PDA

View Full Version : யாரிந்த அறிஞர்?



அன்புரசிகன்
06-06-2007, 07:49 PM
வணக்கம் எல்லோருக்கும். தலைப்பைப்பர்த்து தவறாக எண்ணவேண்டாமம். பல நாட்க்களுக்கு பின் ஒரு திரி தொடங்குகிறேன்.

மன்றத்தில் ஒவ்வொருவரிற்கும் அவர்களது நடவெடிக்கைகள் பொறுத்து எமது மனதில் ஒரு எண்ணங்களை கொண்டிருப்போம். இவர் இப்படி இருப்பார். அவர் அப்படி இருப்பார் என...

அறிஞரை பொறுத்தவரை அவரது படைப்புகள் அதிகம் இல்லை எனினும் எவ்வாறு எல்லோராலும் மதிக்கப்படுகிறார்..? அவர் இணை நிர்வாகி என்பதாலா? அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா?

எனக்கு தெரியாதவற்றை தெரிந்து கொள்ள கேட்க்கிறேனுங்க. மன்றத்தின் ஆரம்ப காலத்தில் உள்ளவர்களில் இருந்து அனைவரும் பதில் கூறுங்களேன். உங்கள் பின்னூட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்

-மன்றத்தில் ஒருவன்-

சக்தி
06-06-2007, 07:58 PM
அறிஞரை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் படத்தில் பார்த்துள்ளேன் இம்மன்றத்தில் உள்ளது. குறிப்பாக சொல்லவேண்டுமெனில் அனைவரையும் அரவணைக்ககும் நல்ல நண்பர். நல்ல நண்பர் என்பதால் அனைவரும் அவரை மதிப்பது இயல்பே.

ஆதவா
06-06-2007, 08:17 PM
வணக்கம் அன்பு..
அறிஞரைப் பற்றீ சில வார்த்தைகள் சொல்ல ஏதுவாக அமைந்திருக்கிறது இந்த திரி. பொதுவாக இங்கே உள்ள எல்லா
நிர்வாகிகளும் மேற்பார்வையாளர்களும் தாங்கள் தொடங்கிய படைப்புகள் மூலமாகவும் பதிவுகள் மூலமாகவும்
அளக்கப்படுகீறார்கள். சொந்த படைப்பின் மூலமாக முன்னே வந்த பலரைக் கண்ணால் கண்டிருப்போம். ஆனால் அறிஞர்
அப்படியல்ல. படைப்புகளைவிட நிர்வாகத் திறமை அவரிடம் அதிகம்.

ஒரு நீதிபதியைப் போல நடுநிலையான தீர்ப்புகள் வழங்கும் திறமை, மன்றத்திற்கு வரும் ஒவ்வொருவருக்கும்
ஊக்கமளிக்கும் உயர்வு, மன்றத்தின் ஈடுபாடு இவையெல்லாவற்றையும் விட நிர்வாகத் திறம்,. தேவைப்படும் நேரத்தில்
உதவி, பண்பட்ட எழுத்துக்கள், இவையெல்லாவற்றையும் விட படைப்புகள் சிறந்ததல்ல... ஏனெனில் இந்த திறமைகள் வாழ்வுக்கும் உபயோகமானவைகள்.. ஒருவர் இப்படி இருந்தால்தான் நிர்வாகம் செய்யமுடியும்... ஆனால் வன் குணத்துக் காரன் கூட மென்மையாக படைப்புகள் செய்யலாமே!!!

சில இடங்களில் வரம்பு மீறிய பதிவுகளுக்கு கொடுக்கவேண்டிய பதில்களுக்கு திறம் வேண்டும்.. அந்தவகையில் அறிஞரின் பதிலை பலமுறை நான் எதிர்பார்த்திருக்கிறேன். திறமைகள் என்பது படைப்புகளைப் பொறுத்தல்ல என்பதற்கு அறிஞர் சரியான உதாரணம். மன்றம் தொடங்கிய நாள் முதல் இராசகுமாரன் அவர்களோடு தோளோடு தோளாக கைகோர்த்து இத்தனை தூரம் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த அறிஞர் படைப்பு படைக்கவேண்டுமா என்ன? இன்னும் சொல்லப் போனால் நாம் அவரை வைத்து படைக்கலாம்.

மன்றத்தின் தூண் என்பது நமது மன்றத்தில் வழங்கப்படும் பட்டம். ஆனால் உண்மையான தூண்களில் ஒருவர் அறிஞர். தமிழார்வம் ஒன்றே போதும் அதிகப்படி திறமைகள் இந்த பதவிக்கு வேண்டியதல்ல என்பதற்கு சரியான உதாரணம் இவர்..

