PDA

View Full Version : பிரிண்டரில் உதவி!



அரசன்
07-06-2007, 11:12 AM
நான் hp 4200 மாடல் பிரிண்டர் பயன்படுத்துகிறேன். இவ்வளவு நாளும் சரியாக வேலை செய்தது. ஆனால் தற்போது பிரிண்ட் எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் பிரிண்ட் எடுக்க முடியவில்லை. நான் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். எவ்வாறு நான் பிரிண்ட் எடுப்பது என்று மன்ற நண்பர்கள் எனக்கு உதவி செய்யவும். பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி!

praveen
07-06-2007, 11:29 AM
என்ன பிழைச்செய்தி அல்லது பிரச்சினை என்று தெளிவாக கூறினால் மட்டுமே சரியாக பதிலளிக்க முடியும்.
1)பிரிண்டர் பழுது பட்டிருக்கலாம்
2)பிரிண்டருக்கான டிரைவர் கரப்ட் ஆகியிருக்கலாம், நீக்கி பின் நிறுவி பாருங்கள்
3)பிரிண்டர் வேறு ஒரு கணினியில் பொருத்தி இயக்கி பாருங்கள்
4) அதற்கு முன் self test வசதி இருந்தால் அதை பயண்படுத்தி பிரிண்டர் சரியாக உள்ளதா என்று பாருங்கள்.
5) ஒருமுறை கணினியை அணைத்து பின் தொடங்கி பாருங்கள்.

அன்புரசிகன்
07-06-2007, 11:36 AM
நான் hp 4200 மாடல் பிரிண்டர் பயன்படுத்துகிறேன். இவ்வளவு நாளும் சரியாக வேலை செய்தது. ஆனால் தற்போது பிரிண்ட் எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் பிரிண்ட் எடுக்க முடியவில்லை. நான் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். எவ்வாறு நான் பிரிண்ட் எடுப்பது என்று மன்ற நண்பர்கள் எனக்கு உதவி செய்யவும். பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி!


உங்கள் பிரச்சனை என்னவென்று புரியவில்லை.

ஆனாலும் ஒன்று செய்துபாருங்கள்.
my computer ஐ right click செய்து properties செல்லுங்கள். பின்னர் hardware tab ல் device manager ஐ அழுத்துங்கள். அதில் உங்கள் printer ன் இடத்தை பார்த்து அங்கும் right click>properties. (உங்களது printer, usb ல் தொடர்பு படுத்தப்பட்டிருந்தால் அதை universaட Serial Bus Controllers ல் USB printing support ஐ right click>properties )
அங்கு driver tab ல் driver ஐ uninstall அல்லது rollback செய்துவிட்டு restart செய்யுங்கள். அதற்கு முன் உங்கள் printer ன் driver CD உள்ளதை உறுதிப்படுத்தவும். கணிணி ஐ ஆரம்பிக்கும் போது printer ற்கான இணைப்பை துண்டித்து மீள ஏற்ப்படுத்தவும்.

பின்னர் மீள driver ஐ install செய்யுங்கள்.

பிரச்சனை இருப்பின் கூறுங்கள்.

இதயம்
07-06-2007, 11:39 AM
1. கணிணியை நிறுத்தி விட்டு மீண்டும் தொடங்கி முயற்சித்து பாருங்கள்.
2. கணிணிக்கும் பிரிண்டருக்குமான தொடர்பு ஒயரை சரி பார்க்கவும். முடிந்தால் கழற்றி மீண்டும் பொருத்தவும்.
3. பிரிண்டருக்கான சாஃப்ட்வேரை நீக்கிவிட்டு சிடி உபயோகித்து மீண்டும் இன்ஸ்டால் செய்யுங்கள். முதலில் டெஸ்ட் ப்ரிண்ட் செய்து பாருங்கள்.
4. பிரிண்ட் செய்யாத பட்சத்தில் வலது பக்க மூலையில் செய்தி வெளியாகும். அந்த செய்தியை பதியுங்கள். பிறகு பார்க்கலாம்.

அக்னி
07-06-2007, 11:45 AM
பிரிண்டரில் மை முடிந்திருந்தாலும் இந்தப் பிரச்சினை ஏற்படும் தானே...
எனது அறிவுக்கெட்டியதை சொல்கின்றேன்...

அரசன்
07-06-2007, 12:08 PM
டெஸ்ட் பிரிண்ட் சரியாக தான் வருகிறது. ஆப்சனில் ஏதோ மாறியிருக்குமென்று நினைக்கிறேன். அப்படி ஆப்சன் மாறியிருந்தால் என்ன மாறியிருக்கும்.

அன்புரசிகன்
07-06-2007, 12:21 PM
ஐயனே... test print வருவதாயின் உங்கள் printer ல் தவறில்லை. applications ல் தான் ஏதோ option மாறிஇருக்கலாம்.

உங்களுக்கு error message ஏதாவது வருகிறதா?

lolluvathiyar
07-06-2007, 12:25 PM
மிக குழப்பமாக இருந்தால் சர்வீஸ் எஞ்சினியரை கூப்பிடுவது சிறந்தது என்று நினைகிறேன்

பாரதி
07-06-2007, 11:13 PM
அன்பு மூர்த்தி,
உங்கள் வினா முழுமையானதாக இல்லை என்று கருதுகிறேன். நண்பர்கள் கூறிய வழிமுறைகளை பின்பற்றி பார்க்கவும். சந்தேகங்களை வினவும் போது முடிந்த வரை விளக்கமாக கேட்டால் மட்டுமே சரியான விடை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
உங்கள் பிரச்சினை விரைவில் தீர வாழ்த்துக்கள்.

அரசன்
10-06-2007, 10:19 AM
3. பிரிண்டருக்கான சாஃப்ட்வேரை நீக்கிவிட்டு சிடி உபயோகித்து மீண்டும் இன்ஸ்டால் செய்யுங்கள். முதலில் டெஸ்ட் ப்ரிண்ட் செய்து பாருங்கள்.


பிரிண்டர் சாஃப்ட்வேரை நீக்கி மீண்டும் பதிவிறக்கம் செய்தேன். இப்போது சரியாக வேலை செய்கிறது.

தகவல் கொடுத்த அனைவருக்கும் நன்றி!