PDA

View Full Version : கொடூர காதல்..



rambal
17-05-2003, 06:14 PM
கொடூர காதல்..

காதலெனும்
கோடரி வீசி
எறிந்து விட்டு
பட்ட காயத்திற்கு
தருகிறாய்
காலாவதியான
மருந்து...

உடலையே வீடாக்கி
குடியிருந்தவனை
நெருப்புத் துண்டம்
தூக்கிப் போட்டு
பொசுக்கிவிட்டு
எல்லாம் எரிந்து
முடிந்த பின்
வருகிறாய்
அணைப்பதற்கு
பயனில்லா நீர் கொண்டு...

பாதை வேறு
பயணம் வேறு
என்று என்வழியில்
போய் கொண்டிருந்தவனை
வழியில் மரம் போட்டு
வேறு வழி திருப்பிவிட்டு
வியாக்கியாணம்
செய்கிறாய்
சரியான பாதை
இதுவல்ல என்று...

பாறையாக
இருந்தவன் மீது
குண்டு போட்டு
சிதறடிக்கவிட்டு
இப்போது பேசுகிறாய்
நான் மிக
மென்மையானவன் என்று..

போதும்
நீயும் அந்த கொடூர காதலும்
விளையாடிய
விளையாட்டுக்கள்..

e_roy123
17-05-2003, 06:32 PM
இப்பொழுது புத்தி வந்ததே சிறப்பு
இந்த கொடூர காதல் தொடர்ந்து திருமணம் முடிந்திருந்தால்...
நீ எழுதியிருப்பாய் இல்லற சமாதி.....

அன்புடன்,
e_roy123

Nanban
17-05-2003, 06:35 PM
பாதை வேறு
பயணம் வேறு


இணைகோடாய் இருந்திருந்தால்
பயணம் பவித்திரமாய் இருந்திருக்கும்
பாதை மாற்ற நெம்புகோளை எடுத்தவன்
இரு வண்டிகளையும்
ஒரு பாதையில் போக்வைத்தான் -
விபத்துக்குள்ளான் பின்
இந்தப் பயணத்தில்
விசாரணைக் கமிஷன்
வைக்கப் படாதென்று
விளம்பரப் படுத்தவில்லை பாவி.....