PDA

View Full Version : வார்த்தைகள்/அர்த்தங்கள்



ஆதவா
07-06-2007, 05:49 AM
நண்பர்களே! சில வார்த்தை விளையாட்டுக்கள் மூலம் தமிழ் வார்த்தைகளில் பொதிந்திருக்கும் அர்த்தத்தை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்று நானாக நினைத்துக் கொண்டு இடுகிறேன்.
அர்த்தம் சொல்லுங்கள்.... அவ்வப்போது தமிழ் வார்த்தை அர்த்தங்கள் கேளுங்கள்... எனக்குத் தெரிந்திருந்தால் நிச்சயம் சொல்லுவேன். இல்லையெனில் மன்ற நண்பர்கள் சிலர் உதவுவார்கள்.....

முதலாவதாக ஒரு வார்த்தை விளையாட்டு. இதன்மூலம் சில அர்த்தங்கள் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் இடுகிறேன். தக்க விடை சொல்லவும்.

அஞ்சுக
அஞ்சான்
அஞ்சிகை
அஞ்சுமென்றால்
அஞ்சற்க
அஞ்சுமான்
அஞ்சாவரை

இதயம்
07-06-2007, 05:54 AM
அஞ்சுக - பயப்படு
அஞ்சான் - பயப்படாதவன்
அஞ்சிகை - இதன் பொருள் புரியவில்லை
அஞ்சுமென்றால் - பயப்படும் என்றால்
அஞ்சற்க - அஞ்சாதே
அஞ்சுமான் - இதன் பொருள் புரியவில்லை
அஞ்சாவரை - பயப்படாதவரை

இதையும் சேர்க்கலாமே....

அஞ்சேன் - பயப்பட மாட்டேன்
அஞ்சுற்று - பயமேற்பட்டு

ஆதவா
07-06-2007, 06:37 AM
இதயம் அவர்களே! அந்த இரு வார்த்தைகளினால்தான் கவிதை முழு அர்த்தம் பெறும்.. மன்ற நண்பர்கள் வேறு எவரும் முயல்வார்கள் என்று நினைக்கிறேன்.

ஓவியா
07-06-2007, 06:18 PM
நல்ல பதிவு, நன்றி ஆதவரே.


நாந்தான் வார்த்தைகளில் பொதிந்திருக்கும் அர்த்தத்தை கற்றுகொள்ளும் முதல் மாணவி.

ஆதவா
07-06-2007, 06:22 PM
அதெல்லாம் சரிதானுங்க. அர்த்தம் சொல்லுங்க..

ஓவியா
07-06-2007, 06:29 PM
அர்த்தமா!!!!

தாமரையண்ணா, தங்கச்சிய காப்பாற்ற வாருங்களேன்.

மனோஜ்
10-06-2007, 03:44 PM
அஞ்சுக - பயப்படுதல்
அஞ்சான் -பயப்படாமை
அஞ்சிகை - பயத்திற்கே பயத்தை
அஞ்சுமென்றால் -பயப்படும் என்றால்
அஞ்சற்க - பயப்படாமல்
அஞ்சுமான் - பயப்பட மாட்டான்
அஞ்சாவரை -பயப்படதவர்களை

அர்த்தம் செல்லிட்டேன் ஆதவா

தமிழ்சுவடி
22-06-2007, 07:42 AM
மனோஜ் கொடுத்ததெல்லாம் உண்மையான அர்த்தங்களா? அதை அப்படியே உபயோகப் படுத்தலாமா?

அமரன்
22-06-2007, 07:51 AM
மனோஜ் கொடுத்ததெல்லாம் உண்மையான அர்த்தங்களா? அதை அப்படியே உபயோகப் படுத்தலாமா?

வாங்க நண்பரே உங்கள் வினாவிற்குரிய விடை விரைவில் இங்கே பதிக்கப்படும் என நினைக்கின்றேன். உங்கள் ஆர்வத்திற்கு எனது நன்றியும் பாராட்டும். அப்படியே உங்களைப்பற்றிய ஒரு அறிமுகத்தை இங்கே (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38) கொடுத்துவிடுங்கள். உங்களைப்பற்றி அறிந்துகொள்ள அது உதவும். நன்றி

http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38

அக்னி
11-11-2007, 03:40 PM
வெற்றுத் தடங்களாகின...
சின்னக் கண்ணன்
வரவேண்டி
நானிட்ட மாவுப்பாதங்கள்..
அழித்து விளையாட
அஞ்சுகம் ஒன்று இல்லாததால்!
அஞ்சுகம் என்றால் என்ன..?

