PDA

View Full Version : தனிக்குடித்தனம்



rocky
05-06-2007, 03:14 PM
சமையலறையில் அம்மாவுடனிருந்த
சம்சாரத்தை சாவி எடுத்துவா என்றுகூறி
சன்னலோரத்தில் கொடுத்த
ஒற்றை முத்தத்தின் இன்பம்,
எங்களைத்தவிர யாருமற்ற இவ்வீட்டில்
எத்தனை முறை கொடுத்தாலும் இல்லையே, பின்
எதற்காக இவள் என்னை
தனியே அழைத்து வந்தாள்?

:medium-smiley-100: :medium-smiley-100:

சிவா.ஜி
06-06-2007, 04:50 AM
அசத்திட்டீங்க ராக்கி. தோப்பே சொந்தமானாலும் திருட்டு மாங்காய்க்கு இருக்கும் ருசியே தனிதான். இதைப்போல சின்னச்சின்ன விளையாட்டுக்கள் வாழ்க்கையின் சுவாரசியங்கள். அதை அழகான கவிதையாய் தந்த ராக்கிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

இதயம்
06-06-2007, 04:58 AM
நீங்கள் சொல்வது எத்தனை சத்திய வார்த்தைகள்.!! இது தானே காதலிக்கும் போதும் நடக்கிறது. அந்த முத்தத்தை திருட்டு மாங்காய் என்று உருவகப்படுத்துவது கொஞ்சம் ஏற்க கஷ்டமாய் இருக்கிறது. மனைவி கொடுக்கும் முத்தம் மட்டுமல்ல, அவள் கொடுக்கும் எதுவும் திருட்டுத்தனத்தில் சேராது. காத்திருத்தும், கஷ்டப்பட்டும் கிடைக்கும் எந்த ஒரு விஷயத்தின் மீது ஈடுபாடு உண்டாவது இயற்கை தான். அது வகை தான் அந்த சன்னலோர முத்தமும்..!

என்னை மலரும் நினைவுகளில் மூழ்கவைத்த கவிதை. நன்றியும் பாராட்டுக்களும் உங்களுக்கு..!

சிவா.ஜி
06-06-2007, 05:08 AM
இது செல்லமான திருட்டு இதயம். நான் செயலை சொல்லவில்லை அந்த செயலில் இருக்கும் சுவையை சொன்னேன்.அம்மாவுக்கு தெரியாமல் செய்வதல்லவா? அதுதான். எப்படியிருந்தாலும் எனக்கும் இது மலரும் நினைவுகள்தான்.

ஓவியா
06-06-2007, 03:28 PM
அண்ணனுங்கள் எல்லாரும் அண்ணீகளை நினைத்து புலம்பறீகளோ!!

கவிதை நல்ல கரு, நல்ல சிந்தனை.

நன்று.

அமரன்
06-06-2007, 06:06 PM
நல்ல கவிதை ராக்கி. இலைமறை காயாக இருக்கும் போது அதன் மதிப்புத் தெரிவதில்லை. அதுவே மறைந்தும் மறையாமல் இருக்கும்போது அதப் பார்க்கும் ஆவல் அதிகரிக்கும். திருட்டுத்தம், திருட்டுமாங்காய் மாதிரி சந்தடி சாக்கில் சிந்துபாடுவது தனி ரகம் அது தனிக்குடித்தனத்தில் கிடைப்பதில்லை. அசத்திவிட்டீர்கள். தனிக்குடித்தனம் வேண்டாம் என்பதை கசப்பான மருந்தை இனிப்புடன் கலந்து கொடுப்பது போல சொல்லி விட்டீர்கள். பாராட்டுகள்.

rocky
07-06-2007, 03:26 PM
அனைவருக்கும் நன்றி. எனக்கு இது அனுபவமல்ல கற்பனையே. ஓவியா அக்காவுக்கு இதை நான் அண்ணியை நினைத்து எலுதவில்லை