PDA

View Full Version : கனவுக்காதலி



rocky
05-06-2007, 03:54 PM
மின்சாரம் தடைபட்ட ஓரிரவில்
மின்விசிரியின்றி தூக்கம்
களைந்த முன்னிரவில்
மொட்டை மாடியில்
மல்லாந்திருந்தேன் தனிமையில்
முதன்முதலில் துளிர்த்தது
அவள்நினைவு என்மனதில்
அறைகுறையாய் தெரிந்தது
அவள்முகம் முழுநிலவில், அன்றுமுதல்
உருவமற்ற அவளையென்னி உருகினேன், இனி
உவமையின்றி அவளைப்பற்றி உளறுவேன்.

அமரன்
05-06-2007, 04:14 PM
வாங்க ராக்கி. காதல் கவிதையா! இருட்டில் உங்கள் வாழ்க்கையை வெளிச்சமக்கும் காதல் பூத்திருக்கு. பாராட்டுகள்.

rocky
05-06-2007, 04:32 PM
மிக்க நன்றி ஐயா. கனவுதான் கண்டுள்ளேன் ஐயா, இன்னும் நனவாகவில்லை.

சிவா.ஜி
06-06-2007, 04:44 AM
நிலவு பார்த்து நினைவு வந்திருக்கிறது கூடவே கனவும். கனவு நனவாக வாழ்த்துக்கள். உவமையே தேவையில்லாத அந்த தேவதை உங்களுக்கு கூடிய சீக்கிரம் கிடைக்க வேண்டும். கவிதைக்கு பாராட்டுக்கள் ராக்கி.

shangaran
06-06-2007, 05:06 AM
எளிய வரிகளில் அருமையான கவிதை.

rocky
07-06-2007, 03:31 PM
அனைவருக்கும் நன்றி. சிவா.ஜிக்கு மிக்க நன்றி. நானும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

மனோஜ்
07-06-2007, 03:52 PM
அருமை கவிதை
காதல் மனிதனை மனிதனாகவும்
மனிதனை மிருகமாகவும் ஆக்கவல்லது