சாம்பவி
11-11-2007, 04:00 PM
அஞ்சுகம்....... கிளி.... !
இங்கு.... கிள்ளை மொழி பேசும் பிள்ளை... !

அக்னி
11-11-2007, 04:17 PM
அஞ்சுகம்....... கிளி.... !
இங்கு.... கிள்ளை மொழி பேசும் பிள்ளை... !
மிக்க நன்றி சாம்பவி அவர்களே...

அஞ்சுகம் பெண்ணையும் குறிக்குமோ?

சாம்பவி
11-11-2007, 04:32 PM
அஞ்சுகம் பெண்ணையும் குறிக்குமோ?

உருவகப்படுத்தலாம்...!

அவள்
கிள்ளை மொழி பேசுவாளேயாயின்.... !
தத்தி தத்தி நடப்பாளேயாயின்.... !
பஞ்சவர்ண சேலை அணிவாளேயாயின்.... !
மூக்கு சிவந்திருக்குமேயாயின்... !
கடைசியாய்.....
அவளின் பெயர் "அஞ்சுகமா"ய் இருக்குமேயாயின்..... ;)

சாம்பவி
11-11-2007, 04:40 PM
அஞ்சுக
அஞ்சான்
அஞ்சிகை
அஞ்சுமென்றால்
அஞ்சற்க
அஞ்சுமான்
அஞ்சாவரை

மலையரணாய்
"தாங்கள்" ;) இருக்க,
மடல் வந்தாலும்
மங்கையவள்
மருளத் தேவையில்லை.,
என்கிறீரோ.... !


சூரிய பகவானே.......இதெல்லாம் ரொம்ப ஓவருங்கோ...................... !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

யவனிகா
11-11-2007, 05:08 PM
நன்றி சாம்பவி...அஞ்சுகத்திற்கு, அக்கினிக்கு விள*க்கம் சொன்னமைக்கு.

சாம்பவி
11-11-2007, 05:22 PM
நன்றி சாம்பவி...அஞ்சுகத்திற்கு, அக்கினிக்கு விள*க்கம் சொன்னமைக்கு.
இதுவும் ரொம்ப ஓவருங்கோ.... !

யவனிகா
11-11-2007, 05:25 PM
இதுவும் ரொம்ப ஓவருங்கோ.... !

எத்தனை "பால்" ங்க சாம்பவி?

சாம்பவி
11-11-2007, 05:34 PM
எத்தனை "பால்" ங்க சாம்பவி?

ஒவருக்கு ஆறு பால் போடச் சொன்னா..... அறுபது போட்டிருக்காங்களே..... !!!!

ஆதவா
18-11-2007, 11:14 AM
மலையரணாய்
"தாங்கள்" ;) இருக்க,
மடல் வந்தாலும்
மங்கையவள்
மருளத் தேவையில்லை.,
என்கிறீரோ.... !


சூரிய பகவானே.......இதெல்லாம் ரொம்ப ஓவருங்கோ...................... !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


பொருள் பொருத்தமில்லையெனும்
அருள் வழங்கிய சாம்பவியே!!

அஞ்சாதவன் விழி
அஞ்சினாலொழிய
அஞ்சாதே
மற்று
யானஞ்ச
அஞ்சு

இதுவே பொருள்..

நன்றி தேவி.

அக்னி
01-12-2007, 11:02 AM
மத்தகத்தில் மதநீர் ஊறின்
மரணமுண்டாக்கும்
மாமத யானை!
மனதகத்தில் மதமூறின்
மரணமுண்டாக்குமோ
மனிதனின் ஆணை?
மத்தகம் என்றால் என்ன..?

கம்பராமாயணத்திலே..,



யானைகள் செல்லும் கங்கையின் தோற்றம்
பாங்கின் உத்தரியம் எனப் படர் திரை தவழ பாரின்
வீங்கு நீர் அழுவம் தன்னுள் விழுமதக் கலுழி வெள்ளத்து
ஓங்கல்கள் தலைகள் தோன்ற ஒளித்து அவண் உயர்ந்த கும்பம்
பூங்குழற் கங்கை நங்கை முலை எனப் பொலிந்த மாதோ.

