PDA

View Full Version : காதல் பாடம்

இணைய நண்பன்
06-06-2007, 12:36 PM
காதல்
கல்லூரி திறந்து
கன நாள்...
காதல் பாடம் -எடுக்க
காத்திருந்தேன்

எத்தனை எத்தனை
விண்ணப்பங்கள்
அத்தனையும் நிராகரித்து
உன்னை எந்தன்
மாணவியாக ஏற்றேன்

என் பாடங்களில்
நீ கெட்டிக்காரி
நாளை என்
மனைவி என்ற பட்டம் தந்து
கெளரவிக்கிறேன்.

கேசுவர்
06-06-2007, 12:39 PM
காதல் பாடம் எடுக்கும் வாத்தியாரே....உங்கள் கவிதையில் ..ஆண் ஆதிக்கம் தூக்கலாக இருப்பது போல தோன்றுகிறதே !!!

இதயம்
06-06-2007, 12:39 PM
கருத்துள்ள கண்ணியமான கவிதை..! பாராட்டுக்கள் விஸ்டா..!!

ஓவியா
06-06-2007, 12:40 PM
ஹி ஹி ஹி

கவிதை அருமை.

காதலிப்பது முக்கியமல்ல, அதன் முடிவுதான் முகியம். நல்ல முடிவு. பாராட்டுக்கள்.

கெட்டிக்காரி என்றாலே மனைவி பட்டம் கிடைக்காதாமே!!! உண்மையா?

இணைய நண்பன்
06-06-2007, 12:44 PM
நன்றி தோழர்களுக்கு..
இதுவரை காதல் இருக்கவில்லை..ஆனா...எப்போ காதல் (ஆஹா வந்திடுச்சு)அப்போ இனி கவிதையும் வரும் தானே?

இணைய நண்பன்
06-06-2007, 12:45 PM
ஹி ஹி ஹி

கவிதை அருமை.

காதலிப்பது முக்கியமல்ல, அதன் முடிவுதான் முகியம். நல்ல முடிவு. பாராட்டுக்கள்.

கெட்டிக்காரி என்றாலே மனைவி பட்டம் கிடைக்காதாமே!!! உண்மையா?

என் காதலிக்கு நிச்சயம் கிடைக்கும்

இணைய நண்பன்
06-06-2007, 12:47 PM
காதல் பாடம் எடுக்கும் வாத்தியாரே....உங்கள் கவிதையில் ..ஆண் ஆதிக்கம் தூக்கலாக இருப்பது போல தோன்றுகிறதே !!!

அப்படீண்ணு சொல்றீங்க.ம்..அப்போ பெண் ஆதிக்கம் வர எப்படி சொல்லவேனும்.சொல்லி தாங்களே....நான் பயிற்சி பெற்ற வாத்தியார் இல்லீங்க ..ஹி..ஹி..

ஓவியா
06-06-2007, 12:48 PM
நன்றி தோழர்களுக்கு..
இதுவரை காதல் இருக்கவில்லை..ஆனா...எப்போ காதல் (ஆஹா வந்திடுச்சு)அப்போ இனி கவைதையும் வரும் தானே?

வாழ்த்துக்கள், இனி சந்தையில் பூக்களின் விலை அதிகரிக்குமா......

ஒரு டிப்ஸ்
வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம், பூ வாங்கி கொடுங்கள், இது எதுக்குனு திட்டுவாங்க, கண்டுக்காதீங்க, ஆனால் அந்த பூ அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும், வேண்டாம் என்று சொல்லுவார்கள், அது பொய். :icon_dance:

இணைய நண்பன்
06-06-2007, 12:51 PM
அக்காவுக்கு நல்ல டிப்ஸ் எல்லாம் தெரியும்.ம்..நான் கொடுத்து வெச்சவன்.நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு

இதயம்
06-06-2007, 12:53 PM
வாழ்த்துக்கள், இனி சந்தையில் பூக்களின் விலை அதிகரிக்குமா......

ஒரு டிப்ஸ்
வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம், பூ வாங்கி கொடுங்கள், இது எதுக்குனு திட்டுவாங்க, கண்டுக்காதீங்க, ஆனால் அந்த பூ அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும், வேண்டாம் என்று சொல்லுவார்கள், அது பொய். :icon_dance:

பெண்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். ஆனால், இந்தியப்பெண்கள் அல்லது இந்தியக்கலாச்சாரத்தை பின்பற்றும் பெண்கள் குறிப்பாக தமிழகப்பெண்கள் பூ பைத்தியமாக இருப்பது ஏன்.? ஒரு பெண்ணாக அந்த இரகசியத்தை எங்களுக்கு சொல்வீர்களா சகோதரி..?

