PDA

View Full Version : நட்பு

இனியவள்
07-06-2007, 06:44 AM
நட்பென்னும் சொர்க்க வாசல் திறந்தது
அன்பெனும் அமுத சுரபி தந்தது
உன் நட்புக்குள் என் அன்னையவள்
அன்பைக் காண்கிறேன்
என் உயிரை நான் பிரிந்தாலும்
உன்னை பிரியாத வரம் வேண்டும்:icon_08:

இனியவள்
07-06-2007, 06:46 AM
என் முதல் ஆக்கம் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்...

ஆதவா
07-06-2007, 06:50 AM
வாருங்கள் ஜெயா எஸ் எல்.. உங்களைப் பற்றி அறிமுகப் பகுதியில் ஒரு அறிமுகம் கொடுங்களேன்..
------------------------------
நட்புக் கவிதைகள் காதல் கவிதைகளைவிட மேலானவை. உங்கள் முதல் கவிதை அதைத் தொட்டதும் சிறப்புக் குரியது. அன்னையின் அன்பை நட்பில் காணும் உங்கள் கவிதையின் சிறப்பே எளிமை... நட்பு திறந்தால் அமுதம் காணலாம் என்ற தத்துவங்கள் எழுந்து நண்பர்கள் நெஞ்சில் நெகிழவைக்கும் கவிதை இது.

முதற்கவிதை இங்கே இது என்றாலும் முத்தான கவிதை.. சத்தான கவிதை.
வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
07-06-2007, 07:04 AM
முதல் கவிதைக்கு வாழ்த்துக்கள் ஜெயா. உங்களை மன்றத்துக்கு அன்போடு அழைக்கிறேன்.நட்போடு தொடங்கியுள்ள உங்களை எங்கள் நட்புக்கரங்கள் வரவேற்கின்றன.

இணைய நண்பன்
07-06-2007, 10:09 AM
வாழ்த்துக்கள் ஜெயா....முதல் படைப்பிலே விலைமதிக்க முடியாத நட்பை பற்றி கவிதையில் வடித்துள்ளீர்கள்.உங்கள் படைப்புக்கள் தொடரட்டும்

தாமரை
07-06-2007, 10:27 AM
இதே போல் கருத்து கொண்ட இன்னொரு கவிதை இங்கே!

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6064

ஆதவா
07-06-2007, 03:02 PM
இதே போல் கருத்து கொண்ட இன்னொரு கவிதை இங்கே!

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6064

கருத்து ஒருமித்து இருந்தாலும் வரிகள் வேறுதானே! அந்த வகையில் ஜெயாவை நான் பாராட்டுகிறேன் மீண்டும்...

அமரன்
07-06-2007, 03:11 PM
நட்பென்னும் சொர்க்க வாசல் திறந்தது
அன்பெனும் அமுத சுரபி தந்தது
உன் நட்புக்குள் என் அன்னையவள்
அன்பைக் காண்கிறேன்
என் உயிரை நான் பிரிந்தாலும்
உன்னை பிரியாத வரம் வேண்டும்:icon_08:
வாழ்த்துக்கள் ஜெயா! நட்பை அன்னையின் அன்புடன் ஒப்பிட்டு எழுதியுள்ளீர்கள். இது உண்மையும் கூட. அத்தகைய ஒரு நண்பன் ஒருவன் கிடைத்தால் போதும் நினைத்ததைச் சாதிக்கலாம். அன்னையின் அன்புக்கு ஈடானது ஏதுமில்லை என்பார்கள். அந்த அன்பை நட்பில் காணலாம் என்பதை நச்சென்று கவிதையில் சொல்லியுள்ளீர்கள். நன்றி சகோதரி.

மனோஜ்
07-06-2007, 03:25 PM
நட்பின் கவிதை அருமை

இனியவள்
07-06-2007, 05:05 PM
வாருங்கள் ஜெயா எஸ் எல்.. உங்களைப் பற்றி அறிமுகப் பகுதியில் ஒரு அறிமுகம் கொடுங்களேன்..
------------------------------
நட்புக் கவிதைகள் காதல் கவிதைகளைவிட மேலானவை. உங்கள் முதல் கவிதை அதைத் தொட்டதும் சிறப்புக் குரியது. அன்னையின் அன்பை நட்பில் காணும் உங்கள் கவிதையின் சிறப்பே எளிமை... நட்பு திறந்தால் அமுதம் காணலாம் என்ற தத்துவங்கள் எழுந்து நண்பர்கள் நெஞ்சில் நெகிழவைக்கும் கவிதை இது.

முதற்கவிதை இங்கே இது என்றாலும் முத்தான கவிதை.. சத்தான கவிதை.
வாழ்த்துக்கள்.

நன்றி ஆதவா அறிமுகம் கொடுத்து விட்டேன்

விகடன்
07-06-2007, 05:06 PM
உங்கள் பெயரைப்போலவே அருமையாக எழுதுகிறீர்கள் .
வாழ்த்துக்கள்

இனியவள்
07-06-2007, 05:08 PM
அனைவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்