மன்றத்தில் வந்தவுடன் என்னைக் கண்டுகொண்ட மனிதர். வாழ்வில் சந்திக்க முடியாதவர் என்று நினைத்தேன்.. ஆனால் மன்றத்தில் உள்ள மனிதர்களில் முதன் முறையாக நான் சந்தித்த மனிதர்... பழகுவதற்கு எளிமையானவர். குணங்கள் எல்லாமே மென்மை.. ஆகவேதான் இவர் இணை நிர்வாகி..

அன்புரசிகரே! இன்னும் ஏதும் விளக்கம் வேண்டுமா?

சக்தி
06-06-2007, 08:21 PM
மிகச்சரியாக சொன்னீர்கள் ஆதவா

அன்புரசிகன்
06-06-2007, 08:22 PM
நன்றி ஆதவா.. உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுங்க. பின்னூட்டம் விளக்கமாக தருகிறேன்.

ஒரு இனிமையான செய்தி. இம்முறை தொலைபேசி மூலம் எனது பிறந்த நாளுக்காக வாழ்த்திய முதல் நபர் அறிஞரே...

Mano.G.
07-06-2007, 01:35 AM
மன்றத்தில் நான் சந்தித்த முதல் சகோதரன்
அறிஞர்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5393

நான் அவரை சந்தித்த பிறகு தமிழ்மன்றம் என்ற
இணைய தளம் தமிழ் பேசும் உறவுகளை
ஒன்றுணைக்கும் தளமாகவும் உறவுகளை வளர்க்கும்
தளமாகவும் மாறியது.


மனோ.ஜி

ஷீ-நிசி
07-06-2007, 04:39 AM
அன்புரசிகரே! அறிஞரைப் பற்றி பகிர்ந்துகொள்ள இது ஒரு நல்ல திரி...

மன்றத்தில் மிக இயலபாய் பழககூடியவர் நம் அறிஞர்.. அவர் படைப்புகள் அதிகம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரின் பின்னூட்டங்கள் எப்பொழுதுமே படைப்பவர்களுக்கு உற்சாக டானிக்.. நிர்வாகியாய் இருப்பவர்களுக்கு பல்வேறு இடையூருகள் ஏற்படுவதுண்டு.. அவற்றையெல்லாம் சமாளித்து உண்மையிலேயே மன்றத்தின் தூணாய் இருப்பவர் நம் அறிஞர்.. யாரையும் கடிந்து இவர் பின்னூட்டமிட்டு நான் பார்த்ததில்லை.. இவரை நான் சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று.

அன்புரசிகன்
07-06-2007, 08:04 AM
மன்றத்தில் நான் சந்தித்த முதல் சகோதரன்
அறிஞர்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5393
நான் அவரை சந்தித்த பிறகு தமிழ்மன்றம் என்ற
இணைய தளம் தமிழ் பேசும் உறவுகளை
ஒன்றுணைக்கும் தளமாகவும் உறவுகளை வளர்க்கும்
தளமாகவும் மாறியது.
மனோ.ஜி

அந்த திரியை படிக்கும் போது பொறாமை தான் கிழறியது. 2-3 வருடங்களுக்கு முன் எமக்கெல்லாம் இந்த மன்றத்தைப்பற்றி தெரியாமல் போய்விட்டதே...

இன்னமும் உங்களில் பலர் அவரை சந்தித்திருப்பீர்கள். தெரிந்திருப்பீர்கள். பகிர்ந்துகொள்ளுங்கள்.

அமரன்
07-06-2007, 08:10 AM
ஆதவா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நட்புடனான கண்டிப்பு அறிஞரின் ஸ்பெஷாலிட்டி.
மனோஜி அவர்கள் கொடுத்த சுட்டியில் உள்ளவற்றை படித்ததும் பொறாமையாக இருக்கின்றது. இணையம் இணைத்த நண்பர்கள் இணைந்தே இருப்பது மகிழ்ச்சி. அன்பு ரசிகனின் பிறந்த நாளை நியாபகம் வைத்து தொலைபேசியில் வாழ்த்துச் சொன்ன அவரை என்ன என்று சொல்வது. தி கிரேட்.