கங்கையாற்றின் வெள்ளத்தினுள்ளே யானைகளின் மலைபோன்ற உடல்கள் மறைந்திருக்க அவற்றின் உயர்த்திய, மதநீர் பொழியும் தலைகளின் மத்தகங்கள் மட்டும் வெளியே தோன்றுவது, அழகிய அலைகளாகிய உத்தரியம் தவழுகின்ற, பூங்குழல்கொண்ட கங்கையாகிய பெண்ணின் மார்பகங்களைப் போலத் திகழ்ந்தன.

யானை நெற்றியில் இருபக்கமும் இரண்டு திரட்சிகளாக மத்தகம் தோன்றும். அவை மார்பகம்போல இருந்தனவாம்.

நன்றி: கம்பராமாயணம்

எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது...

இதற்கும் யானை மதங்கொள்வதற்கும் என்ன தொடர்பு..?

சிவா.ஜி
01-12-2007, 12:55 PM
மத்தகம் என்பது யானையின் முன் நெற்றிப் பகுதி.அதனுள் உள்ள சிறிய வெற்று அறை போன்ற பகுதியில் ஊறும் நீரை மத நீர் என்பார்கள்.(ஏன் ஊறுகிறதென்று தெரியவில்லை)அது ஊறியதும் அதன் உறுத்தல் தாங்காது யானை வெறிபிடித்து ஓடும்.அதுதான் மதம் பிடித்த யானை.

அக்னி
01-12-2007, 01:01 PM
மத்தகம் என்பது யானையின் முன் நெற்றிப் பகுதி.அதனுள் உள்ள சிறிய வெற்று அறை போன்ற பகுதியில் ஊறும் நீரை மத நீர் என்பார்கள்.(ஏன் ஊறுகிறதென்று தெரியவில்லை)அது ஊறியதும் அதன் உறுத்தல் தாங்காது யானை வெறிபிடித்து ஓடும்.அதுதான் மதம் பிடித்த யானை.
விளக்கத்திற்கு மிக்க நன்றி சிவா.ஜி...
ஏன் மதநீர் ஊறுகின்றது என்று வேறு யாரேனும் பதில் தரக்கூடும்...

எப்போதும் மதம் பிடித்திருக்கும் மனிதர்களுக்கு இந்த ஊறல் நிற்பதில்லை போலும்...

சிவா.ஜி
01-12-2007, 01:10 PM
விளக்கத்திற்கு மிக்க நன்றி சிவா.ஜி...
ஏன் மதநீர் ஊறுகின்றது என்று வேறு யாரேனும் பதில் தரக்கூடும்...

எப்போதும் மதம் பிடித்திருக்கும் மனிதர்களுக்கு இந்த ஊறல் நிற்பதில்லை போலும்...

ஏன் ஊறுகிறதென்பதைத் தெரிந்துகொண்டேன்.யானைக்கு அதன் இணையுடன் இணைய இச்சை ஏற்படும்போது அந்த மதநீர் ஊறுமாம்.அது இயலாத ஆத்திரத்தில் மதம் கொண்டு ஓடுகிறது.

அக்னி
06-12-2007, 07:09 PM
அங்கத்தில் ஹீனம் அவன் கொடுத்தது.... !
ஆக்கப்பட்ட அனைத்தும் அவனுக்கே... !
இங்கு ஹீனம் எதைக் குறிக்கும்?

சாம்பவி
06-12-2007, 07:18 PM
ஹீனம்... குறை... குறைபாடு...... ! deformity
பலஹீனம்.... பலம் குறைதல்... ! weakness...
அங்கஹீனம்... உடற்குறைபாடு... .. handicapped... !
மனஹீனம்.... மனக்குறைபாடு.... ... சொல்லவும் வேண்டுமோ....!....

அக்னி
06-12-2007, 07:38 PM
அங்கவீனம்
அங்கயீனம்
அங்கஹீனம்

இவ்வாறு பல(ர்) எழுத்துக்களிலும் பார்த்திருக்கின்றேன்...
அவை யாவுமே ஒரே அர்த்தமா என்று குழப்பம் ஏற்படுவதுண்டு.
அக்குழப்பமே இவ்விளக்கத்திற்கான தோற்றம்...

சாம்பவி
06-12-2007, 07:54 PM
அங்கத்தின்
ஹீனம் ஈனமாகி
அங்கம் + ஈனம்...
அங்கயீனமோ... அங்கவீனமோ
அவரவர் வசதிக்கேற்ப....
ஹீ(ஈ)னமாகிறது... !