாம் செய்வதைப் பார்த்து நாளைய தலைமுறை தானே இயல்பாய் நடந்துவிடும்...

விகடன்
08-06-2007, 11:51 AM
ஷீ-ஹிசியின் யாகூ குறூப் முயற்சியும் அதன் பின்னர் வடித்த கவிதையும் வரவேற்கப்பட வேண்டியவை. சொல்லளவிலில்லாமல் முயற்சியுமெடுத்திருக்கிறீர்கள் நண்பரே.

வாழ்க வளர்க உமது தொண்டு.

இன்பா
08-06-2007, 12:08 PM
என் சார்பா ஒரு விசயம், பொது இடத்தில் இருவர் உட்காருமிடத்தில் ஒருவார ஆட்சி செய்வதை நிருத்துவோம்

இதற்க்கு பொருள் எனக்கு புறியவில்லை...
விளக்குவீர்களா...?

என்ன ஒரு நாள் முதல்வர்ப் போல் ஒருவாரா ஆட்சி....?

புறியலையே ஓவி

அறிஞர்
08-06-2007, 12:14 PM
ஷீ-நிசியின் கவிதையோடு.. ஒவ்வொருவரின் சத்தியபிராமாணமும் நாட்டை சுத்தமாக்கும்.

நான் இருக்கிற நாட்டில் இப்படி தவறு செய்தால் தண்டனை தான்...

இருந்தாலும் செல்லும் நாடுகளில் அசுத்தம் செய்யாமல் இருப்பேன்.

ஓவியா
08-06-2007, 12:17 PM
இதற்க்கு பொருள் எனக்கு புறியவில்லை...
விளக்குவீர்களா...?

என்ன ஒரு நாள் முதல்வர்ப் போல் ஒருவாரா ஆட்சி....?

புறியலையே ஓவி

வரிப்புலி, அது ஒருவராக ஆட்சி, எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்.

சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி.

நான் 7 வயதில் படித்த தமிழை தற்ச்சமயம் இப்படித்தான் எழுதி பழகிக்கொண்டிருகிறேன்.

நான் தங்களைப்போல் தமிழ் கற்றவரல்ல.

அக்னி
08-06-2007, 12:20 PM
தலைப்பு மாறிவிட்டது. இப்பொழுது சத்தியப்பிரமாணம் செய்யலாம்...

இயலுமான வரையில், உலகில் வாழும் வரையில், போகும் இடங்கள் எல்லாம் சுத்தம் காப்பேன்...

இன்பா
08-06-2007, 12:22 PM
நான் தங்களைப்போல் தமிழ் கற்றவரல்ல.

நான் புறிந்துக்கொண்டேன், சுட்டிக்காட்டவே அப்படி கோட் செய்தேன்...

நான் ஒன்றும் தமிழ் புலவன் அல்ல..
தமிழ் கிறுக்கன்...

kusumban
08-06-2007, 02:57 PM
ஆஹா... எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...

ஷீ-நிசியின் கவிதையும் அவரது சிந்தனையின் புதிய சத்திய பிராமணமும் என்னை வியக்க வைத்தது.. மிக்க நன்றி..

என்னுடன் கலந்து சத்திய பிரமாணமெடுத்தைமைக்கு அணைவருக்கும் எனது உள்ளம் கனிந்த பாராட்டுக்கள்.

உங்களின் சிந்தனைக்கேற்ப புதிய சத்திய பிரமாணம் இத்திரையில் பதிக்க மிகவும் ஆசைப்படுகிறேன்.

ஓவியா
08-06-2007, 02:59 PM
ஆஹா... எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...அண்ணா மகிழ்ச்சியின் அளவை இதுவரை யாருமே கண்டதில்லையாம்.

நல்ல திரிக்கு ஒரு நன்றி.

kusumban
08-06-2007, 03:06 PM
ஓவி - உங்கள் பிரமாணம் என்னை மிகவும் கவர்ந்தது.

நன்றி

ஓவியா
08-06-2007, 03:19 PM
ஓவி - உங்கள் பிரமாணம் என்னை மிகவும் கவர்ந்தது.

நன்றி

அப்படியா, :medium-smiley-029: :ernaehrung004:

.......................................................................................
(பதிவு திசைமாறுகிறது என்றால், இதன் :ernaehrung004:
அர்த்தம், மதுபானம்ருந்திவிட்டு மப்பில் குப்பையை அங்கே இங்கே என்று போடாதீர்கள்.) உருதிமொழிதான். ஹி ஹி

அமரன்
08-06-2007, 03:29 PM
குசும்பன் நல்ல விடயம். சுத்தத்தை பேணுவது அவசியம். மிக்கியமான ஒரு விடயம். பலர் சுவிங்கம் (பபிள்கம்) சாப்பிட்டு விட்டு அதை வீதியில் துப்பி விடுவார்கள். அச்சுவிங்கத்தை சுற்றித்தரும் பேப்பரில் சப்பித்துப்பும் சுவிங்கத்தை வைத்து குப்பை கூடையில் போடுவதில்லை. இதை நான் கடைப்பிடித்து வருகின்றேன். மற்றவர்களும் இதப்போல செய்யலாமே.

kusumban
08-06-2007, 03:30 PM
அப்படியா, :medium-smiley-029: :ernaehrung004:

.......................................................................................
(பதிவு திசைமாறுகிறது என்றால், இதன் :ernaehrung004:
அர்த்தம், மதுபானம்ருந்திவிட்டு மப்பில் குப்பையை அங்கே இங்கே என்று போடாதீர்கள்.) உருதிமொழிதான். ஹி ஹி

உங்களின் இக்கருத்து எதை அர்த்தபடுத்துகிற்து என்பது எனக்கு புரியவில்லை ?:icon_shades:

ஓவியா
08-06-2007, 03:40 PM
உங்களின் இக்கருத்து எதை அர்த்தபடுத்துகிற்து என்பது எனக்கு புரியவில்லை ?:icon_shades:

உங்களுக்கு நன்றி என்று ஸ்மைலி போட்டேன். அதை தான் அப்படி சொன்னேன்.

இடைவெளியில், மது அருந்தும் மக்களும் போதையில் மது (கென் :food-smiley-008: ) பாட்டில்களை அப்படியே போட்டு விட்டு செல்வார்கள். அதனையும் சொன்னேன். குப்பைகளை களைவோம் என்று.

kusumban
08-06-2007, 05:23 PM
ஓவி - பற்பல பயனுள்ள யோசனைகள் தந்தமைக்கு நன்றி.

kusumban
08-06-2007, 05:31 PM
குசும்பன் நல்ல விடயம். சுத்தத்தை பேணுவது அவசியம். மிக்கியமான ஒரு விடயம். பலர் சுவிங்கம் (பபிள்கம்) சாப்பிட்டு விட்டு அதை வீதியில் துப்பி விடுவார்கள். அச்சுவிங்கத்தை சுற்றித்தரும் பேப்பரில் சப்பித்துப்பும் சுவிங்கத்தை வைத்து குப்பை கூடையில் போடுவதில்லை. இதை நான் கடைப்பிடித்து வருகின்றேன். மற்றவர்களும் இதப்போல செய்யலாமே.

அருமையான அறிவுரை....

நம்புவோம்.... இதை மற்றவர்களுக்கும் கடைபிடிப்பார்கள் என்று...