அமரன்
07-06-2007, 08:17 AM
அறிஞர் பற்றி மன்றத்தில் உள்ள சில திரிகள்.
அமெரிக்காவில் அறிஞர்..... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5531) .
அன்புள்ள அறிஞரின் 9000+ (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9302)
அறிஞரின் 5000+ ஆராய்ச்சிகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5806)
அறிஞருக்கு இரண்டாவது மகன்...!!!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5423)
அறிஞருக்குப் பிறந்தநாள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5880)

மனோஜ்
07-06-2007, 08:17 AM
மன்றத்தின் என் முதல் அறிமுகம் அறிஞர் அவர்கள் தான் இன்று வரை என்னை உற்சாக படுத்தியவர் மன்றதுணாக மாறி உள்னேன் என்றால் அது அறிஞரின் உற்சாகதால்தான் தவறுகள் பிழைகள் எல்லவற்றையும் அன்பாய் சுட்டி காட்டி வளர்த்தவர் இவரின் அன்பால் தான் நான் இன்று பல பதிவுகள் தயிரியமாய் பதிந்து இன்று இந்த அளவு வளர்ந்துள்ளேன் எனக்கு ஒரு ஆசை உண்டு விரைவில் அறிஞரையும் இளசு அண்ணாவையும் சந்திக வேண்டும்

அறிஞர்
07-06-2007, 01:02 PM
இது என்னது புது பதிவு... புதியவர்களுக்கு என்னைப்பற்றி சொல்லவேண்டும் என எண்ணி.. நானே பதிவு தொடங்கலாம் என்று இருந்தேன்...

பிறகு நேரம் கிடைக்கும் பொழுது விரிவாக எழுதுகிறேன்...

பெரிதாக மன்றத்தில் ஏதும் கிறுக்கவில்லை என்றாலும்... எனக்கு பிடித்த என் சில பதிவுகள்.. தொடரவேண்டும் என ஆசைப்பட்டேன் முடியவில்லை...

அம்மா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5155)
சாதிக்கலாம் வாங்க (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5879)
தொலைந்து விட்ட இன்பங்கள்... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7914)

முல்லா கதைகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7554)
தெனாலிராமன் கதைகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7556)
பீர்பால் கதைகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7553)

பென்ஸ்
07-06-2007, 02:18 PM
வாழ்த்துகள்

கவிஞர்..
எழுத்தாளர்...
அறிஞர் அவர்களே...

அறிஞர்
07-06-2007, 02:56 PM
அன்புரசிகன்.. பென்ஸ் இடத்தை மாற்றியுள்ளார்... மன்னிக்கவும்.

பென்ஸ்
07-06-2007, 03:35 PM
அன்புரசிகன்.. பென்ஸ் இடத்தை மாற்றியுள்ளார்... மன்னிக்கவும்.
இல்லை அறிஞரே.. நான் வேண்டும் என்றுதான் உங்கள் பதிவை மட்டும் கவிஞர் அறிமுக பகுதிக்கு அனுப்பினேன்... நீங்கள் இதுவரை அதில் பதிக்கவில்லை என்பதால் அப்படி செய்தேன் :food-smiley-002: :whistling:

lolluvathiyar
07-06-2007, 03:53 PM
அறிஞயரை பற்றி அலச அருமையான திரி அன்பு ஆரம்பித்துள்ளார்
ஆனால் இதை இந்த அறிமுக பகுதியில் போடலாமே

ஓவியா
07-06-2007, 07:56 PM
அறிஞர் அவர்கள் மிகவும் நல்லவர் வல்லவர் என்று நான் சொல்லப்போவதில்லை மாறாக,


ஒரு வார்த்தையில் சொன்னால்,
எனக்கு மன்றத்தில் கிடைத்த முதல் நண்பர். நான் முகமறியா ஒரு நல்ல மனிதர்.


பல வரிகளில் சொன்னால்,
நன்கு படித்தவர், நல்ல பண்பாளர், சபை மரியாதை அறிந்தவர், அடக்கமிக்கவர், நல்ல வழிநடத்துனர், சிறந்த நிர்வாகி, ஊக்கமருந்து, வளரூம் கவிஞர், ஏதோ அவ்வப்பொது எழுதும் எழுத்தாளர், நகைச்சுவையாளர், அக்கரைவாதி, அன்பு களஞ்சியம், கொஞ்சம் பக்திமான், சிறந்த ஆலோசகர் மற்றும் அனைவரின் நல்ல நண்பர்.

விகடன்
07-06-2007, 08:14 PM
ரசிகனின் கேள்வியும் அதற்களிக்கப்பட்ட ஆதவாவின் விளக்கமும் அருமை.

என்னை தோழ் தட்டி ஊக்குவிப்பவர்களில் அறிஞரும் ஒருவர் என்பதனை இறுமாப்புடன் இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

அன்புரசிகன்
07-06-2007, 08:41 PM
பதிவுகள் 18.
Members who have read this thread : 28 ...
எனக்கு இன்னமும் வேண்டும். வாருங்கள் அன்பர்களே...