கேசுவர்
06-06-2007, 12:56 PM
அப்படீண்ணு சொல்றீங்க.ம்..அப்போ பெண் ஆதிக்கம் வர எப்படி சொல்லவேனும்.சொல்லி தாங்களே....நான் பயிற்சி பெற்ற வாத்தியார் இல்லீங்க ..ஹி..ஹி..

கவிதையில் உங்களை ஆசானாகவும்
உங்கள் காதலியை மாணவியாக சித்தரித்து இருந்திர்கள்....
அதைத்தான் கூற முற்ப்பட்டேன்...
அய்யா நான் தெரியாமல் சொல்லிவிட்டேன்...உங்களை புண்படுத்தும் நோக்கம் இல்லைங்க சாமி.,
மத்தப்படி கவிதை ரசிக்கும்படி இருந்தது...விஷ்டா.

ஓவியா
06-06-2007, 01:04 PM
பெண்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். ஆனால், இந்தியப்பெண்கள் அல்லது இந்தியக்கலாச்சாரத்தை பின்பற்றும் பெண்கள் குறிப்பாக தமிழகப்பெண்கள் பூ பைத்தியமாக இருப்பது ஏன்.? ஒரு பெண்ணாக அந்த இரகசியத்தை எங்களுக்கு சொல்வீர்களா சகோதரி..?

ஜபர் அண்ணா, இந்த கேள்விக்கு விடையளிக்கும் தகுதியை நான் இழக்கிறேன். காரணம் அடியேன் தமிழ் நாட்டை கனவிலும் கண்டதில்லை, ஒரு அடிகூட தமிழ்நாட்டில் வைத்ததில்லை.

ஆனால் ஒரு பெண்ணாக விடையளிக்கிறேன். தமிழ் பெண்களைப்பொல் மேற்கத்திய பெண்களும் பூக்கள் விரும்பியே, ஆனால் தலையில் வைப்பதில்லை. நம் பெண்கள் சூடிகொள்கின்றனர், இவர்கள் பூச்சாடியில் வைத்து அழகு பார்கின்றனர்.

காதலனிடமிருந்து பெரும் பூக்கள், எப்பொழுதுமே இதயத்திற்க்கு நெருக்கம். அது பூ எனபதற்க்காக அல்ல, அவ(ரி)னிடமிருந்து கிடைத்ததற்க்காக.....

இயற்க்கையிலே மௌனம் சாதிக்கும் பூக்கள், அவளிடம் அவன் அன்பை சொல்லும். :icon_wink1:

இணைய நண்பன்
06-06-2007, 01:07 PM
தோழரே...என்ன சின்ன புள்ள தனமா இருக்கு.நான் அப்படி நீங்க என்னை புண் படுத்தியாதா சொல்ல இல்ல.நானும் சும்மா ஜோக்கிற்க்கு தான் சொன்னேன்.நாம் எல்லோரும் மன்றத்தோழர்கள்.நன்றி தோழர் அவர்களே..

இணைய நண்பன்
06-06-2007, 01:08 PM
கவிதையில் உங்களை ஆசானாகவும்
உங்கள் காதலியை மாணவியாக சித்தரித்து இருந்திர்கள்....
அதைத்தான் கூற முற்ப்பட்டேன்...
அய்யா நான் தெரியாமல் சொல்லிவிட்டேன்...உங்களை புண்படுத்தும் நோக்கம் இல்லைங்க சாமி.,
மத்தப்படி கவிதை ரசிக்கும்படி இருந்தது...விஷ்டா.

தோழரே..(கேசுவர்)...என்ன சின்ன புள்ள தனமா இருக்கு.நான் அப்படி நீங்க என்னை புண் படுத்தியாதா சொல்ல இல்ல.நானும் சும்மா ஜோக்கிற்க்கு தான் சொன்னேன்.நாம் எல்லோரும் மன்றத்தோழர்கள்.நன்றி தோழர் அவர்களே.

இதயம்
06-06-2007, 01:12 PM
ஜபர் அண்ணா, இந்த கேள்விக்கு விடையளிக்கும் தகுதியை நான் இழக்கிறேன். காரணம் அடியேன் தமிழ் நாட்டை கனவிலும் கண்டதில்லை, ஒரு அடிகூட தமிழ்நாட்டில் வைத்ததில்லை.

ஆனால் ஒரு பெண்ணாக விடையளிக்கிறேன். தமிழ் பெண்களைப்பொல் மேற்கத்திய பெண்களும் பூக்கள் விரும்பியே, ஆனால் தலையில் வைப்பதில்லை. நம் பெண்கள் சூடிகொள்கின்றனர், இவர்கள் பூச்சாடியில் வைத்து அழகு பார்கின்றனர்.

காதலனிடமிருந்து பெரும் பூக்கள், எப்பொழுதுமே இதயத்திற்க்கு நெருக்கம். அது பூ எனபதற்க்காக அல்ல, அவ(ரி)னிடமிருந்து கிடைத்ததற்க்காக.....

இயற்க்கையிலே மௌனம் சாதிக்கும் பூக்கள், அவளிடம் அவன் அன்பை சொல்லும். :icon_wink1:

நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர் அல்ல என்ற எண்ணம் இருந்ததால் தான் தமிழ் கலாச்சாரம் என்ற வார்த்தையை சேர்த்தேன். நீங்கள் சொன்னது போல் பூக்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது. ஒரு வேளை பெண்களும் மலர்களைப்போல் அழகானவர்கள், வண்டுகளை அலைய வைப்பவர்கள், கனிகளுக்கும், விதைகளுக்கும் காரணமானவர்களாக இருப்பதால். தலையில் வைக்கும் கலாச்சாரம் என்பது எப்படி நம்மிடம் தொற்றியது என்று தெரியவில்லை.

எது எப்படியோ.. பெண்களுக்கு பூக்களை பிடிப்பதாலேயே எங்களுக்கும் பூக்களை பிடிக்கிறது.! :nature-smiley-003: பூ வாங்கிக் கொடுத்தே ஏழையானவன் நான்..!!:sauer028:

கேசுவர்
06-06-2007, 01:13 PM
அய்யோ அய்யோ நான் நீங்க ரொம்ப சீரியசா எடுத்துக்கிட்டிங்கனு நினைச்சுக்கிட்டேன் அப்பாட இப்பத்தான் நிம்மதியாக இருக்கு நண்பரே...

இணைய நண்பன்
06-06-2007, 01:16 PM
எது எப்படியோ.. பெண்களுக்கு பூக்களை பிடிப்பதாலேயே எங்களுக்கும் பூக்களை பிடிக்கிறது.! :nature-smiley-003: பூ வாங்கிக் கொடுத்தே ஏழையானவன் நான்..!!:sauer028:[/QUOTE]

ஏ பூக்காரா ( இதயம் அவர்களே...) நீந்க்கள் ஏழையான சம்பவத்தை "பூவிலே ஒரு கதை" என்ற தலைப்பில் புதிய திரி ஒன்றில் சொல்லுங்கள்.காத்திருக்கிறோம். ஏ பூக்காரா எத்தனை பூக்கள் என்று சொல்லி விடு..

ஓவியா
06-06-2007, 01:16 PM
நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர் அல்ல என்ற எண்ணம் இருந்ததால் தான் தமிழ் கலாச்சாரம் என்ற வார்த்தையை சேர்த்தேன். நீங்கள் சொன்னது போல் பூக்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது. ஒரு வேளை பெண்களும் மலர்களைப்போல் அழகானவர்கள், வண்டுகளை அலைய வைப்பவர்கள், கனிகளுக்கும், விதைகளுக்கும் காரணமானவர்களாக இருப்பதால். தலையில் வைக்கும் கலாச்சாரம் என்பது எப்படி நம்மிடம் தொற்றியது என்று தெரியவில்லை.

எது எப்படியோ.. பெண்களுக்கு பூக்களை பிடிப்பதாலேயே எங்களுக்கும் பூக்களை பிடிக்கிறது.! :nature-smiley-003: பூ வாங்கிக் கொடுத்தே ஏழையானவன் நான்..!!:sauer028:

அஹஹஹஹ் அதே அதே சபாபதே!

பெண்களையும் பூக்களையும் பிரிக்க முடியாது.

காதல் வந்தால் பெண்க்களுக்கு பூக்களை அதிகம் பிடிக்குமாம். :icon_wink1:

இணைய நண்பன்
06-06-2007, 01:17 PM
அய்யோ அய்யோ நான் நீங்க ரொம்ப சீரியசா எடுத்துக்கிட்டிங்கனு நினைச்சுக்கிட்டேன் அப்பாட இப்பத்தான் நிம்மதியாக இருக்கு நண்பரே...

அப்பாடா......எனக்கும் இப்போதான் ஆருதல் மூச்சு போகுது..

இணைய நண்பன்
06-06-2007, 01:20 PM
அஹஹஹஹ் அதே அதே சபாபதே!

பெண்களையும் பூக்களையும் பிரிக்க முடியாது.