பதிவு எந்த திரியில் இருந்தால் என்ன... எனது நோக்கம் நிறைவேறினால் சரி.

விகடன்
07-06-2007, 09:18 PM
18 இல் 4 உங்கள் பதிவுகள் ரசிகன்.
ஹி...ஹி...ஹி...( ஓவியனின் ஸ்டயிலில் சிரிக்கிறேனேக்கும்)

இளசு
08-06-2007, 10:03 PM
அறிஞர்

மனங்களை இணைக்கும் வேதியல் விற்பன்னர்
தேசங்களை செல்போனால் சேர்த்த ரசவாதி

மன்ற மணிமாலையின் தங்கச் சங்கிலி
மன்ற மாமரத்தின் மாறா ஆணிவேர்

கண்டிப்பு உறையும் அன்புச் சாக்லெட்டுமான
கலாட்டா கலகல கலவை

Mano.G.
09-06-2007, 12:43 AM
அறிஞர்

மனங்களை இணைக்கும் வேதியல் விற்பன்னர்
தேசங்களை செல்போனால் சேர்த்த ரசவாதி

மன்ற மணிமாலையின் தங்கச் சங்கிலி
மன்ற மாமரத்தின் மாறா ஆணிவேர்

கண்டிப்பு உறையும் அன்புச் சாக்லெட்டுமான
கலாட்டா கலகல கலவை

சொல்ல வேண்டியதை
கணகச்சிதமா கரைக்ட்டா
சொல்ல கூடிய ஒரே ஆளு
இளவல் இளசுவே
இதுக்கு மிஞ்சி சொல்ல ஒன்னும்
இல்ல சரிதானே

மனோ.ஜி

பாரதி
09-06-2007, 12:50 AM
அறிஞர்...
அனைவரையும் வரவேற்பதில், அரவணைப்பதில் வல்லவர்.
துளியும் கர்வம் இல்லாத, துணிச்சல் மிகுந்த, எளியவர்.
சிறந்த மனிதர்.

அக்னி
09-06-2007, 12:51 PM
அப்துல் கலாம், ஐன்ஸ்டீன், பாரதியார், திருவள்ளுவர்
இவர்களின் மன்றத்துக் கலவை...

மன்றத்தின் சகல திரிகளிலும்,
அநேகமாக இடுவார் தனது பதிவை...

மன்ற உறவுகளோடு அன்பாக,
பேணுபவர் தனது உறவை...

இதுவே அறிஞர் பற்றிய,
மேலோட்டமான எனது பார்வை...

அமரன்
09-06-2007, 06:33 PM
அறிஞரின் அவதார் எனக்குச் சொன்ன கதை இது...
நாம ஒதுங்கி இருந்தால் மன்றத்தின் நாளைய தூண்கள். சோர்ந்திருக்காதீர் என அப்துல்கலாம் மாணவர்களை ஊக்குவிப்பது போல் ஊக்குவிப்பவர் இவர்.
அதனால் அதிகமாக ஆட்டம் போட்டால் பாரதியார் மாதிரி மீசையை முறுக்கிக் கொண்டு உணர்ச்சிப்பிளம்பாக கண்டிப்பார்.
கண்டிக்கும்போது வள்ளுவன் போல் சிறுகச் சொல்வார்.

ஓவியா
09-06-2007, 06:37 PM
கண்டிக்கும்போது வள்ளுவன் போல் சிறுகச் சொல்வார்.

அட, பின்னூட்டம் மட்டும் கிலோமீட்டர் கனக்காவா எழுதுக்கிறார்!!!!!

அதுவும் செண்டி மீட்டர்தான்.

அமரன்
09-06-2007, 06:39 PM
அட, பின்னூட்டம் மட்டும் கிலோமீட்டர் கனக்காவா எழுதுக்கிறார்!!!!!

அதுவும் செண்டி மீட்டர்தான்.
இருவார்த்தை சொன்னாலும் திருவார்த்தை அல்லவா........

aren
10-06-2007, 05:27 AM
அறிஞர் அவர்கள் மன்றத்தில் நான் சந்தித்த ஒரு சிலருள் இவரும் ஒருவர்.

பல முறை தொலைபேசியிலும் Skype-லும் பேசிவிட்டு சென்னையில் மணியா, சேரன்கயல், மன்மதன் ஆகியோருடன் அறிஞர் அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

பல காலம் பழகிய நண்பர் போல் அனைவருக்கும் ஒரு நிமிடத்தில் தோன்றும் அளவிற்கு பேசக்கூடிய திறைமை படைத்தவர்.