காதல் வந்தால் பெண்க்களுக்கு பூக்களை அதிகம் பிடிக்குமாம். :icon_wink1:

அட டா.....இத்தனை விசயமா.....அப்போ நான் காதல் பாடம் நடத்தும் ஆசான் இல்ல..நானும் ஒரு மாணவனே.....அக்கா....நிறைய சொல்லி தாங்க....அப்போ நான் ரோஜக்கூட்டம் வளர்த்தது வீண் போக இல்ல..

இதயம்
06-06-2007, 01:23 PM
ஏ பூக்காரா ( இதயம் அவர்களே...) நீந்க்கள் ஏழையான சம்பவத்தை "பூவிலே ஒரு கதை" என்ற தலைப்பில் புதிய திரி ஒன்றில் சொல்லுங்கள்.காத்திருக்கிறோம். ஏ பூக்காரா எத்தனை பூக்கள் என்று சொல்லி விடு..

நான் பூக்காரனல்ல..! பூ வாங்கி பூக்காரனை வாழ வைத்தவன்..!!:nature-smiley-003:
கணக்கெல்லாம் கேட்டு என்னை ஏன் அழ வைக்கிறீர்கள்..??:traurig001:

காதல் வந்தால் பெண்க்களுக்கு பூக்களை அதிகம் பிடிக்குமாம். :icon_wink1:

காதல் பெயரை சொல்லி தான் பூ கேட்டு என்னை காலி செய்கிறாள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது.

ஓவியா
06-06-2007, 01:37 PM
:nature-smiley-003:
அட டா.....இத்தனை விசயமா.....அப்போ நான் காதல் பாடம் நடத்தும் ஆசான் இல்ல..நானும் ஒரு மாணவனே.....அக்கா....நிறைய சொல்லி தாங்க....அப்போ நான் ரோஜக்கூட்டம் வளர்த்தது வீண் போக இல்ல..

நான் பூக்காரனல்ல..! பூ வாங்கி பூக்காரனை வாழ வைத்தவன்..!!:nature-smiley-003:
கணக்கெல்லாம் கேட்டு என்னை ஏன் அழ வைக்கிறீர்கள்..??:traurig001:

காதல் பெயரை சொல்லி தான் பூ கேட்டு என்னை காலி செய்கிறாள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது.

சபாபதிகளே, பூ வாங்கியே நீங்க இரண்டுபேரும் மோட்ஷம் பெருவீர்கள்.

வாழ்த்துக்கள். :nature-smiley-003:

farhan mohamed
09-06-2007, 07:32 PM
அட டா.....இத்தனை விசயமா.....அப்போ நான் காதல் பாடம் நடத்தும் ஆசான் இல்ல..நானும் ஒரு மாணவனே.....அக்கா....நிறைய சொல்லி தாங்க....அப்போ நான் ரோஜக்கூட்டம் வளர்த்தது வீண் போக இல்ல..

நீங்கள் வளர்த்து வரும் ரோஜாக்கூட்டம் என்றும் செழித்து வளரும்.அது சரி நண்பரே நீங்கள் காதலில் கொண்டுள்ள உறுதியைப் பார்த்தால் கல்யாணமும் நிச்சயமான மாதிரி விளங்குகிறது.அப்படி ஆட்சேபனையொன்றும் இல்லையென்றால் மன்ற நண்பர்களிடமும் உங்கள் திருமண தேதியை பகிர்ந்து கொள்ளலாமே!! உங்கள் கவிதை சூப்பர் எங்களுக்காக தொடர்ந்து வழங்குங்களேன் உங்கள் காதல் கவிவரிகளை

இணைய நண்பன்
09-06-2007, 07:57 PM
நண்பரே ...திருமண திகதியை நிச்சயம் சொல்வேன்.ஆனால் இன்னும் இல்லையே....ம்...அதுவரை காத்திருங்கள்..அதுசரி முன்னர் உங்கள் கவிகளை படித்திருக்கிறேன்.என்னை விட நல்ல காதல் கவி எழுதுவீர்களே...ஏன் இப்பொழுது மன்றத்தில் எழுதுவதில்லை...காதலி வேண்டாம் என்று சொன்னாளா..?மன்றத்திற்கு உங்கள் சேவையை தொடர்ந்து தாருங்கள். உங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே

அமரன்
10-06-2007, 07:40 PM
இக்ராம். பலகாதல்கல் கல்லூரியில் ஆரம்பிக்கும்போது காதல் கல்லூரியைத் திறந்து காதல் கற்பித்து மனைவி என்கின்ற பட்டமும் கொடுத்துவிட்டீர்களே! எளிய நடையில் ஒரு வல்லிய கவிதை. பாராட்டுகள் காதல் பாடத்திற்கு.

இணைய நண்பன்
11-06-2007, 12:02 PM

நன்றி நண்பரே