அனைவருக்கும் மதிப்பளிக்கு மாமனிதர் அறிஞர்.

மன்றம் இன்னும் வளரவேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார். அதற்காக அயராது உழைத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு நாமெல்லாம் தோள் கொடுத்து அவருடைய கனவை நினைவாக்குவோம்.

நன்றி வணக்கம்
ஆரென்

இராசகுமாரன்
10-06-2007, 04:53 PM
அறிஞர்.. நான் இதுவரை காணாதா, காணத் துடிக்கும் மாமனிதர்களுள் ஒருவர்.

இங்கே பலரை அரவணைத்துக் கொண்டு செல்வதில் அன்னை போல் காட்சியளிக்கிறார்.

பலரை வழிநடத்திச் செல்வதில் ஆசான் போல் தோன்றுகிறார்.

மொத்தத்தில் தமிழ்மன்றத்தை தாங்கி நிற்கும் ஆலமரம் அவர்.

அன்புரசிகன்
11-06-2007, 08:42 AM
மன்னிக்கவேண்டும் இராசகுமாரன் அண்ணா. உங்களிடம் நான் பெரிதாக எதிர்பார்த்தேன். சிலவரிகளில் முடித்துவிட்டீர்கள். இங்கு இருப்பவர்களில் உங்களுக்குத்தான் அறிஞரைப்பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு என எண்ணுகிறேன்.

எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். ... இது எனது அன்புக்கட்டளை...

இன்னமும் பல மன்ற முன்னோடிகள் இருக்கின்றீர்கள். உங்கள் முத்துக்களை இங்கே சிதறவிடுங்கள்.

(நான் பொறுக்குகிறேன்)

ஓவியன்
11-06-2007, 09:39 AM
அறிஞர் - காரணப் பெயரைத் தன் பெயராகக் கொண்டவர், இந்த மன்றிலே தடுமாறுபவர்களை தடம் புரளாது வழி நடத்தும் சிந்தனைச் செம்மல்.

கேலி,கிண்டல் என்று வந்து விட்டால் கூட நானும் ரெடி நைனா என்று ஒரு கை பார்த்து விடுவார், எந்தவித பேதமுமின்றி எல்லோருடனும் பழகுவது இவர் தம் தனிச் சிறப்பு.

நானும் இன்னமும் பார்க்காமலேயே அவர் மேல் வைத்துள்ள அபிப்பிராயங்களே மேலுள்ளவை.

namsec
11-06-2007, 02:00 PM
அறிஞர் பற்றி யாம் அதிகம் அறியாதவன் யாம் பதித்த பதிப்புக்களில் அவருடையா பின்னூட்டம் ஒன்று மட்டுமே கிடைக்க பெற்றுள்ளேன்.

அதில் அவர் கொடுத்த பின்னூட்டம்


சித்தர் படம் பதித்து வந்துள்ள அன்பர் நாம்சேக்கை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்..

தங்களின் பதிவுகள்.. பலருக்கு பயனுள்ளதாக அமையட்டும்.

அனைவருக்கும் பயனுள்ள பதிப்புக்கள் கொடுக்க என்னை வாழ்த்தியதால் அவரை யாம் சிறந்த பண்பாட்டளராக கருதிகிறேன்.

ஆதவா
11-06-2007, 02:16 PM
namsec உங்கள் பெயர் அர்த்தம் என்னவோ?, கூப்பிட முடியவில்லை..

namsec
11-06-2007, 02:26 PM
namsec உங்கள் பெயர் அர்த்தம் என்னவோ?, கூப்பிட முடியவில்லை..

என்னை பற்றி இங்கு அறிமுகம் செய்துள்ளேன்http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9354


விளக்கம்:
:food-smiley-008:

என் துறையை சார்ந்த சங்கத்திற்க்கு செயலாளர் (sec) பதவி வகித்தேன் அப்பொழுது மின் அஞ்சல் பரிமாற்றத்திற்க்கு இப்படி namsec சூட்டினேன் அதுவே கடைசிவரை தொடறுகிறேன்

nam மூன்று ஊர்களின் பெயர்களை சுருக்கிய சங்கத்தின் பெயர்

sec செயலாளர்

ஓவியன்
06-06-2016, 02:35 AM
அறிஞர் மீள மன்ற உலா வரும் நாளுக்காக காத்திருந்து..
அதைத் தூண்டும் திரியாக, இந்த திரியை மேலே கொண்டு வருகிறேன்!